இமைக்க மறந்தேன் உயிரே 23
“இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்!”
வித்யாசாகரின் அடையாறு பங்களா விழாக் கோலம் பூண்டிருந்தது. இன்னும் ஒரே வாரத்தில் அவர்களது வீட்டில் திருமண வைபவம் நடக்க இருக்கிறது. எல்லோருக்கும் புது துணிகள் எடுத்திருந்தார்கள். இன்னமும் மணப் பெண்ணுக்கான புடவைகள் எடுக்கவில்லை. அதை தானே தனது சாகம்பரிக்காக எடுத்துக் கொள்வதாக வித்யாசாகர் சொல்லிவிட்டான்.
வீட்டில் அவன் மீதான வருத்தம் கூடிக் கொண்டே சென்றது. ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்றுதான் இருந்தது. பாட்டி சும்மாக இல்லாமல்,"அப்போவே முறைப்படி கல்யாணம் செஞ்சிருந்தா,இந்நேரத்துக்கு இன்னொரு குழந்தை கூட பிறந்திருக்கும். நீ என்னென்னா இவ்ளோ அலட்டிக்கிறே!" என்று அங்கலாய்த்து கொண்டார்.
சொன்னபடிக்கே தானே நேரே காஞ்சிபுரம் சென்று சாகம்பரிக்கு அழகான மஞ்சள் நிறத்தில் பச்சை கரை இட்டு ஒரு புடவையும்,கூரை புடவையும் எடுத்தவன் அவளுக்காக இன்னும் சில பட்டுப் புடவைகளையும் எடுத்துக் கொண்டான்.அதேபோல் மகளுக்காக அவன் பிரத்யேகமான டிசைனில் இரண்டு பட்டுப் பாவாடை சட்டை எடுத்துக்கொண்டான்.
திருமணம் முடிந்த பிறகு மனைவி மகளுடன் இன்னொரு முறை வந்து வேண்டியவற்றை எடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டு கிளம்பி சென்னை வந்தான். முகூர்த்தத்திற்கான தாலி,இன்னமும் சில நகைகளை நாங்கள் தாம் எடுப்போம் என்று அவனது வீட்டில் நிச்சயமாக சொல்லியபிறகு தான் அமைதி ஆனான்.
சாகம்பரியின் வீட்டில் அவளுக்காக அவளது பெற்றவர்கள் சேர்த்து வைத்திருந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து வந்தார்கள் அவளது பெற்றவர்கள். தனது மகள்,பேத்திக்கு புதியதாக நிறைய புதிய ஆடைகளை வாங்கிக் குவித்தார்கள். இவ்வளவு காலமாக மகளின் வாழ்க்கையை பற்றியும், பேத்தியின் வருங்காலம் பற்றியும் கொண்டிருந்த கவலைகள் அவர்களை ஆட்டிப் படைத்தது.இப்போது,இவ்வளவு பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு செல்லப் போகும் மகளிடமும் பேத்தியிடமும் தங்களுக்கான உரிமை என்னவாகும் என்று மனம் துவண்டு போனார்கள்.
அவர்களால் தங்களது உணர்வுகளை சொல்ல முடியவில்லை. இது வேலைக்கு சென்றுவிட்டு மாலை திரும்ப வருவது போல் இல்லையே! நடுவில் மணமகனுக்காக வாங்கியிருந்த ஆடைகள், கழுத்து செய்யின் ,கைக்கு பிரேஸ்லெட் என்று கொடுப்பதற்காக அடையாறு சென்றவர்களுக்கு வித்யாசாகரின் குடும்ப செழுமையை பார்த்து மயக்கம் வராத குறை.
முதன்முறையாக,தங்கள் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தின் சம்மந்தம் சரி வருமா என்று தயக்கம் அவர்களுக்குள் எழுந்திருந்தது. மனதில் பயம் கவ்வியது. எல்லாமே தங்களின் கைகளை மீறி சென்று கொண்டிருப்பது புரிந்தது. வித்யாசாகரின் வீட்டில் இவர்களை மரியாதையாக தான் நடத்தினார்கள். வீட்டின் முதியவர் வரை இவர்களிடம் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை.
திருமண நாளும் நெருங்கி வெகு அருகில் வந்து விட்டது. விடிந்தால் திருமணம். எந்த மண்டபத்திலும் இல்லை.வித்யாசாகரின் குடும்பத்துக்கு சொந்தமான அடையாறு பங்களாவில் தான் திருமணம் ஏற்பாடு ஆகி இருந்தது. வித்யாசாகரின் நெருங்கிய உறவினர்களும், சாகம்பரியின் நெருங்கிய உறவினர்களும்,சுந்தரின் குடும்பமும் தான் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் வெறும் ஐம்பது நபர்கள் தான் கலந்து கொள்வது . குழந்தையுடன் திருமணம் செய்து கொள்வது பேசு பொருளாவது அங்கே யாருக்கும் சம்மதம் இல்லை.
வித்யாசாகர் அழகான தங்க ஜரிகை இழைத்த பட்டு வேட்டி சட்டை அணிந்திருக்க, சிவப்பும் ,பச்சையுமாக சேர்ந்து,தங்க இழைகளால் நெய்யப்பட்ட அதி நேர்த்தியான பட்டுப் புடவையில் அவன் அருகே அமர்ந்திருந்தாள் சாகம்பரி.புடைவையை பார்த்த நேரத்தில் அவளுக்கு புரிந்து போனது அதை தெரிவு செய்தவர் அவர் தாம் எண்டு. அவர்கள் இருவருக்கும் நடுவே அழகாக குட்டி ஸ்ரீ தயா தனது அப்பா தனக்கென்று முதன்முதலாக வாங்கி தந்திருக்கும் தங்க ஜரிகைகளால் இழைத்த மஞ்சளும் ஆரஞ்சு நிறமும் கலந்த அழகிய பட்டு பாவாடை சட்டை அணிந்துகொண்டு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு என்று இந்த திருமணத்திற்க்காக அதிகம் எடை இல்லாத அழகிய தங்க ஆபரணங்களையும் அவள் அப்பா அவளுக்காகவென வாங்கி குவித்திருந்தான்.அத்தனை அலங்காரங்களுடன் தன் அப்பா அம்மாவின் திருமண நிகழ்வில் அவ்வளவு ஆசையாக நின்று கொண்டிருந்தாள்.
அய்யர் மந்திரங்களை சொல்ல,அதை கர்மா சிரத்தையாக திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் மணமகன். சாகம்பரியின் இதயம் வேகமாக துடிப்பதாக அவள் உணர்ந்தாள். அவளது கழுத்தில் மங்கள நாணை பூட்டி,அக்னியை ஆவலுடன் வலம் வந்து தன்னில் பாதியாக ஏற்றான் வித்யாசாகர். அவனது கைகளால் அவளது முன் வகுட்டிலும் ,நெற்றியிலும் குங்குமப் பொட்டு இட்டுவிட்டான் .
சாகம்பரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே இருந்தாள் .அவளது மனம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.இந்தத் திருமணம் செய்துகொள்ள அவள் எவ்வளவு ஏங்கியிருப்பாள்? தவித்து இருப்பாள்..எவ்வளவு காதல் என் மீது..என்று அவனும் தவித்தான்.
அவனது கண்கள் அவள் மீதான காதலை அப்பட்டமாக சொல்லியது.திருமணம் முடிந்து எல்லோரும் சாப்பிட சென்றார்கள்.இவர்கள் இருவருக்கும் உணவு உள்ளே செல்லாமல் அடைத்தது. ஒருவர் மீது ஒருவர் இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு இந்த கண்ணாமூச்சி எதற்கு எண்டு இருவருக்குள்ளும் யோசனை.
ஸ்ரீதயாவை சாகம்பரியின் பெற்றவர்கள் மாலை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்கள். இரவு சடங்கின் பொழுது பேத்தி தங்களுடன் இருக்கட்டும் என்றுவிட்டார் சாகம்பரியின் அப்பா.இன்னமும் குழந்தை வித்யாசாகரின் குடும்பத்தினருடன் பழக ஆரம்பிக்கவில்லை.அப்படி இருக்கும் பொழுது அவர்களுடன் விட்டு செல்ல அவருக்கு யோசனை.
அதோடு, சாகம்பரி i-வித்யாசாகருக்கு பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும். அதற்க்கு நிச்சயம் தனிமை தேவை என்பதும் தான். அன்றைய இரவு இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.பேசுவதற்கு தயக்கம்,இந்த நாளை சூடான விஷயங்களை பேசி கெடுத்துக் கொள்ளவும் விருப்பம் இல்லை. ஆனால்,கடந்து சென்ற எட்டு மாதங்களில் இருந்த நெருக்கம் இப்போது இல்லை என்பதை இருவருமே உணர்ந்தார்கள்.
அருகருகே படுத்து உறங்கியும் அவர்கள் உடலால் தனியாகத் தான் இருந்தார்கள்.வித்தியாசாகரும் சரி, சாகம்பரியும் சரி,உண்மையில் ஒருவர் மீதான ஒருவரின் தேடுதல் இன்னமும் இருக்கிறது.முன்பைவிட பத்து ,இல்லை ஆயிரம் மடங்கு இந்த பிரிவு அவர்களின் மனதை அறிந்துகொள்ள பாலமாக இருந்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குமான பரஸ்பர தயக்கம், நீண்ட நாளைக்கான தயக்கம் ,தன்னை இத்தனை வருஷங்களாக காத்திருக்க வைத்ததற்கான கணவன் மீதான கோவம் சாகம்பரிக்குள், குழந்தை பிறந்தது தெரியாது.குழந்தையின் துணைப் பெயராக பெங்களூரு என்று கொடுத்திருப்பது என்று மனைவி மீதான எல்லைக் கடந்த கோபம் சாகருக்குள்., இப்படித்தான் கழிந்தது அவர்களின் திருமணம் முடிந்த இரவு. பேச எவ்வளவோ இருக்கிறது தான்.ஆனால்,இந்தப் பிரச்சனைகள் பேசித் தீர்க்க முடியாதவை என்பது இருவருக்குமே தெரியும்.கடந்து வந்த காலத்தை திரும்பவும் கொண்டு வரவே முடியாது.
அடுத்த குழந்தை பிறக்கும் பொழுது கண்டிப்பாக இவளுடன் இருந்தே ஆகவேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டான். அவன் மனமோ,மனைவியை தொடவே அவள் அனுமதிக்கவில்லை.இதில் அடுத்த குழந்தை வேறே என்று காரி துப்பியது.வெளியே முறுக்காய் காட்டிக்கொண்டு படுத்திருந்தான்.
தூக்கதில் அவளது வழக்கமாக அவனது மீது ஒரு காலை தூக்கிப் போட்டு அவனது இடுப்பை இறுக கட்டிக்கொண்டு தூங்கிப் போனாள் சாகம்பரி. மனைவியின் அருகில் அவனுக்கும் தூக்கம் சொக்கியது. இருவருக்குமான பிரத்யேக இரவு இது.நீண்ட வருஷங்களின் பிரிவுக்கு பிறகான நிம்மதியான உறக்கம்.
"கட்டில் தரும் இன்பம் சிற்றின்ப வகை, காலம் முழுவதும் வரும் இணையின் துணை உண்மையில் பேரின்பம்". அந்த பேரின்பத்தை இப்போது இருவருமே முழு மனதுடன் உணர்வது தான் இந்த நிம்மதியான உறக்கம் என்பேன்.
மறுநாள் காலையில் எழுந்து இருவரும் வேகமாக தயாராகி கீழே வந்தார்கள்.இன்று மறுவீடு சம்பிரதாயம் இருக்கிறது என்று முதல் நாளே தம்பதிக்கு சொல்லிவிட்டார்கள்.அதற்க்கு இருவரும் கிளம்பியாக வேண்டும்.அதோடு ஸ்ரீதயாவை பிரிந்து இதுவரை சாகம்பரி ஒரு இரவு கூட இருந்தது இல்லை. முதல்நாள் தூங்குவதற்கு முன்பு தயா அழைத்து பேசி இருந்தாள் .
"மா,இங்கே மாமாவும் பாட்டி தாத்தாவும் இருக்காங்க .எனக்கு ஸ்டோரி சொல்லுவாங்க.சோ,நா தூங்கிடுவேன்.யூ ,டோன்ட் ஒர்ரி. நீயும் தூங்கிடு. அப்புறம் அப்பாவுக்கு என்னோட கிஸ்ஸஸ் "என்று பேசியிருந்தாள் .இப்போதெல்லாம் தயா சாகரை அப்பா என்று கூப்பிட சாகம்பரி உட்பட வீட்டில் தயாவை எல்லோரும் பழக்கி இருந்தார்கள்.அந்த அப்பா என்ற அழைப்பு வித்யாசாகரை சிலிர்க்க வைத்தது .
குழந்தையை கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்று காலையிலே கிளம்பினான். பாட்டி சொல்லிப் பார்த்தார்,"முதல்லே ரெண்டு பேரும் கோவில் போயிட்டு அப்புறம் அவங்க வீட்டுக்கு போங்க,"என்று.சாகரின் பதில் இதுதான்."தயாவையும் கூட்டிட்டுத்தான் போவோம் ." உண்மையில் அந்த பதிலில் பாட்டிக்கு அவ்வளவு சந்தோஸம். பேரனுக்கு குடும்ப வாழ்க்கை அமைத்து விட்டது என்று.
மாலை வரை சாகம்பரியின் வீட்டில் இருந்து விட்டு குழந்தையை கூட்டிக்கொண்டு,மூவருமாக கிளம்பினார்கள். சாகம்பரியின் குடும்பத்தில் தானும் ஒருவன்தான் என்பதை அந்த நாளில் வித்யாசாகர் அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்திருந்தான்.சாகம்பரியின் தம்பி ஆரம்பத்தில் வித்யாசாகரிடமிருந்து தள்ளி நின்றவன் அவர்கள் கிளம்பும் முன் நன்றாகவே பழகி விட்டான்.நொடிக்கு நூறு அத்தான் போட்டுகொண்டு சாகரை சுற்றி வந்தான்.
"படிச்சு முடிச்சிட்டு பேசாம நீங்க சென்னை காலி செஞ்சுட்டு அங்கே பெங்களூரு வந்திருங்க.வேலை பற்றி கவலை வேணாம்"என்றுவேறு தனது மைத்துனனிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினான் வித்யாசாகர். சாகம்பரியின் வீட்டில் யாரும் அழவில்லை.நல்லவன் ஒருவனுடன் திருமணம் முடிந்திருக்கிறது.சுந்தரும் அங்கே இருக்கிறான். ஒன்றும் வருத்தப்பட இல்லை என்று தேற்றிக் கொண்டார்கள்.
இரவு ஏழு மணி அளவில் அடையாறு பங்களாவில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து கொடுத்தான் சாகர்.எதற்க்காக என்று கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் ,"நான்கு வருஷத்துக்கு முன்னே எனக்கு கல்யாணம் நடந்துச்சு. காதல் கல்யாணம். பிறகு தனிப்பட்ட காரணங்கள் காரணமா பிரிஞ்சு இருந்தோம்.இப்போ திரும்ப இரண்டு பக்க குடும்ப உறுப்பினர்களோட ஆசிர்வாதத்தோட திரும்பவும் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்.அதுக்கு தான் இந்த விருந்து"என்று பொது வெளியில் அறிவித்து விட்டான். குழந்தை மனைவியுடன் வித்யாசாகர் இருக்கும் முழுப் படமும் அடுத்தநாள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப் பட்டது.
ராம் ,இவர்களது திருமண வரவேற்புக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மூன்று தளங்களை புக் செய்திருந்தான். அங்கேயே இருக்கும் பார்லரில் சாகம்பரிக்கு வரவேற்புக்கான மேக் அப் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தான். அது ஏற்கனவே சாகம்பரி வேலை செய்த ஹோட்டல் தாம். இன்று அவள் யாரென்று தெரிந்தபிறகு அவளிடம் பேசியதற்கும் ,அவளிடம் நடந்து கொண்ட விதத்திற்குமாக ஏகத்திற்கு பயந்து கொண்டிருந்தார்கள் அவளிடம் தரக் குறைவாக நடந்துகொண்ட சிலர். சாகம்பரியை திருமண கோலத்தில் பத்திரிக்கை செய்தியாக பார்த்ததிலேயே அவர்களது ஜீவன் பாதி போய் விட்டது. தொழில் வட்டாரத்தில் வித்யாசாகரை தெரியாதவர்கள் இல்லை.அதிலும் ஹோட்டல் பிசினஸில் அவன் தான் முதல் நிலையில் இருக்கிறான்.
அவர்கள் குடும்பத்திற்க்கென ஹோட்டல்களும் உண்டு .அதற்க்கு வடிவமைப்பு செய்து தரும் தொழிலும் உண்டு.இன்னமும் நிறைய தொழில்களில் அவர்களின் கைகள் இருக்கிறது. சொத்துக்கள் பல நூறு கோடிகளை தாண்டும்.அவ்வளவு பெரிய குடும்பத்தின் மருமகளாக, வித்யாசாகரின் மனைவியாக சாகம்பரி என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. பயந்து நடுங்கினார்கள்.
வரவேற்பு அன்று ஒரு மகாராணியின் சாயலில் இருந்தாள் சாகம்பரி. மிக பிரம்மாண்ட வரவேற்பு.இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு பிரபலங்கள்,பத்திரிக்கையாளர்கள் என்று குறைந்தது ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். ஸ்ரீதயாவை தங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டார்கள் சாகம்பரியும் சாகரும் .குழந்தை இருப்பதை மறைக்க எதுவும் இல்லை.அவளுக்கான அங்கீகாரம் என்று நினைத்தான் சாகர்.விழா முடிய நள்ளிரவு ஆனது.
அன்று விழா முடிந்து இரு குடும்பங்களும் ஹோட்டலில் தான் தங்கினார்கள்.அடுத்தநாள் மதியம் வரை அங்கே தான் இருப்பதாக முடிவாகி இருந்தது. தயா இன்றும் பாட்டி தாத்தாவுடன் சென்று விட்டாள் . அவள் இரவு பத்து மணிக்கே தூங்கிவிட சாகம்பரியின் அம்மா அவளை தங்கள் அறைக்கு தூக்கி சென்று அவரும் அங்கேயே இருந்து கொண்டார்.குழந்தையை தனியே விட்டு வர முடியாது என்பதால் சாகம்பரியும் சரி என்று விட்டாள் .
விழா முடிந்து அனைவரும் சென்ற பிறகு இவளிடம் தவறாக நடந்து கொண்ட மானேஜர் வரவழைக்கப் பட்டான். அவனுக்கு இங்கே வருவதற்குள் இதயம் நின்றுவிடும் போலானது.கைக்குட்டை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டே வந்தவனை வரவேற்றது அந்த ஹோட்டலின் சி ஈ ஓ . அந்த மேனேஜர் நடந்து கொண்ட விதத்தை ஏற்கனவே வித்யாசாகர் அவரிடம் பேசியிருக்க,இன்று வரை விட்டு வைத்தது விழா முடியும் வரை அவன் பயத்துடனே சுற்ற விடும் நோக்கத்தில் தான்.
அந்த நள்ளிரவு நேரம் அந்த மேனேஜரின் வாழ்க்கையில் இருட்டை கொடுத்தது. வேலை செய்யும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக காரணத்துடன் அவனுக்கு வேலை நீக்கம் கொடுக்கப் பட்டது. அதிலேயே அவனுடன் சேர்ந்து வம்பு பேசியவர்கள் வாயை திறப்பதையே விட்டார்கள். கரும்புள்ளியுடன் வெளியே வந்தால் வேலை யார் கொடுப்பார்கள்.உணவுக்கு எங்கே செல்வது என்ற பயம் தான்.
சாகம்பரிக்கு அன்று மனம் சந்தோச சிறகு விரித்தது. தனக்கு நடந்த அவமானம்.அதற்க்கு கணவன் கொடுத்த பதிலடி,கொஞ்சம் தாமதம் ஆனாலும் அவளுக்கு பிடித்திருந்தது.இனி அவனுக்கு எங்கேயும் வேலை என்பது கிடைக்காது.எந்த பெண்ணிடமும் தவறாக பேசவோ நடந்து கொள்ளவோ இனி நேரம் இருக்காது.கைக்கும் வாய்க்குமான சண்டையை சரி செய்யவே நேரம் இருக்காதே!
தனது அவமானம் நீக்கப் பட்ட நிம்மதியில் பெண்ணின் சம்மதம் வித்யாவுக்கு தாராளமாக கிடைத்தது. சாகர் ஊற்றெடுத்து அவனது சாகரிக்குள் சங்கமம் ஆனான். சாகரி எனும் சாகரத்தின் உள்ளே இருப்பதை அறிந்து கொள்ள,முத்தெடுக்க, அவளில் மூச்செடுக்க அவனுக்கு அந்த இரவு போதவில்லை. தன்னுள் முத்துக் குளிக்க வருபவர்களை சாகரம் என்றும் ஏமாற்றுவது இல்லை. அங்கே ஒரு அழகிய கூடல்... முத்தாடல்.
அவளது சாகரக் காதல், சாகரனை அவளுக்குள் இழுத்துக் கொண்டது. அவர்களது காதல் வாழ்க்கை ஆழியென நீடித்திருக்க நமது வாழ்த்துக்கள்.
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன்...
கனா இன்று பலித்தது….!