இமைக்க மறந்தேன் உயிரே 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Stn49

Member
May 6, 2026
35
58
18
Chennai
"மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்!"

சுந்தர் சொன்னவற்றை கேட்ட வித்யசாகருக்கு மனம் ஒருநிலையில் நில்லாமல் தவித்தது. இப்போதே சாகம்பரியை முறைப்படி மணந்து கொண்டு,"இவள் என்னோட மனைவி தான்.இவளை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை"என்று உரக்க சொல்ல வேண்டும் போல இருந்தது.

ஜோசியரிடம் சென்று நாள் குறிப்பது என்றால்,அவர் பெண்பார்க்க எப்போது நாள் குறித்து,அதன் பிறகு நிச்சயதாம்பூலம், திருமணம் என்று எனது மகளின் திருமண திகதியே வந்ததுவிடும் போல இருக்கிறதே! பாட்டியிடம் கேட்டால் சரியாக எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாரே. நான் இப்போது யாரிடம் இது பற்றி விசாரிக்க என்று நொந்து போனான். சாகம்பரியின் மீதான இவனது உணரவுகள் சமீப காலமாக கரை உடைத்து செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை அவனும் அறிவான்.

காபிலேட்டே' அவளுக்கு பிடித்த ஒன்று நினைத்துக் கொண்டே குடித்து முடித்தான். அதன் சுவை என்னவோ நாக்கில் உறைக்கவே இல்லை. மீண்டும் சுந்தர் சொன்னவற்றை மனதில் அசை போட்டவன் மனதில் எதையோ தீர்மானித்தான். எப்படியும் சீக்கிரம் திருமணத்தை நடத்தி விடுவது என்று நினைத்துக் கொண்டேதான் அலுவலகம் வந்து சேர்ந்தான்.இரவு வரை வேலைகள் அவனை முழுமையாக சுருட்டிக் கொண்டதில் மனதில் அடைத்துக் கொண்டிருக்கும் எதுவோ நீங்கியதை உணர்ந்தவன் கட்டியிருந்த டையை கொஞ்சம் இறக்கி விட்டு, ஷர்ட்டின் கைகளை கொஞ்சமாக மடக்கி விட்டு , கால்களை நீட்டிக்கொண்டு, கண்களை மூடி தனது கதிரையில் அமர்ந்து விட்டான். வேலைகளை முழுமூச்சாக முடித்ததில் கொஞ்சமாக ஆஸ்வாசம் வேறு.

அரை மணிநேரம் கழித்து தானே எழுந்து செல்லலாம் என்று நினைத்தவன் அப்படியே உறங்கிப் போனான். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியாது அவனது அம்மா அழைத்துவிட்டார். அவசரமாக அலுவலகத்திலிருந்து அவன் கிளம்பும் நேரம் மணி பதினொன்று என்றது கடியாரம்.

வீட்டுக்கு வந்தவன் சாப்பிடாமேலே உறங்க சென்று விட்டான். மறுநாள் காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அப்பாவும் சித்தப்பாவும் அங்கே ஜிம்ம்முக்கு வந்து விட்டார்கள் .பயிற்சியை நிறுத்திவிட்டு அவர்களிடம் வந்தான் வித்யாசாகர். அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவனது சித்தப்பா,"உனக்கு அடுத்த வருஷம் நாற்பது வயசுன்னு சத்தியம் செஞ்சு சொன்னா கூட நம்ப முடியாது வித்யா. செம்மயா மெயின்டெய்ன் பண்ணுற"என்றார்.அவரது வார்த்தைகளில் லேசாக கூச்சம் கொண்டவன் ,"தேங்க்ஸ் சித்தப்பா" என்றான்.

அவனது அப்பா நேராக விஷயத்துக்கு வந்தார்." இந்த வாரம் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொல்லிட்டாரு.அன்னிக்கே பொண்ணு பார்த்துட்டு ,அவங்க ஒத்துக்கிட்டா நிச்சயமும் செஞ்சுடலாம்னு நாங்க யோசிக்கிறோம்.நீ பொண்ணு வீட்டுக்கு தகவல் சொல்லிடு"என்றுவிட்டு அகன்றார். அவருடன் வந்திருந்த சித்தப்பா ,"பாரு வித்தி ,இப்போதான் கல்யாணமே ஆகப் போகுது. உடம்பை மென்டெய்ன் பண்ணுறதை விட்டுறாதே!"என்று விட்டு அண்ணனின் பின்னால் வேகமாக சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அவர் சொல்லும் வரை பெரியதாக எடுத்துக் கொள்ளாதவன் இப்போது அங்கே இருக்கும் ஆளுயர கண்ணாடியின் முன் செண்டு நின்று தன்னை பார்த்துக் கொண்டான். பார்ப்பதற்கு செதுக்கி வைத்தது போல இருந்தாலும் இந்த சால்ட் அண்ட் பெப்பர் முடியை பற்றி கவலை வந்தது. தலைக்கு சாயம் பூசலாமா என்று ஒரு நொடி யோசித்தவன் வேண்டாம் என்று முடிவு செய்தான்.

இதுவரை திருமணம் பற்றி யோசித்தது இல்லை.அதனால் பெரியதாக ஒன்றும் தோன்றி இருந்திருக்கவில்லை.இப்போது ஏதேதோ எண்ணங்கள்.திருமணம் முடிந்து அவளை தன்னால் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா.. என்னை விட பத்து வருஷம் சிறியவள். நாற்பதை நெருங்கும் என்னால் அவளை ,அவளின் இளமையை சரியாக கையாள முடியுமா..அவளை திருப்தி செய்ய முடியுமா...நான்கு வருஷங்களுக்கு முன்பு என்றால் விஷயமே வேறு.இப்போது... என்றெல்லாம் தவித்தான்.இதை பற்றி யாரிடம் பேச முடியும் என்று வேறு தயக்கம்.

சுந்தருக்கு விஷயத்தை சொல்லி சாகம்பரியின் பெற்றவர்களிடம் சொல்லிவிட சொன்னான் வித்யாசாகர். நேரே அழைத்து அவர்களிடம் பேசுவதற்கு அவனை ஏதோ தடுத்தது.

சாகம்பரியோ சுந்தரிடம் ,"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.என்னை விட்டிருங்க"என்று கத்தினாள்.அவளுக்குள் எதிலோ தோற்ற உணர்வு.சூழ்நிலை கைதியானதாக உணர்ந்தாள்."உன்கிட்ட சொன்னதே தப்பு சுந்தர்.நீயும் இவங்களோட..முக்கியமா அவரோட சேர்ந்திட்ட இல்ல.நா உனக்கு முக்கியமே இல்ல .அப்படித்தானே?" என்று அழுதவளை இழுத்து அனைத்துக் கொண்டான் சுந்தர்.

"சீ..லூசு. நீ மட்டும் தாண்டி எனக்கு முக்கியம்.பாரு, நீயும் தயாவும் இந்த கல்யாணம் முடிஞ்சா சந்தோசமா இருப்பீங்க.என்னை நம்பும்மா. வித்யா உன்னை ரொம்பவே லவ் பண்ணுறாரு.அஞ்சு வருஷமா பாக்குறேன்.அவங்க வீட்டுல அவருக்கு கல்யாணம் செய்ய எவ்ளோ ட்ரை பண்ணுறாங்க தெரியுமா..மனுஷன் அசையவே இல்லை. உனக்காக மட்டும் தான் அவரு காத்திருக்காரு.புரிஞ்சிக்கோ சாகி"என்று குழைந்தான்.

முழு மனதுடன் என்று இல்லாவிட்டாலும் அவரும் தனக்காக ஐந்து வருஷமாக காத்திருக்கிறார்.காதலிக்கிறார் என்பது அவளது மனதில் நீர் ஊட்டியது .


அதை வெளியே சொல்வதற்கும் தயக்கம் வந்திருந்தது. மனதுக்குள் ஊற்றெடுத்த இளக்கத்தை மறைத்தவாறே," ஓஹ் ..சரி.இப்பதானே தெரியுது. நீ அவருக்கு எவ்ளோ சப்போர்ட் பண்ணுறேன்னு. ஓகே.ஏதோ பண்ணுங்க"என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் .

அவளுக்கு மனதில் இந்த திருமணம் சரி வருமா என்று சிந்தனை இருந்துகொண்டே இருந்தது.அதே சமயம் அவரது மனதில் இப்போது தான் மட்டும்தான் என்பதில் ஏற்பட்டிருந்த குளிர்வு அவளை 'திருமணம் செய்து கொள்'என்றது.

அவளது வாழ்க்கையில் நிச்சயம் அவர் வேண்டும்...ஆனால், வேண்டாம். என்னதிது எண்டு அவளுக்கே புரியவில்லை.தலையை பிடித்துக் கொண்டு அவள் அறையின் கட்டிலில் அமர்ந்து விட்டாள் . இப்போதே வித்யாசாகரை பார்க்கவேண்டும் என்ற பரபரப்பு வேறு அவளை ஆக்கிரமிப்பு செய்ய , தயாவை கூட்டிக்கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு கிளப்பி விட்டாள் .

சுந்தர் அலைபேசி அழைப்பின் மூலம் அலுவலகத்தில் நடப்பவைகளை கேட்டறிந்தவன்,வெளியே வந்த சாகம்பரியிடம் ,"சாஹி,நா இன்னிக்கு மதியமே கிளம்பறேன். அப்போ தான் நைட்டு அங்கே ரீச் ஆக முடியும்.நா நிச்சயமா வெள்ளிக்கிழமை அவங்க வர நேரம் உன்னோட தான் இருப்பேன்"என்றான் அவசரமாக. சாகம்பரிக்கும் புரிகிறது. அவன் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை. இவள் வேலை செய்த மூன்று நட்சத்திர ஹோட்டலின் முதலாளி அவன். அதோடு திருமணம் ஆனவன். நட்புக்கென்று மரியாதை கொடுத்து இங்கே இரண்டு நாட்களாக இருக்கிறான்.இதற்க்கு மேலே அவனை தங்க சொல்வது சரி இல்லை என்று.ஆனாலும்,மனதை கவ்விக் பிடிக்கும் பயத்தையும்,கல்யாணம் குறித்த குழப்பத்தையும் என்ன செய்வாள்?

"சரி , நீ கிளம்பு சுந்தர்.உன்னோட மனைவி,குழந்தை எல்லோரையும் கேட்டதா சொல்லு.முடிஞ்சா கல்யாணத்துக்காவது கூட்டிட்டு வா.."என்றுவிட்டாள் .சாகம்பரி தனது திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்ததை கேட்டவர்களுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு அது புரிந்தது.

தனது அம்மாவிடம்,"ம்மா..நானும் தயாவும் கோவிலுக்கு போறோம். நீங்க இல்ல அப்பா யாராவது வறீங்களா ?" என்றாள் . அவள் அப்பாவுக்கும் கோவிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து விட்டு வந்தால் பரவாயில்லை என்று தோன்றவே அவரும் கிளம்பிவிட்டார். சுந்தர் தனது காரிலேயே அவர்களை அழைத்து சென்று கோவிலில் விட்டுவிட்டு கிளம்பி பெங்களூரு சென்று விட்டான்.

இங்கே வித்யாசாகருக்கு இறக்கை முளைக்காத குறை.வெள்ளிக்கிழமை என்றால் இன்னமும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது என்று மனம் பரபரத்தது.அவளுக்காக ஏதாவது வாங்க வேண்டும் என்று தோன்றவே காரை தானே ஒட்டிக்கொண்டு ஜெய்நகரில் இருக்கும் புகழ்பெற்ற அந்த பட்டுப் புடவை கடைக்கு சென்றான். அங்கே அவளுக்கு அழகாக இருக்கும் என்று தோன்றிய நாகப் பழ நிறத்தில் மஜெந்தா பார்டர் வைத்த புடவையை எடுத்தான்.

அவள் தான் வாங்கும் ஆடைகளில் இந்த நிறத்தை தேடுவதை அவன் கவனித்து இருக்கிறான்.அநேக நேரங்களில் அது கிடைக்காமல் அவள் உதட்டை பிதுக்குவதையும் கண்டிருந்த நினைவு. அதில் வித்யாசாகரின் முகத்தில் புன்னகை தோன்றியது .


புடவையுடன் அங்கே எதிரில் இருந்த நகை கடைக்கு சென்று அவளுக்கென்று ப்ரெஸ் லேட்டும் ,கழுத்துக்கு ஆரமும் வாங்கினான்.கூடவே ஸ்ரீதயாவுக்கென்று கம்மல் செட்டும் , வளையலும் வாங்கினான். மனதுக்கு சந்தோசமாக இருந்தது. வாங்கியவற்றை எடுத்து சென்று நேரே தனது அம்மாவிடம் கொடுத்தவன் ," அம்மா.. இது சாகம்பரிக்கும் தயாவுக்கும் வாங்கினேன்.வெள்ளிக் கிழமை அன்னிக்கு இதையெல்லாம் நீங்களே கொடுத்துடுங்க .நானா கொடுத்தா அவ வாங்கிக்க மாட்டா" என்றவனை அவர் பார்த்த பார்வையில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.

அந்த பெண் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாளா என்று சந்தேகம் இன்னும் அயபடியே தான் இருக்கிறது.பிள்ளை பிறப்பையே இவனுக்கு சொல்லாதவள்,இப்போது திருமணத்திற்கு சுலபமாக சம்மதிப்பாளா என்று தான் இருந்தது அவருக்கு.அதை வெளியே சொல்லவில்லை.அதேபோல் அவளுடைய நெருங்கிய நண்பன் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததையும் அவர் அறியார்.



வியாழக்கிழமை அன்றே வித்யாசாகரின் மொத்த குடும்பமும் கிளப்பி சென்னை வந்துவிட்டார்கள். அவர்களின் அடையாறு பங்களாவில் தங்கினார்கள். சமீபமாக வித்யாசாகர் அங்கேயே தங்கியிருப்பதால் வீடு நன்றாகவே இருந்தது. எப்படியோ தங்களின் மகன் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைகிறான் என்பதே அவர்களுக்கு நிறைவாக இருந்தது.

நிச்சயத்திற்கு என்று அவர்கள் தனியாக எதுவும் எடுக்கவில்லை. ஏற்கனவே மகன் தான் தனது மனைவிக்கும்(வருங்கால) மகளுக்குமாக எடுத்து வைத்திருக்கிறானே. அதை கொடுப்பது தான் சரி என்று நினைத்தார்கள்.மற்றபடிக்கு நிச்சயத்திற்கு தேவையான பழத்தட்டுகள், உளர் திராட்சை, பாதாம்,பிஸ்தா,முந்திரி என்று பதினோரு வகை தட்டுகளை தயார் செய்து வைத்தார்கள். எங்கோ பல வருஷங்களாக காணாமல் சென்று இருந்த சந்தோசம் மீண்டு வந்தது போல அந்த குடும்பத்தினருக்கு ஒரு உணர்வு. அதை ஆழ்ந்து அனுபவிக்க ஆசை கொண்டது அவர்களின் மனம். சாகரின் பாட்டிக்கு கண்ணீர் கூட வந்தது.

செய்து வைத்திருக்கும் காரியம் அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.அதற்க்காக குற்றம் சொல்லிக் கொண்டு இராமல் அதை நேர் செய்வதுதான் சரியான விஷயம்.இனி,எப்போதும் வித்யாசாகரையும் ,அந்த பெண் சாகம்பரியையும் குற்றம் சாட்டி பேசவோ,குத்திக் காண்பிக்கும் எந்த செயலையும் செய்யவே கூடாது என்று ஏற்கனவே வீட்டின் பெரியவர் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி இருந்தார். அதனாலோ என்னவோ யாரும் தமது கண்களில் கூட அலட்சியத்தை காண்பிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் சுந்தர் தனது மனைவியுடன் வந்துவிட்டான். சுந்தரின் மனைவி சாகரியின் அறைக்குள் சென்று அவளை தயார் செய்ய ஆரம்பித்தாள்.சரியாக பத்து மணிக்கு சாகரின் குடும்பம் நான்கு கார்களில் சாகம்பரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். கூடவே சாகரின் காரியதரிசி ராமும் வந்து சேர்ந்தான்.

பத்தரை மணிக்கு ராகு காலம் என்றுதான் அவர்கள் சீக்கிரம் கிளப்பி வந்தது. அதனால் பரஸ்பர அறிமுகத்துடன் பெண் பார்க்கும் சம்பிரதாயம் ஆரம்பித்தது.சாகம்பரி தயாராக ஆவலுடன் அவளது மகள் ஸ்ரீதயாவும் தயாரானாள். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தி இருந்தார்கள். மெல்லிய ஆரஞ்சு நிறத்தில் சாகம்பரி மைசூர் சில்க் கட்டியிருக்க,அதே நிறத்தில் லோங் பிராக் அணிந்து கொண்டிருந்தாள் தயா.

பெண்பார்க்கும் சம்பிரதாயம் எல்லாம் வெறும் ஒப்புக்குத தானே. இருபக்க குடும்பமும் மண மக்களின் கடந்த காலம் பற்றி பேசவில்லை.ஸ்ரீதயாவை வித்யாசாகரின் குடும்பம் தங்கள் அருகில் அழைத்து வைத்துக் கொண்டது.மகளின் அழகில்,மழலையில் லயித்து சாகர் மகளுடன் அமர்ந்ந்து கொண்டான். மகளை தனது மடியில் அம்ரித்திக்கொண்டான்.அதில் 'இவள் என் மகள்' என்ற உரிமை உணர்வு இருந்தது.இதை சாகம்பரியின் பெற்றவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

வித்யாசாகரின் தம்பி வந்திருந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான் . இதற்க்கு முன்பு சாகரியின் தம்பியை வித்யாசாகர் பார்த்தது இல்லை. இப்போது அவனுடன் ஒரு சகஜமான உரையாடலை ஆரம்பித்திருந்தான் . பன்னிரண்டு மணிக்கு ராகு காலம் முடிந்த சமயத்தில் ஐய்யர் வந்தார். திருமண திகதி உறுதி செய்யப்பட்டு ,நிச்சயமும் ஆனது.இரண்டு வாரங்களில் திருமணம். சாகம்பரியின் அப்பா இது எப்படி சாத்தியம் என்று ஆரம்பிக்கவும் சாகர் உறுதியாக சொல்லிவிட்டான்.

"மாமா,கல்யாண ஏற்பாடுகளை செய்ய வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க அதை பற்றி கவலை படவேண்டாம் "என்று. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அங்கே யாருக்கும் புரியவில்லை. அவனது பெற்றவர்களிடம் கலந்து பேசாமலே அவன் அந்த சபையில் வைத்து வருங்கால மாமனாரிடம் பேசியது அவன் வீட்டினருக்கு உடன்பாடாக இல்லை.பெண்ணை பெற்றவரோ சங்கடமாக உணர்ந்தார்.

"இல்ல மாப்ள,நா ...நாங்க ஏற்பாடுகளை செஞ்சிடுவோம்.நீங்க ..என்று இழுக்க வித்யாசாகருக்கு பொறுமை பறந்தது. "நா சொல்றேன் தானே மாமா.நா பார்த்துக்கறேன்.நீங்களும் ,உங்க குடும்பமும் கல்யாணத்துக்கு சந்தோசமாக வந்தாலே போதும் "என்றுவிட்டு ராமை அர்த்தமுடன் பார்த்தான். ராமிடமிருந்து லேசான தலையசைப்பு மட்டும் தான்.

வித்யாசாகருடன் தனியே பேச வேண்டும் என்று சாகம்பரி எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. அவள் மனதில் இருப்பதை அவனிடம் சொல்ல அவன் அனுமதிக்கவே இல்லை.அவள் தங்கள் இருவருக்குமான குழந்தை மீதான உரிமையை தடுத்துவிட்டதற்கான கோவம் அது. சாகம்பரி எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் நிலை.

வேகமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது. சாகம்பரிக்கு மனதில் ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமாக இருந்தது. நடப்பவைகளை மீறி அவளால் இன்றும் செய்ய முடியாது.a
 

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
எப்படியோ சேருங்க...அந்த குழந்தை எதிர்காலத்தை பாருங்க
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online