• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே - 3

ரோசி கஜன்

Administrator
Staff member
சாகம்பரி தொடர்ந்து தனக்கு மாப்பிள்ளை பார்க்கக்கூடாது.அது முடிந்துபோன விஷயம் என்று கத்திக்கொண்டிருந்தாலும் ,அவளது பெற்றவர்கள் கேட்பதாக இல்லை.

"உன்னோட விஷயத்தை அப்படியே சொல்ல வேணா.காதல் கல்யாணம் ஆச்சு. அது தோல்வியில் முடிஞ்சதுன்னு சொல்லி கல்யாணத்துக்கு பாப்போம். டிவோர்ஸீ,விடோயர்,ஏற்கனவே குழந்தை இருக்குற பையன்னு பாக்கலாம். உனக்கு தகுந்த இடம் கண்டிப்பா வரும்.உன் திருவாயை திறக்காம இருந்தாலே போதும்!" என்று அவளுடை அப்பா மிரட்டல் தொனியில் பேசவாரம்பித்து விட்டார். இதெல்லாம் இவள் சற்றும் எதிர்பாராத விஷயங்கள்.

எதற்கு சென்னை வந்தோம்.வேறெங்காவது சென்றிருக்கலாமே என்றே யோசிக்கிறாள்.மனதார சொல்லவேண்டும் என்றால் குழந்தையை வைத்துக்கொண்டு தனியாக இருப்பதற்கான பயம் தான் அவளை பெற்றவர்களுடன் வந்து இருந்துவிட பணித்தது.

இப்போது குழந்தைக்கு நான்கு வயது ஆகும்பொழுது இதென்ன புதியதாக என்று தோன்றாமல் இல்லை.சாட்சிக்காரனிடம் பேசுவதை விட ,சண்டைக்காரனிடம் காலில் விழுந்து விடலாம் என்று முடிவு செய்தவள் அதற்குமேல் பெற்றவர்களிடம் எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை.

ஆயிற்று! இரண்டு மூன்று பேர் இவளை பெண் பார்க்கவென்று வந்தார்கள் .அவர்கள் தனியாக பேசும்பொழுது,'குழந்தை பிறந்த விதத்தை சொல்லவில்லை.ஆனால், அவர் தான் எனது மனதில் இப்போதும் என்று அழுத்தமாகவே சொன்னாள். இன்னொருவரை மனதில் (விவாகரத்து பெற்று சென்ற கணவனாக இருந்தாலும் ) வைத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர்களெல்லாம் என்ன முட்டாளா என்ன?

' வேணா.ஒத்து வராது. பேசிப்பார்த்தோம், சரிவராது ' என்று ஒற்றை வார்த்தைகளில் முடிவை சொல்லிவிட்டு மரியாதையாகவே கழண்டு கொண்டார்கள். சாகம்பரியின் பெற்றவர்கள் ஜோசியரிடம் இவளது ஜாதகத்தை எடுத்து சென்ற பொழுது அவர்களும்,"ஏற்கனவே கல்யாண வாழ்க்கைல சிக்கலாகி இருக்குமே. ரெண்டாவது கல்யாணத்துக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.இன்னும் அதுக்கான நேரம் கூடி வரல "என்றுவிட்டு நிறைய பரிகாரங்கள்,பூஜைகள் எண்டு ஏழு நாட்களுக்கு ஏழு பரிகார பூஜைகளை ஒரு வருஷத்துக்கு செய்யுமாறு குறித்துக்கொடுத்தார்கள்.

அதில் தினமும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவதும் அடங்கும்.இவளிடம் என்றாவது கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய சொன்னால்,"ம்மா,சும்மா சாமி கும்பிட தயாவை கூட்டிட்டு போகணும்னா சரி.போய்ட்டு வரேன். இந்த பரிகாரம்,ஸ்வீட் காரமெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.எனக்கு எது வாய்க்கும்னு இருக்கோ,எப்போ கிடைக்குமோ கண்டிப்பா கிடைக்கும். ப்ளீஸ் ,என்னை போர்ஸ் செய்யாதீங்க என்றுவிட்டாள்.

மனதுக்குள், 'நம்பிக்கை இருக்கோ இல்லையோ, வேறே யாரையும் திருமணம் செஞ்சுக்க என்னால் முடியாது. அதனாலேயே நா பரிகாரம் எதும் செய்யவே மாட்டேன்' என்று நினைத்துக்கொண்டாள்.

எப்படியோ வீட்டில் தவறாமல் பரிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள் . அம்மா தினமும் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சநாள் சின்சியராக சென்றுகொண்டிருந்தவளுக்கு ராகு காலத்தில் விளக்கு ஏற்ற அந்த நேரத்திலும், தினமும் பரிகார பூஜை செய்வதற்கு செல்வது ஒரு முறையுமாக சலிப்பை தர ஆரம்பித்தது.

ஏதோ தான் மட்டும் தனது பெண்ணுக்காக கோவிலுக்கு சுற்றுவதும், கணவர் நிம்மதியாக இருப்பதுமாக தோன்ற ஆரம்பிக்க,வீட்டில் அதற்க்கு ஒரு பஞ்சாயத்து சென்றது.முடிவில் ராகு காலத்தில் கணவர் சென்று விளக்கு போடுவதாகவும்,தான் காலையில் சென்று பூஜை செய்துவிட்டு வருவதாகவும் முடிவானது.

அடுத்த ஒரு மாசம் இப்படியே செல்ல ,பூஜைகள் செய்ய ஆரம்பித்து வெறும் இரண்டு மாதங்களே கடந்திருக்க அதுவே ஏதோ வருஷ கணக்கில் ஆனது போல இருவருக்குள்ளும் ஆயாசம். "இந்த பொண்ணு ஒழுங்கா கால காலத்துல நாம சொல்லுற பையனுக்கு கழுத்தை நீட்டியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?

இப்போ கையில ஒரு பெண் குழந்தையை வேறே வச்சிக்கிட்டு நிக்கிறா.புருஷன் யாருன்னு கேட்டாலும் பதில் இல்ல. குழந்தைக்கு அப்பா யாருன்னு கேட்டாலும் வாயை திறக்கவே மாட்டேங்குறா"என்று ஒருவருக்கொருவர் பேசி ஆறுதல் கொண்டனர். பெண்ணவள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். எதையும் கண்டுகொண்டதாக காண்பித்து கொள்ளவில்லை.

இவ்வளவு வருஷங்கள் ஆன பிறகும் கூட வித்யா சாகரை அவளால் ஒரு நொடி கூட மறக்க முடியவில்லை.அவருடன் சேர்ந்து நின்றது,நடந்தது தொடங்கி இருவரும் அடுக்களையில் சமைத்துக்கொண்டே செய்த காதல் வரை பகலில் அவளைத் தொடர,இரவுகளோ அவரோடு இயைந்த காதல் மயக்கத்தில் சென்றது.

ஒவ்வொரு இரவிலும் அவரது உடலை ,அதன் வெம்மையை, அவரது தோள் வளைவில் தலை வைத்து உறங்கியதை ,அவரது ஈர முத்தத்தை விடாமல் அவளது மனமும் உடலும் உணரும் இந்த ஆழ்ந்த உணர்வுக்குவியலை வைத்துக்கொண்டு ,ப்ச்..இவர்களுக்கெல்லாம் சொன்னாலும் புரியாது "என்று சாந்த சொரூபிணியாய் அமைதியாக நடந்துகொண்டாள்.

எப்படியும் இன்னமும் ஒரு வருஷத்துக்குள் திருமணம் செய்வதற்கு வரன் பார்க்கா மாட்டார்கள்.ஜோசியர் அவ்வளவு பக்காவாக தினம் ஒரு பூஜை ப்ரொஜெக்ட்டை கொடுத்திருக்கிறார் என்று ஆஸ்வாசம் கொண்டது அவள் இதயம்.


மகளின் மனநிலையை பற்றி அறியாதவர்களா பெற்றவர்கள்? எப்படியாவது அவளுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையை தேடியாகவேண்டும். அவள் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.மகள் எங்கோ ,யாரிடமோ ஏமாந்து இப்படி ஆகிவிட்டது என்று அவர்கள் மனம் நம்புகிறது.இன்னமும் திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதும் ,குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் நடைமுறையில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது சாத்தியம் தான்.தங்கள் மகளும் இந்த ஜென்z பிரதிநிதிதான் என்பதை அவர்கள் மனம் நம்பாது. அவர்கள் யோசிப்பது நடைமுறையில் எது சாத்தியமாகலாம் என்பதை பற்றியது.

இப்போது சாகம்பரிக்கு தான் செய்து வைத்திருப்பதின் வீரியம் தெரியாமல் உணராமல் இருக்கலாம். வாழ்க்கையில் பக்கங்கள் நிறைய உண்டு.இவளது இந்த போக்கிற்கு நிச்சயம் நாளை ஸ்ரீ தயா நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல தன்னை தயார் செய்துகொள்ள வேண்டி வரலாம்.

அது மட்டும் அல்ல. இந்த பூமியில் பிறக்கும் ஆண் -பெண் குழந்தைகளுக்கு நிச்சயம் அப்பாவின் அரவணையப்பும்,அம்மாவின் பாசமும்,இருவரது கண்டிப்பும் அவசியம்.சிங்கிள் பேரண்ட்டிங் என்பது சிக்கல்களை கொண்டது. குறிப்பிட்ட வயது வரும்பொழுது ஆண் குழந்தைகளின் உடல் சார்ந்த, மனம் சார்ந்த பிரச்சனைகளை அம்மாவிடம் சொல்லக்கூட ஆண் குழந்தைகள் கூச்சம் கொள்ளக்கூடும்.

நம் இந்திய சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் பெண் குழந்தைகள் பெற்ற தகப்பன் கூட தொடுவதற்கு அவ்வளவு எளிதாக அனுமதிப்பது இல்லை.ஆயிரம் அல்ல இலட்சம் கட்டுப்பாடுகள் உண்டு.அவ்வளவு கட்டமைப்புடன் வடிவமைக்கப் பட்டது நமது கலாச்சாரம்.

இதோ இப்போது காதல், என்ற பெயரில் சாகம்பரி ஒரு பெண் குழந்தையை பெற்று வைத்திருக்கிறாள். எதிர்காலத்தில் இன்று இவள் செய்த அதே விஷயத்தை தனது மகள் செய்தால் ஒப்புக்கொள்வாளா?

ப்ச்..சலிப்புதான் வருகிறது. சாகம்பரியின் பெற்றவர்களுக்கு மட்டும் இல்லை.எழுதிக்கொண்டு இருக்கும் எனக்கும் தான்.வரவர காதல் கசக்குதய்யா... என்னை பூமர் என்று சொன்னாலும் அனேகமாக சிரித்துவிட்டு கடந்து விடுவேன். பெண்ணை பெற்றவர்களுக்கு அவளை வளைக்கவும் தெரிய வேணும். அந்த விஷயம்தான் இதோ இப்போது அவர்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளியிலிருந்து ஸ்ரீ தயா மதியம் வீட்டுக்கு வந்துவிட்டால்.அவளுக்கு மதிய உணவு கொடுத்து தூங்க வைப்பது அவளது பாட்டி -தாத்தா வேலை. பாட்டி குழந்தைக்கு ஏற்றவாறு சாதம் போட்டு ,நெய் விட்டு ,பப்பு போட்டு குழைய பிசைந்து ,ஓரத்தில் கேரட்,பொரியலையும் வைத்து ஓடிக்கொண்டிருக்க அவளது தாத்தாவோ "அம்மா வந்தா ,எனக்கு அப்பா வேணும்ன்னு கேக்கணும் என்று நிதானமாக சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். சோற்றோடு அவரது வார்த்தைகளும் குழந்தைக்குள் இறங்கியது.

பேமிலின்னா ,அப்பா -அம்மா - பாப்பா மூணு பேரும் நிச்சயம் இருக்கணும்.கூடவே குட்டிப்பாப்பா ,தாத்தா பாட்டி எல்லாரும் இருந்தா ரொம்ப ஜாலியா இருக்கும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.பிஞ்சு மனதில் இவை அழுத்தமாக படிய தொடங்கியது.

அன்று சாகம்பரி வீட்டுக்குள் வரும்பொழுது அதன் பிரதிபலிப்பு தெரியவில்லை.ஆனால், வரும் காலங்களில் நன்றாக தெரிந்தது. சிணுங்கும் சமயங்களிலும் அம்மாவிடம் கொஞ்சிக்கொள்ளும் சமயங்களிலும் "ம்மா,அப்பா வேணும். நீ,நா, அப்பா இருந்தா எவ்ளோ ஹாப்பியா இருக்கும்.


இப்படி ஆரம்பித்தது தான் ஸ்ரீ தயாவின் 'அப்பா வேணும் ' புராணம். போதாத குறைக்கு பள்ளியில் மற்ற குழந்தைகள் தத்தமது அப்பாவுடன் பள்ளிக்கு வருவதும், என்னோட அப்பா இதை செஞ்சாரு, அதை செஞ்சாரு,எங்கப்பாவோட நா ஷாப்பிங் போனேன், அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த டாய் இது,சாக்கி அப்பா எனக்கு கொடுத்தாரு என்பதிலிருந்து,டாடி எனக்கும் என்னோட மம்மிக்கும் கிஸ் பண்ணாரே..."என்பதில் வந்து நின்றது.

இவையெல்லாம் பெரியவர்களுக்கே கடந்து செல்ல கடினமான விஷயங்கள் . "ஒப்பீடு " குழந்தைக்கு என்னவென்று புரியும்.பிஞ்சு மனதில் என்னோட அப்பா எங்கே "என்று வந்து நின்றது.ஒருநாள் தயாவை அவளுடைய மாமன் பள்ளிக்கு கொண்டுபோய் விட இவளது குட்டி தோழிகள்,"இவங்கதான் உன்னோட டாடியா "என்றதில் 'ஓ..டாடி இருந்தா நல்லா இருக்கும்ல.என்னை ஸ்கூல் கூட்டிட்டு போய் கூட விடுவாரு." என்று ஏங்கியது தயா. வீட்டில் மாலை அம்மாவிடம் ,"இந்தக்கணம் எனக்கு அப்பா வேண்டும்"என்று அவள் ஏங்கி அழுது இரவு நல்ல ஜுரம் வந்ததுதான் மிச்சம். அப்பா ..அவர் வரவே இல்லை. அப்பாவுக்கு இன்னமும் 'ஸ்ரீ தயா' எனும் குட்டி பாப்பா தனக்காக ஏங்கி அழுவது தெரியாதே!
 

Gowri Karthikeyan

Well-known member
இவளை என்ன தான் சொல்றது??????
எனக்கு இவ, இவளின் காதல், அந்த காதலனின் எண்ணம்.....இதை மட்டுமே கொண்டு தான் இவ இருக்கா.....

இதுக்கு பேசாம குழந்தை பெத்துக்காம இருந்து இருக்கலாம்....

இப்ப அந்த குழந்தையை பல கேள்விகளுக்கு ஆளாக்கி இருக்கும் இவ தான்.....இன்னும் சில காலம் கடந்து கேலி, கிண்டலுக்கு ஆளாக்க நேரும்.....

அப்பையும், அவளின் காதல், அவனின் எண்ணமே தான் preferable aa இருக்குமா??????

அப்படி இருந்தா....இவ தான் ரொம்ப சுயநல வாதி
 
Top Bottom