உந்தன் உயிராக 3
"ஏனுங் அண்ணி இம்புட்டுக்கு வருத்தப்பட்டுகிட்டு இருக்கீங்க?" புற்கள், கோரைகள் வளர்ந்திருக்கும் கரம்பில் சிறு குச்சி ஒன்றை நட்டு வைத்து, அதில் கன்றுக்குட்டியை கட்டிக்கொண்டிருந்த காமாட்சியிடம் தேவகி கேட்டிருந்தார்.
"நாம மட்டும் ஆசைப்பட்டு என்னாவப்போவுது. நமக்கு வாய்ச்சது சடவு பண்ண எப்போ எப்போன்னு காத்துக்கிடக்குதே!" என்று சொல்லியவாறு வரப்பு மீது அமர்ந்தார் காமாட்சி.
"நாம ஒண்ணுமன்னா பழகி என்ன பிரயோசனம்... சொந்தமாக முடியலையே!" என்ற தேவகி, "செந்தாவும் பிடிகொடுக்க மாட்டேங்கிறா அண்ணி" என்றாள்.
"என்ன சொல்லுறா அவள்?"
"கல்யாணாலத்துல விருப்பமில்லைங்க" என்ற தேவகி, "வயசு புள்ளைக்கு இருக்க ஆசை எதுவும் அவளுக்கு இருக்குறமாறியும் அம்புடலங்க" என்றார்.
"அதெல்லாம் கல்யாணம் ஆகிப்போச்சுன்னா ஆசையெல்லாம் தானா வந்துப்போடும்" என்ற காமாட்சி, "சின்னவனுக்கு செந்தா அம்சமா இருப்பா. நாம நினைச்சு என்னாவப்போவுது. கொடுத்து வைக்கலங்களே" என்று மீண்டும் குறைப்பட்டார் காமாட்சி.
"நான் வேணுன்னா என்ற வூட்டுக்காரர்க்கிட்ட பேசிப்பார்க்கட்டுங்களா அண்ணி" என்று தேவகி கேட்டு முடிக்கும் முன்பு காமாட்சி மறுத்திருந்தார்.
"வேணாம் தேவி... உன்ற வூட்டுக்காரருக்கும் உனக்கும் என் ஆசையால என்னத்துக்கு ஓரியாட்டம்" என்ற காமாட்சி, "புள்ளைக்கு கண்ணாலத்துக்கு மாப்பிள்ளை பாக்க இருக்கோம் சொன்னியேன்னு என் ஆசையை சொன்னேன். அவ்ளோதான். இதை இக்கட்டிக்கே மறந்துப்புடு" என்றார்.
"ஹ்ம்ம்... நம்ம திகழுன்னா எனக்கும் விருப்பந்தானுங் அண்ணி" என்ற தேவகி, "நம்ம அசையெல்லாங் எங்கங் நடக்குது" என்றார்.
"உன்ற செவலை மாரிமுத்து நெல்லுக்காட்குள்ள இறங்கிடுச்சு காமாட்சி அக்கோவ். நீயென்னன்னா இக்கட்டிக்கு அவகிட்ட கதை பேசிக்கிட்டு இருக்க" என்று அவர்களுடன் கால்நடை மேய்ச்சலுக்கு வந்த காவேரி சற்று தள்ளியிருந்து கத்தினார்.
"ஆத்தே... அவன் காட்டுக்குள்ளவா? என்ற மனுஷன் என்னைய தோலை உறிச்சுப்பிடுவாரே" என்று பதறி எழுந்த காமாட்சி, "என் ஆட்டுவளையும் சேர்த்து பார்த்துக்கிடு தேவி. அந்த மாட்டை பத்தி கூட்டியாந்துப்புடுறேன்" என வேகமாக ஓடினார்.
"பார்த்து சூதானமா போங்கங் அண்ணி" என்ற தேவகி, எழுந்து புடவையில் ஒட்டியிருந்த மண்ணை உதறியவராக கால்நடைகளை நோக்கி நகர்ந்தார்.
"என்ன தேவகி... உன்ற மவளை அந்த திகழுக்கு கட்டிக்கொடுக்க உனக்கும் சம்மதந்தானா?" என்றார் காவேரி.
"ஏன் இருக்கக்கூடாதாக்கும்?"
"பழக்கவழக்கம் வேற ஒரம்பர வேறயாச்சேன்னு கேட்டேன். நீ என்னத்துக்கு என்னைய அடிக்க வரங்கிற மாறி பாக்குற?" என்ற காவேரி, "திகழு பத்தி எல்லாம் தெரிஞ்சுங்களா உங்களுக்குள்ள இப்படியொரு ஆசை?" என்றார்.
"அவனுக்கு என்ன கொறைங்கேன்? எங்க பொறந்து எங்க வளந்திருந்தா என்ன? குணம் ஒன்னு போதாதா? எப்படா அண்ணன் எழும்புவான் திண்ணை காலியாவுமுன்னு அடுத்தவூட்டை மட்டுமே எட்டிப்பார்த்துகிட்டு நிக்கக்கூடாது காவேரி. அவன் ஐயன் பண்ணதுக்கு அந்த புள்ளை என்ன பண்ணுவான். இனிமேலுக்காவது பார்த்துப்பேசு. நம்ம பொறத்தால இருக்க மண்ணு எப்பவும் நம்ம கண்ணுக்கு அம்புடாதாம்" என்று சேலை தலைப்பை உதறி இடுப்பில் சொருகியவராக நகர்ந்தார் தேவகி. அவரின் வார்த்தையில் அப்படியொரு அழுத்தம்.
"இப்போ நானென்ன இல்லாததை சொல்லிப்புட்டேன்னு இந்த வெடுக்குப் பேச்சு?" என்று அங்கலாய்த்த காவேரி, "அவனுக்குன்னு கண்ணாலப்பேச்சு ஆரம்பிக்கும்போது எம்பேச்சு எம்புட்டுக்கு உண்மைன்னு தெரியும்" என்றார்.
அவரின் பேச்சை காதிலே வாங்காதவராக தேவகி சென்றுகொண்டே இருந்துவிட்டார்.
**************************
மதியத்துக்கு மேல் காமாட்சி வீட்டிற்கு வர,
"காலையில புள்ளைய ஸ்கூலுக்கு விடப்போன திகழ் வூட்டுக்கு வரலிங்க அத்தை. போனு போட்டாலும் எடுக்கலங்க" என்றாள் சுவிதா.
"ஏதோ அக்கட்டிக்கு வேலை இருக்குன்னு சொன்னானே... முடிச்சிட்டு வருவானா இருக்கும்" என்ற காமாட்சி அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர, சுவிதா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
"நம்ம திராட்சை தோட்டத்துலதான் இருக்காங்க. செம்படையனுக்கு போன் போட்டேன். ஏதோ யோசிச்சிட்டே உட்கார்ந்திருக்காங்கன்னு சொன்னாங்க" என்ற சுவிதா, "ஒரு எட்டு வூட்டுக்கு வந்து சாப்பிட்டுப்போட்டு போவச் சொல்லுங்க. சாயங்காலம் ஆவப்போவுது" என்றாள்.
"உன்ற போன்ல கூப்பிட்டே எடுக்கல... நான் கூப்பிட்டாக்கா எடுப்பானா?" என்று காமாட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தொண்டையை செருமியபடி வந்த ராஜேந்திரன், "என்ற போன்ல கூப்பிடு" என்று தன்னுடைய அலைபேசியை எடுத்து நீட்டினார்.
"உங்க போன்ல..." காமாட்சிக்கு நன்கு தெரியும், திகழ் எத்தனைக்கு ராஜேந்திரனிடமிருந்து தூரம் நிற்கின்றானென... தாங்கள் அழைத்தே எடுக்காதவன், தான் முற்றும் முழுதாய் வெறுப்பவரின் அழைப்பை ஏற்பானா எனும் யோசனையோடு கணவரை தயங்கிப் பார்த்தார்.
"நான் கூப்பிட்டு எடுக்கிறானா இல்லையா தெரிஞ்சிக்கணும். அவன் இக்கட்டிக்கு வந்தப்புறம் அவனுக்கு போன் போட்டு பேசுற வாய்ப்பு எனக்கு அமையல... நீ போடு. நான் தெரிஞ்சிக்கிறேன்" என்றவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
"இன்னைக்கு என்ன ஏழரையை கூட்டணும்னு இருக்காங்க தெரியலையே" என்று முணுமுணுத்த சுவிதா, "தம்பி எதுவும் வேலையா இருக்குமுங் மாமா. எதுக்கு தொந்தரவு பண்ணிக்கிட்டு" என்றாள்.
"அட என்னம்மா நீ... இப்போதான உன்ற அத்தைய அந்த பயலுக்கு கூப்பிட சொன்னேன்" என்ற ராஜேந்திரன், "நீ போன போடு" என்றார் மனைவியிடம்.
"இதே போடுறேனுங்... " என்று சத்தமாக சொல்லிய காமாட்சி, "உங்க உச்சி மண்டையிலே" என ஓசையின்றி முடித்தார்.
பல வருடங்களுக்குப் பின்னர் மனம் காதலின் பக்கம் செல்வதாய் தோன்ற திகழோவியனின் மனதில் பெரும் அலைப்புறுதல்.
காதல்... நெஞ்சமெங்கும் நிறைந்து கிடக்கிறது. ஆனால் அதையும் தாண்டி அவ்விடத்தில் கோபம், ஆற்றாமை, ஏமாற்றம் எல்லாம் நிரம்பி வழிகிறதே!
அவனது காதல் கிடைக்காமல் போனதற்கு... அந்த காதல் மீதே கோபம் வந்ததற்கு காரணமே அவனின் தந்தை தான். அதனாலே அவர் மீதான அவனது வெறுப்பு பலமடங்காகியது.
"என்ன எடுத்தானா?" ராஜேந்திரன் கேட்டிட,
"ரிங் போவுதுங்க" என்ற காமாட்சி சற்று தள்ளிச் சென்றார்.
மறந்துவிட்டோம் துறந்துவிட்டோம் என்று நினைத்திருக்க, இன்றைய நாளில் அருகருகே இரண்டு முறை பார்த்ததற்கே மனம் அவள் பக்கம் ஓடுகிறதே என அதீத கடுப்பில் இருந்தவன், தற்சமயம் வேலையென செய்தாலும் அருகிலிருப்பவரிடம் எரிந்து விழுவோமென அதனை தவிர்ப்பதற்காகவே, திராட்சை கொடிகளுக்கு பந்தலிடும் வேலையை மேற்பார்வை பார்க்கும் விதமாக ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான்.
முன் நிகழும் காட்சிகள் யாவும் அவனின் கண்ணிலும் விழவில்லை, கருத்திலும் பதியவில்லை.
அழைப்பு சென்றுக்கொண்டே இருந்தது. எடுக்க அவனுக்கு மனமில்லை. இரண்டாம் முறை அழைப்பில் யாரென்று பார்த்தான். இராஜேந்திரனின் எண். இதுநாள் வரை ஒரே வீட்டில் இருக்கும் போதும் ராஜேந்திரனிடம் பேச முயன்றது இல்லை திகழோவியன். அவர் மட்டும் அவனிடத்தில் ஜாடையாக பேசுவார். திகழோவியனிடம் கேட்டுக்கொள்ளும் பாவம் கூட இருந்திடாது.
அவன் வெறுக்கும் ஆட்களில் முதல் நபர் அவர்தான். அவனுக்கு அவரே வேண்டாம் எனும்போது, அவருடைய பேச்சைக்கேட்டு நான் ஏன் நடக்க வேண்டும் என்ற எண்ணம்.
முன்பு சுவிதா அழைத்தபோதும் எடுக்காதவன், இம்முறை ராஜேந்திரனின் எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்துக்கொண்டிருக்க, ஏற்கனவே கடுப்பில் இருப்பவனுக்கு அவர் மீதான ஆத்திரம் உச்சத்தைத் தொட்டது.
அவனது வாழ்வில் நடந்த அனைத்து அனர்த்தங்களுக்கும் அவர் ஒருவரே காரணம்.
செய்தது அவராக இருப்பினும், அதன் பலனாய் வலி சுமப்பது திகழோவியனும், அவனது காதலுமே!
இதுவரை அவர் மீதான கோபத்தை தன்னுடைய ஒதுக்கத்தைத் தவிர்த்து வேறு விதமாக திகழோவியன் காட்டியது இல்லை. ஆனால் இன்று அவரிடம் மொத்தக் கோபத்தையும் கொட்டும் வேகம். அவனது அமைதி, பொறுத்துக்கொள்ளுதல் யாவும் அவனது நிலையை விலகச் செய்திருந்தது.
“எடுத்தானா? இல்லையா?”
ராஜேந்திரன் கேட்க காமாட்சி பாவமாக சுவிதாவை ஏறிட்டார்.
"வேலை கொள்ளயா இருக்குதோ என்னவோங் மாமா. அவங்களா கூப்பிடட்டுமே" என்று சுவிதா கூற,
"ரெண்டரை வருசம் ஆவுது. ஒரு வார்த்தை என்ற மொவம் பார்த்து பேசமாட்டேங்கிறான். காலையில அந்த நாராயணன்கிட்ட மட்டும் மாமா நோமான்னு ஒறவு கொண்டாடுறான். இப்போ அவன் என்றகிட்ட பேசுறானா இல்லையா தெரியணும். நீ திரும்ப போன போடு" என ராஜேந்திரன் தன் பிடியில் நிலையாக நின்றார்.
"தம்பி இப்படியிருக்க காரணமே நீங்கதானுங் மாமா. இப்போ அவங்களை கொறை சொல்லி என்னாவுமுங்க" என்ற சுவிதா ராஜேந்திரன் கணைத்ததில் வாயினை மூடிக்கொண்டாள்.
காமாட்சி வேண்டாமே எனும் விதமாகப் பார்த்து நிற்க...
"காமாட்சி" என்று ராஜேந்திரன் உரக்க விளித்திட...
"தோ போட்டேனுங்க" என்று காமாட்சி மீண்டும் அழைத்திட இம்முறை ஏற்கப்பட்டது.
"என்னை நிம்மதியாவே விடமாட்டீங்களா? என்னத்துக்குங்க சும்மா நொய்நொய்ன்னு போன் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. ஒருமுறை எடுக்கலன்னா விடமாட்டீங்களா?" என்று எடுத்ததும் வெடித்து சிதறிய திகழோவியன், "உங்களால என்ற வாழ்க்கையே போச்சுங்க. உங்களை நான் வெறுக்கறேனுங்க. இனிமேயாவது உசுரை உருவாதீங்க. அழக்கூட தெம்பு இல்லைங்களே" என்று இணைப்பைத் துண்டித்திருந்தான்.
அலைபேசி கை நழுவ தரையில் இடிந்துபோய் அமர்ந்த காமாட்சி பெருங்குரலெடுத்து கதற,
"அத்தை" என்று அருகில் ஓடி வந்தாள் சுவிதா.
"என்னாச்சுங்கத்தை" என்று அவரின் கையை பிடித்த சுவிதா, "திகழு என்ன சொன்னான்?" என்றாள்.
"என்ற பெத்த வயிறு பத்தி எரியுதே!" என்று தன்னுடைய வயிற்றை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து அழுத காமாட்சி, "என்ற வயித்துல பொறந்து நிம்மதியில்லாம ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கானே! அம்மாவா நான் ஒன்னும் செய்ய முடியாதா பாவியா நிக்கிறேன்" என்று ஏதேதோ புலம்பி அரற்றினார்.
"இப்போ என்னத்துக்கு இப்படி அழறவ? அப்படியென்ன சொன்னான் உன்ற மவன்?" என்ற ராஜேந்திரன், "இத்தனை வருஷமா ஒரு கொறையும் இல்லாமதானே இருந்தான். இப்பவும் ராசாவாட்டம் சுத்தி வர்றான். வேறென்ன வேணுமாக்கும்?" என்றார்.
சட்டென்று அழுகையை நிறுத்திய காமாட்சி, புடவை தலைப்பால் முகத்தை அழுந்த துடைத்து எழுந்து நின்று கணவரை நேருக்குநேர் பார்த்தார்.
"அவனுக்கு நீங்க பண்ண அநியாயம் என்னன்னு தெரியலங்களா? இல்லை இன்னும் புரியலங்களா?" என்றார்.
"அப்படியென்ன பண்ணிப்புட்டேனாம்?" என்றவரிடம் தான் செய்தது கொஞ்சமும் தவறென்ற எண்ணமில்லை.
"பெத்த புள்ளைக்கு ஐயனா நீங்க செஞ்சது துரோகங்க. அந்த உறுத்து கொஞ்சமும் இல்லைங்களா?" என்ற காமாட்சி, "பாவத்தை பண்ணிப்புட்டு எப்படிங் முடியுது உங்கனால?" என்றார்.
"பெத்த அய்யனையும், அம்மையையும் அப்பா அம்மான்னு கூப்பிட முடியாததெல்லாம் என்னவொரு கொடுமைங்க" என்று கண்ணீர் வடித்தார்.
"என்னவோ ஒன்னுமத்து கிடந்தவன் மாறிக்கு புலம்புறவ... உன்ற பாசத்துக்கும் மேல அவன் அனுபவிச்சிட்டான். மவராசி தாங்கு தாங்குன்னு தாங்கினா(ள்)! பத்தாதாக்கும்" என்றவர், "கஞ்சிக்கே வழியில்லாம கடந்த மாறியில்ல பேச்சிருக்கு. கடைசிவரைக்கும் உண்மை தெரியாம இருந்துப்புடும் நெனச்சேன்" என துண்டை உதறி தோளில் போட்டவராக சென்றுவிட்டார்.
"அவன் மனசு இன்னமும் இந்த கூறுகெட்ட மனசனுக்கு புரியல சுவி" என்ற காமாட்சி, "மனசுக்குள்ளவே அழுத்திக்கிட்டு கிடக்கான். குடும்பமா இருந்தாலும் நானெல்லாம் அவனுக்கு அந்நியமாத்தான் இருக்கேன்" என்றதோடு திகழோவியன் ராஜேந்திரன் என நினைத்து தன்னிடம் பேசியதை மருமகளிடம் பகிர்ந்தார்.
"இதுலாம் மறக்க நினைச்சாலும் முடியாதுங்கத்தை. உண்மை தெரிஞ்சது ஒருபக்க வலின்னாலும், அன்னைக்கு அவங்க பேசினப்பேச்சு. திகழ் எவ்ளோக்கு வேதனைப்பட்டிருக்கும். தங்கச்சின்னு பார்த்து மாமா திகழுக்கு பண்ணது சாதாரண விஷயமில்லையே" என்றவள், "இதுவரைக்கும் இல்ல... இனிமேலு திகழுக்கு என்ன பண்ணி சந்தோஷமா வச்சிக்கிட முடியுமோ அதை பண்ணுங்க. அழுது புலம்புறதால நடந்தயெல்லாம் இல்லைன்னு ஆகிப்புடுங்ளா!" என்றாள்.
"இன்னைக்கு இப்படி வருத்தப்பட்டு பேசுறான் அப்படின்னா என்னவோ நடந்திருக்கு சுவி" என்றார் காமாட்சி.
"அப்படி எதுவும் இருக்காதுங்கத்தை. மாமாகிட்ட பேச திகழ் விருப்பப்படலங்... அவங்க போன்ல இருந்து திரும்பத்திரும்ப போன் வரவும் எடுத்து கத்தியிருப்பான்" என்று காமாட்சியைத் தேற்றினாள்.
அந்நேரம் திகழோவியனிடமிருந்து சுவிதாவுக்கு அழைப்பு வந்தது.
"தம்பிதாங்க" என்ற சுவிதா அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ அண்ணி... "
"ஆங்... சொல்லுங் தம்பி!"
"வீட்டுல எதுவும் சடவுங்களா?"
"இல்லைங்களே!"
"சரிங்க அண்ணி" என்ற திகழோவியன் அழைப்பைத் துண்டிக்கப்போக... "சாப்பிட வரலையே திகழு" என்றாள்.
"பசியில்லங்க அண்ணி" என வைத்திட்டான்.
"திகழ் குரலே சரியில்லைங்கத்தை. நான் சாப்பாடு கொண்டுபோரேனுங்க. நம்ம திராட்சை தோட்டந்தான" என்ற சுவிதா, "இன்னும் எவ்ளோவுக்கு அனுபவிக்கனும் இருக்கோ" என எழுந்தாள்.
"பெரியவனை பேச சொல்லுவோம் சுவி. இப்போ நீ அக்கட்டிக்கு போனீன்னா உன்ற மாமா என்கிட்ட ஏறுவாறு" என்ற காமாட்சி, "எனக்கொரு யோசனை" என்றார்.
"என்னதுங்க?"
"பெரியவன் வரட்டும் பேசுவோம்" என்ற காமாட்சி, "உன்ற புருஷனுக்கு போன் பண்ணி திகழுகிட்ட பேசச்சொல்லு. நல்லாதான இருக்கான்னு கேட்கட்டும்" என்றார்.
"நான் பேசுறேனுங்க. நீங்க இப்படி அழுதுகிட்டே இல்லாம, மொகத்தை கழுவிட்டு சாப்பிடுங்க" என அலைபேசியோடு தள்ளிச்சென்றாள்.
சுவிதாவிடம் பேசி வைத்த திகழோவியனுக்கு, 'இன்று தனக்கு என்னவானது' எனும் எண்ணம் தான்.
தன்னை பெற்றவர்களே தனக்கு அந்நியமாகியப் பின்பு இங்கெதற்கு இருக்க வேண்டுமென பலமுறை நினைத்துவிட்டான். ஆனால் காமாட்சியின் யாசிப்பை மீறி அவனால் வேறாக சென்றிட முடியவில்லை. அத்தோடு அன்றைய சூழல் அவனுக்கு பெரும் ஆறுதல் சுகிர்தன் மட்டுமே! அவனுடனாவது இருந்து வலி மறக்க வேண்டுமென்ற எண்ணம்.
தாய்ப்பாசம் கிட்டிடாதவன் அல்ல. ஆனால் தன்னை ஈன்ற தாயின் அன்பை அனுபவத்திடாத துரதிர்ஷ்டசாலி அவன்.
கண்களை இறுக மூடிட, இமைகள் நீரில் நனைந்தன.
பாசத்தில் முக்குளித்தவனுக்கு அவை யாவும் தனக்கு உரிமைப்பட்டதில்லை என்ற உண்மை இந்த நொடியும் பெரும் தகிப்பை நெஞ்சில் கூட்டியது.
நெஞ்சில் உயிர் நிறையும்...