Vikashini Novels
New member
உயிர் 2
அறையில் மல்லிகைப்பூ மற்றும் பன்னீர் ரோஜாவின் நறுமணம் கமழ்ந்தது.
தூரிகாவின் பெற்றோர்
சண்முகம் , பூங்கோதை.. சண்முகம் கோவையில் டெக்ஸ்டைல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்...
பெரிய நிலைக்கண்ணாடியின் முன் அமர்ந்து, தன் பிம்பத்தையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் தூரிகா.
அவளது தோழி இனியா,தூரிகவின் கன்னங்களில் வர்ணங்களைத் தீட்டிக் கொண்டிருக்க, தூரிகவின் மனமோ கடந்த கால நினைவுகளுக்கும் ,வருங்காலத்துக்கும் இடையே ஊசலாடியது. பட்டுப்புடவையின் ஜரிகை மின்ன, அவளது முகத்தில் ஒரு மெல்லிய கலக்கமும் ஒருசேரத் தெரிந்தன."
மீண்டும் மீண்டும் கண்ணாடியில் அவளின் பிம்பத்தை பார்த்தாள்.. அந்தப் புதிய உருவம், அவள் ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து ஒரு குடும்பத்தின் குலவிளக்காக மாறப்போவதை மெளனமாகப் பறைசாற்றியது."...
அம்மா , அம்மா என்று அழுத்தமாகக்
கூற..
அங்கே எதையோ தேடிக் கொண்டு இருந்த கோதை,
என்னடி! என்று கோதை அதட்ட.
அம்மா இப்ப கல்யாணம் வேண்டாம் ம்மா..ப்ளீஸ் மா.. இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்றாள் தூரிகா..
வாயில அடி , வாயில அடி, இன்னும் ஒரு மணி நேரத்தில முகூர்த்தம் வெச்சிட்டு பேசற பேச்ச பாரு என்று தூரிகாவுக்கு சளைக்காமல் பூங்கோதையும் பேச.
அம்மா ! போம்மா நான் அன்னைக்கே சொன்னேன் ..நீங்க தான் கேட்கலை என்றாள் சலிப்புடன்...
கோதையோ," வாயமூடு டி குரங்கு; இப்படி எல்லாம் பேசாத;
யாருக்காவது கேட்க போகுது" என்றார்..
ஆரம்பிச்சிட்டாங்க இனி அவன் புராணத்தை நிறுத்த மாட்டாங்க என்று இது உனக்கு தேவையா டி என்ற மாடுலேஷனில் இருந்தாள் தூரிகா...
இவர்கள் இப்படி மாறி மாறி பேச அந்த அறையில் இருவரின் வாயையும் பாவமாக பார்த்துக் கொண்டு இருந்த இரு ஜீவன்கள் தான் இனியாவும், கதிரின் மகன் ஆரவும்..
சித்தி என்று இனியாவின் கையை இழுத்தான் ஆரவ்..
வாடா தங்கமே! என்று ஒரு ஓரமாக அவனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள்..
கோதை: ஏன் டி சின்ன வயசில உங்களுக்கு தான் கல்யாணம் ன்னு பேசி வைச்சது தான் என்க..
தூரிகா: அது நீங்க விளையாட்டுக்கு சொல்றீங்கன்னு நெனைச்சேன் என்று சிணுங்கினாள்..
அதுவும் இல்லாம எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகாது மா, சண்டை வந்துட்டே இருக்கும் என்றாள்...
கோதை:அடியே கடைசி நேரத்தில எங்கேயும் ஓடிப் போய் மானத்தை வாங்கிறாத..
உன்னையோட முடில ..
தூரிகா: ம்கும் உன்னை மாதிரி அம்மாவ வெச்சிட்டு எப்படி ஓடிப் போறது.. அப்படியே ஓடினாலும் நீ தான் எனக்கு முதல்ல ஆப்பு வெச்சிருவயே..
இரு டி ஒரு நிமிடம் என்று யாருக்கோ செல்ஃபோனில் பேச, சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது...
என்னாச்சுக்கா! என்று கேட்டபடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் கதிர்...
ஏதாவது வேணுமா? என்று கேட்டுக் கொண்டேன் தூரிகை பார்க்க அவளோ அழுத கண்களுடன் இருந்தாள்..
ஏய் தூரி பேபி என்னடி பொம்பளை வேஷத்தில அழகா இருக்க? என்று கிண்டல் செய்தான்..
"போ மாமா உனக்கு வேற வேலையே இல்லை நானே டென்ஷன்ல இருக்கேன் என்றாள்" தூரிகா..
"உனக்கு என்னடி டென்ஷன் உன்னால எங்களுக்கு தாண்டி பிபி ஏறுது" என்று கோதை பொறிந்து தள்ளினார்..
"ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா? என்று அவனும் கத்த..
" கோதையும் அங்கு நடந்ததை கூற"..
ஏன் டி புத்தி இருக்கா உனக்கு பைத்தியம் மாதிரி உளரிட்டு இருக்க? என்று திட்டினான்..
சரிக்கா நீ கெளம்பு நீ போய் வந்தவங்கள பாரு என்று அவரை அனுப்பி விட்டான்...
அவ நம்மள விட்டு போறத நினைச்சு தான் இப்படி பேசிட்டு இருக்கா!. நான் சமாதானம் பண்றேன் என்றான்..
தூரிகாவின் அருகே ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டு அமர்ந்தான்..
அவள் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டான்..
இங்க பாரு தூரிகா ஸ்ரீ ராமுக்கு என்ன குறைச்சல்...
உன்ன தெரியாத எடத்துக்கு கல்யாணம் கொடுக்கல...
நீ நம்ம வீட்ல எப்படி இருக்கீங்க அதே மாதிரி அங்கேயும் நீ இருக்கலாம் சின்ன வயசுல இருந்தே உன்ன பத்தி உங்களுக்கு தெரியும் தானே..
இப்ப நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று அவளை சமாதானப்படுத்தினான்...
"ஐயோ மாமா! எங்க ரெண்டு பேருக்கும் சும்மாவே ஒத்துப்போகாது..
இப்போ ஒரே வீட்ல இருந்தா சண்டை தான் வரும்.. உனக்கு தெரியும் தானே என்றாள் தூரிகா....
இதெல்லாம் ஒரு விஷயமா!
சின்ன வயசுல சண்ட வந்தா இப்பயும் வரும் கிடையாது... உனக்கு மெச்சூரிட்டி இருக்கோ இல்லையோ ஆனால் ஸ்ரீ நல்ல மெச்சூரிட்டி ஆயிட்டான்... அவன் இன்னும் நல்லா பாத்துக்குவான் என்றான் கதிர்...
கதிர்:இதெல்லாம் தாண்டி அவனை வேண்டாம் என்று சொல்ல உனக்கு ஏதாவது விஷயம் இருக்கா?
தூரிகா: இல்லை என்பது போல் தலையாட்டினாள்..
கதிர்: இந்த பேச்ச இதோட நிறுத்திக்கோ ஒழுங்கா சிரிச்ச முகத்தோட மேடைக்கு வர என்று அவள் தலையில் கொட்டினான்....
அப்பா சித்தி எதுக்கு அடிக்கிற என்று ஆரவ் அவன் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டான்....
பாருடா சிறு வண்டுக்கு இன்னொரு சிறு வண்டு சப்போர்ட்டுக்கு வருது என்று மகனை தூக்கிக்கொண்டு..
"இனியா நல்லா மேக்கப் போட்டு விடு... உன் முகூர்த்த முடியிற வரைக்கும் நீ வாயை திறந்து பேசக்கூடாது" என்று கூறிவிட்டு மகனுடன் சென்று விட்டான்...
இனியா: ஏன் டி எல்லாரையும் இப்படி டென்ஷன் பண்ற.. இது உன்னோட ஸ்பெஷல் டே என்று சமாதானம் செய்தாள்...
ஆமா ஆமா பெரிய ஸ்பெஷல் டே அவனெல்லாம் ஒரு ஆளுன்னு எங்க வீட்ல போயும் போது இவனுக்கு என்னை புடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க என்று சலித்துக் கொண்டாள்...
அந்த அண்ணாக்கு என்ன டி குறைச்சல்..நல்ல படிச்சவரு, காலேஜ் அட்மின் ஆஹ் இருக்காரு என்று இனியா ஶ்ரீ ராமை பாரட்ட,
அப்படிங்களா! போய் ஜனாதிபதி கிட்ட சொல்லி அவார்ட் வாங்கி கொடு அந்த வெண்ணைக்கு என்றாள்..
போடி , அந்த அண்ணாவ நினைச்சு கஷ்டமா இருக்கு, உன்னை எப்படி சமாளிக்க போறாங்களோ என்று இனியாவும் கிண்டல் செய்தாள்..
வெளியே இருவரின் பெற்றோரும் அங்கே சந்தோஷமாக வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்..
சம்பந்தப்பட்ட இருவரும் கோ வித் ஃப்லோ என்ற மனநிலையில் இருந்தார்கள்..
சிறிது நேரத்திற்கு பிறகு,
இருவருமே மணமேடையில் அமர்ந்திருந்தார்கள்.. ஐயர் சொன்ன சடங்குகளை செய்து கொண்டிருந்தார்கள் ஆனாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை...
ஐயரோ ஆதிராவிடம் தாம்பூலத் தட்டை நீட்டி ஆசீர்வாதம் வாங்கி வர சொன்னார்கள்..
முகூர்த்த நேரம் நெருங்கவும் ஸ்ரீ ராமின் கையில் தாலி கொடுக்கப்பட்டது..
ஒரு பெருமூச்சுடன் தாலியைப் பார்த்தான் அவளையும் பார்த்தான் பிறகு அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான்...
ஐயோ போச்சு தாலி கட்டிட்டான் என்று அவள் நினைக்க அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..
தாலி கட்டும் போது எனக்கு இந்த அழுகாச்சி கூட வர மாட்டிங்குதே என்று மைண்ட் வாய்ஸ் அவளுக்கு.. அவனைத் தவிர எல்லாரையும் பார்த்தாள்..
கதிருக்கு ஏக சந்தோஷம்.அவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவளுக்கு தோளில் தட்டிக் கொடுத்தான்..
அவன் வளர்த்த மருமகள் தானே..
அவளும் மாமா என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்…
இந்த கல்யாணம் ஆனா பொண்ணுங்க கிட்ட வெட்கம் எல்லாம் வரும்,அது இல் மூஞ்சில கொஞ்சம் கூட இல்லை என்று அவன் யோசித்துக் கொண்டு இருந்தான்..
அந்த நாதஸ்வர இசையும், இருவரின் தோளில் இருந்த மாலையின் வாசனையும், இருவரும் அறிகுறையில் அமர்ந்திருந்த நெருக்கமும் மனதிலும், உடலிலும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது...
கல்யாணம் நல்லபடியாக முடிந்தது என்ற மகிழ்ச்சியில் இருந்த தூரிகாவின் பெற்றோருக்கு , சட்டென ஒரு பாரம் இறங்கியது போல உணர்வு. அதே சமயம், தன் தோளில் சாய்ந்து வளர்ந்த சின்னஞ்சிறு குழந்தை, இப்போது இன்னொரு குடும்பத்தின் வேராக மாறிவிட்டதை எண்ணி நெஞ்சம் விம்மியது."
அவள் கையைப் பிடித்து ஸ்ரீராமிடம் ஒப்படைக்கும்போது, கைகள் லேசாக நடுங்கின. 'என் உலகத்தையே உன்கிட்ட தர்றேன், பத்திரமா பார்த்துக்கோ' என்று வாய்திறந்து சொல்லாவிட்டாலும், மணமகனின் கண்களை அவர் பார்த்த அந்த ஒரு பார்வை அதைப் புரியவைத்தது ..
அதை புரிந்து கொண்டது போல , ராகவன் , " சம்பந்தி , உங்க வீட்டு மகாலட்சுமியை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம். அவ இங்க எப்படிச் சுதந்திரமா வளர்ந்தாளோ, அதே சந்தோஷம் எங்க வீட்லயும் அவளுக்கு இருக்கும். அவ முகத்துல ஒரு சின்ன வருத்தம் கூட வராம நாங்க பார்த்துப்போம். இது வெறும் வார்த்தை இல்ல, நான் தர்ற வாக்குறுதி."
ஸ்ரீ ராமின் அம்மாவோ , " எப்படியோ என் ஆசைப்படி நான் கேட்ட மாதிரி என் மருமகளே எங்க வீட்டுக்கு வர போற நீங்க ஏதும் கவலைப்படாதீங்க என்று கீதா ராணி கூறினார்...
திருமணத்திற்கு பிறகு நடக்கும் சடங்குகள் அனைத்தும் நடந்தன...
அப்படி செய் இப்படி செய் என்று ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்ல, அனைத்து சடங்கும் முடித்து,மெட்டி போடும் சடங்கு நடந்தது... துரிகாவிற்க்கு மெட்டி அணிவிக்க, வலது காலை முன் நீட்டினாள், பிறகு இடது காலில் மெட்டி போட்டுவிடப் போக, ஸ்ரீராமின் கை நடுங்கியது..
இதயத்தில் ஊசி குத்துவது போல் வலி ..
சொல்ல முடியாத உணர்வு..
அருகில் இருப்பவர்கள் பேசுவதை கேட்டு, முகத்தில் இன்னும் இறுக்கமாக ஆனது ...
ஏனென்றால், அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவளுக்கு ஏற்பட்ட விபத்தில் இடது காலின் கடைசி விரல் துண்டிக்கப்பட்டு விட, அந்த விரல் இருக்கும் இடம் வெறுமையாக இருந்தது...
கையிலும், தலையிலும் தழும்புகள் மேக்கப் போட்டு இருந்ததால் அது பெரிதாகத் தெரியவில்லை..
அதைப் பார்க்கும் போது அவள் உடலளவில் அனுபவித்த வலியை அவன் இன்று வரை மனதளவில் அனுபவிக்கிறான்...
அவன் இரகசியம் அவனோடு...
ஒரு சில உறவுகளுக்கு அவளின் கால் விரல் இல்லாத விஷயம் பேசு பொருளாக ஆனது...
இதையெல்லாம் பார்த்த போது தூரிகாவிற்கு பதற்றம்... அவளது குறையைத்தான் பேசுகிறார்கள் என்று கைகள் எல்லாம் பதட்டத்தில் நடுங்க,அத்தனை நேரம் தைரியமாக இருந்தவள் இப்போது வேறு மாதிரி ஆகிவிட்டாள்..அவளைப் பார்த்த ஸ்ரீராம் , கீதாவை அழைத்து " அம்மா அவ டென்ஷன் ஆகுறா பாருங்க. கொஞ்ச நேரம் அவள ரூம்க்கு அழைச்சிட்டு போங்க என்று கூறினான்..
அவள் தனியே சென்று சிறிது நேரம் கண்மூடி அமர்ந்து விட்டாள்.. சிறிது நேரத்தில் பதற்றம் எல்லாம் குறைந்த பிறகு குடும்ப மற்றும் கேண்டிட் போட்டோக்களை எடுத்தனர்...
உணவு உண்ணும் போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை..
ஊட்டி விடுங்க ஃபோட்டோ எடுக்கலாம் என்று ஃபோட்டோக்ராபர் கேட்க?
ண்ணா அதெல்லாம் வேண்டாம் என்று எரிச்சலாக இருவரும் ஒரே நேரத்தில் கூற!
இல்லைங்க நல்லா இருக்கும் என்று அப்படி ஒரு ஃபோட்டோ எடுத்தார்கள்..
இதெல்லாம் ஒரு புறம் நடக்க, கதிரும், ஆதிராவும் புதிதாக திருமணம் ஆன ஜோடிகளைப் போல் வலித்து வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்...
டாடி என்ன மட்டும் விட்டுட்டு போட்டு இருக்கீங்க இன்று தன் அப்பாவின் காலில் கட்டிக் கொண்டு நின்றான் ஆரவ்...
அவனுடன் சேர்ந்து சிறிது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்...
பிரசாத்தோ , இனியா எங்கு செல்கிறாளோ அவளைத் தொடர்ந்தே அவன் பார்வையும் இருந்தது...
அவளும் பார்த்தும் பார்க்காதது போல இருந்தாள் ..ஏனென்றால் அவளுடைய பெற்றோரும் அங்கு இருந்த காரணத்தினால்....
காலை, மதிய விருந்து முடிந்து, மாலை வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்....