• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னிடத்தில் மனம் மயங்குதே - 14

Vishakini

Moderator
Staff member

உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -14


மறுநாள் காலை எப்பொழுதும் போல் தூக்க கலக்கத்தோடு ராகவன் கதவை திறந்து இரும்பு கதவில் மாட்டி இருக்கும் பையில் பால் பாக்கெட்டுகளை எடுக்க வந்தான்.


கதவை திறந்ததும்

அங்கே நின்றுக் கொண்டிருப்பவனைக்

கண்டு அவன் அதிர்ச்சியாகி “ப…பப்பு பப்பு நீ எப்படி இங்கே?” என்று கேட்டான்.


பப்பு கொஞ்சமும் அதிராமல் “நான் ஆதித்யா வந்து இருக்கேன் சாரலைப் பார்க்கனும்” என்றான்.


ராகவன் அவனை மேலும் கீழுமாக பார்த்தவன் “எனக்கு ஆதித்யான்னு யாரையும் தெரியாது.முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்று சொன்னான்.


ஆதித்யா விடாப்பிடியாக “ராகவன் நான் உங்ககிட்டே பேச வரலை.எனக்கு சாரலை பார்த்தே ஆகனும் இல்லைன்னா அவ வெளியே வருகிற வரைக்கும் நான் இங்கேயே காத்திருப்பேன்” என்றான்.


ராகவனால் இதற்கு மேல் மறுக்க முடியவில்லை.சாரல் வந்து அவளே பேசட்டும் அப்பொழுது தான் இவன் இங்கிருந்து செல்வான் என்று முடிவெடுத்தவன் “இரு சாரலை வரச் சொல்றேன்” என்று அவன் செல்ல நினைக்கும் போது ஆதித்யா “முதல்ல கதவை திறந்து விடு,உன் வீட்டுக்கு வந்தவங்களை வாசல்ல நிற்க வைச்சு பேசுறே? உள்ளே அழைக்கும் அப்படிங்கிற இந்த இங்கிதம் கூட உனக்குத் தெரியாதா?” என்று அன்றைக்கு அவன் கேவலப்படுத்தியது போல் இன்றைக்கு ஆதித்யா கொஞ்சமும் தயங்காமல் நேருக்கு நேராக கேட்டான்.



ராகவன் ஒருமுறைப்பை மட்டும் பதிலாக தந்து விட்டு கதவை திறந்து விட்டான்.



ஆதித்யா உள்ளே வரவும் விதுன் எழுந்து தூக்கத்தில் கண்களை கசக்கிக் கொண்டு “அப்பா ப்பா எங்கே இருக்கிறே?” என்று சொல்லிக் கொண்டு வரவும் அதைப் பார்த்த ஆதித்யா “விதுன் நீ விதுன் தானே” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.



விதுன் புதிதாக ஒரு நபரின் குரலைக் கேட்டு அவனை மேலும் கீழுமாக பார்த்தவன் அப்படியே அசையாமல் நின்றான்.


ராகவன் “இங்கே உட்காரு நான் போய் சாரலை அழைச்சிட்டு வரேன்” என்று ராகவன் உள்ளே சென்றான்.


அப்பொழுது ஆதித்யா விதுனைப் பார்த்து “இங்கே வா விதுன் நல்ல வளர்ந்துட்டே” என்று அவன் தலையை வருடி விட்டான்.



விதுன் அவனையே பார்த்துக் கொண்டு இருக்கவும் ஆதித்யா “நான் யார்னு உனக்கு தெரியுமா விதுன்?”


“ம்ம்… தெரியும் அம்மா இருக்கால்ல” என்று சொல்ல வரவும் “ரேவதியை எங்கே காணோம்?” என்று கேட்டான்.



விதுன் “சாரல் உன்னை டிவில பார்ப்பா, நானும் பார்ப்பேன்” என்றதும் ஆதித்யாவுக்கு சாரல் தன்னை எப்போதும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள் தனக்குத் தான் எதுவும் தெரியவில்லை என்று தெரிந்ததும் அவனுக்கு ஏதோ ஒரு உறுத்தலாக இருந்தது.



இங்கே உள்ளே சாரலின் அறைக்குச் சென்றவன் ராகவன் முதலில் கதவை தட்டிக் கொண்டு “சாரல் சாரல்” என்று அழைத்தான்.


அவளிடமிருந்து பதில் வரவில்லை.ராகவன் மெதுவாக “சாரல் நீ யாரை சந்திக்கக் கூடாதுன்னு நினைச்சியோ அவன் இப்போ தேடி வந்து இருக்கான்.இது உன்னால தவிர்க்க முடியாது உன் முடிவை அவன்கிட்டே போய் சொல்லு” என்று சொன்னான்.


ராகவன் சொன்னதைக் கேட்டு மெதுவாக திரும்பி பார்த்தாள் சாரல்.அவள் முகம் முழுவதும் அழுது வீங்கிப் போய் இருந்தது.அதைப் பார்த்தவனுக்கு முகம் மாறிப் போனது.



சாரல் எழுந்து நேராக முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு தலைமுடி சரிசெய்து துப்பட்டா போட்டு விட்டு ராகவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக ஆதித்யாவை பார்க்கச் சென்றாள்.



சாரலைக் கண்டதும் ஆதித்யா அவளைப் பார்த்தான்.

எப்போதும் அவள் விழிகள் ஆர்வத்தில் மின்னிக் கொண்டிருக்கும் இப்போது ஒளிவிழந்து காணப்பட்டது.முகத்தில் இருக்கும் புன்னகை மறைந்து போய் இப்போது உதடுகள் பூட்டி வைத்தது போல் இருந்தது.


முதலில் சாரலைப் பார்க்கும் போது பூசினாற் போல் இருந்தாள்.இப்போது தேகம் மெலிந்து போய் இருந்தது.இதை எல்லாம் ஒரே பார்வையில் கண்டுக் கொண்டான்.


சாரல் ஆதித்யாவை நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக நின்றாள்.விதுன் வேகமாக ஓடி வந்து “அம்மா” என்று அவளது கால்களைப் பிடித்துக் கட்டிக் கொண்டான்.


விதுன் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் ஆதித்யாவிற்கு ஒன்றுமே ஓடவில்லை.அப்பொழுது தான் ரேவதியும் அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தைப் பற்றிய நினைவும் வந்து போனது.அங்கே ஒரு நிசப்தமான அமைதி நிலவியது.



ஆதித்யாவிற்கு இந்த அமைதி பிடிக்கவில்லை.அதனால் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.


“சாரல் நீ நல்ல இருக்கியா?”


அவளிடம் பதிலில்லை.


ஆதி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “தாத்தா நல்லா இருக்காங்க?” என்று கேட்டதும் அவள் அதே வேகத்தில் அவனை முறைத்து பார்த்தவள் “தாத்தா இறந்து இரண்டு வருஷமாகுது.

இப்போ எதுக்காக நீங்க இங்கே வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”


அவள் பேசிய வார்த்தைகளில் உயிர்ப்பு இன்றி இருந்தது.இவள் பழைய சாரல் இல்லை என்பதை புரிந்துக் கொண்டவன் “எனக்கு பழைய நினைவுகள் வந்திடுச்சு” என்று ஆர்வமாக சொன்னான்.


சாரல் “அதுக்காக நீங்க டாக்டரைப் போய் பார்க்கனுமே தவிர இங்கே வந்து இருக்கக் கூடாது.நாங்க இங்கே ஒரே குடும்பமாக இருக்கிறோம் நீங்க இங்கிருந்து தயவுசெய்து கிளம்புங்க” என்று அவன் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்வையை வெறித்துப் பார்த்துச் சொன்னாள்.


ஆதித்யாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.எவ்வளவு ஆர்வமும் ஆசையுமாக வந்தானோ? இன்று எல்லாம் மாறிப் போய் இருந்தது.அதற்கு எல்லாம் ஒருவகையில் அவனும் காரணம் தான்.ஆனால் அவன் வேண்டுமென்றே செய்யவில்லை.சூழ்நிலை அவனை அப்படி மாற்றியிருந்தது.


அதனால் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.எவ்வளவு திமிராக ராகவனை எதிர்த்து வீட்டின் உள்ளே சென்றானோ அதே வேகத்தில் தலையை குனிந்தபடி வெளியே வந்தான்.


இதற்கு மேல் இங்கிருந்தால் சரிவராது என்று ஆதித்யா அங்கிருந்து செல்ல எண்ணினாலும் சாரலை விட்டுக் கொடுப்பதற்கு அவன் தயாராக இல்லை.அதனால் இதுவரை நடந்ததை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.


ராகவனுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.சாரல் சொன்ன ஒருவார்த்தைக்காக அவன் எதுவும் சொல்லாமல் விட்டுக் கொடுப்பான் என்று அவனுக்கு தோன்றவில்லை.


இருந்தாலும் மறுப்பு ஏதும் பேசாமல் சென்று இருந்தான்.அவன் சென்ற அடுத்தநொடி திரும்பவும் போய் தன் மெத்தையில் படுத்துக் கொண்டாள் சாரல்.


அவள் பின்னாலேயே சென்ற ராகவன் “இப்போ என்ன இன்னைக்கு முழுவதும் இப்படியே நேரம் கழிக்கலாம்னு முடிவு செய்து இருக்கியா?” என்று கேட்டான்.


அவள் பதில் சொல்லவில்லை.ராகவன் விடாமல் “முதல்ல பதிலைச் சொல்லு சாரல்” என்று கேட்டான்.


திரும்பி அவனைப் பார்த்த சாரல் “நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை ராகவா” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.


ராகவன் “இப்போ நீ எதைப் பத்தி பேசுறே சாரல்?”


“உன்னைப் பத்தி தான் பேசுறேன் ராகவ்.இன்னும் எத்தனை வருஷத்துக்கு என்னை சுமக்கப் போறே?” என்று கேட்டாள்.


ராகவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல அவன் திரும்பும் போது அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டவள் “ராகவா ரேவதி இறந்து போய் இரண்டு வருஷமாகுது,இத்தனை நாளா விதுனை வளர்ப்பதற்காகத் தான் நான் உன்கூட இருந்தேன்.இனி என்னால இங்கே இருக்க முடியாது ஏன்னா பப்புவுக்கு நினைவு வந்திடுச்சு அவன் என்னை தினமும் தொந்தரவு செய்ய ஆரம்பிச்சிடுவான் என்னால அவனை சமாளிக்க முடியாது. அதனால எப்போ வேண்டுமானாலும் உன்கிட்ட சொல்லாமல் நான் இங்கிருந்து போய்டுவேன்,அதனால வேற ஒரு பெண்ணை நீ திருமணம் செய்துக்கோ” என்று பெரிதாக பேசி முடித்தாள்.


அவனால் வாயை திறந்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை.காரணம் அவளையே இங்கே அவனுடன் இருக்க சொல்லத் தான் நினைக்கிறான். ஆனால் அப்படி ராகவன் கேட்ட மறுநொடி சாரல் அங்கிருந்து சென்று விடுவாள் என்பதால் எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்தான்.



ஆனால் இன்றைக்கு சாரல் அவனைப் பிடித்து வைத்து கேட்கவும் அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்கவும் அங்கே வந்த விதுன் “எங்கே போறே சாரல்? என்னையும் உன் கூட சேர்த்து கூடிட்டு போ” என்று அவளைக் கட்டிக் கொண்டான்.


ராகவன் நீண்ட பெருமூச்சு விட்டபடி “முதல்ல ஊருக்கு போயிட்டு வரலாம்.அப்புறமா என்னன்னு முடிவெடுக்கலாம்” என்றான்.


சாரல் இப்போது விதுனை சமாளித்துக் கொண்டு “நான் எங்கேயும் போகலை விதுன் உன் கூடத் தான் இருப்பான்” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.


ராகவன் எப்போதும் போல் வேலைக்கு கிளம்பினான்.சாரல் இன்றைக்கு எங்கும் செல்லவில்லை.வீட்டின் உள்ளே இருந்துக் கொண்டாள்.விதுன் தன் பள்ளிக்கு சென்று இருந்தான்.



ஆதித்யா விதுனின் படிக்கும் பள்ளிக்கு ராகவன் அறியாமல் பின் தொடர்ந்து சென்று இடத்தை அறிந்துக் கொண்டான்.மதிய இடைவேளையின் போது பெற்றோர் போல் உள்ளே சென்றவன் விதுனைக் கண்டான்.



அவனும் ஆதித்யாவைக் கண்டதும் அவனருகில் வந்தான்.முதலில் விதுனின் தலைமுடியை வருடி விட்டவன்

“விதுன் ரேவதி அம்மாவை எங்கே?” என்று கேட்டான்.


விதுனோ “அம்மாவும்,தம்பியும் சாமிகிட்டே போய்ட்டாங்க” என்றான்.அவன் சொன்னதைக் கேட்டு ஆதித்யாவிற்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.


எப்போதும் சிரித்த முகமும்,தன்னிடம் எப்போதும் ஒரு நல்ல நட்பை உண்டாக்கிக் கொண்ட ரேவதியின் இழப்பு அவனால் நம்ப முடியவில்லை.அவன் நினைவு இழந்த இந்த இரண்டு வருடங்களில் இரு உயிர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிந்து இருந்தன.


சாரல் தனியாக இருக்கும் போது ஆதித்யா வந்ததை நினைத்தவள் மனதினுள் ‘'ஏன் திரும்ப வந்து என்னை நோகடிக்கிறே பப்பு” என்று தனக்குள்ளே எண்ணியவளின் விழிகளிலிருந்து கண்ணீர் வெளியேறியது.



அன்றைக்கு இருவரும் காதலைச் சொன்ன பிறகு நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவள் வாழ்வில் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பாள் சாரல்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு பப்பு தன் காதலைச் சொன்ன பிறகு அங்கே ரொம்ப இருட்டத் தொடங்கியது.அதனால் இருவரும் திரும்ப வீட்டிற்கு வருவதற்காக ஒன்றாக இறங்கி வந்துக் கொண்டிருந்தார்கள்.


அதை அப்போது ஊரில் உள்ள இரண்டு பேர் பார்த்து இருந்ததை இவர்கள் கவனிக்காமல் வீட்டிற்கு வந்து பார்த்தார்கள்.தாத்தாவும் ராகவனும் வீட்டின் வாசலில் ரொம்ப பரபரப்பாக நின்றுக் கொண்டிருந்தனர்.



அங்கே சாரல் வருவதைக் கண்ட கோபாலன் தாத்தா அவளை நோக்கி வந்தவர் “திடீர்னு சொல்லாமல் எங்கே போயிட்டே சாரல்? உன்னைக் காணலைன்னு நெஞ்சமெல்லாம் பதற ஆரம்பித்து விட்டது” என்று சொன்னார்.


சாரல் கொஞ்சம் தயங்கியபடி நடந்ததை சொல்ல வரவும் பின்னால் வந்த பப்புவைக் கண்ட ராகவன் வேகமாக அவனிடம் சென்றவன் கையை ஓங்கியபடி சென்றான்.இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.



கையை ஓங்கிச் சென்றவன் அதே வேகத்தில் பப்புவை பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டான் ராகவன்
 
Top Bottom