• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 8

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-8

மனதைப்போட்டு அரித்துக்கொண்டிருந்த வேதனையோடு தோட்டத்தில் அமர்ந்திருந்தார் மஞ்சுளா. சற்றுமுன், கோபத்தோடு காரைக் கிளப்பிக்கொண்டு சென்ற மகனே அவர் நினைவில் நிறைந்திருந்தான்.

தான் அருமை பெருமையாகப் பெற்றெடுத்து, வீட்டின் கடைக்குட்டி என்று செல்லமாக வளர்த்த மகன், தன் வாழ்க்கையைத் தானே சிக்கலாக்கிக் கொண்டானே என்று வருந்தினார். அதுமட்டுமல்லாது, எப்படி அவர்கள் இருவரையும் இணைப்பது என்றும் தெரியவில்லை.

மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்த ராகினி மஞ்சுளாவைக் கண்டுவிட்டு, “அத்தை, தனியாக இருந்து இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

பதில் சொல்லத் தோன்றாமல் மருமகளை நிமிர்ந்து வெற்றுப் பார்வை பார்த்தார் மஞ்சுளா.

“என்ன அத்தை. ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்? தர்சனை நினைத்தா?” என்று கேட்டவள் அவரின் பதிலை எதிர்பாராது, “கவலைப் படாதீர்கள் அத்தை. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். வெண்பாவின் கோபத்தில் நியாயமும் இருக்கிறது தானே.” என்றாள் தொடர்ந்து.

தனக்கு அருகிலேயே மருமகளை அமரச் சொன்னவர், “நியாயம் இருக்கிறது என்பதற்காகக் காலம் பூரா சண்டை பிடித்துக்கொண்டே இருக்க முடியாதுதானே ராகினி. இருவரும் ஒற்றுமையாகி குடும்பம் குட்டி என்று வாழ வேண்டாமா?” என்றார்.

“ம்ம்..” என்று அதை ஆமோதித்தாள் ராகினி.

“எங்களுக்கு மூன்றும் ஆண்பிள்ளைகள் என்றாலும் மூன்றையும் மூன்று கண்ணாகத்தான் வளர்த்தோம் ராகினி. அவர்களின் திருமணங்களையும் எந்தக் குறையும் இல்லாமல் வெகு சிறப்பாகச் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தோம். அப்படித்தான் உங்கள் திருமணமும் நடந்தது. அடுத்து அமலனுக்குக் கடைசியாகத் தர்சனுக்கு என்று நான் நினைத்திருக்க இவனானால் இப்படியொரு கல்யாணத்தைச் செய்துவிட்டானே என்று கவலையாக இருக்கிறது ராகினி.

“இது போதாது என்று, எங்கேயோ இருந்த தங்கையை நம் வீட்டுக்கு வா என்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டு அவள் மகளின் வாழ்க்கையை நாம் கெடுத்துவிட்டோமோ, இதற்கு அவள் தனியாக இருந்திருக்கச் சந்தோசமாக இருந்திருப்பார்களோ என்று உன் மாமாவுக்கு வேறு ஒரே கவலை. என்ன சொல்லித் தேற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை.” என்று தன் மனக்கவலைகளை மருமகளிடம் கொட்டினார் மஞ்சுளா.

அதைக்கேட்டு ராகினிக்கும் கவலையாக இருந்தது. எப்போதுமே மஞ்சுளாவிடம் ஒருவித கம்பீரம் இருக்கும். நான் ஒன்றுக்கு மூன்று ஆண்பிள்ளைகளைப் பெற்றவள், எனக்கு என்ன வரப்போகிறது என்கிற நிமிர்வு அவரிடம் இருக்கும்.

இப்படி இலகுவில் மனதைத் திறப்பவறல்ல அவர். அப்படியிருந்தும் இன்று இப்படிப் பேசுகிறார் என்றால் மனதளவில் அவர் படும்பாடு புரிந்தது ராகினிக்கு.

இதமாக மஞ்சுளாவின் கையைப் பற்றிக் கொண்டவள், “ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள் அத்தை. அவர்கள் சமாதானம் ஆகிவிடுவார்கள். அதுமட்டுமல்ல வெகு சீக்கிரமாகவே நீங்களும் மாமாவும் இன்னொருமுறை அப்பப்பா அப்பம்மாவும் ஆகிவிடுவீர்கள் பாருங்கள்.” என்றாள் மருமகள்.

அந்த மகிழ்வான தருணத்தை மனக்கண்ணில் கண்டவரின் முகம் புன்னகையைப் பூச, அவளின் கையை இப்போது தான் பற்றி, “உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.

“கட்டாயம் பலிக்கும் அத்தை!” என்று ஆருடம் சொன்னாள் அவள்.

“அத்தை, நாம் இப்படி வாயால் பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது, நம் பக்கத்தில் இருந்து அவர்கள் சேர்வதற்கு ஏதாவது செய்யவேண்டும்.” என்ற மருமகளைக் கேள்வியாகப் பார்த்தார் மஞ்சுளா.

“என்ன அத்தை பார்க்கிறீர்கள்? வெண்பாவை தர்சனின் அறைக்கு அனுப்புங்கள். அதோடு அவர்களின் திருமணத்தைப் பதிவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.” என்று மாமியாருக்கே திட்டம் போட்டுக் கொடுத்தாள் மருமகள்.

“இப்படிக் கீரியும் பாம்புமாக இருப்பவர்களை ஒரே அறையில் விட்டால் இன்னும் சண்டை பிடிக்க மாட்டார்களா?” என்று யோசனையோடு கேட்டார் அவர்.

“அவர்களை அப்படி விட்டால்தான் அத்தை இந்தச் சண்டையே முடிவுக்கு வரும்.” என்றாள் மருமகள், புன்னகையோடு.

பிறகு வேறு சண்டை ஆரம்பித்துவிடும் என்று மனதுக்குள் நினைத்து நகைத்துக்கொண்டாள் அந்த இனிய பெண்!

அதன்படி, அடுத்தநாள் காலையே தன் வேலையை ஆரம்பித்தார் மஞ்சுளா.

“தர்சா, இனி வெண்பா உன் அறையிலேயே தங்கிக் கொள்ளட்டும்!” என்றார் அறிவிப்பாக.

“எதற்கு? அவள் அவளுடைய அறையிலேயே இருக்கட்டும்!” என்று சிடுசிடுத்தான் மகன்.

“அதெல்லாம் முடியாது! இனி அவள் உன் அறையில்தான் இருப்பாள்!” என்றவரை மகன் முறைக்க, “என்னடா முறைப்பு?அவள் கழுத்தில் நீதானே தாலியை கட்டினாய்! அப்படியென்றால் அவள் உன் மனைவிதானே! உன் மனைவி உன் அறையில் இருக்காமல் வேறு எங்கே இருப்பது? அவளும் உன்னோடு இருப்பதாக இருந்தால் நீ இங்கேயே இரு! இல்லையானால் தனிவீடு பார்த்துக்கொண்டு உன் மனைவியோடு போய்விடு! ‘மகி வேறு, என்ன அண்ணி உங்கள் மகன் என் மகளைக் கண்டுகொள்கிறானே இல்லை’ என்று என்னுடன் சண்டைக்கு வருகிறாள். இதெல்லாம் தேவையா எனக்கு?” என்று ஒரே போடாகப் போட்டார் அன்னை.

நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்பதாக மகேஸ்வரி அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க, ‘பேசாமல் இரு’ பார்வையாலேயே அடக்கினார் மஞ்சுளா.

கோடு போட்டுக் கொடுத்தால் அத்தை ரோடே போடுகிறாரே என்று மெச்சிக் கொண்டாள் ராகினி.

“என்னம்மா பேச்சு இதெல்லாம்?” என்று ஒருவித ஆற்றாமையோடு கேட்டவனுக்கு, தெரியாத்தனமாக ஒரு தாலியைக் கட்டிவிட்டுப் படும் பாட்டை நினைத்து சினமும் ஆத்திரமும் வந்தது.

அதுவும், முதல்நாள் அவள் பேசிய படு கேவலமான வார்த்தைகளுக்குப் பிறகு இந்தப் பேச்செல்லாம் நஞ்செனக் கசக்க, அன்னையின் கேள்விக்குச் சம்மதிக்கப் பிடிக்கவேயில்லை அவனுக்கு.

அதோடு, முதல்நாள் அவளின் அருகே சென்றதற்கே அமிலமாக வார்த்தைகளைக் கொட்டியவள், இன்று ஒன்றும் சொல்லாமல் நிற்கிறாளே என்கிற எரிச்சலுடன் வெண்பாவைப் பார்த்தான் தர்சன்.

அவள் முகத்தில் பெரிதாக மறுப்பு என்று எதையும் காணோம்! மறுப்பு என்ன எந்தவித உணர்ச்சிகளையும் காணோம்!

அதைப் பார்த்தவனுக்கு அவளுக்கே ஆட்சேபனை இல்லை என்கையில் எனக்கென்ன என்கிற அலட்சியம் வந்தது!

அதுமட்டுமன்றி, இப்போதும் அமைதியாக இருந்து தன்னை மீண்டும் தன் குடும்பத்தினரிடம் குற்றவாளியாக்க முயல்கிறாளோ என்று எண்ணிய மாத்திரத்தில் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் பொங்கியது.

அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணியவன், “எதையாவது செய்யுங்கள் அம்மா. எனக்கு ஒன்றுமில்லை!” என்றுவிட்டு, எழுந்து சென்றுவிட்டான்.

அது போதாதா மஞ்சுளாவுக்கு?!

அவன் அறையை அன்றே ஒரு குடும்பஸ்தனுக்கான அறையாக மாற்றியமைத்தார் அவர்.

அதுநாள் வரை அவன் அறையில் இருந்த ஒற்றைக்கட்டில் இருவர் படுக்கக் கூடிய கட்டிலாக மாற, வெண்பாவின் அனைத்துப் பொருட்களும் புது அலமாரியோடு அவன் அறைக்கு மிக வேகமாகக் குடிபெயர்ந்தன.

வெண்பாவை யாரும் சம்மதம் கேட்கவும் இல்லை. அவள் அதற்கு மறுப்பைத் தெரிவிக்கவும் இல்லை!

இரவு நன்றாக நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவன், அறைக்குள் சென்றபோது அங்கே உறங்கிக்கொண்டிருந்த வெண்பாவைக் கண்டதும் ஒருநொடி திகைத்துத்தான் போனான்..

அவனுடைய அறையில் அவளைக் கண்டவனின் மனம் ஒரு நொடி அசைந்தது என்னவோ உண்மைதான்.

அடுத்த நிமிடமே அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் அறைய, இறுகிவிட்ட மனதோடு குளியலை முடித்துவிட்டு வந்தவனுக்கு, எங்கே படுப்பது என்பது அடுத்தப் பிரச்சினையாக இருந்தது.

அவள் உறங்கும் கட்டிலில் உறங்கப் பிடிக்காமல், அங்கிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து, மேசையில் கைகளைக் கட்டியபடி அதிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டான்.

அடுத்தநாள் வேலை முடிந்து வந்தவனோடு மூன்று பேர் அமரக் கூடிய வகையிலான ஒற்றைச் சோபாவும் டிவியும் பின்னோடு வந்தது.

புருவங்கள் சுருங்க, “இதெல்லாம் எதற்குத் தர்சா?” என்று கேட்டார் அன்னை.

ஒருநொடி பதில் சொல்ல முடியாமல் திணறியவன், “என்னம்மா கேள்வி இது? டிவியையும் சோபாவையும் வைத்து என்ன செய்ய முடியும்? சோபாவில் இருந்து டிவி பார்க்கத்தான் வாங்கினேன். போதுமா? உங்கள் விசாரணை முடிந்ததா? இனி நான் இதையெல்லாம் என் அறைக்குக் கொண்டு போகலாமா?” என்று சிடுசிடுத்தான்.

நான் அப்படி என்ன கேட்டுவிட்டேன் என்று இவன் இப்படிப் பாய்கிறான் என்று உள்ளூர யோசனை ஓடினாலும், அவர் தலை சரியென்பதாக ஆடியது.

தர்சனோ, தப்பித்தால் போதும் என்பதாகப் பாய்ந்து விழுந்து மேலேறினான்.

அவன் தன் அறைக்குள் சென்று மறைந்ததும் மஞ்சுளாவை நெருங்கிய மகேஸ்வரி, “அண்ணி, உங்களுக்குப் புரியவில்லையா? என் மருமகன் தன் மனைவி இருந்து பார்க்கத்தான் டிவியும் சோபாவும் வாங்கியிருக்கிறான்.” என்றார் குரலில் துள்ளலோடு.

அதைக் கேட்டுக்கொண்டே அவர்களின் அருகில் வந்த ராகினி, “அவசரப்பட்டுச் சந்தோசப்படாதீர்கள் அம்மா. இருவரும் ஒரே கட்டிலில் படுப்பதைத் தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம்.” என்றாள்.

மகேஸ்வரியின் பேச்சில் மலர்ந்த மஞ்சுளாவின் முகம் ராகினியின் பேச்சில் சற்றே வாட, “சேச்சே! அப்படி இருக்காது. பிறகு எதற்கு டிவி வாங்கிக்கொண்டு வருகிறான்?” என்று மகனுக்காக வாதாடினார்.

“ஐயோ அத்தை! சோபாவும் டிவியும் வாங்கிக் கொண்டு வந்ததற்கே இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்கள். இதுவே சோபா மட்டுமென்றால் எத்தனை கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள். நாம் சந்தேகப் படுவோம் என்று யோசித்துத்தான் தர்சன் டிவியையும் சேர்த்து வாங்கியிருக்கிறார். அப்படியே அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்குத்தான் என்றால் எதற்கு மூவர் அமரக் கூடிய சோபாவாம்?” என்று எதிர்ப்புத் தெரிவித்தாள் மருமகள்.

“அதுதானே..” என்று சோர்ந்த குரலில் மஞ்சுளா இழுக்க, “அவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளையைப் பற்றியும் முன்கூட்டியே யோசித்தார்களோ என்னவோ..” என்றார் மகி.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member

நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்பதாக மகேஸ்வரி அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க, ‘பேசாமல் இரு’ பார்வையாலேயே அடக்கினார் மஞ்சுளா.

கோடு போட்டுக் கொடுத்தால் அத்தை ரோடே போடுகிறாரே என்று மெச்சிக் கொண்டாள் ராகினி.

“என்னம்மா பேச்சு இதெல்லாம்?” என்று ஒருவித ஆற்றாமையோடு கேட்டவனுக்கு, தெரியாத்தனமாக ஒரு தாலியைக் கட்டிவிட்டுப் படும் பாட்டை நினைத்து சினமும் ஆத்திரமும் வந்தது.

அதுவும், முதல்நாள் அவள் பேசிய படு கேவலமான வார்த்தைகளுக்குப் பிறகு இந்தப் பேச்செல்லாம் நஞ்செனக் கசக்க, அன்னையின் கேள்விக்குச் சம்மதிக்கப் பிடிக்கவேயில்லை அவனுக்கு.

அதோடு, முதல்நாள் அவளின் அருகே சென்றதற்கே அமிலமாக வார்த்தைகளைக் கொட்டியவள், இன்று ஒன்றும் சொல்லாமல் நிற்கிறாளே என்கிற எரிச்சலுடன் வெண்பாவைப் பார்த்தான் தர்சன்.

அவள் முகத்தில் பெரிதாக மறுப்பு என்று எதையும் காணோம்! மறுப்பு என்ன எந்தவித உணர்ச்சிகளையும் காணோம்!

அதைப் பார்த்தவனுக்கு அவளுக்கே ஆட்சேபனை இல்லை என்கையில் எனக்கென்ன என்கிற அலட்சியம் வந்தது!

அதுமட்டுமன்றி, இப்போதும் அமைதியாக இருந்து தன்னை மீண்டும் தன் குடும்பத்தினரிடம் குற்றவாளியாக்க முயல்கிறாளோ என்று எண்ணிய மாத்திரத்தில் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் பொங்கியது.

அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணியவன், “எதையாவது செய்யுங்கள் அம்மா. எனக்கு ஒன்றுமில்லை!” என்றுவிட்டு, எழுந்து சென்றுவிட்டான்.

அது போதாதா மஞ்சுளாவுக்கு?!

அவன் அறையை அன்றே ஒரு குடும்பஸ்தனுக்கான அறையாக மாற்றியமைத்தார் அவர்.

அதுநாள் வரை அவன் அறையில் இருந்த ஒற்றைக்கட்டில் இருவர் படுக்கக் கூடிய கட்டிலாக மாற, வெண்பாவின் அனைத்துப் பொருட்களும் புது அலமாரியோடு அவன் அறைக்கு மிக வேகமாகக் குடிபெயர்ந்தன.

வெண்பாவை யாரும் சம்மதம் கேட்கவும் இல்லை. அவள் அதற்கு மறுப்பைத் தெரிவிக்கவும் இல்லை!

இரவு நன்றாக நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவன், அறைக்குள் சென்றபோது அங்கே உறங்கிக்கொண்டிருந்த வெண்பாவைக் கண்டதும் ஒருநொடி திகைத்துத்தான் போனான்..

அவனுடைய அறையில் அவளைக் கண்டவனின் மனம் ஒரு நொடி அசைந்தது என்னவோ உண்மைதான்.

அடுத்த நிமிடமே அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் அறைய, இறுகிவிட்ட மனதோடு குளியலை முடித்துவிட்டு வந்தவனுக்கு, எங்கே படுப்பது என்பது அடுத்தப் பிரச்சினையாக இருந்தது.

அவள் உறங்கும் கட்டிலில் உறங்கப் பிடிக்காமல், அங்கிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து, மேசையில் கைகளைக் கட்டியபடி அதிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டான்.

அடுத்தநாள் வேலை முடிந்து வந்தவனோடு மூன்று பேர் அமரக் கூடிய வகையிலான ஒற்றைச் சோபாவும் டிவியும் பின்னோடு வந்தது.

புருவங்கள் சுருங்க, “இதெல்லாம் எதற்குத் தர்சா?” என்று கேட்டார் அன்னை.

ஒருநொடி பதில் சொல்ல முடியாமல் திணறியவன், “என்னம்மா கேள்வி இது? டிவியையும் சோபாவையும் வைத்து என்ன செய்ய முடியும்? சோபாவில் இருந்து டிவி பார்க்கத்தான் வாங்கினேன். போதுமா? உங்கள் விசாரணை முடிந்ததா? இனி நான் இதையெல்லாம் என் அறைக்குக் கொண்டு போகலாமா?” என்று சிடுசிடுத்தான்.

நான் அப்படி என்ன கேட்டுவிட்டேன் என்று இவன் இப்படிப் பாய்கிறான் என்று உள்ளூர யோசனை ஓடினாலும், அவர் தலை சரியென்பதாக ஆடியது.

தர்சனோ, தப்பித்தால் போதும் என்பதாகப் பாய்ந்து விழுந்து மேலேறினான்.

அவன் தன் அறைக்குள் சென்று மறைந்ததும் மஞ்சுளாவை நெருங்கிய மகேஸ்வரி, “அண்ணி, உங்களுக்குப் புரியவில்லையா? என் மருமகன் தன் மனைவி இருந்து பார்க்கத்தான் டிவியும் சோபாவும் வாங்கியிருக்கிறான்.” என்றார் குரலில் துள்ளலோடு.

அதைக் கேட்டுக்கொண்டே அவர்களின் அருகில் வந்த ராகினி, “அவசரப்பட்டுச் சந்தோசப்படாதீர்கள் அம்மா. இருவரும் ஒரே கட்டிலில் படுப்பதைத் தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம்.” என்றாள்.

மகேஸ்வரியின் பேச்சில் மலர்ந்த மஞ்சுளாவின் முகம் ராகினியின் பேச்சில் சற்றே வாட, “சேச்சே! அப்படி இருக்காது. பிறகு எதற்கு டிவி வாங்கிக்கொண்டு வருகிறான்?” என்று மகனுக்காக வாதாடினார்.

“ஐயோ அத்தை! சோபாவும் டிவியும் வாங்கிக் கொண்டு வந்ததற்கே இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்கள். இதுவே சோபா மட்டுமென்றால் எத்தனை கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள். நாம் சந்தேகப் படுவோம் என்று யோசித்துத்தான் தர்சன் டிவியையும் சேர்த்து வாங்கியிருக்கிறார். அப்படியே அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்குத்தான் என்றால் எதற்கு மூவர் அமரக் கூடிய
சோபாவாம்?” என்று எதிர்ப்புத் தெரிவித்தாள் மருமகள்.
 
Vishakini

Moderator
Staff member
“அதுதானே..” என்று சோர்ந்த குரலில் மஞ்சுளா இழுக்க, “அவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளையைப் பற்றியும் முன்கூட்டியே யோசித்தார்களோ என்னவோ..” என்றார் மகி.

“அப்படித்தான் இருக்கும்!” என்ற மஞ்சுளாவின் குரலில் மலர்ச்சி மீண்டும் வந்திருந்தது.

“அப்படித்தான் என்றால் எனக்கும் சந்தோசம் தான் அத்தை. ஆனால், நேற்று கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் இன்று பிள்ளையைப் பற்றிப் பேசும் அளவுக்கு வருவார்களா? அதனால் இன்னும் அவர்களை இணைக்க நாம் ஏதாவது செய்யவேண்டும்.”

“இன்னும் என்ன செய்யலாம்?” என்று மருமகளையே மந்திரியாக்கி ஆலோசனை கேட்டார் மாமியார்.

“தர்சனின் தேவைகளை எல்லாம் வெண்பாவை பார்க்கச் சொல்லுங்கள். கோயிலுக்கு, தியேட்டருக்கு என்று இருவரையும் எங்கேயாவது வெளியே அனுப்புங்கள் அத்தை.” என்று மாமியாருக்கு உத்தரவுகளை இட்டவள், “அம்மா, நீங்களும் வெண்பாவிடம் மெதுவாகப் பேச்சைக் கொடுத்து அவர்களைப் பற்றி அறிய முயலுங்கள்.” என்று பெறாத தாய்க்கும் சொன்னாள்.

“எங்கேம்மா, அவள்தான் என்னுடன் முகம் கொடுத்தே பேசுகிறாள் இல்லையே!” என்றார் மகி கண்கலங்க.

“என்னிடமும் கூடத்தான் பேசுகிறாள் இல்லை. அதற்காக நாம் பேசாமல் இருக்க முடியுமா சொல்லு? நம் பிள்ளைகளின் வாழ்க்கை அல்லவா. நீயாகப் போய்ப் பேச்சுக் கொடு.” என்றார் மஞ்சுளா.

அதன்பிறகு மூவர் கொண்ட அந்தக் குழு அவரவரின் வேலைகளைச் செய்யத் தனித்தனியே பிரிந்து சென்றது.

“சித்தப்பா…” என்று அழைத்தபடி தர்சனின் அறைக்குள் ஓடினான் அர்ஜூன்.

சோபாவில் இலகுவாக அமர்ந்திருந்தபடி, தன்னுடைய மடிக்கணிணியில் வேலை செய்துகொண்டிருந்த தர்சன், “ஹேய் அர்ஜூன்! வாவா..” என்றபடி அண்ணன் மகனைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“சித்தப்பா கேம்..” மடிக்கணிணியைக் காட்டிக் கேட்டான் அர்ஜூன்.

“கொஞ்சம் வேலை இருக்குடா. முடிந்ததும் எடுத்துத் தருகிறேன்.”

“எனக்கு இப்போதே விளையாடவேண்டும். ப்ளீஸ் சித்து..” அவன் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கெஞ்சினான் பெறாமகன்.

“ஏன்டா, உன் காரியம் ஆகவேண்டும் என்றதும் எப்படியெல்லாம் கெஞ்சுகிறாய். பிடிவாதக்காரன்டா நீ!” என்றவன், அண்ணன் மகனுக்குக் கேம் எடுத்துக் கொடுப்பதற்காகக் கணிணியில் பார்வையைப் பதித்தான்.

“ஹாய் சித்தி..” என்றான் அர்ஜூன், குளியலறையில் இருந்து வெளியே வந்த வெண்பாவைப் பார்த்து.

“ஹாய் குட்டி! டியுஷன் போய் வந்துவிட்டாயா?” என்று கேட்டாள் வெண்பா.

“ஓ..! முடிந்துவிட்டதே!” என்றவன், “நீங்கள் ஏன் சித்தி சித்தப்பாவின் அறையில் இருக்கிறீர்கள்? நீங்களும் கேம் விளையாட வந்தீர்களா?” என்று கேட்டான்.

கணிணியில் பார்வையைப் பதித்திருந்த தர்சனின் முகத்தில் அதுவரை இருந்த மலர்ச்சி மறைந்து, இறுகியது.

“அது.. உன் அப்பம்மாதான் என்னை இங்கே இருக்கச் சொன்னார்.” என்றாள் அவள்.

“அதெப்படி என் சித்தப்பாவின் அறைக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்?” நடந்த திருமணத்தின் பொருள் தெரியாத சிறுவன் கேட்க, வெண்பாவோ பதில் சொல்ல முடியாமல் முழித்தாள்.

ஏளனமாய் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உன் அப்பாவின் அறைக்குள்தானே உன் அம்மாவும் இருக்கிறார்கள். அதுபோல உன் சித்தப்பாவின் அறையில் சித்தியும் இருக்கிறாள்.” என்று, அவள் என் மனைவி, இனி இங்கேதான் இருப்பாள் என்று சொல்லப் பிடிக்காமல் சுற்றி வளைத்துச் சொன்னான்.

“ஓ..!” என்று கேட்டுக்கொண்டான் அர்ஜூன்.

அடுத்தக் கணமே, “அப்போ, எங்கே சித்தப்பா அர்ஜூன்?” அடுத்தக் கேள்வி பறந்து வந்தது.

“அர்ஜூனா? என்னடா கேட்கிறாய்? அதுதான் நீ இங்கே இருக்கிறாயே.” என்றான் தர்சன், மகனின் கேள்வியின் பொருள் புரியாமல்.

“உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை சித்தப்பா. என் அப்பாவின் அறையில் அம்மாவும் நானும் இருக்கிறோம். ஆனால் உங்கள் அறையில் சித்தி மட்டும் தானே இருக்கிறார். எங்கே என்னைப் போல இன்னொரு அர்ஜூன்?” என்று கேட்டான் குழந்தை.

அர்ஜூன் கேட்பதன் பொருளைப் புரிந்துகொண்டவனின் மனமோ வெடிச்சு சிதறக் காத்திருக்கும் எரிமலைக் குழம்புகளாய் கொதிக்கத் தொடங்கியது!

அவனுக்கென்று ஒரு குழந்தை! கிடைக்குமா?

அதற்கு வழியே இல்லாமல் செய்துவிட்டாளே என்று நினைத்தவனுக்கு நெஞ்சே அடைத்தது!

அவனது வாலிப வயதின் சந்தோசங்களையும், எத்தனை எத்தனையோ இனிய கற்பனைகளையும் அல்லவா வார்த்தைகள் எனும் தோட்டா கொண்டு சுட்டுப் பொசுக்கிவிட்டாள்

அதுதான் போனது என்றால், அவன் பெயர் சொல்ல வாரிசு என்று ஒன்றுகூட இனி அவனுக்குக் கிடைக்காதே!
 
Vishakini

Moderator
Staff member
உண்மைதான். ஆனாலும், இனி அவளைத் தொடமாட்டேன் என்று தர்சன் சொல்லிவிட்டானே. பிறகும் எதற்கு அவள் கண்டதையும் யோசிக்க?

அவளைப் பொருத்தவரையில் அந்த அறையில் இருப்பதால் அவளுக்கு எந்த அசௌவ்கர்யங்களும் இல்லை. தோள்களை அலட்சியமாகக் குலுக்கிவிட்டுத் தொலைக்காட்சியில் மூழ்கினாள் அவள்.

மகளைத் தனியே சந்திக்கக் காத்திருந்த மகேஸ்வரி, தர்சன் அறையை விட்டு வெளியே போவதைக் கண்டதும் தான் உள்ளே நுழைந்தார்.

அவரை அங்கே கண்டதும் முறைத்துவிட்டு முகத்ததைத் திருப்பிக் கொண்டாள் வெண்பா.

அதில் முகம் வாட, “என் மேல் இன்னும் கோபமா வெண்பா..” என்று கேட்டபடி மகளின் அருகில் அமர்ந்தார் மகேஸ்வரி.

பதிலேதும் சொல்லாமல் இருந்தவளைப் பார்க்க அழுகை வரும் போலிருந்தது அவருக்கு.

அவளின் நல்வாழ்க்கைக்காகத் தான் பாடுபடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், “உண்மையிலேயே நான் நீங்கள் பெற்ற மகள்தானா?” என்று கேட்டுவிட்டாளே!

அன்று தர்சன் தாலிகட்டியதும் அழுதுகொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தவளைச் சமாதானப்படுத்த வந்தவரிடம் ஆத்திரத்தில் அவள் அப்படிக் கேட்டபோது, “என்னம்மா இப்படியெல்லாம் பேசுகிறாய்..” என்றார் மகேஸ்வரி குரல் தழுதழுக்க.

“வேறு எப்படிப் பேச? என் விருப்பம் இல்லாமல் எவனோ ஒருவன் எனக்குத் தாலி கட்டுகிறான். ஏனடா இப்படிச் செய்தாய் என்று அவன் சட்டையைப் பிடித்துக் கேட்காமல் அவனுக்குச் சார்பாகப் பேசுகிறீர்களே. உங்களுக்கு என்னைவிட அவன்தான் உயர்வா? அப்படித்தான் என்றால் எதற்கு என்னைப் பெற்று வளர்த்தீர்கள்? குறைந்தது அப்பா இறந்தபோதாவது என்னையும் சேர்த்துக் கொன்றிருக்கலாமே. அப்படி நீங்கள் செய்திருக்க இந்த வேதனை எல்லாம் நான் இன்று அனுபவித்து இருக்கமாட்டேனே?” என்று மகள் கொதித்தபோது துடிதுடித்தே போனார் மகேஸ்வரி.

“வாயை மூடு வெண்பா! என்னவெல்லாம் பேசுகிறாய்? படித்தும் அறிவில்லாமல் பேசுகிறாயே! உன் மாமாவைச் சமாதானப் படுத்தாமல் அப்பாவும் மகனும் அடித்துக் கொள்ளட்டும் என்று விடச் சொல்கிறாயா? என்னதான் கோபம் இருந்தாலும் அவன் உன் கணவன். என் மகளின் கணவனை நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்கள்?”

“இன்னுமொருதடவை அவனை என் கணவன் என்று சொன்னீர்கள், நடப்பதே வேறு!” என்று ஆத்திரத்தில் கத்தினாள் வெண்பா.

மகளின் கோபமுகத்தில் அதிர்ந்துபோய் மகேஸ்வரி நிற்க, “என் அப்பா இருந்திருக்க இதெல்லாம் நடந்திருக்குமா? எனக்குப் பிடிக்காத எதையும் நடக்கத்தான் விட்டிருப்பாரா? ஆனால் உங்களுக்கு என்றைக்குமே உங்கள் அண்ணன் மக்கள்தான் பெரிது! அதனால் இனி நீங்கள் என்னோடு கதைக்கவே கூடாது!” என்றவள், அன்றிலிருந்து இன்றுவரை அன்னையின் முகம் பார்க்கவும் இல்லை. அவராக நெருங்கினாலும் முகம் கொடுத்துப் பேசவும் இல்லை.

இப்போதும் அவரின் முகம் பாராமல் இருக்கும் மகளின் கைகளைப் பற்றிக் கொண்டவர், “எனக்கு உன்னைவிட்டால் வேறு யாரம்மா இருக்கிறார்கள் சொல்லு? நீயும் இப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டால் நான் யாரிடம் போய்ப் பேச?” என்றார் விழிகளில் நீர் மல்க.

ஒருநொடி அமைதியாக இருந்த வெண்பா, என்ன நினைத்தாளோ.. தாயின் புறமாகத் திரும்பி, “இப்போது என்னம்மா? நான் உங்களுடன் கதைக்கவேண்டும், அவ்வளவுதானே. சரி கதைக்கிறேன். சும்மா அழாதீர்கள்!” என்றாள் அதட்டலாக.

அதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் அவர் விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது.

“அம்மா!” என்று அதைப்பார்த்துவிட்டுப் பல்லைக் கடித்தாள் மகள்.

“இல்லையில்லை, நான் அழவில்லை. இது நீ என்னுடன் கதைத்துவிட்டதில் வந்த ஆனந்தக் கண்ணீர்.” என்றவர், அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவருக்கு மகள் அவரோடு பேசிவிட்டதே இப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.
 
Top Bottom