• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே 20

Stn49

New member
இமைக்க மறந்தேன் உயிரே 20

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்!

எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் , நிச்சயமாக சாகம்பரிக்குத் தெரியாது. கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததே ஸ்ரீதயாவுக்காக தான். வித்யாசாகரின் முகம் வேறு மனதில் மின்னியது. அவருக்கு அழைக்கலாமா..நீ தானே எனது கணவன். இவர்கள் பேசுவது உனக்கு சம்மதமா..என்று சட்டையை உலுக்கிக் கேட்க வேண்டுமாய் தவிப்பு. வீட்டில் இன்னமும் வித்யாசாகரை பற்றித் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். வீட்டுக்கு வந்தவளின் முகம் பார்த்தால் அவ்வளவு சரியாக இல்லை.

வித்யாசாகரிடம் அவ்வளவு பேசி பெற்றவர்களுடன் வர சொல்லிவிட்ட பிறகு இப்போது அழைக்கவும் தயக்கம். சாகம்பரியின் அப்பா சுந்தருக்கு அழைத்து ,"பெண்ணின் முகம் சரி இல்லை.நீதான் என்னவென்று கேட்டு சொல்ல வேண்டும் " என்றுவிட்டு,இரவு முழுவதும் சுந்தரால் தூங்கவே முடியவில்லை.

விடிந்ததும் விடியாததுமாக காரில் சென்னை கிளம்பிவிட்டான். சாகம்பரியை அவன் நேரில் பார்த்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.அவளாக அழைத்து எதுவும் சொல்ல மாட்டாள். இதுவரை தனது எந்த வலியையும் அவள் இவனிடம் சொன்னது இல்லை.அதிலும் அவனுக்குத் திருமணம் ஆன பிறகு,இன்னும் தனது எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டாள் .

ஏதோ பெரியதாக நடந்திருக்க வேண்டும் .இல்லாவிட்டால் அவளது அப்பாவே போனில் அழைத்து கேட்க சொல்லியிருக்க மாட்டார்.ஒரு நண்பனாக இப்போது தான் அவளுக்கு முக்கியம் என்று அவன் மனம் அவனுக்கு சொல்லிக்கொண்டே வந்தது.

வரும் வழியில் எல்லாம் அவனது மனம் தவித்துக் கொண்டு இருந்தது.லேசில் அழுபவள் இல்லை சாகம்பரி. எதுவாக இருந்தாலும் நின்று சமாளித்துதான் பழக்கம். மனதில் இருப்பதையும் அவ்வளவு எளிதாக வாய்மொழியில் சொல்லிவிடவும் மாட்டாள். அந்த விஷயத்தில் சாகம்பரியும் வித்யாசாகரும் வெகு பொருத்தம்தான் என்று நினைத்தவன் ஏதோ நினைத்துக்கொண்டான். வித்யாசாகர் இவளிடம் திருமணம் பற்றி ஏதாவது பேசினாரா..இல்லையா ? அவரும் எதுவும் சொல்லவில்லை. சாகியும் என்னை அழைக்கவில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த கண்ணாமூச்சியை தொடருவார்கள்?ஒருவேளை அவர்தான் ஏதாவது சொல்லி இருப்பாரோ..என்றெல்லாம் தோன்றவே மணியை பார்த்தான்.சென்னையை நெருங்க இன்னமும் ஒரு மணி நேரம் இருந்தது. காரை ட்ரைவர் தாம் ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்.

அவரிடம்,"டிரைவர் அண்ணா..வண்டிய வழியில ஏதாவது நல்ல ஹோட்டல்ல விடுங்க. பசிக்குது"என்றான்.அடுத்த பத்தாவது நிமிஷத்தில் ஒரு பிரபல ஹோட்டலின் முன் நின்றது இவர்களது வண்டி.

கீழே இறங்கியவன்,"நீங்களும் ஏதாவது சாப்பிட்டுக்குங்க.இங்கேந்து கிளம்ப கொஞ்சம் நேரமாகலாம் "என்றுவிட்டு உள்ளே சென்று விட்டான். டிரைவரும் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு அங்கே வெளியே போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உள்ளே சென்ற சுந்தர், சாப்பிடுவதற்கு ஓர்டர் செய்து விட்டு , வித்யாசாகருக்கு அழைத்தான். முதலில் அழைத்தபொழுது ரிங் சென்று கொண்டே இருந்தது. அடுத்தமுறை அழைக்கும் பொழுது அவன் எடுத்துவிட்டான். அவன் குரலில் தூக்கம் மிச்சம் இருந்தது."சொல்லுங்க சுந்தர்.குட் மார்னிங்.என்ன போன் பண்ணியிருக்கீங்க?" என்ற வித்யாசாகரின் குரலில் தூக்கத்தை மீறிய ஏதோ இருந்தது.

"மிஸ்டர்.வித்யாசாகர்,ஆர் யூ ஓகே? உடம்பு ஏதாவது..."

"ஆமா ,சுந்தர்.நேத்துலேந்து காய்ச்சல். மாத்திரை போட்டேன்.இப்போ பரவாயில்லை. நீங்க என்ன இப்போ கூப்பிட்டு இருக்கீங்க?எனிதிங் அர்ஜென்ட்.நம்ம ஹோட்டல்ல .ஐ மீன் நா அங்கே வரணுமா?"

அவசரமாக மறுத்த சுந்தர்,"நா இப்போ சென்னை போறேன். சாகம்பரியை பாக்க .நேத்து வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தவளுக்கு அழுகை நிக்கலையாம். என்ன காரணம்னு தெரியல .நீ பேசுன்னு நேத்து ராத்திரி அங்கிள் போன் செஞ்சிருந்தாரு.எனக்கு இங்கே பெங்களூருல இருக்க முடியல.அதான்,அவளை நேரே பார்த்துட்டு வரலாம்னு கிளம்பிட்டேன்.

ஆமா ,நீங்க அவகிட்டே பேசினீர்களா? என்ன சொன்னா அவ? அவளோட அழுகை எனக்கு பயமா இருக்கு .இதுவரைக்கும் அவ அழுததே இல்லை.உங்கள பிரிஞ்சு வந்த அன்னிக்கு கொஞ்சநேரம் அழுதா.பிறகு அடுத்து என்னனு எழுந்திட்டா. இப்போ...எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல." என்றான் சுந்தர்.

கொஞ்சநேரம் மௌனமாக இருந்த வித்யாசாகர்,"இட்ஸ் ஓகே. என்னனு எனக்கும் புரியல .நா அவகிட்ட பேசினேன். நோ தான் சொன்னா.நா அவளோட வீட்டுக்கு போய் அவங்க பேரன்ட்ஸ்கிட்டே பேசினேன். எங்க வீட்டுல பெரியவங்ககிட்ட பேசி கூட்டிட்டு வந்து கல்யாணம் பேசினா அவங்களுக்கு சம்மதம்னு சொன்னாங்க. நா நேத்து மோர்னிங் தான் இங்கே வந்தேன். இன்னும் பேசல.அதுக்குள்ள காய்ச்சல் வேறே.

ஒண்ணு பண்ணுங்க சுந்தர்.நீங்க அவகிட்டே பேசிட்டு எனக்கு சொல்லுங்க. உங்க கால் வரவும் நா என்னனு பார்க்கிறேன்"என்றுவிட்டு வைத்துவிட்டான்.இதற்குமேல் பெரியவர்களிடம் பேசாமல் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து ,தயாராகி வெளியே வந்தவனை அவனது ஒட்டுமொத்த குடும்பமும் வித்தியாசமாக பார்த்தது.அதில் அவனுக்கு கொஞ்சம் வெட்கம் கூட வந்து தொலைத்தது.அதுவும் அங்கே யார் கண்ணுக்கும் தப்பவில்லை.

ஆண்களின் கம்பீரம் எவ்வளவு அழகோ,அவ்வளவு அழகு அவர்களது வெட்கம் . என்றாவது தான் அதை பார்க்க முடியும். உணவு சாப்பிட அங்கே அமர்ந்து இருந்த மொத்த குடும்பமும் அவனை பார்க்க லேசாக ஒரு படபடப்பு வேறு வந்திருக்க அது அவனுக்கே வித்யாசமாக தோன்றியது.சுதாரித்துக் கொண்டு வந்து தந்து இருக்கையில் அமர்ந்தவனின் பார்வை தனது பெற்றவர்களிடம் நிலைத்தது.

வித்யாசாகர் ஏதோ முக்கியமானதாக பேசுவதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறான்.இல்லாவிட்டால் இந்நேரத்திற்கு இவன் சென்னையில் தானே இருந்திருக்க வேண்டும்?

அவனே பேசட்டும். பூனை பைக்குள் இருந்து தானே வெளியே தனது தலையை நீட்டும் என்று அங்கே எல்லோருமே அமைதியாகத் தான் இருந்தார்கள் கொஞ்சநேரம் அங்கே நிலவிய அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது அவனது பாட்டியின் குரல்." என்ன வித்யா , இந்நேரம் வந்திருக்க..உனக்கு இது ஆஃபீஸ் நேரமாச்சே.இப்போ பெங்களூரு வர மாட்டேன்னு சொல்லிட்டு தானே போனே.நீ இதோட தீபாவளிக்கு தான் வருவேன்னு நினைச்சோம்" என்று நிறுத்தினார். அவருக்கு லேசாக மூச்சு வாங்கியது.பின்னே..வயது தொன்னூறு ஆயிட்டே!

தீபாவளிக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. பாட்டி தன்னை கிண்டல் செய்கிறார் என்று வித்யாசாகருக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்பது தான்.

"இல்ல..பாட்டி , உங்களை எல்லாம் நேரே பார்த்து பேசணும்.முக்கியமான விஷயம்.தள்ளிப் போட முடியாது.அதான்,கிளம்பி வந்திட்டேன். ஆமா ,எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க பொண்ணு பார்த்திட்டு இருந்தீங்களே ,அது இப்போ என்ன நிலைமைல இருக்கு.ஏதாவது அமைஞ்சு வந்துச்சா...?" உள்ளே இருக்கும் படபடப்பை மறைத்துக் கொண்டு அவன் கேட்டதில் அங்கே இருந்த அவனது பெற்றவர்களுக்கு புரை தட்டியது.சித்தி சித்தப்பா கூட விவகாரமாக அவனை பார்த்தார்கள்.

வயதான அவனது பாட்டிக்கு பேரன் சொல்ல வந்திருக்கும் விஷயம் புரிந்து போனது. இவ்வளவு காலமாக திருமணம் வேண்டாம் என்றான்.வேறு பெண் பார்க்காதீர்கள் .நான் மனையில் உட்கார மாட்டேன் " எண்டு வாதிட்டவன்,இப்போது அதை பற்றி விசாரிக்கிறான்.அப்படியென்றால்...

"ஏன்,நீ ஒருத்திய வச்சி குடித்தனம் நடத்தினியே.அவ உனக்கு இப்போ வாழ்க்கை தரேன்னு சொல்லிட்டாளா...அவளை பாக்க தானே சென்னை ஆஃபீசில் டென்ட் போட்டு உட்கார்ந்திருக்க... "என்று கேட்கவே திடுக்கிட்டு பாட்டியை பார்த்தான் வித்யாசாகர். இங்கே ,இந்த வயதில் அதிகமாக நடமாட்டம் இல்லாத நிலையில் பாட்டி இவ்வளவு தூரம் யோசிக்க முடியுமா!என்ற வியப்பு அவன் பார்வையில் அப்பட்டமாக தெரிய,வீட்டின் மற்ற பெரியவர்கள் இவனை "அப்படியா"என்று பார்த்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அப்படியே அதை நிறுத்திவிட்டு இவனையே பார்க்க,இவனுக்கு சங்கடம் ஆனது. " அவ .. முடியாதுன்னு தான் சொல்றா. அவளோட பேரன்ட்ஸ்கிட்டே பேசினேன்.அவங்க உங்களை எல்லோரையும் கூட்டிட்டு வந்து பொண்ணு கேட்டா, உங்க எல்லோருடைய சம்மதத்தின் பேரில் பொண்ணை கல்யாணம் செஞ்சு தர்றேன்.ஏற்கனவே,நீங்க ரெண்டுபேரும் எட்டு மாசம் ஒண்ணா இருந்தும் ஒழுங்கா முடிவு எடுக்க தெரியாம பிரிஞ்சு வந்தாச்சு. உங்க ரெண்டுபேர் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்ல. இனிமே,இது பெரியவங்க சம்மதம் பேரில் நடக்குற கல்யாணமாத்தான் இருக்கணும்.போய் பேசி கூட்டிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார்.என்னோட பொண்ணை கூட என் கண்ணுல காமிக்கல " என்று சொல்லிக்கொண்டே அன்று ஹோட்டலில் பார்த்த புகைப்பட நகலை தனது அலைபேசியில் திறந்து பாட்டியிடம் கொடுத்தான்.

அலைபேசி ஒவ்வொருவர் கைகளிலும் சுற்றிவிட்டு மீண்டும் இவன் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதில் பார்வையை பதித்தவன் கண்களில் என்ன இருந்ததோ... அவன் தன்னை மறந்து அந்த படத்தில் பார்வையை படித்திருக்க சுற்றி இருப்பவர்கள் அனைவரும் இவனிலே பார்வை பதித்து இருந்தார்கள். அதில் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது.

வெறும் எட்டு மாதத்தில் ஒரு பெண்ணுடன் ,திருமணம் அற்ற இல்லற வாழ்க்கை நடத்தி,அதில் ஒரு குழந்தையும் பெற்று,அது தெரியாமலேயே இந்த ஐந்து வருஷன்களை ஒட்டி... என்னதிது?என்று தான் அவர்களுக்கு இருந்தது.ஒரு பெண்ணை ஏமாற்றி கைவிட்டு விட்டான் வித்யாசாகர் என்பதாக பார்த்தார்கள்.

"உனக்கு குழந்தை இருக்குறது தெரியாதா..இல்ல ...தெரிஞ்சும் விலகி நின்னியா? என்றார் வித்யாசாகரின் அம்மா. அவரது குரலின் நடுக்கம் அவரது கோவத்தின் அளவை அப்பட்டமாக சொன்னது. அவர்களது குடும்ப வாரிசு. பிறந்திருப்பதே இங்கே ஒருவருக்கும் தெரியாது எனும் பொழுது எல்லோருக்கும் எப்படி இருக்கும் ?

"இல்லம்மா ..எனக்கு அவ பிறந்திருக்கறதே தெரியாது. என்னை விட்டு கிளம்புறதுக்கு முன்னாலே அவ சாகம்பரி நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்னு கேட்டா.நா தான் எனக்கு கல்யாணத்து மேல விருப்பமும் ,உடன்பாடும் இல்லன்னு சொல்லிட்டேன்.அதுக்குப் பிறகு ஒரே வாரம் தான் என்கூட இருந்தா.அப்புறமா..என்னோட பேரன்ட்ஸ் கிட்டேயே போறேன். எனக்கு அவங்க இல்லாம இருக்க முடியலைன்னு சொல்லிட்டு வீட்டிலிருந்து கிளம்பிட்டா." அதனால எனக்கு அவ கன்ஸீவா இருந்ததே தெரியாது."என்றான்.

அவனது பாட்டி படு நக்கலாக கேட்டார்."அப்போதே தெரிஞ்சிருந்தா துரை என்ன செஞ்சு இருப்பீங்க...அவளை கல்யாணம் செஞ்சு வாழ்ந்து இருந்திருப்பீங்களா?" பாட்டிக்கும் அவனது முதல் கல்யாணம் அவனை படுகுழியில் இறக்கி ,அவமானத்தை தந்து முடிந்து போனதில் துக்கம் தான்.வீட்டின் முதல் பேரன்.ஒரு கெட்ட பழக்கமும்,ஊதாரித்தனமும் கிடையாது. சிறு வயதிலேயே குடும்பத் தொழிலில் நுழைந்து விட்டான்.இன்று அவனது அப்பா,சித்தப்பாவை விட இவன் தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறான். அப்படிப் பட்டவனுக்கு முதல் திருமணம் பலத்த அடியுடன் ,மரண காயத்தையும் மனதில் விட்டு சென்று இருக்கிறது.அதற்க்கு... இவன் மீது ஆசை கொண்ட பெண்ணா பலி ? இவனை விட மிகவும் சிறிய பெண்.பிடிக்கவில்லை என்று சொல்லியோ,புத்தி சொல்லியோ அனுப்பி இருக்க வேண்டும்.அவளுடன் குடும்பம் நடத்த இனிக்கிறது .கல்யாணம் கசக்கிறதா ?என்று தான் தோன்றியது பாட்டிக்கு.

கூடவே தான் கொள்ளுப் பாட்டி ஆகிவிட்டிருக்கிறேன்.அது கூட தெரியாது. குழந்தையை தூக்கிக் கொஞ்சவும் வாய்க்கவில்லையே!என்ன பாவம் இது என்று மனதுள் மருகினார் முதியவர். சிறு வயதில் தெரியும்,பணம் புகழ் அந்தஸ்து,குடும்ப கௌரவம் இதெல்லாம் வயதாகும் பொழுது ஒன்றுமே இல்லை.மனித உறவுகள் தாம் முக்கியம் என்று தோன்றி விடுகிறது. பேரனின் திருமணம் முடிக்காத காதலியையும், கொள்ளுப் பேத்தியையும் இரண்டு கைகள் கொண்டு அணைத்து அழைத்துக் கொள்ள அவர் ஆத்மார்த்தமாக தயாராகி விட்டார். அவர் பேச்சுக்கு இன்று வரை அந்த குடும்பத்தில் மறு பேச்சு கிடையாது.

"சரி வித்யா..நாம ஒரு நல்ல நாளா பார்த்து அவங்க வீட்டுல போயி பேசலாம்"என்று முடித்துவிட்டார் வித்யாசாகரின் அப்பா.எல்லோரும் எதையோ கொறித்துவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க கிளம்பி விட்டார்கள். வித்யாசாகருக்கு வேலையில் மனம் செல்லவில்லை. சுந்தருக்கு அழைத்துப் பார்த்தான். சுந்தரும் எடுத்தான் பாடில்லை. வெறுத்துப் போனான் சாகர் .அங்கே சாகம்பரிக்கு என்ன பிரச்சனை என்று வேறு தெரியவில்லை.

பிரச்சனை என்றால் எனது நினைவு அவளுக்கு வராதா... என்று மனதில் ஏக்கம்.வீட்டிலேயே இருந்தால் இன்னமும் மனம் அலைபாயும் என்று தமது அலுவலகம் நோக்கி கிளம்பினான்.அவனது காரிய தரிசி ராமும் விடுப்பு முடிந்து வந்திருந்தான்.அவனிடம் சென்னை அலுலகத்தை பார்த்துக் கொள்ள சொல்லியிருந்தான். வீட்டில் எப்போது சென்னை செல்வது என்று சொல்லிய பிறகு சென்னை செல்லலாம் .அதுவரை இங்கேயே பெங்களூரில் இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறான்.
 
Last edited:

Stn49

New member
பாட்டிக்கு செம நக்கல் 😁..
பாவம்பா அவங்க

Top Bottom