• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இருளில் ஓர் மோட்சம் 4

STN - 100

New member
அத்தியாயம் 4

அந்த அரங்கம் முழுவதும் மேற்கத்திய இசை ஒலிக்க, அதற்கு ஏற்ற போல வண்ண வண்ண குமிழிகள் மாறி மாறி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ஆண்கள் பெண்கள் என, இசைக்கு ஏற்ப வளைந்து நெளிந்து ஆட, அங்கே தான் ரேகா அவளது ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையுடன் ஆடிக் கொண்டிருந்தாள்.

அந்த ஆண் நபரோ, அவளது வெற்றிடையில் கை வைத்து ஆடிக் கொண்டிருக்க, அவனது கையை சற்று மேலே ஏற்றி அவளது அங்கங்களில் கை வைக்க முயல, ரேகா அவனது கையை பற்றிக் கொண்டு "நோ.." என்றாள் சிரித்தபடி.

"பேபி.. ப்ளீஸ்.. உன்ன இந்த ட்ரெஸ்ல பாக்கும் போது என் உடம்பு எல்லாம் என்னமோ பண்ணுது.." என்று மதுவின் மயக்கத்தில் கூறினான்.

"ஹே.. ரஞ்சித்.. நான் இப்படி ட்ரெஸ் போட்டு இருக்கேன்றதுக்காக, நான் எப்படி வேணா இருப்பேன்னு நெனச்சிக்காத.. ஓகே.." என்று அவள் சிரித்தபடியும் அதே சமயம் அழுத்தமாகவும் அவனிடம் கூறி விட்டு அவனிடம் இருந்து நகர்ந்தவள், அருகில் இருந்த சேரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளது தோழிகளும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, ஆடுபவரை ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த ரஞ்சித் என்பவனின் விழிகள் அவளை அங்குல அங்குலமாக ரசித்தது என்றே தான் சொல்ல வேண்டும்.

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி விழிகள், தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் தான் தீரன். விஷ்வாவின் நண்பனும் அவனது மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு மருத்துவனும் கூட.

தோழிகளுடன் பேசியவாறு சட்டென திரும்ப, அங்கே தீரன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் அலட்சியமாக ஒரு பார்வையை வீசி விட்டு திரும்பிக் கொண்டாள்.

அவளின் அலட்சியப் பார்வை, அவனுக்கு உள்ளுக்குள் வலியை ஏற்படுத்த அதற்கு மேலும் அங்கு இருக்காது விறு விறுவென்று அங்கிருந்து கிளம்பி, வெளியில் நிறுத்தி வைத்து இருந்த தனது காரில் ஏறிக் கொண்டான்.

அவனுக்கு மனதிற்கு ஆறவேயில்லை.

தான் நேசிக்கும் பெண், தன்னை அலட்சியமாகவும் இளக்கரமாகவும் பார்க்கும் பார்வையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவளிடம் தனது விருப்பத்தை தெரிவித்த நாளில் இருந்து இன்று வரை அவள் செல்லும் இடங்களுக்கு பெரும்பாலும் சென்று விடுவான்.

ஆனால் அவளோ அன்றும் சரி இன்றும் சரி அவனை ஒரு துட்சமாகவே எண்ணி அவனை காயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இதோ இன்றும் அவளைக் காணத்தான் அவன் வந்தது. அவளோ எப்பொழுதும் போல அவனை மதிக்காமல் முகத்தை திரும்பிக் கொண்டாள்.

திரும்பி ஒரு முறை காரில் இருந்து திரும்பி அந்த இடத்தைப் பார்த்து விட்டு, காரை அங்கிருந்து கிளப்பிச் சென்றான்.

***********************

அதே சமயம், காசிராஜன் கொடுத்து விட்டுச் சென்ற ஜாதகத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தார் ஜோசியர்.

ஆனால் அவர் கையில் இருந்ததோ விஷ்வாவின் ஜாதகம் அல்ல. கிடைத்தது சாணக்கியனின் ஜாதகம்.

பெயரைப் பார்த்து விட்டு யோசனையில் புருவம் சுருங்கிப் பார்த்த அவர், பின்பு என்ன நினைத்தாரோ சாணக்கியன் ஜாதகத்தில் உள்ள கட்டங்களை சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த ஜோசியரிடம், காசிராஜன் மட்டும் அல்ல இன்னும் பலர் வந்து பார்ப்பதுண்டு.

இவரின் வாக்குத் துல்லியம் மற்றும் எதையும் சரியாக கணித்துக் கூறும் திறமையினால் காசிராஜனை போன்று பல தொழில் அதிபர்களும், சாமானிய மக்களும் சரி.. வந்து பார்ப்பதுண்டு.

ரேகாவின் ஜாதகத்தை தள்ளி வைத்தவர், சாணக்கியனின் ஜாதகத்தை அப்பொழுது தான் முதலில் கணித்துப் பார்க்கின்றார்.

அவனின் ஜாதகத்தை கணித்து விட்டு, காசிராஜனிடம் அழைத்துப் பேச எண்ணி, தனது சிஷ்யனிடம் அவருக்கு அழைப்பு விடுக்கச் சொல்ல, அவரும் செய்தார்.

அழைப்பு ஏற்கப்பட, "ஹலோ.. காசிராஜன் ஹியர்.." என்று கூற,

"ஹலோ.. காசிராஜன்.. நான் ஜோசியர் பேசுறேன்.." என்றார்.

"ஹான்.. சொல்லுங்க ஜோசியரே.. ஜாதகம் பொருந்தி இருக்கா ரெண்டு பேருக்கும்??" ஆர்வத்துடன் கேட்டார் அவர்.

"நீங்க என்கிட்ட கொடுத்தது உங்கப் பிள்ளை விஷ்வா ஜாதகம் இல்ல. சாணக்கியன் ஜாதகம்.." என்றார்.

"என்ன!! அவன் ஜாதகமா?? எப்படி மாறிச்சி.??" அதிர்ச்சியுடன் கேட்டார்.

"எனக்கு எப்படித் தெரியும்?? நீங்க என்கிட்ட கொடுத்தது விஷ்வா ஜாதகம். ஒரு வேலை நீங்க தெரியாம மாத்தி எடுத்துட்டு வந்து இருக்கலாம்.. நான் ரெண்டு பேரு ஜாதகத்தை வச்சி பொருத்தமும் பாக்கல.. இப்போ பிரச்சனை அது இல்ல.. " என்றவர் ஒரு நிமிடம் தயங்க,

"என்ன ஜோசியரே.. என்னனு சொல்லுங்க??" என்று சற்று பதை பதைப்புடன் கேட்டார் காசிராஜன்.

"நான் சாணக்கியன் ஜாதகத்தை கணிச்சதுல, அவருக்கு இப்போ கல்யாண யோகம் வந்து இருக்கு. அவருக்கு இன்னும் சில மாசத்துல கண்டிப்பா கல்யாணம் நடந்தே தீரும்.." என்று உறுதியாக கூறிட,

"அவ்ளோதானா!!!" என்று நிம்மதி அடைந்தவருக்கு, அடுத்து ஜோசியர் கூறியதில் அடைந்த நிம்மதி எங்கே போனது என்றே தெரியவில்லை.

"எ.. என்ன சொல்றீங்க??" என்று திக்கித் திணறிக் கேட்டார்.

"ஆமா.. அவனால ஒரு உயிர் போகும்னு இருக்கு.. அது யாரோடதுனு என்னால தெளிவா இப்போ சொல்ல முடியல.." என்று அவர் ஆணித்தரமாக அடித்துக் கூற,

காசிராஜனுக்கு கண் முழி பிதுங்கி வெளியே வந்தது.

இவர் கணித்துக் கூறினால் சரியாக இருக்கும் என்பது உறுதி. இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவர் அவரிடமே, "இதை தடுக்க வேற வழியே இல்லையா??" என்று கேட்டவரைப் பார்த்து அவருக்கு பாவமாக இருந்தது என்னவோ??

"கட்டம் சரியா சொல்லுது. இதுக்கு வழி என்கிட்ட கேட்டா நான் எப்படி சொல்ல முடியும். கடவுள் தான் துணை.. எனக்கு அந்தப் பையனை பத்தி முழுசா தெரியல. இருந்தாலும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க" என்று கூறி விட்டு அழைப்பை அணைத்து இருந்தார்.

காசிராஜனோ, "என்ன இதுல இப்படி சொல்றாரு?? அவனே ரூமுக்குள்ளேயே தான் அடஞ்சி கெடக்குறான். அவன் மூலமா உயிர் போகும்னு சொல்லி இருக்காரே?? அதுவும் இல்லாம இந்த பைத்தியக்காரனுக்கு வேற கல்யாணம் ஆகுன்னு சொல்லி இருக்காரு? ஒரே குழப்பமா இருக்கே?? எதுக்கும் இந்த விஷயத்தை அம்பிகாகிட்ட சொல்லி வைப்போம்.." என்று நினைத்தவர், இந்த தகவலை ஓரம் தள்ளி வைத்து விட்டு அப்போதைய வேலையைப் பார்த்தார்.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்த நேரம் விஷ்வா, தனது மருத்துவ நண்பன் ராமிடம் தனது சந்தேகத்தை கேட்டுக் கொண்டிருந்தான்..

அவன் வெளிநாடு சென்று மிகவும் புகழ் பெற்ற கல்லூரியில் சைக்காலஜி படித்து முடித்து அங்கேயே வேலை பார்ப்பவன், ஒரு வேலை விஷயமாக இந்தியா வந்த அவனிடம் தனது சந்தேகங்களை முன் வைத்தான்.

"ராம்.. 5 வருசமா எந்த முன்னேற்றமும் இல்லாம அப்படியேத் தான் இருக்கான். எப்பவும் அமைதியாவே இருக்கான். இதுல எங்க ஹாஸ்பிடல்ல இருக்கற பெஸ்ட் டாக்டர் தான் டூ வீக் ஒன்ஸ் அவனுக்கு டிரீட்மென்ட் பாக்குறாங்க. அவனை செக் பண்ணிட்டு ரெகுலரா மெடிசன் கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா கொஞ்சம் கூட இம்ப்ரூவ்மென்ட் இல்ல. இம்ப்ரூவ்மெண்ட் இருக்கா இல்லையானு கூட கண்டு பிடிக்க முடியல இதுக்கு மேல என்ன பண்றதுனே தெரியலடா.." என்று மனம் நொந்து ஆதங்கமாக பேசினான் விஷ்வா.

"நீ உன் பிரதர் ஓட ரிப்போர்ட்டை கொண்டு வா. நான் பாத்துட்டு அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு சொல்றேன்.." என்றிட,

"ம்ம். சரிடா. நீ எப்போ அகைன் ஜெர்மன் போற??" என்று கேட்டான் விஷ்வா.

"நான் இன்னும் டூ டேஸ்ல கிளம்பிடுவேன். அதுக்குள்ள ரிப்போர்ட்டை பார்த்துட்டு, உன் பிரதரை அழைச்சிட்டு வந்தா அவரையும் சேர்த்தே பார்த்துட்டு போறேன்.." என்றான் விஷ்வாவைப் பார்த்து.

இந்த சந்தர்ப்பத்தை எதற்கு நழுவ விட வேண்டும் என்று எண்ணிய விஷ்வா, "நான் நாளைக்கே சாணக்கியணை கை ஓட அழைச்சிட்டு வரேன் ராம்.." ஆர்வத்துடன் கூறிய விஷ்வாவிடம்,

"ஓகே டா.. சுயர்.." என்று கூறி நண்பனை வழி அனுப்பி வைத்தான் ராம்.

****************************

தாமரைக்கு காய்ச்சல் ஓரளவு சரி ஆகி இருந்ததால், அன்று இரவு உணவை முடித்து விட்டு, தாமரை, அருந்ததி மற்றும் அருண் என மூவரும் வெளியில் திண்ணையில் அமர்ந்து இருந்தனர்.

"டேய்.. எப்படிடா போச்சி இன்னைக்கு உனக்கு.." அருணிடம் கேட்க,

அவனும் "இன்னைக்கு எங்களுக்கு ரெண்டு ஸ்டாப் லீவ் போட்டுட்டாங்க. அதுனால மூணு பீரியட் பிரீ கெடச்சது. அதுல நல்லா ஜாலியா டைம் பாஸ் ஆச்சு.." என்றான் அவன்.

"ம்ம்ம். என்ற தாமரை, அருந்ததியிடம், "அக்கா.. உனக்கு சொல்லு.??" கேட்டிட,

"எனக்கு எப்பவும் போல தான். பெருசா ஒன்னும் இல்ல. ஆனா இன்னைக்கு முழுக்க ஒரே யோசனை தான் எனக்கு??" என்றாள் எதையோ மூளையில் யோசித்த படியே.

"யோசனையா.. எதைப் பத்தி??" தாமரையும் அருணும் ஒரு சேர கேட்டனர்.

"இன்னைக்கு உன்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், அங்க ஒரு டாக்டரை பார்த்தோம்ல.." என்று இழுவையாக தாமரையைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமாம் பார்த்தோம்.." என்றாள் அவளும் யோசனையாக.

"அவரை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த நியாபகம் இருக்கு.. ஆனா எங்கன்னு தான் தெரியல.." என்றாள் அவள் யோசித்தாவாறு.

அருணும் தாமரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, "எங்க பார்த்தோம்னு உனக்கு எதுவும் நியாபகம் இருக்கா??" என்று சாதாரணமாக கேட்டாள் தாமரை.

"ம்ம்ம்ம்..." என்று சொல்லிக் கொண்டு சிறிது நேரம் யோசித்தவள், பிறகு "ஹுஹும்.. தெரியல.." என்றாள் உதட்டைப் பிதுக்கியபடி.

"சரி.. அப்புறம் ஏன் ரொம்ப யோசிக்கிற. விடு.." என்று அருண் கூற, தாமரையும் அதையேத் தான் கூறினாள்.

"சரி வாங்க வாங்க உள்ள போவோம். லேட் ஆகிடுச்சி.." என்று அருந்ததி இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

மற்ற இருவரும் தூங்கி விட, அருந்ததி மட்டும் எதையோ சிந்தித்தப்படி அந்த இரவைக் கழித்தாள் .


மோட்சம் தொடரும்..
 
Top Bottom