• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னிடத்தில் மனம் மயங்குதே - 4

நிதனிபிரபு

Administrator
Staff member

உன்னிடத்தில் மனம் மயங்குதே

அத்தியாயம் -4
மறுநாள் விடியற் காலையில் இல்லாமல் கொஞ்சம் நேரம் சென்று எழுந்தான் பாலா.
எழுந்தவன் நேராக ஆதித்யாவின் அறையில் போய் பார்த்தான்.அங்கே அவன் இல்லை.அடுத்து பால்கனியில் போய் பார்க்கவும் யாருமில்லை.

உடனே ஆதித்யாவின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தான்.அது தொலைவு எண்ணிற்கு அப்பால் இருப்பதாக பதில் வந்தது.

அப்பொழுது தான் ஆதித்யாவின் எண்ணிலிருந்து ஒரு குரல்பதிவு வந்து இருப்பதை கவனித்தான்.அதை எடுத்து கேட்க ஆரம்பித்தான்.

“ஹாய் பாலா எழுந்ததும் என்னை தேடி இருப்பேன்னு நினைக்கிறேன்.நான் இந்நேரம் எதாவது டிரைன் இல்லைன்னா ப்ளைட்ல போயிட்டு இருப்பேன், என்னவோ தெரியலை என்னால இங்கே இருக்க முடியலை அதனால நான் கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு திரும்ப கண்டிப்பா வந்துடுவேன்.ஆனால் எங்கே போறேன்னு எனக்கு தெரியலை போனை வீட்ல தான் வைச்சு இருக்கேன் கண்டுபிடிக்கிறேன்னு டிரேஸ் பண்ணலாம்னு நினைக்காதே! இன்னொரு விஷயம் நான் வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம். உனக்காக மாசத்திற்கு ஒருமுறை மெயில் பண்றேன்.ஏன்னா நான் உயிரோடு இருக்கேன்னு நீ நம்பனும்ல அதுக்குத் தான் தாராகிட்டயும் சொல்லு கம்பெனி பத்தி கவலையில்லை நீயும் தாராவும் இருக்கீங்க சாரிடா உன் பேச்சை மீறிப் போறேன்னு கவலைப்படாதே!பாய்” என்று பேசி முடித்து வைத்து இருந்தான்.
ஆதித்யாவின் குரல் பதிவைக் கேட்டு பாலா அப்படியே தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டான்.
“முட்டாள் இன்னும் செக்அப்பே முடியலை அவனுக்கு என்ன பிரச்சினையும் தெரியலை. இப்படி யார்கிட்டயும் சொல்லாமல் போயிட்டான்.இப்போ நான் எல்லோருக்கும் என்ன பதில் சொல்லுவேன்” என்று வாய் விட்டு புலம்பியவன் உடனே தாராவின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்து அவளிடம் நடந்ததைச் சொன்னான்.

அடுத்த அரை மணிநேரத்தில் தாராவும் ஆதித்யாவின் வீட்டிற்கு வந்தாள்.தாரா கொஞ்சம் பதற்றமாகவே வந்தவள் பாலாவிடம் “ரூம்ல செக் பண்ணி பார்த்தியா? அவன் பொருள் எல்லாம் இருக்கான்னு?” என்று கேட்டாள்.
அவனோ இல்லை என்று தலையசைத்தான்.உடனே ஆதித்யாவின் அறையை போய் பார்த்தார்கள்.எல்லா பொருட்களும் அப்படியே இருந்தது.அவனுடைய துணி இருக்கும் அலமாரியை திறந்து பார்க்கும் போது அவனுடைய எல்லாத் துணிகளும் அப்படியே இருந்தது.

வீட்டில் அவன் சாதாரணமாக போடும் உடைகள் இருக்கும் இடத்தில் ஒரு நாலைந்து துணிகள் இல்லாமல் இருந்தது.அதை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டனர்.

ஆதித்யாவிற்கு மலை ஏறும் பழக்கம் இருக்கிறது அது சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் இன்னொரு அலமாரியில் இருந்தது.அதைப் பார்த்ததும் தான் தாராவிற்கு கொஞ்சமாவது ஆசுவாசமானது.உடனே இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.
அவள் நடந்துக் கொள்ளும் விதத்தைப் புரிந்துக் கொள்ளாமல் திணறிய பாலா “என்னாச்சு தாரா என்ன தேடுனே?” என்று கேட்டான்.
அவளோ “இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு உனக்கு நினைவு இல்லையா?” என்று கேட்டாள்.
அவனோ “நினைவு இருக்கு தாரா.ஆனால் இப்போ எங்கே போறேன்னு சொல்லாமல் போயிட்டான்னு நான் கவலை இருக்கேன்” என்று சொன்னான்.
தாரா “அதை விட முக்கியம் ஆதி மலையேற போகலைன்னு நான் சந்தோஷப்படுறேன் போன தடவை அப்படி மலையேற போனவன் தான் காணாமல் போனான்.அதனால இந்த முறை ஆதி உண்மையிலேயே சுத்திப் பார்க்கத் தானே போய் இருக்கான், வந்து விடுவான் பாலா.அதோடு அவனால இந்த மாதிரி வாழ்ந்துட்டு சாதாரண மாதிரி கொஞ்ச நாள் கூட இருக்க முடியாது சோ சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவான்” என்று உறுதியாக நம்பினாள் தாரா.

ஆனால் அவளே எதிர்பாராத விஷயங்கள் நடைபெற காத்திருப்பதை அவள் நினைத்து இருக்கவில்லை.
தாரா சொன்ன எந்த பதிலும் பாலாவிற்கு திருப்தியாக இல்லை.ஒன்றைத் தவிர ஆதித்யா மலை ஏறுவதற்கு செல்லவில்லை என்பது தான்.ஆனால் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று மட்டும் அவன் உறுதியாக நம்பினான்.
*****
இரண்டு சிறிய அறையுடன் வரவேற்பறையோடு சேர்ந்த சமையலைறை இருக்கின்ற தனி வீட்டில் மூவரும் வசித்து வருகின்றனர்.
ராகவன் காலையில் எழுந்து முதலில் காபியைப் போட்டவன் காலை உணவிற்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது எழுந்து வந்த சாரல் சோம்பல் முறித்தப்படி “ம்ம்ம்…. காபி வாசனை தூக்குது சீக்கிரம் கொடு” என்று நேற்று நடந்த எல்லாவற்றையும் மறந்து ராகவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவனோ “முதல்ல போய் பல்லை தேய்ச்சிட்டு வா சாரல்” என்று சொன்னான்.
அவளோ “ஆஆ…. அஎன்று சத்தமாக கொட்டாவி விட்டவள் ஆடு,மாடு எல்லாம் பல்லா தேய்ச்சிட்டு இருக்குது இல்லைல காபியை கொடு ராகவா” என்று மல்லுக்கட்டினாள் சாரல்.
அவனோ தலையில் அடித்துக் கொண்டு “நீ மனுசனா? இல்லை மிருகமா?முடிவு பண்ணிட்டு காபி குடிக்க வா” என்றான்.
அப்பொழுது எழுந்து வந்த விதுன் “ப்பா பல்லு தேய்ச்சி விடுங்க” என்று சொல்லவும் அங்கே ஓரமாக இருந்த நாற்காலியில் இரண்டு காலையும் மேலே தூக்கி வைத்து பாதி தூக்கத்தில் அமர்ந்து இருந்தவளைப் பார்த்த ராகவன் “சின்னப் பிள்ளைக்கு இருக்கிற அறிவு உனக்கு இல்லையே சாரல்” என்று சொன்னான்.
அவளோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் “உனக்கு உன் பிள்ளை சின்னப் பிள்ளை அதே மாதிரி நான் என்னோட அம்மாக்கு குழந்தை அதனால எல்லாம் சரியா போச்சு காபி வருமா? வராதா?” என்று கேட்டாள்.
“அதோ கிச்சன் மேடை மேல இருக்கு போய் எடுத்து குடி” என்று மகனை குளியலறைக்கு அழைத்துச் செல்லவும் “ஹேய் ஒருநிமிஷம் வயிற்றை பிறட்டுற மாதிரி இருக்கு இதோ வந்துடுறேன்” என்று இருவரையும் இடித்து தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

விதுனும் ராகவனும் இப்போது தலையில் கைவைத்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்துக் கொண்டனர்.அடுத்த பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவள் “ராகவா பல்லு தேய்ச்சிட்டேன் காபியை மட்டும் சூடு பண்ணி கொடு ப்ளீஸ்” என்று திரும்பவும் நாற்காலியில் காலை மடக்கிக் கொண்டு தலையை கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தினமும் காலையில் எழுந்ததும் சாரலின் தொல்லை இப்படியாக பலவிதத்தில் இருக்கும்.ராகவனுக்கு இது பழகிப் போன ஒரு விஷயம்.

காபியை குடித்ததும் மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளை உட்கார்ந்து வெட்டிக் கொடுப்பாள்.
காலையில் ராகவன் வேலை செல்வதற்கு முன்பாக காலை மற்றும் மதிய உணவை தயார் செய்து காலை உணவை உண்டு விட்டு மதிய உணவை மூவருக்கும் ஒவ்வொரு தனித்தனி டப்பாவில் போட்டு வைத்து விடுவான்.

விதுனை பள்ளியிலும் சாரல் டெய்லரிங் வகுப்பும் அடுத்து ஆங்கிலம் படிக்கவும் ஒரு வகுப்பில் சேர்த்து விட்டான்.இருவரையும் தன்னுடைய வண்டியில் விட்டுட்டு கடைசியாக தான் வேலை செய்யும் மரச்சாமான்கள் செய்யும் கடைக்குச் செல்வான்.
இது அவன் தினமும் செய்யும் வேலை.வாரத்தின் இறுதி நாள் மட்டும் மூவரும் ஒன்றாக வெளியே எங்கேயாவது சென்று வருவார்கள்.ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவனுடைய சம்பாத்தியத்தை வைத்து எல்லா செலவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் ராகவன்.பாண்டிச்சேரியில் அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவனுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி.அவன் அப்பாவும் அம்மாவும் அங்கே தான் இருக்கிறார்கள்.படித்து முடித்து சென்னையில் வேலை பார்த்தவன் இப்பொழுது பாண்டிச்சேரியில் இருக்கிறான்.
காலையில் மூவரும் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராகவனின் கைப்பேசி அழைத்தது.அவனின் அம்மா அழைத்திருந்தார்.அழைப்பினை எடுத்தவன் “அம்மா சொல்லுங்க” என்று நலம் விசாரித்தான்.

மறுமுனையில் அவரோ “ராகவா எனக்கு ஆப்ரேஷன் முடியவும் வந்து என்னையும் அப்பாவையும் பார்த்துட்டு போயேன்.உன்னை ரொம்ப தேடுது என் பேரனையும் தான்” என்றார்.
ராகவன் “அம்மா இங்கே வேலை நிறைய இருக்கும்மா. திடீர்னு கிளம்பி வான்னு சொன்னால் எப்படி? வேலை முடியவும் சொல்றேன்” என்று தெளிவில்லாத பதிலைச் சொன்னான்.

அவன் பேசியதைக் கேட்டு கவலையடைந்த ராகவனின் தாய் “நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் கூப்பிடுவேன் ராகவா அப்புறம் நீ வரலைன்னு யாரும் கவலைப்பட மாட்டாங்க” என்று சொன்னார்.

அவரின் வருத்தத்தை புரிந்துக் கொண்டவன் “சரிம்மா வரேன் இன்றைக்கு பணம் அனுப்பி விடுறேன். ஆபரேஷன் எப்பொழுதுன்னு சொல்லி விடுங்க” என்று பேசி விட்டு அணைப்பை துண்டித்தான்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாரலின் பக்கம் திரும்பி “சாரல் நாம ஊருக்கு போலாம்” என்று சொன்னான்.
அதைக் கேட்டதும் அவளின் முகம் மொத்தமாக மாறிப் போனது.அவளோ “நான் வரலை ராகவன். நீ மட்டும் போய்ட்டு வா” என்று சொன்னாள்.

அவனோ “சாரல் இந்த தடவை நீயும் என்னோடு வரனும் வா ஒன்றாக போகலாம்” என்று சொன்னான்.
“என்னை கட்டாயப்படுத்தி அழைக்காதே ராகவன்.எனக்கு அங்கே வரப் பிடிக்கலை” என்று சொன்னாள்.
அதோடு ராகவன் அமைதியாக இருந்தான்.சாரல் “அத்தைக்கு காசு அனுப்பிட்டியா?” என்று கேட்டாள்.
“ம்ம்… இனிமேல் தான் பணத்தை அனுப்பனும் உன் டப்பாவில் இருந்த காசை எடுத்துட்டேன் சாரல்.இனி ஒழுங்கா க்ளாஸை அட்டன் செய்” என்று மூவரும் அங்கிருந்து சென்றார்கள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் ராகவனின் அம்மாவிற்கு கண் சம்பந்தப்பட்ட பரிசோதனை முடிந்து இருந்தது.இன்னும் இரண்டு நாளில் அவர் வீட்டுக்கு செல்ல இருந்தார்.
இதைப் பற்றி ராகவனிடம் சொன்னார்கன்.அன்றைய இரவு சாரலிடம் ராகவன் “சாரல் இன்னும் இரண்டு நாள்ல நாம ஊருக்கு போறோம்” என்று முடித்தான்.
சாரல் வெறுப்பாக “எனக்கு பிடிக்கலைன்னு சொல்லியும் ஏன் என்னை இப்படி கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போறே ராகவன்?” என்று கேட்டாள்.
அதற்கு அவனோ “இங்கே உன்னை தனியா விட்டுட்டு என்னால போக முடியாது.அதனால உன்னையும் சேர்த்து தான் அழைச்சிட்டு போவேன் சாரல் இதுவரைக்கும் நீ சொன்ன எல்லாத்தையும் நான் கேட்டேன்,இந்த ஒரு தடவை நான் சொல்றபடி நீ நடந்துக்கோ” என்று சொன்னான்.

சாரல் கோபமாய் அவனருகில் வந்தவள் “என்னைப் பற்றி ஊர்ல கேட்டால் என்னன்னு சொல்லுவே? தேவையில்லாத பாரத்தை சுமக்காதேன்னு சொன்னேன் கேட்டியா?இப்போ அதை ஊருக்கே காட்டுறேன்னு சொல்லுறே” என்று சொல்லும் பொழுது அவள் விழிகளில் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.

அவள் அப்படி சொல்லி விட்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கும் போது அவளது கையைப் பிடித்தவன் “ஏன் சாரல் உன்னை நீயேன்னு சுமைன்னு சொல்லுறே? என்றைக்கும் நான் அப்படி நினைத்தது இல்லை” என்றான்.

அவளோ அவனது கையை உதறி விட்டு தன் அறையில் போய் கதவை அடைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
விதுன் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் தலையணையின் கீழ் வைத்திருந்த ஒரு முதியவரின் புகைப்படத்தை எடுத்து பார்த்தவள் “தாத்தா ஏன் என்னை மட்டும் இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போனே? என்னையும் உன்னோடு சேர்த்து கூடிட்டு போய் இருக்கலாம்ல” என்று சொல்லி அந்த புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.


 
Top Bottom