காலையில் கணினியை பார்க்கும் பொழுதே வித்யாசாகர் அறையில் இல்லை. இன்று அவரை பார்க்க முடியாது என்று புரிந்து போனது. இவ்வளவு வருஷங்களாக அவரை பார்க்காமல் இருந்தது. அந்த வைராக்கியம் அவரை கண்டா நொடியில் பனியாக கரைந்து போயிருந்தது. அவர் முதல் நாள் இரவு தன்னை வீட்டில் விட்டது பற்றியே மீண்டும் பலமுறை அவளது மனம் நினைத்து சந்தோஷ பட்டுக்கொண்டிருந்தது. அதன் தாக்குதலில் அவளது முகம் கொஞ்சமாய் பொலிவு பூசிக் கொண்டிருப்பதை அங்கே வேலை செய்யும் சிலர் கவனிக்கவும் செய்தார்கள்.
வித்யாசாகரின் அறை சாவி சாகம்பரியிடம் இப்போது இருக்கிறது. அவரது அறையை சுத்தப்படுத்தி,படுக்கை விரிப்பு ,தலையணை உறைகளை மாற்றி, குளியல் அறையை சுத்தம் செய்து என்று செய்வதற்கு நிறைய இருக்கிறது.ஹவுஸ் கீப்பிங்கிலிருந்து இருவரை வரச்சொல்லி அவர்களுடன் இவளும் சென்றாள். வேலைகளை கண்காணிக்கும் வேலை இவளுடையது ஆயிட்டே. அதுவும் இப்போது வித்யாசாகர் அறையில் இல்லாத நேரம் வேறு. அந்த அறையில் வேலை முடிய அரை மணி நேரம் ஆகிவிட்டது.
இன்னமும் இதுபோல சுத்தப்படுத்தவென்று ஆறு அறைகள் இரண்டு தளங்களிலுமாக இருக்கிறது. செய்து முடிக்க எபப்டியும் தாமதம் ஆகிவிடும். தினமும் செய்வது தான். அத்துடன் நடுநடுவே கணினியில் இருக்கும் குறிப்புகளின் படிக்கு மற்ற அறைகளில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையவற்றையும் கவனிக்க என்று நேரம் எவ்ளவு வேகமாக செல்கிறது என்று சொல்லவே முடியாது.சில சமயங்களில் மதிய உணவுக்கு தாமதமாகி விடும்.
இன்றும் அப்படியான ஒரு நாள் தான்.ஏற்கனவே வீட்டில் மனசங்கடம். சாப்பிடாமல் வந்திருக்கிறாள்.நேரம் செல்ல செல்ல காலையில் சாப்பிட பிஸ்கட்டும் ,குடித்த காபியும் சென்ற இடம் தெரியவில்லை. வெகுவாக சோர்ந்து போனாள். போதாத குறைக்கு மாதாந்திர மூன்று நாட்களை எதிர்நோக்கி இருக்கும் நேரம். மூட் ஸ்விங் . இ பெற்றவர்களிடம் இவ்வளவு செய்திருக்க வேண்டாம் என்று நன்றாகவே புரிகிறது.ஆனாலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை.
எல்லா அறைகளின் சுத்த செய்யும் வேலைகளையும் முடித்துவிட்டு வருவதற்க்கு மதியம் ஒன்றை தாண்டியது. தனது இருக்கைக்கு வரும்பொழுது லேசாக தலை சுற்றுவதை போல உணர்ந்தாள். இங்கே மதிய உணவு வேலை பார்ப்பவர்களுக்கு சலுகை விலையில் உணவு கிடைக்கும்.இதுவரை சாகம்பரி இந்த சலுகையை பயன்படுத்தியது இல்லை.எப்போதும் வீட்டுலிருந்து உணவு எடுத்துவருவது வழக்கம். இன்று வேறு வழி இல்லை என்று வெறும் தயிர் சாதம் மட்டும் வாங்கி சாப்பிட்டாள்.ஏற்கனவே காலையில் சாப்பிடாதது வயிற்றில் லேசாக எரிச்சில் வந்திருந்தது. வேறு எதையாவது சாப்பிடவும் பயம்.
நடுவில் ஸ்ரீதயா பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக அம்மாவுக்கு அழைத்து விட்டாள்.பள்ளியில் நடந்த விஷயங்களை ஒரு முறை சொல்லி முடித்தாள் தயா.இதுவும் தினசரி நடக்கும் விஷயம் தான். அம்மாவிடம் பள்ளியில் நடந்த எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் தன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று மகளை பழக்கியிருந்தாள் சாகம்பரி.
இரவு அம்மாவை பார்த்ததும் மீண்டும் அதே விஷயங்களை ஸ்ரீதயா சொன்னாலும் புதியது போலவே கேட்டுக்கொண்டிருப்பாள் சாகம்பரி. சாகம்பரி மதிய உணவை முடிக்கவும்,ஸ்ரீதயா சொல்லி முடிக்கவும் சரியாக இருந்தது. "தயா குட்டி, நீ சாப்பிட்டியா? அம்மம்மா என்ன ஊட்டினாங்க? என்று கேட்டு மகளிடமிருந்து அதற்கான பதிலை பெற்றுக்கொண்டவளிடம் ஸ்ரீதயா,"ம்மா..நீ என்ன சாப்பிட்டே? மோர்னிங் நீ பிரேக்பாஸ்ட் ஸ்கிப் பண்ணிட்டே.தயா ரொம்பவே 'அன்ஹாப்பி' என்றது. தன் அம்மா தயாவின் அருகில் அமர்ந்திருப்பதை புரிந்து கொண்ட சாகம்பரிக்கு சிரிப்புதான் வந்தது.
"இல்லடா தயா.அம்மாவுக்கு வேலைக்கு கிளம்ப லேட்டாகிடுச்சு தானே..ஸ்ரீ பாப்பாக்கு அது தெரியுமே! இங்கே வந்து அம்மா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டாச்சே. சோ பாப்பா இப்போ ஹாப்பி ஆகியிருக்கணுமே! எண்டு மகளிடம் சாகம்பரி மழலை மொழியில் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளது மனம் லேசானது. மகளுக்காகதானே இந்த வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டாள். அப்பா கொடுத்திருக்கும் காலக் கெடுதான் 'இன்னமும் ஒரு வருஷம் இருக்கிறதே! பார்த்து கொள்ளலாம்' என்று அலைபாயும் எண்ணங்களுக்கு சமாதானம் கொடுத்துவிட்டு மீண்டும் வேலைகளை தொடர்ந்தாள். கை கழுவும் இடத்தில நேற்று பார்த்த அதே டிரைவர். வித்யாசாகருக்கு வண்டி ஓட்டியவன். இவளை பார்த்து கேவலமாக இளித்து வைத்தான். சாகம்பரிக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
"என்னாச்சு இவனுக்கு.நேத்து வித்யாவுக்கு இவன்தானே வண்டி ஓட்டிட்டு வந்திருந்தான். இன்னிக்கு இவன் போகலியோ ? என்னைய பார்த்து எதுக்கு இப்படி இளிக்கிறான். ஒமட்டுது " என்று நினைத்துக் கொண்டாள்.
இவளது முகம் போன போக்கிலேயே சாகம்பரியின் மனம் போகும் போக்கு அவனுக்கு புரிந்து போனது. கடுப்பானான். "பணக்கார கிழவனை பார்த்தாலும் பல்லு இளிப்பாளுக. நம்ம மாதிரி சாதாரண ஆட்களை பார்த்தா முகம் எப்பிடி போவுது பாரு.நேத்து அந்தாளு இவளை பார்த்த கணக்குல வண்டிய நிப்பாட்டினது என்ன,அவனோட கூட இருக்கிறவன் இறங்கி இவளுக்கு கதவை திறந்து விட்டது என்ன? ரெண்டு பேரும் வாயத் தொறந்து ஒண்ணயுமே பேசிக்கல. கண்ணால எம்புட்டு விசாரிப்பு.பழைய சிவாஜி கணேசன் - பத்துமினி கணக்குல கண்ணாலேயே நலம்தானே விசாரிப்பு.எல்லாம் கலி காலம்டா " என்று மனதுள் கருவினான்.
அவனது பார்வையில் சாகம்பரியின் ஒழுக்கம் கீழிறங்கி இருந்தது. விஷயத்தை அப்படியே விடவும் அவனுக்கு விருப்பம் இல்லை. உடன் இருக்கும் டிரைவர்களிடமும் பரப்புவதற்கு தயார் ஆனான். சாகம்பரிக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது.
வேலைக்காக ஸ்ரீபெரும்பதூர் அருகே இருக்கும் பிள்ளைப்பாக்கம் தொழிற்பேட்டைக்கு வந்திருந்தான் வித்யாசாகர். இடைவிடாத மீட்டிங்குகள்.நடுவே தொழிற்சாலைக்கு சென்று பார்வையிடுதல் எண்டு நேரம் பறந்ததே தெரியவில்லை. நடுநடுவே சாகம்பரியின் முகம் அவன் மனதில் மின்னலிட்டது.
அவளுக்கு ஐந்து மணிக்கு வேலை நேரம் முடிந்து அவள் கிளம்பிவிடுவாள் என்பதை முதல் நாளே தெரிந்து கொண்டிருந்தான். இங்கிருந்து கிளம்பவே இரவு ஆகிவிடும். அதற்குள் அவளும் கிளம்பிவிடுவாள் என்று மனதுக்குள் சிறு ஆயாஸம்.
அவளைவிட்டு பிரிந்த பிறகு தன்னை வாட்டும் தனிமைக்கு அவளை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்று புரிந்திருந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் புகுத்திக் கொண்டிருந்தான். மாலை ஐந்து என்றது கடிகாரம்.வித்யாசாகரனுக்கு திடீரென்று ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவளை இப்போதே பார்த்தாகவேண்டும் என்று உற்பத்தியான வேகத்தை தன் கட்டுக்குள் kondu வர முடியாமல் தகித்தான்.
வழக்கம் போல் சாரா தனது குதிகால் நீளமான செருப்பை அணிந்து கொண்டு காலணியின் சப்தத்துடன் இவர்களது கேபினுக்குள் நுழைந்தாள். வீட்டுக்கு கிளம்புவதற்கு சாகம்பரி தயாராகி கொண்டிருந்தாள். அவளது வேலை நேரம் முடிந்துவிட்டது. காலையிலிருந்து அவர் வருவாரா என்று அவளது கண்கள் காத்து சோர்ந்திருந்தது.
அந்த சோர்வு அப்பட்டமாக வெளியே தெரிந்ததோ! "என்ன சாகம்பரி,உங்க கண்கள்ல அவ்வளவு சோர்வு.உடம்பு ஏதாச்சும் முடியலையா என்ன? என்று கேட்டுக்கொண்டே கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தினாள் சாரா.
" ப்ச்..அவ்வளவு அப்பட்டமாகவா தெரியுது? ஒண்ணுமில்ல. சீக்கிரம் வீட்டுக்கு போனா பரவாயில்லைன்னு தோணுது"என்றவாறே தனது தோள் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளை வித்யாசமாக பார்த்தாள் சாரா. கீழே இவள் லிஃப்டுக்காக நிற்கும் பொழுது ஹோஸ் கீப்பிங்கில் வேலை செய்யும் இரண்டு பெண்கள் லிப்ட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்ததை கேட்டிருந்தாள் சாரா. அவளால் அதை நம்புவதா கூடாதா என்று தெரியவில்லை.
இன்று வரை சாகம்பரி யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசியோ,நின்று அரட்டை அடித்தோ , இங்கே தங்குபவர்களிடம் வளைந்து கொடுத்தோ யாருமே பார்த்திருக்க முடியாது. பெங்களூருவில் சாகம்பரி வேலை பார்த்த மூன்று நட்சத்திர ஹோட்டலின் இப்போதைய நிர்வாகி 'சுந்தர்' சாகம்பரியின் நெருங்கிய நண்பர் என்று இங்கே எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதுவே சாகம்பரிக்கு கூடுதல் பாதுகாப்பை கொடுத்தது.
இங்கே வேலை பார்க்கும் பெண்களின் பாதுகாப்புக்கு நிர்வாகம் பொறுப்பு .அதை அவர்கள் சிறப்பாகவே செய்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். அனாவசிய வம்புகளும் இதுவரை வந்தது இல்லை.யாரும் யாரை பற்றியும் தரக்குறைவான கிசுகிசுப்புகளை பரவவிட கூடாது. அப்படி செய்பவரை நிர்வாகம் தயவு தாட்சணியம் பார்க்காமல் கிளப்பி விட்டுவிடும். இவ்வளவு இருக்கும் பொழுது சாகம்பரியை பற்றிய விஷயங்கள் இவ்வளவு வேகமாக பரவுவது எப்படி சாத்தியம் என்று யோசித்தாள் சாரா.
தனிப்பட்ட முறையில் ஒருவரை பிடிக்காது என்பதற்க்காக அவர் மீது சேற்றை வாரி இறைக்க சாரா தயாராக இல்லை. இதோ இப்போது வெகுவாக சோர்ந்து போய் வீட்டுக்கு கிளம்பும் பெண்ணை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று இங்கே எல்லோருக்கும் தெரியும். சாகம்பரியின் வீட்டை பற்றியெல்லாம் யாருக்கும் தெரியாது. சாகம்பரியின் டிராவில் எப்போதும் அவளது மகள் ஸ்ரீதயாவின் புகைப்படத்தை வைத்திருப்பாள். அம்மாவும் மகளுமான எடுத்துக்கொண்ட படம்.மனம் சோர்வாக இருக்கும் சமயங்களில் சாகம்பரி அந்த படத்தை எடுத்து பார்த்துக்கொள்வதை இங்கே இருக்கும் பலரும் அறிவார்கள். சாகம்பரி தனக்கு மகள் இருக்கிறாள் என்பதை யாரிடமும் மறைத்து வைத்தது இல்லை. அந்த ஒருவரை தவிர. அவரிடமும் மறைக்க வேண்டும் என்பது இல்லை. எதற்கு தேவை இல்லாமல் என்றுதான்.
இப்போது சாரா தன்னையும் அறியாமல் சாகம்பரியின் ட்ராவிலிருந்து அந்த படத்தை வெளியே எடுத்து பார்க்கும் சமயம் அங்கே தனது அறையின் சாவியை வாங்குவதற்காக வித்யாசாகர் வந்து நின்றான். அவன் வருவதை பார்த்த சாரா அந்த படத்தை மேசைமீது அவசரமாக வைத்து விட்டு சாவியை எடுப்பதற்கு திரும்பினாள்.
அந்த நொடிகளில் சாகம்பரி தனது மகளுடன் இருக்கும் படம் வித்யாசாகரின் கண்களில் விழுந்தது.ஆரம்பத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் ஏதோ படம் என்று பார்த்தவர் சாகம்பரி என்றதும் இன்னமும் ஆழமாக அவதானித்தார்.அந்த நொடி மின்னல் என்று தாக்கிய உணர்வுகள். சத்தியமாக எதிர்பாராத ஒரு விஷயம். தன்னையும் சாகம்பரியையும் உரித்து வைத்து பிறந்திருக்கும் அந்த சிறுமியை கண்களுக்குள் நிரப்பிக்கொண்டார்.
இதயம் நின்று விடுமா..மூச்சு திணறியது.சுவாசத்திற்கு கஷ்டமாக இருந்தது. சாவியை எடுத்து வித்யாசாகரிடம் கொடுத்த சாரா,அங்கே இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில் அறை எண்,சாவியின் எண் போன்ற விபரங்களை நிரப்பி அவரிடம் கையழுத்து வாங்கிக்கொண்டாள். அவரது முகம் வெளிறி போயிருப்பதை பார்த்தவளுக்கு பயம் வந்தது.
" சார், ஆர் யு ஓகே? டொக்டரை வர சொல்லவா?எனி ப்ரோப்லேம் சார்? " என்று திரும்ப திரும்ப கேட்கவும் லேசாக சுயம் பெற்ற வித்யாசாகர்,"நத்திங்."என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். தோளை லேசாக குலுக்கி கொண்டவள் அப்போதுதான் மேசையில் வைத்த புகைப்படத்தை பார்த்தாள். ஒரு முறை அந்த படத்தை பார்த்தவள் அதை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்து விட்டு வேலையை தொடர்ந்தாள்.
அறைக்குள் வந்த வித்யாசாகரின் ரத்த ஓட்டம் அதிகரித்தது." எங்கள் காதலின் சாட்சியில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அதற்க்கு இப்போது நாலரை வயதிருக்கும்.அவள் ஏன் என்னிடம் சொல்லவில்லை.இது எனக்கும் உரிமையான விஷயம் இல்லையா? அவள் ஏன் என்னிடம் சொல்லவே இல்லை ?" என்று தனக்குள்ளேயே புலம்பினார்.
அவரால் இந்த விஷயத்தை ஜீரணம் செய்துகொள்ளவே முடியவில்லை. இது எனது உரிமை மட்டும் இல்லை . எங்களின் குழந்தையின் உரிமையும் கூட.குழந்தைக்கு தெரியவேண்டாமா தனது அப்பா யாரென்று? இதென்ன அநியாயம் என்று உள்ளுக்குள் பொங்கினான். கடைசியாக கிளம்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக தன்னிடம் திருமணம் பற்றி பேசியது ஞாபகம் வந்தது.அதற்கு முன்னர் அவள் திருமணம் பற்றி எப்போதுமே பேசியது இல்லை. திடீரென்று அவள் கேட்டவுடன் கொஞ்சமாவது தான் யோசித்திருந்திருக்க வேணும். அப்படி அப்போதே அவளிடம் கேட்டிருந்தால் இப்போது எனது மகள் அப்பா என்ற உறவே தெரியாமல் வளர வேண்டி இருந்திருக்காது. என்றெல்லாம் மனதுக்குள் யோசனைகள்.
அதிசயமாக "அவள் கேட்டவுடன் சம்மதித்து இருக்கவேண்டும்" என்று தனக்கே சொல்லிக்கொண்டார். அப்படியென்றால் அவள் இது பற்றிய பேச்சை எடுக்கும்பொழுதே அவள் கர்ப்பமாக இருந்தாளா? என்னிடம் சொல்லவே இல்லை,.எதற்கு தயக்கம். நான் ஒன்றும் குழந்தை என்று வந்தால் ஏற்க மாட்டேன் என்று சொன்னதில்லையே! என்று கேட்டுக்கொண்டார்.
request :
கதையை தொடர்ந்து படிக்கிறவங்க ,கதையோட நடை எப்பிடி இருக்குது எண்டு சொல்லிட்டு போங்கோ. கஷ்டப்பட்டு எழுதுறது உங்களோட ஒரு கமெண்ட் ,லைக் பாக்கும்பொழுது மனசு சந்தோசம் ஆகிடுது. இது ஒரு லைட் வெய்ட் கதை தான். ரொம்ப அழுத்தமா இருக்காது. ஹாபி ரீடிங்.
உங்களோட கதைக்க காத்திருக்கும்
stn 49
இமைக்க மறந்தேன் உயிரே