சுந்தர் திரும்ப வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்றான் சுந்தரின் அண்ணன். வெறுத்தே போனது வித்யாசாகரனுக்குள். அவள் தனது அருகே இருக்கும் பொழுதுகளில் அவ்வளவு பெரியதாக தெரியவில்லை. இப்போது அவள் விலகி நிற்கும் பொழுது அவள்மீதான ஏக்கம் கூடுவதை இந்த நான்கு வருஷங்களில் தெளிவாக உணர்கிறான் .
தனது கதிரையின் முன்பு இருந்த மேசையில் தனது பலம் கொண்ட வரையில் ஓங்கி குத்தியவனின் விரல் எலும்புகள் வலி கண்டதுதான் மிச்சம். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அவளை பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க அவனுக்கு அப்டி ஒன்றும் தாமதமாகி விடாது. அவர்கள் நிறுவனத்தின் துப்பறிவு நிறுவனத்தில் சொன்னால் அவளை கண்டுபிடிக்க ஒரு வாரமே அதிகம்.
ஏனோ அவனுக்கு அதில் மனம் உடன்பட மாட்டேன் என்கிறது. அவளது பழைய எண்ணை அவள் மாற்றிவிட்டாள். சோஷியல் மீடியா எதிலும் அவள் இல்லை. இப்போது இருக்கும் காலத்தில் யாராவது 'நான் சோஷியல் மீடியா எதிலும் இல்லை 'என்று சொன்னால் ஆச்சரியமாகவே பார்ப்போம். அதே ஆச்சர்யம் தான் வித்யாசாகருக்குள்.
அவள் தனது முக*நூல் கணக்கில் முன்பெல்லாம் நிறைய படங்களை பதிந்து வைப்பாள். தினமும் ஒரு அரை மணி நேரமாவது இன்ஸ்டாவிலும்,முகநூளிலும் செலவழிப்பது பற்றி வித்யாசாகர் சிரித்திருக்கிறார்."அப்படி என்ன தான் இருக்கு அங்கே.நம்மோட பெர்சோனால் விஷயங்களை சோசியல் மீடியா எதுலயும் போட கூடாதுடா. பாதுகாப்பு இல்லை." அவர் சொல்வதை கேட்டுக்கொண்டே தனது படங்கள் எதையாவது பதிந்திருப்பாள்.
இப்போது பார்த்தால் அவளது கணக்குகள் எதுவும் இல்லை. இவரது சோசியல் மீடியா கணக்குகளை நிர்வகிக்கவென்று தனியான நபர் உண்டு. வித்யாசாகரை அவரது உண்மையான உயரம் தெரியாமல் தான் சாகம்பரி ஏற்றுக் கொண்டது. அவர் தொழிலதிபர்,குடும்பமே தொழில் குடும்பம் தான்.இவரும் அதில் பங்கு வகிக்கிறான் என்பது வரை தெரிந்து கொண்டவள் அதற்கு மேல் அவரது உயரம் பற்றி தெரிந்து கொள்ளவிரும்பவில்லை. அது அவளுக்குத் தேவையானதும் இல்லை என்று நினைத்துவிட்டாள்.
இருவருக்கமான அந்த வாழ்க்கை இனிமையானது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தார்கள் என்று சொல்லுவதை விட இருவரும் ஒருவருக்குள் ஒருவராக வாழ்ந்தார்கள் என்பது பொருந்தும்.ஒருநாளும் வித்யாசாகர் ,இவளது வேலை பற்றி, இவளை பற்றி தரம் குறைத்து ஒருமுறையும் பேசியது இல்லை.சாகம்பரியை தனக்கு கீழே நடத்தியதில்லை. அவளுக்கு அவர் மீதான காதல் பெருக்கெடுத்து ஓட அவரது நடத்தை பெரிய காரணம்.
தானும் சேர்ந்து இவளுடன் சமைப்பார்.இருவரும் சேர்ந்து துணிகளை காயப்போடுவார்கள். சேர்ந்து மடித்து வைப்பது, அயன் செய்வது என்று ஒரு சாதாரண மத்திய தர குடும்பத்தில் கணவனும் மனைவியும் இணைந்து வீட்டுவேலைகளை செய்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாழ்க்கைதான் அவர்கள் வாழ்ந்தது.
தங்களது வீட்டில் தனக்கு வேண்டியவற்றை செய்யவென்று வேலைக்கு நிறைய ஆட்கள் உண்டு. ஆனால்,ஒரு சிறு பெண்ணின் மீது ஏற்பட்ட உணர்வில் இப்படி ஒரு திடீர் குடும்ப வாழ்க்கை வாழ்வது அவரது மனதிற்க்கு பிடித்தமானதாக இருந்தது.
இருவருக்குமே காதல் என்ற உணர்வு ஆழமாக இருந்தது. பெண் அதை முழுமையாக புரிந்து கொண்டு அந்த வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தாள். ஆனால் அந்த உணர்வின் ஆழம் புரியாமல் தொலைத்துவிட்டு நிற்பது வித்யாசாகர் தான்.
திருமணம் என்ற பந்தத்தில் இருக்கும் பொழுது காதலை புரிந்துகொள்ள நேரமெடுத்தாலும் கூட ,ஒருவரது இருப்பை மற்றவரால் உணர முடியும். அதை வெளிப்படுத்தவும் காலம் அனுமதிக்கிறது. லிவ் இன் என்ற கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கையை வாழும்பொழுது ஒருவரது மீது இணைக்கு காதல் வந்தால் கூட அதை தெரியப் படுத்தும்பொழுது இன்னொருவருக்கு அந்த உணர்வு ஏற்படாமல் நமது காதலை இணையர் மறுத்துவிடும்பொழுது காலத்திற்கும் அந்த காதல் என்ற உணர்வு மனதில் ஏமாற்றத்துடனே தங்கிவிடும் அபாயம் உண்டு.
இதோ இப்போது தனது காதலை முன்னிறுத்தித்தான் சற்றும் யோசிக்காமல் சாகம்பரி வித்யாசாகருடன் திருமணம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று ஒரு வாழ்க்கையை வாழ முடிவு செய்திருந்தாள். அவருடன் காலமெல்லாம் வாழ ஒரு அந்த உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல ஒரு சாவியாகத்தான் அவள் அவரிடம் திருமணம் பற்றி பேசியது.அந்த உறவு தானே அடுத்தகட்டத்தை அடைந்து விட்டதை அவள் சொல்லவில்லை.
இதோ இப்போது அவளை எப்படியாவது மீண்டும் சந்திக்க வேண்டும் என்று அவருக்குள் ஒரு நெருப்பு பற்றவைத்தது போல உணர்வு வித்யாசாகரை சுட்டெரித்தது. மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் அதிலேயே வெந்து தணிகிறார். நடுவில் ஒருமுறை சென்னைக்கு வேலை நிமித்தமாக சென்று வந்தான் வித்யாசாகர்.அவன் கண்கள் எங்காவது சாகம்பரி தென்படுகிறாளா .. என்று தேடி சலித்தது.
ம்ஹும்..அவள் இவரது கண்களில் படவில்லை. மீண்டும் பெங்களூருவுக்கு வந்தவனுக்குள் அவள் இங்கே இந்தியாவில் தான் இருக்கிறாளா என்பது வரை சந்தேகம் வந்துவிட்டது.பிறகு தனக்குத்தானே, ' சரிதான் போ. அவள் உன்னிடம் நெருங்கியபொழுது வேண்டாம் என்றுவிட்டாய்.இப்போது குபீர் என்று உனது காதல் விழித்துக்கொள்ளும் பொழுது அவளை பற்றிய அக்கறை நிரம்பி வழிகிறதா?"என்று காரி துப்பியது அவனது மனம்.
"இல்லையில்லை.எப்போதுமே எனக்கு அவள் மீது விருப்பம்தான். அக்கறைதான். அவள் என்னை பிரிந்து சென்ற பிறகு அவள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் நான் ஒதுங்கி நிற்கிறேன்.இப்போது ஏனோ என்னுடைய மனம் அவளை மட்டுமே தேடுகிறது"என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தான்.
பைத்தியம் பிடிக்காத குறை. அவளை முழுமையாக தேட விடாமல் வித்யாசாகரனை ஏதோ ஒன்று தடுக்கிறது. அதற்குள் வேலை சம்மந்தமாக மீண்டும் ஒரு வெளிநாட்டுப்பயணம். திரும்பிவர எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகும் . மனமே இல்லாமல் தான் கிளம்பினான் . அங்கே இடைவிடாத மீட்டிங்குகளும், அந்த வேலை சம்மந்தமான பயிற்சிகளும் அவன் சென்ற நிறுவனமும் அவனது நேரத்தை விழுங்கி கொண்டது. வேறு வழியே இல்லாமல் தனது கவனத்தை வேலையில் திசைதிருப்ப வேண்டிய நிர்பந்தம். பகல் நேரத்திலாவது சுதாரித்துக்கொள்ள முடிந்தவனால் இரவினை கடப்பது பெரும் சாகரத்தை சிறு ஓடத்தில் கடப்பது போன்ற உணர்வு.
சாகம்பரிக்கு வித்யாசாகரை பார்த்த முதல்நாள் பிடித்த காதல் கிறுக்குதான். இன்று வரை அது தனியவே இல்லை. நேரம் கிடைக்கும் பொழுதுகளில் எல்லாம் மகளை தூக்கிக்கொண்டு எங்காவது சென்று விடுவதை வழக்கமாகிக்கொண்டாள். மகளின் முகத்தை அவரின் முகத்தை காணும் ஆவல். ஸ்ரீ தயாவுக்கும் அம்மாவுடன் இருப்பது சந்தோஷத்தை கொடுக்கும் விஷயம். வெளியே சென்று விட்டு வந்தால் சில நாட்களுக்கு அப்பா வேண்டும் என்று கேட்பதை மறந்துவிடுவாள்.அதனாலேயே அந்த யுக்தியை கையாள ஆரம்பித்திருந்தாள் சாகரி .அவளது போக்கையும் நடவெடிக்கைகளையும் அவளது பெற்றவர்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
சாகம்பரியின் தம்பியும் ஒருமாதம் கல்லூரி விடுப்பு என்று வந்திருக்க மகனிடம் புலம்பத் தொடங்கியிருந்தார்கள் பெற்றவர்கள்.அவன் சொன்ன விஷயம் இவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் செய்து பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து விட்டார்கள். அது அவர்கள் அனைவரையும் உறைய வைக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இருந்தது.
"ம்மா, அக்கா வேலைக்கும்,தயா ஸ்கூலுக்கு கிளம்பிய பிறகு அக்கோவோட ரூமை திறந்து பார்க்கலாம்.ஒருவேளை அவங்களோட பாஸ்ட் என்னனு புரிஞ்சுக்க முடியும்.நாலு வருஷம் முடிஞ்சு இது அஞ்சாவது வருஷ ஆரம்பம். அக்கா இங்கே வந்ததிலேந்து ஆரம்பிச்சது உங்களோட வருத்தம்.இன்னிக்கு வரைக்கும் புலம்பல் நிக்கல. அக்காவோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்காத வரைக்கும் ,அவங்களோட வகுக்கையில் வந்தது யாருன்னு தெரியாத வரைக்கும் நம்மோட பிரச்சனை தீரப் போகுதில்லை."
மகன் சொன்ன விஷயத்தில் பெற்றவார்கள் துவண்டு போனார்கள்.எப்படி ,அவள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துக்கொண்டு அவள் அறைக்குள் சென்று பார்ப்பது என்று தயக்கம். இன்றுவரை இப்படி யோசித்தது இல்லை. மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் .அது முக்கியம்.
மகள் தீர்மானமாக குழந்தை பெற்றுக்கொண்டதிலும் சரி, தயாவை இவ்வளவு ஆசையாக வளர்ப்பதிலும் சரி, குழந்தை அவளை அறியாமல் வந்ததாக தெரியவில்லை. குழந்தையிடம் அவ்வளவு பாசம். தவறான முறையில் வயிற்றில் குழந்தை வந்திருந்தால் அதன் மீது வெறுப்பு கிளம்பியிருக்கும். அதிலிருந்தே பெற்றவர்கள் புரிந்து கொண்டுவிட்ட்டார்கள்.
எவ்வளவுதான் கட்டுப்பாடுகளுடன் கூடிய குடும்பமாக இருந்தாலும் மகள் தனது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு நிமிர்ந்து வந்து நிற்பதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி,குழப்பம் எல்லாமே இருந்தது. அவர்களின் மகள்மீதான பாசத்தில் எல்லாம் கட்டுப்பாடுகள் உடைந்து போனதுதான் வலிக்கும் நிஜம். அதிர்ச்சியில் சாகம்பரியின் அம்மா அழுது,அரற்றி, அப்பா மானமே போயிட்டு என்று ஆர்ப்பாட்டம் செய்து பெண்ணவள் வாயை திறக்கவில்லையே!
"ஏண்டி,உன்னையும் அறியாமல் யாராச்சும் ஏதாவது... "என்று அம்மா கூட பலமுறை கேட்டிருக்கிறாள். அதற்க்கு பதிலாக சாகம்பரியிடமிருந்து வரும் பதில் மௌனம் மட்டும்தான்.இதோ பழைய விஷயங்களை அசை போட்ட சாகம்பரியின் பெற்றவர்காளுக்கு இதற்கு மேலும் பெண்ணை தனியே விடக்கூடாது என்ற பொறுப்புணர்வு மகனது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க செய்தது.
அடுத்த நாளே சாகம்பரியின் அறையை மூவருமாக துருவிப் பார்க்க ஆர்மபித்து விட்டார்கள். அவள் தனது அறையை பூட்டி விட்டெல்லாம் செல்வது இல்லை. லேசாக குற்றவுணர்ச்சி மூவருக்குமே இருந்தது உண்மைதான்.
சாகம்பரியின் அப்பா அவளது மேசையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தார். அம்மா பீரோவை ஆராய்ச்சி செய்தார். அதில் உள் லாக்கரில் இருந்து ஒரு டைரி. அதை பிரித்து படித்தவர்களுக்கு அவ்வளவு ஆச்சர்யம். இது எப்படி சாத்தியம் என்று தான் தோன்றியது.
மகளின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வித்யாசாகரையும் தெரிந்து கொண்டார்கள். அந்த டைரியை அவளது அம்மாவும் அப்பாவும் அங்கே அமர்ந்து படித்தார்கள். அவர்களுக்கு அவகாசம் கொடுத்துவிட்டு சாகம்பரியின் தம்பி வெளியே வந்தான்.இதுவரை அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று நகர்ந்தது போல உணர்வு.
டைரியில் 'தான் முதன்முதலில் அவரை சந்தித்தது தொடங்கி இருவருக்கும் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் லயித்து எழுதி இருந்தாள் பெண். சில விஷயங்களை படிக்கும் பொழுது பெற்றவர்களுக்கு என்ன இது? என்று தான் தோன்றியது.(தனிப்பட்ட விஷயங்களை டைரியில் எழுதாமல் இருப்பது சால சிறந்தது )
இருவருமாக எதுத்துக்கொண்ட புகைப்படங்களை டைரியில் ஒட்டியிருந்தாள். அதில் இருவருக்குமான நெருக்கம் அப்பட்டமாகவே தெரிந்தது.இடிந்துபோய் மறந்துவிட்டார்கள் இருவரும். கடைசி நாள் பிரிவு வரை பெண்ணரசி எழுதியிருந்தாள் .இருவருக்குள்ளும் அவ்வளவு கோவம்.தங்கள் வளர்ப்பு தவறாகிப் போனது என்று மருகினார்கள் .
அதற்குப்பின்னர் தயாவை அவள் பெற்றுக்கொண்டது,இன்றுவரை அவரை மட்டும் உயிருக்குயிராய் காதலிப்பது என்று எல்லாமே அந்த டைரியில் இருக்க,பெண்ணை வேறு கல்யாணம் செய்துக்கொள்ள வற்புறுத்தி பிரயோசனம் இல்லை என்பது அவர்களுக்கு புரிந்தது.ஆனால் பெண்ணை இப்படியே தனியாகவே விட்டுவிட முடியும்?என்று அவர்களுக்கு .
"அவருக்கு ஆரம்பத்திலேயே திருமணத்தில் இஷ்டம் இல்லை. எனது அன்பிலும் காதலிலும் மாறிவிடுவார் என்றுதான் அவருடன் திருமணம் அற்ற உறவில் ஆரம்பித்தேன்.சுந்தர் கூட ஆரம்பத்திலேயே இது தவறு என்று சொன்னான் தான்.அவர் மீதான ஈடுபாடு என்னை அவன் வார்த்தைகளை கேட்கவிடவில்லை. அவருக்கு என்னை அவ்வளவு பிடிக்கும். ஆனால் ,தயா வயிற்றில் வந்த பிறகு அவளுக்கான அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.அதனால்தான் அவரிடம் திருமணம் செய்துக்கொள்ள கேட்டேன். அவரை வற்புறுத்த எனக்கு பிரியமில்லை.குழந்தையை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தயா என் வயிற்றில் இருப்பதை அவரிடம் நான் சொல்லவில்லை.
அவருக்கு என்னிடம் விருப்பம்தான்.அதை அவர் மறுக்கவில்லை.ஆனால், திருமணம்? அதில் அவருக்கு விருப்பம் இல்லை. .நான் கடைசியாக அவரை பார்த்தது நான் வேலைபார்த்த ஹோட்டலின் தளத்தில் லிப்ட்டில் ஏறும் பொழுதுதான். அவர் என்னை முழுமையாக பார்த்தாரா என்று தெரியாது.அவரது குரல் என்னை அழைப்பது தெரிந்தும் வேகமாக லிப்ட்டில் ஏறும்பொழுது தான்.அதோடு நான் அவரை பிறந்து வந்துவிட்டேன்."
ஒவ்வொன்றையும் விரிவாக எழுதி இருந்தாள் சாகம்பரி. அவளது வலியும்,உணர்வுகளும் எழுத்துக்களாக கடத்தப் பட்டிருந்தது. இப்போது அடுத்து என்ன செய்யவேண்டும் என்று குழப்பம்தான். வித்யாசாகரை பற்றி கேள்விப்பட்டதில் இவர்கள் நெருங்குவதெல்லாம் கனவில் தான்.எட்டாத உயரத்தில். சந்திப்பதே கடினம். அப்பாயின்மென்ட் கிடைப்பது குதிரைக்கு கொம்பு போலத்தான்.
அதோடு பெண்ணுக்கும் இதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்து விட்டது. இருவரும் டைரியை அதன் இடத்தில் வைத்துவிட்டு வெளியே வந்தார்கள்.இருவருக்கும் முகம் வெளுத்துப் போயிருந்தது. சாகம்பரியின் தம்பி வந்து தனது அப்பாவின் தோளை தொட அவர் மகனது தோளில் சாய்ந்து அழத்தொடங்கி விட்டார். பெண்ணின் எதிர்காலமும்,பேத்தியின் வாழ்க்கையும் எதிரில் நின்று அவரை மிரட்டியது. அம்மாவால் வேறேதும் யோசிக்கவும் முடியாமல் துக்கத்தை விழுங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இவ்வளவு காலத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று ஒரு நம்பிக்கையாவது இருந்தது.இப்போது அவளது அடிப்படையே ஆட்டம் கண்டதுபோல் இருந்தது.
இந்தப்பெண் இப்படி தன் வாழ்க்கையை இழந்துவிட்டு வருவாள் என்று தெரிந்து இருந்தால் பெங்களூரு அனுப்பிய இருந்திருக்க மாட்டார்களே! மதியம் ஸ்ரீ தயாவை சாகம்பரியின் தம்பி போய் கூட்டிக்கொண்டு வந்தான். குழந்தைக்கு வழக்கம்போல் உணவு கொடுத்து தூங்க வைத்தார் சாகம்பரியின் அம்மா.
மாலை சாகம்பரி வரும்பொழுது எதுவும் தெரியாதது போல இருப்பது அங்கே மூவருக்குமே கடினமானதாக இருந்தது. எப்படியாவது மகளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பெற்றவர்களுக்கு மனம் அடித்துக் கொண்டது.