காரில் வித்யாசாகரின் அருகில் அமர்ந்திருந்தவளின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். காரில் வைத்து எதையாவது பேசினால் அது சரி வராது என்று தான் அமைதியாக இருந்தாள். தாங்கள் இருவரும் பேசிக்கொள்வது ஏதுவாக இருந்தாலும் அது வித்யாசாகரின் காரியதரிசி ராமுக்குக் கூட தெரிய வெந்தயம் என்று நினைத்தாள். வண்டி ஓட்டிக் கொண்டு வருபவர் அவள் வேலை செய்யும் ஹோட்டலின் டிரைவர்.
வித்யாசாகர் சாகம்பரியை பார்க்க அவள் வண்டியோட்டிக் கொண்டிருந்த டிரைவரிடம் தனது வீட்டுக்கான விலாசத்தையும்,வழியையும் சொல்லிவிட்டு கொஞ்சமாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அருகில் இருக்கும் அவளவரை அவள் திரும்பியும் பார்த்தாள் இல்லை. அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்பதை மௌன சிரிப்பின் குலுங்களில் வித்யாசாகர் பார்த்து கொண்டிருந்தார். பின்னாடி நடக்கும் அந்த நாடகத்தை முன்பக்கம் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டே வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார் டிரைவர். அவருக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
'நம் ஹோட்டலில் வேலை பார்க்கும் பெண்,சாதாரண ஊழியை இங்கே இவ்வளவு பெரிய மனிதரோடு சரிக்கு சமமாக அவர் அருகேயே உட்கார்ந்து கொண்டுவருவது 'அவருக்கு கூட வேலை பார்ப்பவர்களுடன் பேசுவதற்கு நல்ல தீனி ஆகிற்று. இவள் மறுப்பேதும் சொல்லாமல் வண்டியில் ஏறிக்கொண்டது வேறு. "பணம் இருந்தா சுலபமா மடங்கி*டு* வாங்க .நம்மள மாதிரி ஒரு சாதாரண வேலையில இருக்கிறவன் கூப்பிட்டா இல்லாத நியாயம் பேசி,கூப்பாடு போட்டு சீன உண்டு பண்ணுவாங்க."என்று மனதில் பேசிக்கொண்டே வண்டியை செலுத்தினான் டிரைவர்.
பெண்ணின் மனதிலோ,வித்யாசாகரின் கண்களில் தயா படாமல் இருக்க வேண்டுமே என்ற பிரார்த்தனை. எத்தனை தினங்களுக்கு இதை மறைக்க முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை. ஒருவழியாக அந்த பயணம் அரை மணி நேரத்தில் சாகம்பரியின் வீடு வந்தது. மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. தயா சாப்பிட்டு விட்டு தூங்கியிருந்தாள்.சாகம்பரியின் அம்மா தயாவுக்கு தூங்குவதற்காக அவள் அருகே இருக்க ,சாகம்பரியின் அப்பாவும் தம்பியும் வாசலில் இருக்கும் கதிரைகளில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இவள் காரில் வந்து இறங்கியதை பார்த்தவர்கள் இருக்கையில் இருந்து சட்டென எழுந்து வந்தார்கள். வித்யாசாகர் காருக்குள் அமர்ந்தவாறே அந்த பகுதியை சுற்றி பார்த்தவர், இவளது அப்பாவையும் தம்பியையும் பார்த்துக்கொண்டார்.
அவளது அப்பாவை பார்த்ததும் ஒருகணம் காரிலிருந்து இறங்கி சென்று வணக்கம் சொல்லலாமா என்று யோசித்த வித்யாசாகர் ,'இப்போது வேண்டாம் .அதற்கான நேரம் தானாகவே கனிந்து வரும்'என்று அமைதியாக இருந்து கொண்டார். இதில் பெண்ணுக்கு எவ்வளவு ஆசுவாசமாக இருக்கிறது என்று வித்யாசாகருக்கு தெரியாது.
கார் கிளம்பும்வரை அமைதியாக இருந்தவர்கள் அதன் பிறகு நன்றாக பிடித்துக்கொண்டார்கள் ." நீ வர லேட் ஆச்சுன்னா குழந்தை உனக்காக ஏங்கும்னு உனக்கு தெரியாதா சாகி. சாப்பிடும்பொழுது அவ்வளவு சிணுங்கல்.அம்மா வேணும்.டிரஸ் வேணாம்னு. நீ இப்படி பொறுப்பு இல்லாம நடக்கலாமா..." என்று அவள் அப்பா கேட்டுக்கொண்டிருக்க முகத்தில் பரவிய அதிருப்தியுடன் தம்பி தனது அறைக்கு சென்று விட்டான்.குழந்தையின் தவிப்பை பார்த்தவனுக்கு அக்கா மீது அவ்வளவு கோவம்.இப்படியெல்லாம் காசு மிச்சப்படுத்தி,சேர்த்துவைத்து,குழந்தையின் செலவை தானே பார்த்து என்றெல்லாம் அவசியம் இல்லை. அவள் சம்பளப் பணத்துடன் அப்பாவின் உதவியை ஏற்றால் நன்றாகவே குழந்தையை வளர்க்க முடியும்.தேவையில்லாத பிடிவாதம் .ஏற்கனவே இந்த பிடிவாதத்தால் தானே ஒரு குழந்தையுடன் தனியே நிற்கிறாள் "என்று ஆயாசம் கொண்டான்.
அவள் பக்கம் இருக்கும் நியாயம் புரிகிறது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த நியாயம் அவசியம் இல்லை என்பது தான் வீட்டினருக்கு. பேசிக்கொண்டிருக்கும் அப்பாவையே கண் கொட்டாமல் பார்த்தாள் சாகம்பரி.அவள் பார்த்த பார்வையில் நிரம்பவும் அவருக்குள் தடுமாற்றம்.பெண் ஏதோ கேட்கப்போகிறாள் என்பது நிச்சயம்.
சாகம்பரி கிடைத்திருக்கும் வாய்ப்பை இன்று விடுவதாக இல்லை.கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு,"சோ,நா ஒருநாள் கொஞ்சம் லேட்டா ஷாப்பிங் முடிச்சு வந்ததுல குழந்தை ஏங்கி போச்சு.அப்படின்னா...என்னை கல்யாணம் செஞ்சு அனுப்பவும்,avanga தயாவை ஒப்பிகொள்ளலைன்னா நீங்களே அவளை பொறுப்பெடுத்து வளர்க்கவும் முடிவு செஞ்சு மாப்பிளை தேடுறீங்களே.அப்பொமட்டும் என்னோட பொண்ணு எனக்காக ஏங்க மாட்டாளோ... அவளுக்கான நியாயமா இது ?"
மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ,"உனக்கு உன்னோட பொண்ணு எவ்ளோ முக்கியமோ,அவ்ளோ முக்கியம் எங்களுக்கு எங்க பொண்ணு. உன்னை வச்சுதான் தயாவை நாங்க எங்க பேத்தியா ஒத்துக்கிட்டது. அவளை உன்னோட வாழ்க்கையில் ஒரு அங்கமா பார்க்கலாம். உன்னோட வருங்கால வாழ்க்கைக்கு அவளை தடையா இருக்க ஒத்துக்க மாட்டோம். இல்ல நாங்க மாப்பிள்ளை பார்க்க வேணாம்னா எங்களுக்கு சம்மதம் தான்.குழந்தையோட அப்பாவோட வா.ஒரு வருஷம் உனக்கான நேரம். இன்னிலேந்து ஒருவருஷம் கழிச்சும் உன்னோட வாழ்க்கையை நீ சீர் செஞ்சுக்க முடியலைன்னா, சரி செய்ய முயற்சியை நாங்க பெத்தவங்களா இருந்து எடுக்க வேண்டி வரும் "என்றுவிட்டு தங்களது அறைக்குள் சென்றுவிட்டார்.
கணவர் ஹாலில் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட சாகம்பரியின் அம்மாவுக்கு கண்ணில் நீர் திரண்டது.மூன்று தலைமுறைகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை என்பதால் எவ்வளவு அன்பாக வளர்த்தார்கள்.இன்று அவளது வாழ்க்கையில் நடந்திருக்கும் விஷயங்கள்?
பெற்றவர்களால் நிச்சயம் ஜீரணிக்க முடியாத விஷயங்கள்.இவளே தன்னைவிட பத்து வயது மூத்த ஒருவனை உயிர் உருக காதலித்து, ஊன் உருக அவனிடம் தன்னை ஒப்படைத்து என்று நடைமுறையில் கிண்டலுக்கு உரித்தான அனைத்து விஷயங்களையும் செய்து விட்டு இன்றும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் அதே காதல் மயக்கத்தில் இருக்கிறாள்.தன் குழந்தையின் நிலை பற்றி என்றேனும் அச்சம் கொண்டிருந்தால் இப்படி இருக்க முடியுமா? இவர்களோ மத்தியமர். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களும், உயர்மட்டத்தில் இருப்பவர்களும் சுற்றி இருப்பவர்கள் பற்றியும்,மற்றவர்களின் ஏச்சு பேச்சுக்களை பற்றியும் கவலை படவேண்டியது இல்லை. இங்கே கால்பந்து போல் உதைபடுவது மத்யமரே!
இவர்கள் என்ன செய்தாலும் மற்றவர்களின் பார்வைக்கும் அலசல்களுக்கும் விருந்தாகும். மற்றவர்கள் பேச்சு இவர்களை கிழித்து போடும். இவர்கள் தங்களுக்காக வாழ்கிறார்களோ இல்லையோ சமுதாயத்திற்கு பயந்து தான் ஒவ்வொன்றையும் செய்தாக வேண்டும்.அப்படி இருக்கும் பொழுது சாகம்பரி செய்து விட்டு வந்திருக்கும் விஷயம் அவர்களை பொறுத்தவரை அசாதாரணம்.
இந்த சமூகத்தின் பார்வையில் மத்திய வர்கத்தினர் எப்போதும் கண்காணிப்பின் கீழ் உள்ளவர்கள்தான். பண்ணக்கர்களிடம் அச்சமும், நமக்கும் கீழே இருப்பவர்களிடம் அலட்சியமும் உண்டு. இதே விஷயத்தை உயர்நிலையில் இருப்பவர்கள் செய்தால் 'ஒன்று இதில் என்ன தவறு என்று கேட்கும்,அல்லது பெரிய இடத்தில இதெல்லாம் சகஜம்பா' என்றுவிட்டு கடந்து செல்பவர்கள் இப்போது சாகம்பரி செய்திருக்கும் விஷயத்தை எப்போதுமே ஆதரிக்கப் போவது இல்லை.
சாகம்பரியிடம் சொன்னால் புரிந்துகொள்ள வேண்டுமே!எங்கே சறுக்கினோம்?நன்றாகத்தானே வளர்த்தோம்.நலவற்றைத்தானே சொல்லிக் கொடுத்தோம். இப்படி அடுத்து என்ன என்றே தெரியாமல் தனியாக நிற்கிறாளே! என்று துக்கம் நெஞ்சை அடைத்தது . பேசாமல் படுத்துக்கொண்டார்.
வெளியே ஹாலில் நின்றுகொண்டிருந்த சாகம்பரிக்கு உணர்வுகள் உறைந்து போயிருந்தது.அப்பா இப்படி பேசி அவள் கேட்டது இல்லை.எப்போதுமே என்னடாம்மா..என்றுதான் இவளிடம் பேசவே ஆரம்பிப்பார். அதிர்ந்து இவளை திட்டியது இல்லை. தனது மகனைக்கூட சமயத்தில் அடிப்பவர் பெண் குழந்தை என்று அவ்வளவு மென்மையாக நடத்துவார். இப்போது எல்லாமே மாறிவிட்டது.இப்போதும் அதிர்ந்து பேசுவது இல்லை. ஆனால்,முன்புபோல் நெருக்கமாக அப்பாவும் அம்மாவும் ஏன் தம்பியும் கூட தன்னிடம் பேசுவது இல்லை.
ஒருபக்கம் தான் செய்ததில் தவறு என்ன இருக்கிறது.அவர் மட்டும்தான் எனது வாழ்க்கை என்று மனது சொன்னது.திருமணம் வாய்ப்பு இல்லை என்று அவர் சொன்னார்.குழந்தை வயிற்றில் வந்ததும் அதுவே போதும் என்று விலகி வந்துவிட்டேன் என்று வாதம் செய்ய இன்னொரு பக்கம் தான் செய்தது பெரும் பிழை.என்னோடு சேர்த்து ஸ்ரீ தயாவின் வாழ்க்கையையும் சேர்த்து சூழலில் சிக்கவைத்து விட்டேன் என்று உணர ஆரம்பிக்க காலம் கடந்து யோசனை என்றது மூளை.
தனது அறைக்குள் நுழைந்தவள் தயாவின் அருகே முட்டிபோட்டு அமர்ந்து கொண்டாள். குழந்தையின் முகத்தை பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இவளை விட்டுவிட்டு எனக்காக ஒருவனை தேடி மணக்க வேண்டுமா..அதற்க்கு காலக்கெடு ஒரு வருஷமா? இது எப்படி நடக்க முடியும்?
அவரை தவிர வேறு யாரேனும் தொடுவதற்கு எப்படி அனுமதிப்பேன்? அவருடன் திருமணம் அற்ற உறவு என்கிறார்களே! அப்படியென்றால் வெறும் தாலியும் மெட்டியும் அணிந்து கொள்வது தான் திருமணமா? இன்று வரை மனதாலும் வேறு ஒருவனை நினைக்காமல் இருக்கிறேனே! அவரை என் ஆதாமாவுடன் இருக்க கட்டி வைத்திருக்கிறேனே.அவரது உயிரை என் வயிற்றில் சுமந்து ஆத்மார்த்தமாக பெற்று இருக்கிறேனே. என் மனதார கணவனாக வரித்து விட்டேனே! அதனால் தானே என்னை அவரிடம் முழுவதுமாக கொடுத்தேன். அவரை பொறுத்தவரை வெறும் உடலின் கூடலாக இருக்கலாம்.நான்,மனதார அவரை நேசிச்து அதனை வெளிப்படுத்தும் வழியாகத்தானே என்னை தொடவே அனுமதித்தேன்.
இவர்கள் யார் என்னுடைய நுண்ணிய,நுட்பமான உணர்வுகளை பற்றி புரிந்து கொள்ளாமலே பேசுகிறார்கள்.என்னை பெற்றவர்கள் தான். ஆனாலும் எனது குழந்தையை பிரிந்து நான் எப்படி இருப்பேன் எண்டு கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
இப்போது நான் என்ன செய்யணும்?எனது காதல் யாரென்று இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அவரிடம் சென்று நமக்கு பிறந்த குழந்தை இவள் தான்.நமது குழந்தைக்காகவாவது என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் வேறு ஒருவருடன் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.நம் குழந்தையை என்னிடமிருந்து பிரித்து விடுவார்கள் என்று திருமண பிச்சை கேட்கவேண்டுமா? என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்றெல்லாம் மனம் தாறுமாறாக கதறியது.
இவள் கண்ணீர் அங்கே ஒருவனை அடியோடு உறக்கம் இழக்க செய்து கொண்டிருக்கிறது என்று தெரியாமலே அவள் அழுதாள். அப்படியே மகள் படுத்திருக்கும் கட்டிலில் சாய்ந்து உறங்கியும் போனாள்.
மறுநாள் காலையில் எழுந்து எதுவுமே நடக்காதது போல உலாவும் அப்பாவை பார்த்து பெண்ணவளுக்கு மனதுக்குள் ஆதங்கம் பொங்கியது. அப்பா கண்டிப்பாக அம்மாவிடம் சொல்லியிருப்பார்.இன்றுவரை அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இருந்தது இல்லை. அப்படி இருக்கும் பொழுது இவ்வளவு இயல்பாக எப்படி இருக்க முடிகிறது என்றுதான் இருந்தது. பெற்றவர்களிடம் எதுவும் பேசவும் இல்லை.
குழந்தைக்கு மட்டும் உணவு ஊட்டிவிட்டு,அவளுக்கு பள்ளிக்குத் தேவையானவற்றை செய்தவள் தனக்கு உணவு எடுத்துக்கொள்ளவே இல்லை. அதோடு காலையிலிருந்து இன்னமும் காபியும் குடித்திருக்கவில்லை.மணி எட்டாகி இருந்தது. எப்போதும் ஆறு மணிக்குள் குடிக்கும் காபியை இன்னமும் கண்ணில் காட்டாதது வேறு தலை வலிப்பது போல இருந்தது.ஆனாலும் வீம்பை விடுவதாக இல்லை.
ஹோட்டலுக்கு செல்லவென்று சீருடையை அணிந்து கொண்டு வந்தவள் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. தலையை கொண்டை போட்டிருந்தாள்.அது இன்னமும் அவளது முகத்தை இறுக்கமாக காட்டியது. இவளை ,இவளது நடவெடிக்கைகளை காலையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வீட்டில் ஒருவரும் இவளிடம் பேச முயற்சிக்கவில்லை.அதோடு இவளை கண்டுகொள்வதாகவும் இல்லை.
மனம் முழுவதும் கொந்தளிக்கும் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் செய்தவாறே வேலைக்கு கிளம்பி சென்றாள். பெற்றவர்கள் தனது வாழ்க்கைக்கான தீர்வை காண்பதற்கு முயல்கிறர்கள் என்று புரிகிறது. அதனாலேயே இன்னமும் தாங்க முடியவில்லை.
'' என்னைப் பற்றி,எனது காதலை பற்றி மட்டுமே யோசித்து எடுத்த முடிவு, இவ்வளவு வருஷங்களாக பெற்றவர்களை எவ்வளவு நோக செய்திருக்கும் "என்று யோசித்துக்கொண்டுதான் வேலைத்தளத்துக்குள் நுழைந்ததே!
சாராவின் வேலை நேரம் முடிந்திருந்தது. இவளுக்கான குறிப்புகளை கணினியில் பதிவு செய்து வைத்துவிட்டு இவளுக்காக காத்திருந்தாள். மூன்று நிமிடங்கள் இவள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. சாரா , சாகம்பரியின் காதுகளில் விழுமாறே முணுமுணுத்தாள்."இவங்க சீனியர். லேட்டா வந்தா யாரும் கேக்க மாட்டாங்க.நாம ஒரு நிமிஷம் லேட் செஞ்சிட்டாலும் இவர்களே நமக்கு க்ளாஸ் எடுப்பாங்க" என்று விட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றாள்.
ஏனோ சாராவுக்கு ஆரம்பம் முதலே சாகம்பரியை கண்டால் சற்றும் பிடிக்காது. சாகம்பரி எதையாவது இவளிடம் சொன்னால் ஒரு அலட்சியம். இவளிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள சாரா தயாராக இல்லை.சாகம்பரியின் நேர்த்தியில், வேலை செய்யும் பாணியில் ,அவளது அழகில், சமயோசித புத்தியில் என்று சாகம்பரியின் மீது தேவையிலில்லாத பொறாமையை வளர்த்துக்கொண்டாள் சாரா. இத்தனைக்கும் சாராவிடம் மட்டுமல்ல.எல்லோரிடமும் இன்முகமாகவும், சாதாரணமாகவும் தான் பழகுவாள் சாகம்பரி.
சாரா சொன்னதை சாகம்பரி பெரியதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. சாராவின் குத்தல் பேச்சு சாகம்பரிக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது. அதற்குமேல் ஏதும் இல்லை. கேபிடீரியாவுக்கு ஒரு இன்டெர்க்காம் அழைப்பை தட்டியவள் தனக்காக ஒரு காபியையும் பிஸ்கெட்டுகளையும் சொன்னாள். இதற்க்கு மேல் பசி தாங்க முடியவில்லை.
வீட்டில் காண்பித்த வீராப்பை இன்னமும் அவளால் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. வயிறு "கொஞ்சமாவது என்னை கவனி.இல்லாவிட்டால் உன்னை வேலை செய்ய விட மாட்டேன்"என்று தீர்த்து சொல்லிவிட்டிருந்தது. சாரா கிளம்பி விட்டிருந்தாள். சாகம்பரி தனக்குள் சிரித்துக்கொண்டாள். காபி வருவதற்குள் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விபரங்களில் ஒரு பார்வையை ஓட்டினாள்.
சில விபரங்களை அவளருகில் இருந்த நோட்பேடில் குறிப்பெடுத்துக்கொண்டாள்.
காபி வந்தது.சூடான காபியும் பிஸ்கெட்டும் வயிற்றை கொஞ்சம் அடக்கியது. இரண்டு தளங்களையும் பார்வையிட்டாள். இரண்டு தளங்களும் சுத்தம் செய்ய பட்டிருந்தது.லாவெண்டரின் வாசம் நுரையீரலை நிரப்பியது.
தங்கி இருப்பவர்களின் அறைகளில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அடுத்தது துவைப்பதற்கு என்று வரும் துணிகளை கணக்கில் குறித்து வைக்க வேண்டும். எல்லா அறைகளிலும் பூங்கொத்துகள் மாற்றி இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அறையில் தங்கி இருப்பவர்களுக்கான தேவைகளை கவனிக்க வேண்டும். வரிசையாக வேலைகளை மனதில் பட்டியலிட்டு கொண்டே வேலைகளை வேகமாக கவனித்தாள்.