உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -2
வீட்டின் சமையலறையிலிருந்து குக்கரின் விசில் சத்தம் வரவும் தனது சின்ன கால்களால் நடந்து வந்து “ம்மா அம்மா விசில் அஞ்சு வந்துச்சு வந்து அமத்துங்கம்மா” என்று சத்தம் போட்டான் விதுன்.
நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு
துணியை உலர்த்திக் கொண்டிருந்த அவளோ விதுன் சொன்னதைக் கேட்டு தன் வெண்நிற பாதங்களால் வேகமாக துள்ளியது போல் வந்து அடுப்பை அணைத்தவள் “ரொம்ப தாங்ஸ் செல்லம்” என்று அவனின் மிருதுவான கன்னத்தை வருடி விட்டுச் சென்றாள்.
திரும்பவும் துணியை உலர்த்திய பிறகு காயப் போட்ட துணிகளை எடுக்கும் போது கையில் இருந்த சிறிய கீறலைப் பார்த்து அதை சின்ன பிளாஸ்த்திரி போட்டு விட்டு மடக்கத் துவங்கினாள்.அப்பொழுது எதிரே இருந்த தொலைக்காட்சியில் ஆதித்யா கலந்துக் கொண்ட பேஷன் ஷோவைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு அங்கே ஒளிப்பரப்பானது.
அதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் மொத்தமாக மாறிப் போனது.அதுவரை இருந்த சிரிப்பு மறைந்து போய் ஒருவிதமான அழுத்தம் வந்து தொற்றிக் கொண்டது.உடனே கீழ் உதட்டை அழுத்தி உள்ளே அடக்கிக் கொண்டவள் உடனே அந்த நிகழ்ச்சியை மாற்றினாள்.
அதைப் பார்த்த விதுன் “அம்மா அந்த ப்ரோகிராம் ஒனக்கு பிதிக்கலையா?” என்று கேட்டான்.உடனே அவளோ ஆமாம் என்று தலையசைத்தவள் விதுனுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
அப்பொழுது வாசலில் அழைப்பு மணியின் சத்தம் கேட்டது.அதோடு “சாரல் சாரல்” என்று குரல் கேட்கவும் “இதோ வந்துட்டேன்” என்று எழுந்து போய் கதவை திறந்தாள்.
அங்கே புன்னகை முகமாய் அளவான உயரத்தோடு சீரான தேகத்தோடு ராகவன் நின்றுக் கொண்டிருந்தான்.அவன் கையில் இருந்த சாப்பாட்டு பையை வாங்கச் செல்லவும் உடனே ராகவன் “ப்ச் இதெல்லாம் செய்யாதேன்னு உன்கிட்டே எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ஏன் கேட்கவே மாட்டேங்கிறே?” என்று உள்ளே வந்தவன் தன் பையை திறந்து அதில் இருந்த பாத்திரத்தை எடுத்து கழுவ போட்டவன் தன் பையை எப்பவும் வைக்கும் இடத்தில் வைத்தான்.
அவளோ அவன் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் துணியை எடுத்து மடக்க ஆரம்பித்தாள்.
ராகவன் “சாரல் உன்கிட்டே தான் பேசுறேன். நீ என்னன்னா பதிலே சொல்லாமல் அமைதியா இருக்கே” என்ற போது விதுன் ஓடி வந்து “அப்பா” என்று கட்டிக் கொண்டான்.
உடனே ராகவன் “விதுன் அப்பா வேலை முடிச்சிட்டு வந்த உடனே என்னை வந்து தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.ஆனால் எப்பவும் கேட்கிறது கிடையாது வர வர சாரல் போலவே அடம் பிடிக்கிறியா?” என்று மகனை தன்னை விட்டு தள்ளி நிறுத்தினான்.
விதுனோ “சாரிப்பா மறந்துட்டேன்” என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.ராகவோ நேராக குளியலறைக்கு சென்று குளித்து உடையை மாற்றிக் கொண்டு வந்தான்.
சாரல் அமைதியாக அவர்கள் இருவருக்கும் தேநீரும் விதுனுக்கு பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.வெளியே வந்தவன் தன் மகனை அள்ளி அணைத்து முத்தமிட்டவன் “அப்பா மரக்கட்டை சீவும் போது எதாவது துகள் டிரெஸ்லயோ இல்லை உடம்பில் ஒட்டி இருந்தா எனக்கு தெரியாது நீ வந்து என்னை கட்டிக்கவும் அது உன் மேல குத்தும் செல்லம் அதனால் தான் சொல்றேன் புரியுதா?” என்று அவன் கேட்கவும் சரியென்பது போல் தலையை வேகமாக ஆட்டினான் விதுன்.
அங்கே ஓரமாய் இருந்த மேசையின் மேல் இரண்டு க்ளாஸ் தேநீரை வைத்து விட்டு விதுன் வாகாக பிடித்துக் குடிப்பதற்கு ஏற்றவாறு உள்ள பிடிமானம் உள்ள க்ளாஸில் பாலை வைத்து விட்டு “வா செல்லம் நேரமாகுது பாலைக் குடி” என்றதும் அவனோ வேகமாக அவனுக்காக போடப்பட்டிருந்த உயரமாக அதே நேரம் சிறிய நாற்காலியைப் பார்த்து “ப்பா என்னை உட்கார வைங்க இல்லைன்னா சாரலே எல்லாத்தையும் குடிச்சிடுவா” என்று உதட்டை சுழித்துக் கொண்டு சொன்னான் மூன்றரை வயதான விதுன்.
“ம்ம்… சரி வாங்க அப்பா உன்னை உட்கார வைக்கிறேன்” என்று விதுனை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு அவனுக்கான பாலை கொடுத்து விட்டு சாரல் கொடுத்த தேநீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்த்து சாரல் “எதுக்கு என்னை இப்படி முறைச்சு பார்க்கிறே?”
அவனோ “ஒன்னுமில்லை” என்று திரும்பவும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சாரலோ “ஹேய் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு திரும்ப முறைச்சுப் பார்க்கிறே? என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
அவனோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டு “நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்டுட்டா பதில் எப்புடி நான் சொல்ல முடியும்? அதனால எதை மறைக்கிறேன்னு நீயே சொல்லு” என்று கேட்டான்.
அவனின் கேள்விக்குறியான பார்வையோடு கூடிய கேள்வியில் முகத்தை திருப்பிக் கொண்டாள் பெண்ணவள்.
இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த விதுன் “ப்பா சாரலுக்கு ப்ரோகிராம் பிதிக்கலையாம் சேனலை மாத்திட்டு உம்முனு இருந்தா” என்றான்.
உடனே ராகவன் “என்ன ப்ரோகிராம் செல்லம்?”
“அ…து அ…து” என்று விதுன் யோசிக்கவும் சாரல் “பேஷன் ஷோ” என்று சொன்னாள்.
ராகவன் அவளை இன்னும் கொஞ்சம் முறைத்தவன் “நான் அதைப் பத்தி கேட்கலை,விரல்ல காயமா இருக்கு அதைப் பத்தி கேட்டேன்” என்றான்.
சாரலோ ‘போச்சு மாட்டிக்கிட்டேனா? இப்போ என்னச் சொல்றது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இங்கே நிகழ்ச்சியின் மயங்கி விழுந்த ஆதித்யாவின் முகத்தில் லேசாக தண்ணீரை தெளித்தாள் தாரா.அவனிடம் எந்த அசைவும் இல்லை.அப்படியே கிடந்தான்.
உடனே பாலா அவசர ஊர்தியை அழைக்கவும் அதில் ஆதித்யாவோடு அவனும் ஏறிக் கொண்டான்.தாரா இங்கே இடையினில் நடந்த சிறு தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு அவள் நின்று நிகழ்ச்சியை நடத்தினாள்.
ஆதித்யாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அவனோ விழிகளை திறந்து பார்க்கவே இல்லை.அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தலையிலும் மற்றும் சில பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கான ஏற்பாடுகள் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தது.இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மெதுவாக கண்களை திறந்தான் ஆதித்யா.
எதிரே இருந்த பாலாவை கேள்விக்குறியாகப் பார்த்தான் ஆதித்யா.பாலா ஆதித்யாவிற்கு அருகில் வந்து “என்னாச்சு ஆதி உடம்புக்கு ஏதும் முடியலையா? இப்போ பரவாயில்லையா?” என்று அக்கறையாகக் கேட்டான்.
ஆதித்யா “ஒன்னுமில்லை” என்பது போல் தலையசைத்தவனின் முகத்திலோ ஏதோ ஒரு தேடல் இருந்தது.அதனால் சுற்றி சுற்றி அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
இதை கவனித்த பாலா “ஆதித்யா தாராவை தேடுறியா? அவ ப்ரோகிராம் முடிஞ்சதும் வந்துடுவா” என்றான்.
உடனே அவனோ “இல்லை நான் தாராவை தேடலை பாலா என்கிட்ட இருந்த ஒன்று இப்போ இல்லை” என்றான்.
உடனே பாலா “என்னது தேடுறே ஆதி? எதாவது பொருளை மிஸ் செய்திட்டியா?”
அவனோ வேகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தவன் “பாலா நான் மிஸ் செய்த பொருளை சீக்கிரமா தேடிப் போகனும் மூணுமாசமா என்னையே நான் தேடிட்டு இருக்கேன் பாலா என்னால சொல்ல முடியலை நான் எதையோ இழந்துட்டேன் பாலா கண்டுபிடிக்கனும் கூடிய சீக்கிரம் தேடி கண்டுபிடிக்கனும் எனக்கு எல்லாமே அதுதான்” என்று பிதற்றிக் கொண்டிருந்தான் ஆதித்யா.
அவனது பேச்சைக் கேட்டதும் பாலா “என்னாச்சு ஆதி ஏதும் டிஸ்டர்பா இருக்கா?” என்று அவன் கவலையாகக் கேட்டான்.அவனோ விழிகளில் கண்ணீரை நிரப்பிக் கொண்டு “நான் போகனும் பாலா சீக்கிரமாக போகனும்” என்று அவன் பேசியதைப் பார்த்து இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.உடனே பாலா “கொஞ்சம் வெயிட் பண்ணு ஆதி இதோ போகலாம்” என்று மருத்துவரை அழைத்தான்.
அவர் வந்து அவனுக்கு திரும்பவும் மயக்கம் மருந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.பாலாவிற்கு ஆதித்யாவை இப்படி பார்க்கவும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
அதனால் உடனே அவன் தூங்கியதும் மருத்துவரை நேரில் பார்க்கச் சென்றான் பாலா.மருத்துவரைப் பார்த்து ஆதித்யாவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தான்.
மருத்துவர் “ஆதித்யாவிற்கு என்ன பிரச்சினைன்னு முதல்ல ஒரு சி.டி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம்.அதற்கு பிறகு தான் என்னன்னு சொல்ல முடியும்” என்றவர் மேலும் “இதுக்கு முன்னாடி இதே மாதிரி நடந்து இருக்கா?” என்று விசாரித்தார்.
பாலாவோ “ஆதித்யா இந்த மாதிரி மயக்கம் போட்டதாக நினைவு இல்லை.ஆனால் அவனுக்கு கொஞ்ச நாள் மறதி இருந்துச்சு” என்றான்.
பாலா சொன்ன பதிலைக் கேட்டு யோசனையோடு “ஆதிக்கு எப்போ இந்த மாதிரி பிரச்சினை இருந்துச்சு?” என்று விவரமாகக் கேட்டார்.
பாலா “மொத்தம் ரெண்டு முறை அவனுக்கு மறதி ஏற்பட்டு இருக்கு.ஆனால் அதற்கு அப்பவே அவங்க வீட்ல டிரீட்மென்ட் எடுத்தாங்க அது அவனுடைய சின்ன வயசுல நடந்தது” என்றான்.
மருத்துவர் இன்னும் யோசனையாக அமர்ந்திருக்க பாலா “அதைப் பற்றிய நினைவு ஆதிக்கு திரும்ப வந்துச்சு அவனை பரிசோதித்த டாக்டர் அதை சில மெடிசின்ஸ் அப்புறம் சில டிரீட்மெண்ட் மூலமா சரி செய்தாங்க” என்றான்.
எல்லாவற்றையும் கேட்ட மருத்துவர் “வெயிட் பண்ணுங்க பாலா ஸ்கேன் எடுத்த பிறகு தான் தெரியும்” என்று முடித்தார்.
ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆதித்யா நன்றாக தூங்கிய பிறகு விழித்தான்.
அவன் விழிக்கும் போது தான் தாராவும் அவனை பார்க்க வந்து இருந்தாள்.இப்பொழுது ஆதித்யாவே எழுந்து கொஞ்சம் சாய்ந்தவாறு அமர்ந்தான்.
அவனருகில் வந்த தாரா “பாலா எங்கே? இப்போ உடம்பு எப்படி இருக்கு ஆதி பரவாயில்லையா?” என்று கேட்டாள்.
அவனோ அதற்கு பதிலளிக்காமல் “ப்ரோகிராம் நல்ல படியா முடிச்சிடுச்சா?” என்று கேட்டான்.
அவளோ “அதுக்கு தான் நான் இருக்கிறேன் ஆதி பிறகு என்ன? நான் உன்னைப் பத்தி கேட்டேன் அதுக்கு பதில் சொல்லு” என்று கேட்டாள்.
அவனோ “ம்ம்… இப்போ நல்லா இருக்கேன் பார்த்தால் தெரியலையா?” என்று கேட்டான்.
அவனின் பதில் தாராவுக்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகையை பதிலாகத் தந்தாள்.
அப்பொழுது தான் பாலா உள்ளே வந்தான்.அங்கே இருவரையும் ஒன்றாக பார்த்தவன் “ஆதித்யா எப்போ எழுந்தே?” என்று கேட்டான்.
அவனோ “இப்போத் தான் எழுந்தேன்.எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க?”
பாலா “என்ன பேசுற ஆதி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்ன பேசுனேன்னு நினைவு இருக்கா?” என்று கேட்டான்.
தாரா பதற்றமாக “என்ன நடந்துச்சு பாலா?” என்று கேட்டாள்.
ஆதித்யா “என்னன்னு நினைவு சரியாக இல்லை பாலா.எனக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் வேணும் இனி எந்த வேலையும் செய்யாமல் வெளியூருக்கு எங்கேயாவது போகலாம்னு இருக்கேன்” என்றான்.
ஆதித்யா சொன்னதைக் கேட்ட பாலாவும் தாராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
(தொடரும்)

Last edited: