உந்தன் உயிராக 9
மிகவும் பரபரப்புடன் திகழோவியன் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
பிள்ளைகள் சீக்கிரம் எழுந்து சரியான நேரத்துக்கு பள்ளி கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்று பெற்றவராக நினைத்திட, கல்யாணி அதற்கு மாறாக மகனின் உறக்கம் களைந்திடக் கூடாதென அவனாக எழும்பும் வரை எழுப்பிடாது இருந்தார்.
கல்யாணி பள்ளி செல்ல கிளம்பி, இருவருக்கும் மதிய உணவை எடுத்து வைத்துவிட்டு, உறங்கும் திகழின் அருகிலே அமர்ந்து அவனின் முகத்தையே பார்த்திருந்தார்.
"என்ட்ர குலசாமி" என்றவர் அவனின் நெற்றி கேசம் ஒதுக்க, திகழோவியன் உறக்கம் கலைந்து எழுந்தான்.
"என்னங்மா?" அவர் தனது தலைக்கு அருகிலே அமர்ந்திருக்கவும் எழுந்ததும் தன்னைப்போல் பயந்துவிட்டான்.
"சும்மா கண்ணு!"
நேரத்தைப் பார்த்தவன்,
"எழுப்பி விட்ருக்கலாங்ளேம்மா?" என்றான்.
"எப்பவும் நான் எழுந்ததும் எழுந்திடுவியே தங்கம். இன்னைக்கு நல்லா தூங்கவும் எழுப்ப மனசில்லை. அதுவும் நீ தூங்கும்போது பச்சப்புள்ளையாட்டாம் தெரியுற. என்ட்ர புள்ளை கொள்ளை அழகு" என்று அவனின் முகம் சுற்றி நெட்டி முறித்தார்.
"அட போங்கங்மா... இப்போ அவதியா கெளம்போனும்" என்று சலிப்பாக படுக்கையைவிட்டு எழுந்தான்.
"ஒருநாள் லேட்டா போவலாம். தப்பில்லை!" என்றார் கல்யாணி.
"ஒரு டீச்சரா இருந்துகிட்டு நீங்களே பசங்க லேட்டா போவலாம் சொல்றது சரியாங்மா?" என்றான்.
"உன் தூக்கத்தைவிட அப்படியென்ன முக்கியமாம்? லீவ் போட்டுக்கிடலாம் தப்பில்லை" என்றார்.
அவனுக்கு இப்போதெல்லாம் அவரின் அதீத அன்பு ஆயாச மனநிலையையே அளித்தது. ஆனாலும் அவரிடம் எடுத்துக்கூற முடியவில்லை.
"என்னை கொஞ்சமாச்சும் ஃப்ரீயா விடுங்களேங்மா" என்று கத்த வேண்டும் போலிருந்த எண்ணத்தை அவர் தன்னை வாஞ்சையாகப் பார்த்திருப்பதை கண்டு உள்ளுக்குள் அடக்கிக் கொண்டான்.
"காலேஜ் பஸ் வந்துப்போடுங்க" என்று துண்டினை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பின்கட்டில் இருக்கும் குளியலறைக்குச் சென்றான்.
அவன் குளித்து வருவதற்குள் அவனுக்கு தேவையான அனைத்தும் தாயாராக எடுத்து வைத்திருந்தார் கல்யாணி.
அறைக்குள் வந்தவன் கட்டில் மீது வைக்கப்பட்டிருந்த நீல வண்ண சட்டையைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றிருக்க...
அவனின் ஈர கேசத்துக்கு சாம்பிராணி காட்ட எடுத்து வந்தவர்,
"ஏன் கண்ணு எடுத்து வச்ச உடுப்பையே பராக்கு பார்த்துகிட்டு நிக்கிற?" என்று தனது வேலையை செய்தார்.
"இன்னைக்கு பிளாக் சர்ட் போடலாம் இருந்தேனுங்மா" என்றான். அந்த நீல சட்டையை கையிலெடுத்தவனாக.
"அதனால என்ன சாமி... நாளைக்கு போட்டுகிட்டா ஆச்சு" என்றதோடு, அவனது சிறு விருப்பமும் விட்டுக்கொடுக்க முடியாது, "இன்னும் செத்த முடியை துவட்டியிருக்கோணும் கன்னுக்குட்டி" என பேச்சை மாற்றியிருந்தார்.
'நாளைக்கும் இதே கதை தானுங்களே!' நினைத்தவனுக்கு வெளிப்படையாக சொல்ல வரவில்லை.
அன்பெனும் சிறை மொத்தமாக கூண்டுக்குள் அடைத்துவிடும் மாயம்.
ஏனோ கல்யாணிக்கு மகனின் ஒவ்வொரு அசைவும் தனக்கு பிடி வகையில் ஏற்றது போன்று இருப்பதில் அத்தனை திருப்தி.
அதிலும் அவர் சொல்லை தட்டாது அவன் கேட்டுக்கொள்வதில், அப்படியொரு மகிழ்வு.
"நீங்க போங்மா... கெளம்பி வர்றேன்" என்றவனிடம், "சொக்காக்கு பொத்தான் போட்டுவிடுவேனல்லோ தங்கோ" என்று அங்கேயே நின்றார்.
"ம்மா..." என்று மனதில் அடக்கலை அமைதிப்படுத்த முடியாது சத்தம் காட்டியவன், "உங்களுக்கு நானெப்போவும் குழந்தையா இருக்காலாங்க... ஆனா நான் வளர்ந்துட்டேனுங்க" என்றான்.
"ஏன் கண்ணு இப்படியெல்லாம் பேசுற... அம்மா உனக்கு பார்த்து பார்த்து செய்யோறது புடிக்கலையாக்கும்?" என்று கண்களை புடவையால் துடைத்தார்.
'அய்யோ அம்மா...' என உள்ளுக்குள் வார்த்தையை விழுங்கியவன், "இந்த வயசுக்கு மேல சிலது நீங்க செய்யுறது ஒருமாறியா இருக்குங்மா" என்றான். திணறலோடு.
"அம்மாகிட்ட என்ன சாமி கூச்சம்?" என்று அவர் கேட்டிட, அவனிடம் சுத்தமா பதிலில்லை. மனதில் நொந்தே போனான்.
"சத்தியமா முடியலங்மா" என்று கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
திகழின் வாடிய வதனம் கண்ட பின்னரே...
"அம்மாவுக்கு புரியுது தங்கோ... நீ உடுப்பு மாத்து. நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று வெளியேறினார்.
"புதுசா மறுத்துப் பேசுறான். என்னைய புடிக்காம போயிடுச்சோ... நேத்து ரெண்டு வார்த்தை தான ராஜேந்திரன் அண்ணகிட்ட பேசினான். காமாட்சி அண்ணிகிட்டக்க எதுவும் பேசியிருப்பானோ?" என்று மனதில் தேவையில்லா பலவற்றை அலசிக் கொண்டிருந்தார்.
"இனி சுத்தமா ஒரு வார்த்தையும் பேசவுடக்கூடாது" என்று எண்ணியவராக உணவினை எடுத்து வைத்தார்.
திகழோவியன் தயாராகி வர,
வெளியில் தாழ்வாரத்தில் கோவிந்தன் யாரையோ வீட்டிற்குள் வரவேற்கும் குரல் கேட்டு,
"உட்காரு கண்ணு. தோ வர்றேன்" என்று நகர்ந்து சென்று எட்டிப்பார்த்த கல்யாணி, வேகமாக திகழின் அருகில் வந்து,
"இக்கட்டிக்கு ஒரே உக்கரமா இருக்கல கண்ணு. நீ உன்ற ரூமுக்கு போயி ஏசி போட்டுகிட்டு சாப்பிடு" என்று அவனை உள்ளே அனுப்ப முயன்றார்.
"உள்ள... எதுக்குங்மா. நான் இக்கட்டிக்கே உட்கார்ந்துட்டனே... திரும்ப எழுந்து போவனுங்களா?" என்றான்.
"ஏன்ட்ரா திகழு காலையில இருந்த பேச்செல்லாம் தினுசா வருது" என்று கல்யாணி முதல்முறை அதட்டலை காண்பிக்க, என்னவென்று காரணம் புரியாது திகழோவியன்,
"எனக்கு சாப்பாடே வேணாங்மா. பஸ்க்கு டைம் ஆச்சு" என்று அவர் அடுத்து பேசுவதற்கு வாய்ப்பே அளிக்காது கல்லூரி பையினை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான்.
எதிரில் கோவிந்தனுடன் வீட்டிற்குள் வந்த தம்பதியர் அவனைப் பார்த்து புன்னகைக்க, இருக்கும் மனநிலையில் அவர்களுக்கு புன்னகையை கூட திருப்பி அளிக்க முடியாதவனாக சென்றிருந்தான்.
"உங்க பையனுங்ளா?" என்ற பெண்மணி தேவகி.
"காலேஜுக்கு நேரமாச்சுன்னு விசுக்குன்னு போரானாட்டுக்குது. நீங்க உள்ள வாங்க" என்றார் கோவிந்தன்.
"அப்படியே ராஜேந்திரன் அண்ணன் முகவாட்டாம்" என்ற தேவகி, "பையன் உங்க மாமனார் குடும்ப ஜாடை போல" என்றார்.
அங்கிருந்த கல்யாணிக்கு திக்கென்று இருந்தது. மனைவியின் அதிர்வை ஓரக்கண்ணால் பார்த்த கோவிந்தன்,
"ஆமா" என்றார் தேவகியிடம்.
"கொழந்தையில பார்த்தது. என்னமா வளர்ந்துட்டானாட்டுக்குது" என்றார் நாராயணன்.
"வருசம் போனா வளரத்தான செய்வாங்க" என்ற கோவிந்தன், இருவரையும் இருக்கையில் அமர்த்த, கல்யாணி சம்பிரதாயமாக "வாங்க" என்றிருந்தார்.
"உன்ற அண்ணனுக்கும் எனக்கும் ஆவாது. வாசலோட அனுப்பிடிவியோன்னு நினைச்சேன் கல்யாணி" என்ற நாராயணன், "உன்ற வூட்டுக்காரர் எனக்கு அண்ணன் முறையாவுது. ஊரும் ஒன்றரை மணிநேர தூரம் தான். ஆனால் மொவம் பார்த்தே பல வருஷம் ஆவுது. உன்ற அண்ணனுக்கும் என்னைய ஆவாது. நான் வரப்போறது உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு நானும் அப்படியே ஒதுங்கியே இருந்துப்புட்டேன்" என்றார்.
"நானென்ன உங்களை இக்கட்டிக்கு வரக்கூடாது, உம்மட அண்ணன்கிட்ட பேசக்கூடாதுன்னா சொன்னேன். என்னவோ என்னை பொல்லாப்பாக்கிறீங்க. உம்மட பேச்சை மீறி இவரு என்னை கட்டிக்கிட்டாருன்னு நீங்க ஒரம்பரை மறந்து இருந்துப்போட்டு இப்போ என்னை என்னவோ சொல்றீங்க" என்றார் கல்யாணி.
"என்ன கல்யாணி இப்படி வெடுக்குன்னு பேசுற" என்ற தேவகி, "இப்போ இந்தப்பேச்சு அவசியமா?" என்றார் கணவரிடம்.
"வரப்போவ இல்லைன்னாலும் என்ட்ர அண்ணன்கிட்ட பாக்குற விசேச வீடுகள்ல பேசிக்கிட்டு தான் இருக்கேன். நீதான் ஒரு இடமும் வரதில்லை. அதான் உனக்கு எங்க போக்குவரத்து தெரியுறதில்லை" என்று கல்யாணியிடம் கூறிய நாராயணன், அவர் முகத்தை வெட்டிக்கொண்டு திருப்பவும்,
"சரிண்ண... நான் வந்த விசயத்துக்கு வர்றேன். இக்கட்டிக்கு பூர்வீக நிலம் ஒண்ணு இருக்கே! அது நம்மட தாத்தா பேர்ல இருக்கிறதால, ரெண்டு பேருக்குமே பங்கு வரும். நம்ம ஐயங்க காலத்துல பிடிச்சிருந்தா இந்த சிக்கல் இல்லாம இருந்திருக்கும்" என்றதோடு, " ஒரு காடு விலைக்கு வருது. வாங்க பணம் பத்தல. அந்த இடத்தை நீயும் சும்மாதான போட்டு வச்சிருக்க, ரெண்டு பேரும் ஒட்டுக்கா வித்துப்போட்டு வர பணத்தை பிரிச்சிக்கிடுவோம்" என்றார்.
கோவிந்தன் சற்றும் யோசிக்காது,
"சரி நாராயணா... நீ மேப்படிக்கு ஆவ வேண்டியதை பாரு. கையெழுத்து போடுற அன்னைக்கு வந்து போடுறேன்" என்றார் கோவிந்தன்.
"என்ட்ரகிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசல..." கல்யாணி குறையாகக் கூற,
"நீ மட்டும் என்ட்ரகிட்ட எல்லாம் கேட்டா செய்யுற" என்று பட்டென்று பதில் சொல்லியிருந்தார் கோவிந்தன்.
நாராயணனும், தேவகியும் தர்ம சங்கடமாக பார்த்திட,
"இதுக்கா உன்ற பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு இம்மா தொலைவு கூட்டியாந்த" எனக்கேட்டு சகஜமாக்க முயன்றார் கோவிந்தன்.
"உன்றகிட்ட பேசிப்போட்டு இக்கட்டிக்கு, இவள் ஒரம்பரையில ஒரு விசேசங்ண்ணா. அதையும் பார்த்துப்போட்டு வூடு போவனும்" என்றார் நாராயணன்.
"சரிடா... இருந்து சாப்பிட்டுப்போ" என்ற கோவிந்தன் கல்யாணியை பார்க்க, "எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சுதுங்க" என்று வேகமாக பைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியிருந்தார் கல்யாணி.
"நீ தப்பா எடுத்துக்காத நாராயணா" என்று கோவிந்தன் வருத்தமாகக் கூற,
"நீங்க சங்கடப்படாதீங்கங்... அவன் தங்கச்சியாச்சே! பாதி குணமாவது அவனுல்ல இருக்கணுங்களே" என்றார் நாராயணன்.
"இப்போ ராஜேந்திர அண்ணா பேச்சே இல்லை. அவரை எதுக்கு பேச்சுல இழுக்குறீங்க" என்றார் தேவகி.
"இன்னமுமா இவங்க சடவுக்கு ஒரு முடிவு வரல" என கோவிந்தன் கேட்க,
"அது எப்பையும் ஓயாது போலங்க மாமா. பொழுது மொளைச்சு பொழுது போனா இதே கதைதான்" என்றார் தேவகி.
கோவிந்தன் நாராயணனைப் பார்க்க,
"உன்ற மச்சானும் லேசுப்பட்ட ஆளில்லைங்... என்ட்ரகிட்ட ஓரியாட்டம் கட்ட எப்போன்னு நிக்கிறான்" என்றதோடு, "நீயும் அக்கட்டிக்கு வரது இல்லையே ஏனுங்ண்ணா?" எனக் கேட்டார்.
கோவிந்தனின் முகம் சடுதியில் மாறிவிட்டது.
"உங்களுக்குள்ள என்னமாச்சும் சடவுங்களா?" என்றார் நாராயணன்.
"அதெல்லாம் ஒன்னுமில்ல நாராயணா... அதான் அவங்க இங்க வரப்போவ இருக்காங்களே" என்ற கோவிந்தன், "எனக்கும் வேலைக்கு நேரமாச்சு" என்றார்.
"சரிங்... நான் எல்லாம் முடிச்சிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேனுங்க" என்று நாராயணன் தேவியுடன் கிளம்பியிருந்தார்.
"நீ என்ன யோசனையிலே வர்ற?"
வண்டியில் தனக்கு பின்னாடி அமர்ந்து வரும் தேவகியின் பேச்சு சத்தமே இல்லாதிருக்க நாராயணன் கேட்டிருந்தார்.
"இவிங்க கல்யாணம் எப்படிங்க ஆச்சுது?" தேவகி கேட்க,
"கோவிந்தன் அண்ணனும், அந்தபுள்ள கல்யாணியும் டீச்சர் படிப்பு ஒட்டுக்கா கோயம்புத்தூர்ல தான் படிச்சாங்க... அப்படியே விருப்பமாகிப்போச்சு. என் பெரியய்யன் மகன் தெரிஞ்சு ராஜேந்திரனும், அவன் தங்கச்சின்னு தெரிஞ்சு நானும் தாம்தூம்ன்னு குதிக்க, நான் கோவிந்தனுக்கு சின்னய்யன் மகன் தான... என் பேச்சு எடுபடல. ஆனா ராஜேந்திர எம்மானோ தடுத்தும் அந்தப்புள்ளை கல்யாணி கட்டுனா இவரைத்தான் கட்டுவேன்னு வம்படியா நின்னு சாதிச்சுக்கிச்சு. எனக்கு என் பேச்சை கேட்கலையேன்னு கோவம். இக்கட்டிக்கு போக்குவரத்தை நம்ம கல்யாணத்துக்கு முன்னவே முறிச்சிக்கிட்டேன். என் பெரியாயி தான், அது உசுரோட இருந்த வரைக்கும் நம்மட வூட்டுக்கு வந்துப்போக இருந்தது" என்றார்.
"ம்ம்... நம்மட கல்யாணத்துல பார்த்திருக்கேன்" என்றார் தேவகி.
"நம்ம புள்ளைக்கு இப்படியொரு சொந்தமிருக்குன்னு எப்பவும் சொல்லிக்காத. அப்புறம் அந்த ராஜேந்திரன் குடும்பத்தோட ஒறவு வச்சிக்கூற சூழ்நிலையாகிப்போட போவது" என்றார்.
"நான் எதுக்கு சொல்றேன். என்ட்ர சொந்தமா என்ன?" என்ற தேவகிக்கு மட்டுமல்ல, நாராயணனுக்கும் தெரிந்திருக்கவில்லை, அவர்களின் மகளால் பிரிக்கவே முடியாத பந்தமொன்று எதிர்காலத்தில் உருவாகுமென்று.
**********************
"என்னடா உம்முன்னு உட்கார்ந்திருக்க?"
கேட்ட மணிக்கு பதில் சொல்லாது, எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் திகழோவியன்.
"ஒண்ணுமில்லடா" என்ற திகழோவியன், "பசிக்குதுடா... கேன்டீன் போவோமா" என்றான்.
முதல்முறை ஒருவேளை சாப்பிடாமல் இருந்திருக்கிறான். பழக்கமில்லாத ஒன்று, மனதின் சோர்வு வேறு திகழை நிலைகுலைய வைத்திருந்தது.
கல்யாணி அவன் கேட்கும் முன்பு ஏதாவது சாப்பிட கொடுத்துக்கொண்டே இருப்பார். கல்லூரிக்கு கொடுத்தனுப்புவதில் கூட அத்தனை வகை வைத்து அனுப்புவார். இன்று அவர் மீதிருந்த கண்ணுக்குத் தெரியா சலிப்பால் ஒருவேளை உணவை ஒதுக்கியது, அவனின் வயிற்றை இழுத்துப் பிடித்தது.
"காலையில சாப்பிடலயா நீ?" என்ற மணி, "கேண்டீன் சாப்பாடு சரியில்லைன்னு நம்ம சீனியர்ஸ் கேண்டீன் முன்னாடி போராட்டம் பண்ணிட்டு இருக்காங்கடா. அங்க சாப்பாடு இப்போ கிடைக்காதே! நானும் எடுத்துக்கிட்டு வரல. நம்ம பசங்களும் அக்கட்டிக்கு தான் நிக்கிறானுவ" என்று சொல்லிக்கொண்டே பார்வையைத் திருப்பியவன், தனது தோழியுடன் நடந்து சென்ற செந்தாழினியை கண்டுவிட்டு, "செந்தா" என்றழைத்திருந்தான்.
"என்னங் மணிண்ணா" என்று அருகில் வந்த செந்தாழினியிடம், "க்ளாஸ் நேரத்துல பையை எடுத்துக்கிட்டு எக்கட்டிக்குப்போற?" என்றான்.
"நான் மேஜர் (Non major) பேப்பருங்க. மேத் டிபார்ட்மெண்ட் போறேன்" என்றவளின் பார்வை, மணியின் தோள் மீது சாய்ந்து கண்கள் மூடியிருந்த திகழோவியனின் மீது நிலைத்திருந்தது.
'என்னாச்சு. மொவம் வாடியிருக்கு!' மனதில் நினைத்தவளுக்கு திகழை தன்னுடைய சீனியர் மற்றும் மணியின் நண்பன் என்கிற முறையில் நன்கு தெரியும். ஆனால் இதுவரை பேசியதில்லை.
அவள் முதல் நாள் கல்லூரி வந்த அன்றே, மணியைத் தாண்டி அவளுக்கு பரீட்சயமானது திகழோவியன் தான். மணி தான் தன்னுடைய ஊர் பெண் என்று அறிமுகம் செய்து வைத்திருந்தான்.
அது முதல் இருவரும் பார்க்க நேர்ந்தால், தெரிந்தவன் எனும் முறையில் செந்தாழினி புன்னகைக்க, திகழோவியன் எவ்வித பிரதிபலிப்புமின்றி கடந்து சென்றிடுவான்.
இரண்டு மூன்று முறை பார்த்தவள், "இனி அவங்களை பார்த்தாக்கா சிரிக்கக்கூடாது செந்தா... என்னவோ அவங்க பின்னாடி வேணும்னே சுத்துறமாறி... மணி அண்ணா ஃபிரண்டுன்னு சிரிச்சா ரொம்பத்தான் சீனு" என்று தனக்குள் புலம்பியவளாக முடிவெடுத்தவளின் முடிவு அடுத்தமுறை அவனை காணும்போது காணாமல் போயிருந்தது.
தானாக அவளின் இதழ் முறுவல் கொண்டு தலை அசைந்திருந்தது.
திகழோவியன் வழக்கம்போல் கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப்போல் கடந்துவிட்டான்.
இவளுக்கு உள்ளுக்குள் பொங்கிவிட்டது.
மாலை கல்லூரிப் பேருந்தில் ஒன்றாக செல்லும் போது மணியிடம் பொரிந்து தள்ளிவிட்டாள்.
"அப்படியே பொடுபொடுன்னு வருதுங்ண்ணா. உங்களுக்குத் தெரிஞ்சவர், நம்மட டிபார்ட்மெண்ட்... அதுக்குன்னு பார்க்குற நேரம் சின்னதா சிரிச்சா, பெரிய மன்மதென்னு நெனப்பு. முறைச்சைக்கிட்டு போறாங்க" என்றாள்.
"அவன் உன்கிட்டன்னு இல்லை எல்லா பொண்ணுங்ககிட்டவும் அப்படித்தான். எங்க க்ளாஸ்லே பொண்ணுங்க யார்கிட்டவும் பேசமாட்டான்" என்று செந்தாழினியை சமாதானம் செய்து வைத்தாலும், அடுத்தநாள் திகழோவியனிடம் செந்தாழினி வருந்தியதாக அவள் பேசியதை தெரிவித்திருந்தான் மணி.
அவள் வருந்தியதாகக் கூறியது திகழோவியனுக்கு என்னவோப்போல் ஆகிவிட, கல்லூரி முடிந்ததும், தத்தம் பேருந்தில் ஏறிடும் சமயம்,
"செந்தாழினி" என்று அழைத்து நிறுத்தியிருந்தான் திகழோவியன்.
அவனது குரலுக்கு நின்றுவிட்டாலும், அவன்தான் தன்னை கூப்பிட்டதா எனும் சந்தேகத்தோடு அவள் அசையாது நின்ற இடத்திலே நின்றிருக்க, சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, தனக்கு பின்னால் நண்பனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்த மணியையும் பிடித்து இழுத்துக்கொண்டு அவளருகில் வந்தான்.
"என்னைய கூப்பிட்டீங்ளாங்?" நெஞ்சில் கை வைத்தவளாக தன்னைச்சுட்டு செந்தாழினி கேட்டிட,
ஆமென தலையசைத்த திகழோவியன்,
"உங்களை இக்னோர் பண்ணனும், இன்சல்ட் பண்ணணுங்கிற எண்ணமெல்லாம் இல்லைங்க. ஒரே டிபார்ட்மெண்ட், அடிக்கடி பார்த்துப்போம். பாக்குற நேரமெல்லாம் ரெண்டு பேரும் மாறி மாறி சிரிச்சிக்கிட்டா தெரிஞ்சவங்கண்ணு சிரிக்கிறோம் அப்படின்னு யாரும் நினைக்கமாட்டாங்க. நீங்க சிரிக்கிறீங்கன்னு நானும் சிரிச்சா, என்னடா ஓடுது உங்களுக்குள்ளன்னு நம்ம பசங்களே எதாச்சும் கதை கட்டிவிட்டுவானுங்க. என்னால உங்களுக்கும் பேராகிப்போவும். நாம பார்த்துகிற நேரம் உன்ற கூடாலவும் என்ட்ர கூடாலவும் யாருமாச்சும் இருப்பாங்க. அவிங்கலாம் சரியாதான் பார்ப்பாங்க சொல்லமுடியாது. விளையாட்டுப்பேச்சு வினையில முடிஞ்சிப்போவும். அதுக்குத்தான் ஒதுங்கிப்போறேன். வேறொன்னுமில்லைங்" என்று விளக்கம் கொடுத்தவன் அவள் பதில் பேசும் முன்னரே தன்னுடைய பேருந்து நிற்குமிடம் சென்றிருந்தான்.
"இவனை போய் தப்பா நினைச்சிட்டியே செந்தா" என்ற மணி, "இப்பவும் அவன் உன்றகிட்ட பேசணும்னு என்னைய கூடால கூட்டியாந்ததுக்கு காரணம், நானும் நீயும் ஒரே ஊருன்னு எல்லாருக்கும் தெரியும். நாம ஒட்டுக்கா நின்னு பேசுறத சாதாரணமா எடுத்துப்பாங்க... அதுக்காகத்தான்" என்றான் மணி.
அதுமுதல் செந்தாழினிக்கு திகழோவியனின் மீது சிறு விருப்பம், பெரும் மதிப்பு.
முன்பு போல் அவனை பார்க்கும் பொழுதுகளில் புன்னகைப்பதில்லை. ஆனால் கூர்ந்து கவனிக்கலானாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவளே அறியாது மனதிற்குள் உள்வாங்கத் துவங்கியிருந்தாள்.
அவனிடத்தில் தன்னுடைய மனம் பிடித்தம் கொள்கிறது என்பதை உணர்ந்தே இருந்தாள்.
பார்த்தும் காதல் வரும்... பார்க்க பார்க்கவும் காதல் வரும். ஆனால் அவளுக்கு பிடித்தம் வந்தது அவனது குணத்தால். அன்று அவன் பேசிய பண்பானப் பேச்சால்.
திகழோவியனைப் பார்த்துக்கொண்டே,
"எதுக்குங்க கூப்பிட்டீங்க?" என மணியிடம் கேட்டாள்.
"சாப்பாடு கொண்டு வந்தியா?"
"ம்ம்..." மெல்ல தலையாட்டினாள்.
"இவனுக்கு பசிக்குதாம். காலையில சாப்பிடாம வந்துபுட்டான். நானும் கொண்டாரல" என்று மணி முடிக்கும் முன்பு,
"அச்சோ... இந்தாங்க" என்று தனது பையிலிருந்து உணவு டப்பாவை எடுத்து அவர்களின் முன்பு நீட்டியிருந்தாள்.
அப்போதுதான் விழிகளைத் திறந்த திகழோவியன்,
"எனக்கு தந்துட்டு அவங்க என்ன சாப்பிடுவாங்க" என மணியிடம் சொல்லியதோடு செந்தாழினியை பார்த்து, "வேணாங்" என்று அவன் சொல்லும் முன்னர்,
"அய்யோ" என்று கையை பின்னால் இழுத்திருந்தாள்.
"இதுதான் கொடுக்கிறேங்கிறதா?" என்று மணி கேட்க,
"அப்படிலாம் இல்ல" என்றவள், "ஐயனும், அம்மாவும் விடியல்லே ஊருக்கு போயிட்டாங்க. சாப்பாடு நான்தான் செஞ்சேன். நல்லாயில்லாம அவங்களுக்கு ஒத்துக்காமப்போயிடுச்சுன்னா" என்றதோடு, "நான் என் ஃபிரண்ட்ஸ் யார்கிட்டாயாச்சும் நல்ல சாப்பாடா வாங்கிட்டு வர்றேன்" என்று நகர்ந்தவளின் கையை பிடிக்காது, அவள் கையிலிருந்த டப்பாவை பிடித்திருந்தான் திகழோவியன்.
பார்வையில் தொடங்காத காதல்,
பண்பில் பிறந்த நேசம்,
சொல்லாமல் விதைந்த பாசம்,
பசியைத் தீர்க்க நீட்டிய கரத்தில்,
உணவு மட்டுமில்லை...
உயிரை வருடும் அக்கறை.
அறியாமல் பின்னப்பட்ட பந்தங்கள்
நாளைய கதையை எழுத காத்திருந்தன...

நெஞ்சில் உயிர் நிறையும்...

Last edited: