• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே 11

Stn49

New member
அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவளோ தனது கட்டிலில் புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். தயா தனது பாடி தாத்தாவுடன் உறங்க போவதாக சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு சென்று விட ஒருவித வெறுமை சாகம்பரியை சூழ்ந்து கொண்டது. நிறைய தயக்கங்கள்- அதன் பின்னான தனது அவர் மீதான மயக்கம் தயா என்று பழைய நினைவுகள் அவளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டதில் வெகுநேரம் விட்டதை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள்.

அவர் சென்னையில் தான் வேலை பார்க்கும் ஹோட்டலில் தங்கியிருந்தும் நாள் முழுவதும் அவரை பார்க்க முடியாமல் போனதில் உண்டாகியிருந்த கடுப்பு. இவ்வளவு வருஷங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் அவர் மீதான தாபம், கோவம் எல்லாமே ஒருசேர அவளிடம் விதைத்திருக்கும் தாக்குதல்.

உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் பல போர்கள் கூட முடிவுக்கு வந்து விடும்.ஆனால் என் மனதில் ஏற்படும் எண்ணங்களின் போர்கள் எப்போதுமே முடிவுக்கு வரப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டே கண்களை மூடினாள். மூடிய கண்களுக்குள் கூட நான் உன்னை பிரியப் போவதில்லை என்று அவர் உருவம் வந்து நின்றது.

அவரை நினைத்தபடிக்கே உறங்கியவளுக்கு திருமணம் பற்றி அவள் அவரிடம் கேட்ட நாள் காட்சியாக ஓடியது. தூக்கத்திலேயே தனது வயிறை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனமோ,'திருமணம் வேண்டாம் என்றால் எனக்குப் பரவாயில்லை. நம் குழந்தையின் கதி என்று அவரிடம் கேள்வி கேட்டது.

அவள் கேட்ட கேள்வி அவரையும் சென்று தாக்கியதோ? அரைத் தூக்கத்தில் போராடிக் கொண்டிருந்தவர் விருட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டார். அப்போதுதான் உறக்கத்தின் வாசலை எட்டிப் பிடித்திருந்தார். பெண்ணின் அருகாமையை வித்யாசாகரின் மனம் வெகுவாகத் தேடியது. கோவம்,வருத்தம் போன்ற உணர்வுகளுடன் அவள் மீதான காதல் ,மோஹம் ,தாபம் போன்ற உணர்வுகள் மீண்டும் தலை தூக்கியது.

அவரும் அவளும் நடுவில் தங்கள் குழந்தையுமாக ஒரு குடும்ப அமைப்பை அவரது மனம் கற்பனை செய்து பார்த்தது. எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்து அவளுடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவருக்கு இப்போது தூக்கம் வரும் போல இருந்தது. மீண்டும் படுத்துக்கொண்டார்.

அவர் எடுத்திருக்கும் முடிவு மனதுக்குள் உவப்பாக இருந்தது போல இங்கே பெண்ணும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள் . இவள் தூக்கத்தில் உளறியதை ,இவள் அறையிலிருந்து சப்தம் கேட்டு ஓடி வந்த இவளது அம்மா கேட்டுவிட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார் சாகம்பரியின் அம்மா. நேரடியாக சம்மந்தப் பட்ட இருவரும் நன்றாக தூங்கி கொண்டிருக்க ,சாகம்பரியின் அம்மா இப்போது உறக்கத்தை தொலைத்துவிட்டு அமர்ந்தியிருந்தார்.

மறுநாள் காலையில் எழும்பொழுது சாகம்பரி இவ்வளவு நாட்களாக இல்லாத ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தாள்.மனம் என்னவோ சந்தோஷமாக இருந்தது.இவ்வளவு வருஷங்களாக தொலைத்திருந்த உணர்வு.


மனமெல்லாம் பாரமாகியிருந்த சாகம்பரியின் அம்மா மறுநாள் காலையில் படுக்கையிலிருந்து உறங்கி எழவே நேரமாகியிருந்தது. இன்னமும் தயா எழுந்திருக்கவில்லை. அம்மா தூங்குவதை பார்த்த சாகம்பரி தானே அடுக்களைக்குள் செண்டு வேகமாக சமையலை ஆரம்பித்தாள்.மணி ஐந்து . அம்மாவுக்கு யாராவது அடுப்பங்கறைக்குள் நுழைவது என்றால் நிச்சயம் குளித்திருக்க வேண்டும் . இல்லாவிட்டால் ஹாலில் இருந்தபடிக்கு காபி குடிக்கவேண்டும் . அங்கே இருக்கும் பேசினில் கழுவ வேண்டும்.தப்பித்தவறி உள்ளே வந்துவிட்டால் வீட்டில் அன்று பெரிய பிரளயமே நிகழும்.

அதை யோசித்தவளாக வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவசரமாக ஒரு காக்கை குளியல். சமைத்து விட்டு வந்து எப்படியும் அலுவலகம் கிளம்புவதற்கு முன்னால் இன்னொரு முறை குளித்துவிட்டு தான் செல்ல வேண்டும் 'என்று மனதினில் யோசித்தபடியே உள்ளே வந்தவள் ஏதோ ஒரு யோசனையில் வித்யாசாகருக்கு பிடித்தவையாக சமைக்க தொடங்கினாள்.

பழைய நாட்கள் மனதில் பசுமையாக ஓடியதில் விரைவாகவே சமையலை முடித்துவிட்டாள் . இவள் வேலையை முடித்துவிட்டு வெளியே வரும் பொழுதில் அப்பா வேலைக்கு செல்ல தயாராகி வந்து விட்டார்.அவரது அலுவலகம் மணலியில் இருப்பதால் விரைவாகவே கிளம்பி விடுவது வழக்கம். அப்பாவுக்கும் தனக்குமாக மதிய உணவு டப்பாக்களில் அடைத்து விட்டு , இருவருக்குமான காலை சிற்றுண்டியை தட்டில் போட்டு டேபிலில் வைத்தாள். அவளது அப்பா இப்போதும் அவளிடம் முகம் கொடுத்து பேசுவதாக இல்லை. புரிந்து கொண்டவளுக்கு கண்கள் கலங்கியது. இதெல்லாம் அவளுக்கு புதியது.

குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு வந்த பொழுதில் கூட அப்பா இப்படி இருக்கவில்லை. பெரியதாக தண்டனைகள் ஏதும் கொடுக்கவில்லை. குழந்தையை பற்றிய விளக்கங்களை இவள் சொன்னதில்லை. இப்போது அவர் தனது பிடிவாதத்தை காண்பிக்கும் பொழுது இவளுக்கு வலிக்கிறது.

பெற்றவர்கள் பிள்ளைகளில் எல்லா நடவெடிக்கைகளையும் ஆதரிக்க முடியாது.ஏற்கனவே அவர்கள் சாகம்பரியின் விஷயத்தில் அதிகமாக பொறுமையை கடைபிடித்து விட்டார்கள். இப்போதாவது விழித்துக் கொள்ளாவிட்டால் மகள் எவ்வளவு காலம் இப்படியே இருக்க முடியும் என்ற கவலை அவர்களை படுத்த ஆரம்பித்துவிட்டிருந்தது.

மனதை பிசைந்து கொண்டிருக்கும் கவலையை தூரமாக வைத்துவிட்டு தனது அலுவலகத்திற்கு கிளம்பினார் சாகம்பரியின் அப்பா. அவர் சரியாக சாப்பிடாமலே கிளம்பியது வேறு சாகம்பரிக்கு தாங்க முடியவில்லை.வெறுத்துப் போனது. மதிய உணவையாவது எடுத்துக்கொண்டாரே என்று ஆறுதல் கொண்டாள். இரவு நண்பனின் வீட்டில் தங்கிவிட்டு காலையில் தங்களது வீட்டுக்கு வந்த சாகம்பரியின் தம்பி அவன் பங்குக்கு அவனும் ஒன்றும் பேசாமலேயே அறைக்குள் சென்று விட்டான்.தயாவையாவது எழுப்பி பள்ளிக்கு கிளப்பலாம் என்று அறைக்குள் சென்றால் அவளோ தனது பாட்டியின் அறைக்கு சென்று அங்கேயே உறங்கியிருந்தாள். சாகம்பரியின் அம்மாவோ காலைக் கடன்களை முடிப்பதற்காக சென்றிருந்தார்.

ஹாலுக்கு வந்தவள் நேரத்தை பார்த்தாள் .வேலைக்கு கிளம்பும் நேரம் வந்திருந்தது.இதற்குமேல் நேரம் கடத்த முடியாது என்று உணர்ந்தவளாக தனது அறைக்கு சென்று சரியாக பத்தாவது நிமிஷத்தில் தயாராகி வந்தாள் . அதற்குள் அவளது அம்மாவும் ஹாலில் காபி சகிதம் அமர்ந்திருப்பதை கண்டு ஒரு தலை அசைப்புடன் மேசையில் இருந்த மதிய உணவு பையை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

தயா விஷயத்தை வித்யாசாகர் தெரிந்து கொண்டுவிட்டார் என்று இன்னமும் சாகம்பரிக்குத் தெரியாதே! அதனால் வெகு நிதானமாகவே இருந்தாள் . இன்று வித்யாசாகருக்கு நிச்சயமாக வெளியில் செல்லும் எண்ணம் இல்லை. சாகம்பரியிடம் நேராக சென்று கேட்டுவிடும் வேகத்தில் அவர் இருந்தார். குழந்தை தன்னுடையது தான் என்பதில் அவருக்கு இம்மி அளவும் சந்தேகம் இல்லை என்னும்பொழுது எதற்க்காக இன்னமும் தாமதிப்பது என்றுதான் அவருக்கு எண்ணம்.

தனது வீட்டில் அழைத்து யாரிடமாவது தனது ரகசியத்தை சொல்லிவிட வேண்டும் என்று பரபரப்பு வேறு தொற்றி கொண்டது. ஆனாலும் முதலில் சாகம்பரியிடம் பேச வேண்டும் .எதற்க்காக மறைத்தாள் என்று தெரியவேண்டும் .இப்போதே வீட்டில் சொல்லி ,வேறு ஏதாவது கிளம்பினால் சரியாக இராது என்று இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டார்.


அவரது பொறுமைக்கு ஆயுள் அதிகமில்லை என்பதை அவர் இன்னமும் அறியவில்லை. காலையில் தனது அறையிலிருந்து தயாராகி வராமல் அவர் உள்ளுக்குள்ளேயே இருந்தார். இரண்டுமுறை அறையிலிருந்து அழைப்பு வந்து விட்டது.முதல்முறை வித்யாசாகரின் காபி மற்றும் காலை உணவுக்காக.மற்றொருமுறை அறையை சுத்தம் செய்வதற்க்காக. அறையை சுத்தம் செய்யும் நேரத்துக்கு சாகம்பரி சென்று அங்கே நின்று கொண்டாள் . அவள் வந்திருப்பதை பார்த்தவருக்குள் பாட்டிலில் நிற்க முடியாமல் பொங்கி வெளியே வரும் நுரைகள் போல உணர்ச்சிகள் வெளியே வர முயல கோவம் எனும் முகமூடி

கொண்டு அதை அடைக்க முயன்றார். பெண்ணிடம் எப்படியாவது இன்று பேசியே தீர வேண்டும் என்று அவரது மூளை அவசர கதியில் ஆணை பிறப்பிக்க வேலை செய்பவரின் கவனத்தை கவராமல் மெல்லிய குரலில் ," இன்னிக்கு உன்கிட்ட எனக்கு பேசியே ஆகணும். ஈவினிங் சிக்ஸ் ,**** அந்த ரெஸ்டாரெண்டுக்கு வந்திரு. நிச்சயம் நீ வந்தாகணும்"என்றுவிட்டு அங்கே போடப்பட்டிருக்கும் ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.டீபாயில் வைத்திருக்கும் தனது கணினியின் மீது அவரது கவனம் இருப்பதாக காண்பித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அவரது கவனம் தன்னையே ஆக்கிரமிப்பு செய்து கண்டிருப்பதை சாகம்பரியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதன் சிலிர்ப்பை அவள் உடல் அனுபவித்தது. தன்னிலிருந்து ஒரு வெப்பம் வெளியாவதை அவளால் தடுக்க முடியவில்லை. என்னவென்று அங்கே இருப்பது? வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பெண் தனது வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பவும் தானும் கிளம்பினாள் சாகம்பரி.

வித்யாசாகருக்குள் மனம் அடித்துக்கொண்டது. 'எப்படி வாழ வேண்டிய பெண் இவள்' என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

எப்படியோ சிதறும் தனது கவனத்தை குவித்து அலுவலக வேலைகளில் தன்னை எடுபடுத்திக் கொண்டவருக்கு அது அவ்வளவு சிரமமாக இல்லை. சாகம்பரி கிளம்பி வந்த பிறகான கவன சிதறல்களை அலுவலக வேலைகளை வைத்து தானே திசை திருப்புகிறார்.


உள்ளே அறைக்குள்ளே இருப்பவருக்கும் சரி,வெளியே நின்றுகொண்டு தனது வேலைகளை செய்பவளுக்கும் சரி, மாலை என்ன என்பது பெரிய கேள்வியாக தொக்கி நின்றது.உண்மையில் சாகம்பரிக்குள் உதறல் எடுத்தது.தான் ஏதோ பெரிய தவறு செய்தவளாக உணர்ந்தாள்.இவ்வளவு வருஷங்களில் இப்படி அவள் யோசித்தது இல்லை.இன்று நேருக்கு நேராக அவர் தன்னிடம் தனியே பேச வேண்டும் என்று சொன்ன நொடி ஆரம்பித்தது.

ஏசி குளிரையும் மீறி வெளியே வரும் வியர்வையை துடைத்து முடியவில்லை. அவளது முகத்தை பார்க்கும் எவருக்குமே அவள் பதட்டத்தின் உச்சத்தில் இருப்பதை கண்டுகொள்ளும் அளவுக்கு இருந்தது.

வேலை நேரம் முடிந்தவுடன் ,"வெளியே செல்வதாகவும் வருவதற்க்கு தாமதம் ஆகலாம் "என்றும் வீட்டுக்கு அழைத்து சொல்லிவிட்டாள் . அவளது அம்மாவோ,"இதென்ன புது பழக்கம் சாகி ? குழந்தை மதியம் பள்ளிக்கூடம் விட்டு வந்தா உன்னை காணாம தவிக்குது. நீயானா அடிக்கடி லேட்டாகும்னு சொல்றே. சரியாய் இல்ல சொல்லிட்டேன்."என்றுவிட்டு வைத்துவிட்டார்.

முகத்தில் வேகமாக அம்மாவிடமிருந்து அறை வாங்கியது போல உணர்ந்தவளாக ஒரு பெருமூச்சுடன் கிளம்பினாள்.முகத்தை சீர் செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் சுத்தமாக இல்லை. அதற்க்கு எந்த தேவையும் இல்லை என்று ஒரு அலட்சியம் வந்து விட்டிருந்தது.வாகன தரிப்பிடத்தில் தனது துவிசக்கர வாகனத்தை நோக்கி நடந்தவளை அங்கே நின்று கொண்டிருந்த சில வாகன ஓட்டுனர்கள் பார்த்த பார்வையில் அவ்வளவு ஏளனம் நிரம்பி இருந்தது. அந்த பார்வைகள்,"நீ இவ்ளோ தானா..இதுக்கா இம்புட்டு சீனு"என்று கேட்டது. ஆனால் இவளுக்கு இவர்கள் இன்னும் புரணி பேசுவதுதான் தெரியாதே! அந்த பார்வையை மொழிபெயர்க்க தோன்றாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

டிக்கியிலிருந்து தனது ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டவள், வாகனத்தை கிளம்பினாள்.இவள் கிளம்பும் நேரத்தை கணக்கிட்டு வித்யாசாகரும் ராபிடோவில் தனக்கு ஒரு காரை புக் செய்து கொண்டார். இன்னமும் இருவரும் சந்திப்பதை வேறு யாரும் அறிந்து கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.ஏற்கனவே அவளை பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு சென்று விடும் பொழுது டிரைவர் பார்த்த பார்வையில் 'ஏகத்துக்கும் அக்கறை' நிரம்பி வழிந்து இருந்ததை வித்யாசாகர் கணித்துவிட்டார். இப்போதும் மீண்டும் வேலை தளத்தில் தன் மானசீக மனைவி தரம் இறங்கிப் போவதை அவர் விரும்பவில்லை.

வந்து நின்ற ராபிடோவில் ஏறியவர், அவளை சிஃனலில் பார்த்துவிட்டார். அலுங்கி நலுங்கிய அவளது தோற்றம் அவர்களது அழகிய பெங்களூரு நாட்களில் கண் முன்னே நிறுத்தியது. அதில் அவரது முகம் தாங்க விகசித்தது.


ஒருவழியாக ட்ராபிக்கில் தவித்து வித்யாசாகர் சொன்ன அந்த பிரபல ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தாள் சாகம்பரி. அது உண்மையில் ஹோட்டல் இல்லை.ஹோட்டலின் காபி ஷாப். ஏற்கனவே வித்யாசாகர் இவர்களுக்கக தனியாக டேபிள் புக் செய்திருந்தார். அது ஒரு தனிப் பகுதியாக இருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தலைகள். அதில் நிறைய பேர் சீரியசாக பேசுவது பார்ப்பதற்கு ஏதாவது பிசினெஸ் விஷயமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது.சில இளவட்டங்கள்.ஒரு கிளாசில் இரண்டு ஸ்ராகள் போட்டு ஜூஸை உரிந்து கொண்டிருந்தார்கள்.

அவற்றை பார்த்துக்கொண்டே கடந்தவளுக்குள் உள்ளே ஏதோ செய்தது.பார்க்காதது போல கடந்து செல்ல முடியவில்லை.அவள் வரும்பொழுதே அவளது முகம் காட்டும் வர்ண ஜாலங்களை பார்த்தவருக்கு விவரணம் செய்யவியலாத உணர்வலைகள் ஆழியென எழும்பி அவரை சுருட்டிக்கொள்ள எத்தனித்து .

அவரை இருக்கையில் கண்டுவிட்டு அவரை நோக்கி வந்தவளுக்கோ அருகே வரும்பொழுதே புதுப்பெண்ணுக்கான நாணம் இறுக்கிப் பிடித்தது. அவள் தன்னை வெளியிட்டுக்கொள்ள விரும்பவில்லை தான். அவளது மனமே அவளுக்கான சதியை செய்யும்பொழுது அவளும்தான் என்ன செய்ய முடியும்!

அவளது முகத்தை பார்க்கும்பொழுது வித்யாசாகருக்கு அவர்களின் முதல் கூடல் ஞாபகம் வந்துவிட்டது.அன்றும் இப்படித்தான்,அவரது தொடுகையிலும், மூச்சின் வெப்பத்திலும் அவள் வெந்து தணிந்தாள் என்றால் உணர்ச்சிகள் எல்லை மீறும் நேரம் அவரை தனக்குள் சுருட்டிக் கொண்டாள் .கூசி சிவத்த அவளது வதனம் அன்று போலவே இன்றும் அவரை பித்தனாக்கியது.

அவளுக்கு பிடித்த வர்ணத்தில் ஷர்ட்டும், பேண்டும் அணிந்து ,முகத்தை க்ளீன் ஷேவ் செய்து கொண்டு இவளுக்கு பிடித்த நறுமண திரவியத்தை பூசிக்கொண்டு,பெண்ணை கிறங்க செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வித்யாசாகர் வந்து இங்கே அமர்ந்திருக்கையில் பெண்ணுக்கு நிச்சயம் சோதனை தான். பேசுவதற்கு வார்த்தைகள் அற்றவளாக சாகம்பரி சமைந்து நின்றாள்.

அவளின் முகத்தை பார்த்து அவளை கண்டுகொண்டவர் லேசாக அவளை நோக்கி கண்ணடிக்க அதிலும் சுய உணர்வு பெற திராணி அற்றவளாக அவரையே அவள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க ,மிட்டாய் கடையை பார்த்து ஜொள்ளிக் கொண்டிருக்கும் சிறு பெண்ணின் நிலையில் சாகம்பரி. அவளாக சுய உணர்வு பெற்று அமர போவது இல்லை என்று உணர்ந்தவராக அவளை கைத்தலம் பற்றி அவர் அருகே இருக்கும் கதிரையில் அமர வைத்தார் வித்யாசாகர்.
 
Top Bottom