• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் உயிரினில் கலந்தேன் கரைந்தேனே 3

உயிர் 3
மாலை நேர வரவேற்புக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாள். காலையில் இருந்த அந்தப் பாரம்பரியத் தோற்றம் மறைந்து, இப்போது ஒரு நவீன மிடுக்கு தெரிந்தது. மெல்லிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த ஆடை, மின்விளக்குகளின் ஒளியில் அழகாக மின்னியது. கண்ணாடியில் தெரிந்த தன் புதுப்பொலிவை வியப்புடன் பார்த்தாள்... இனிமேல் நான் அவன் பொண்டாட்டி ஆஹ்.. ஐயோ என்று தூரிகா இருந்தாள்.. ஶ்ரீ ராமை கேட்கவே வேண்டாம்..பெயருக்காக முகத்தை சிரித்த மாதிரி வைத்து இருந்தான்..
மேடையில் மணமக்கள் அருகருகே நின்றிருந்தனர்.
காலையில் ட்ரெடிஸ்னல் உடையில் அழகாக இருந்தவர்கள் இப்பொழுது அவனுக்கு கோட் சூட், தூரிகாவுக்கு லெஹாங்கா என்று இன்னும் அவர்கள் ஜோடிப் பொறுத்தும் அழகாக இருந்தது..உறவினர்களும் நண்பர்களும் வரிசையாக வந்து அவர்களை வாழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து மணமக்களுக்குப் பூங்கொத்துகளையும் அழகாகப் பொதிந்த பரிசுப் பெட்டிகளையும் வழங்கினர். மணமக்கள் புன்னகையோடு அவற்றைப் பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் நன்றி சொன்னார்கள். சில பெரியவர்கள் மணமக்களின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினர். மேடையில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது."
மண்டபத்தின் ஒரு பகுதியில் உணவுக்கூடத்தில் விதவிதமான மணக்கும் உணவுகள் மேஜைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் அனைவரும் உற்சாகமாக உணவை ரசித்தனர்.
கூட்டம் சற்று குறைவான நேரம், அவனுடன் பள்ளியில் படித்த நெருங்கிய நண்பர்கள் வந்திருந்தனர் ‌...
என்னடி இவங்க எல்லாம் வராங்க.. இவங்களை எல்லாம் எனக்கு ஸ்கூல் படிக்கும் அப்பவே பிடிக்காது என்று இனியாவுடன் முனுமுனுத்துக் கொண்டிருந்தாள் தூரிகா..
சரி சரி, அமைதியா இரு, அவங்க எல்லாம் நம்மள தான் பாக்குறாங்க என்று அமைதி படுத்தினாள் இனியா...
கங்கிராட்ஸ் இன்று பரிசை அவர்கள் நீட்ட, ஸ்ரீராம் மட்டுமே சரி செய் வாங்கினான்..
சண்டைகோழிங்க ரெண்டு பேரும் கப்பில்ஸ் ஆகிட்டீங்க...
டாம் அண்ட் ஜெர்ரி பேர் ஆஹ் என்று அவனுடைய நண்பர்களில் ஒருவன் சொல்ல, இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய என்று தூரிகாவுக்கு தெரியவில்லை..
க்யூட் பேர், கங்ராட்ஸ் என்று அவர்கள் வாழ்த்த,
தூரிகா அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.‌.
வேறு பக்கம் பார்த்து நின்று இனியாவுடன் பேசிக் கொண்டு நின்றாள்....

இதை பார்த்து கடுப்பான ஸ்ரீராம்,
தூரிகாவிடம், இப்ப நீ ஒழுங்கா அவங்க கிட்ட பேசுற, இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது என்று கோபமாகக் கூறி அவளுடைய கையை அழுத்தமாகப் பிடித்து, எங்கேயும் நகர முடியாத மாதிரி தன் அருகில் அவளை நிறுத்திக் கொண்டான்...
கைய விடு எனக்கு வலிக்குது என்றாள் தூரிகா..
ஶ்ரீ நார்மலா இரு எல்லாரும் பாக்குறாங்க , நாங்க கீழ போறோம்,
இனிமேல் அடிக்கடி மீட் பண்ணிக்க தானே போறோம்
என்று அவளிடமும் விடை பெற்று சென்றார்கள்...
வந்தாளுக, சண்டைய வரவெச்சிட்டு போய்ட்டாங்க; இவங்க வரலன்னு யாரு அழுதா என்று அவன் அவள் கையை இறுக்கிப் பிடித்து சிவந்து போன இடத்தை பார்த்துக் கொண்டே மனதிற்குள் நொந்து கொண்டாள்...
அவளை முறைத்துக் கொண்டே ஶ்ரீ ராம் நின்றான்..
ப்ளீஸ் சிரிங்க என்று புகைப்படக்காரர் பல முறை இருவரிடமும் சொல்லி ஃபோட்டோக்ராஃபர் பலித்தது தான் மிச்சம்..
பிரசாத் மட்டும் அங்கேயே தான் இருந்தான்...
நான் அவனுக்கு ஹெல்ப்புக்கு இருக்கேன் என்றவனை , இனியாவையும், பிரசாத்தையும் மாறி மாறி பார்த்தவர்கள், நீ நடந்து ராசா என்ற பாவனையில் அவர்களை பார்த்து விட்டு அமர்ந்து அவர்களுடைய கதையை பேச ஆரம்பித்து விட்டார்கள்...

பிரசாத் இனியா விடம், நீங்க தான் தூரிகா சிஸ்டர்க்கு மேக்கப் போட்டிங்களா?
அழகா இருக்கு; உங்க நம்பர் கொடுத்தா என் ரிலேட்டிவஸ் ஃபங்ஷன்க்கு உங்கள ரெஃபர் பண்ணுவேன் என்றான்...

சாரி அண்ணா, நான் ஃப்ரெண்ட்ஸ்க்கு மட்டும் தான் மேக்கப் பண்ணுவேன், பேசிக்கல் நான் ஒரு டீச்சர் என்று பேச்சை முடித்து விட்டு திரும்பி நின்று கொண்டாள்..

அவள் அண்ணா என்று சொன்னதுமே( அவன் மைண்ட் வாய்ஸ்: அசையாத மரமொன்று உய்ந்தது கீழ ) என்று ஷாக் ஆகிவிட வேறு எதுவும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவளும் திரும்பி விட்டாள்...
எப்படி யாவது கரெக்ட் பண்ண பார்த்தா முடியாது போலவே என்று பாவமாக இருந்தான்..
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஶ்ரீராம் , டேய் என் கல்யாணத்துக்கு வந்து நீ மாப்பிள்ளை ஆகலாம்னு பாக்கறயா,
ஒழுங்கா போய் நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆஹ் சாப்பிட வெச்சிட்டு சேஃபா ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வர என்று கூற..
ம்க்கும் போடற பால் எல்லாமே நோ பாலா போகுது ; இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை என்று மனதிற்குள் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது..

இன்னும் போகலையா நீ என்று முறைக்க, போய்ட்டே இருக்கேன் டா என்று சென்று விட்டான்...

ஒருவழியாக ரிஷெப்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்து, பாலும் பழமும் கொடுக்கும் நிகழ்வு நடக்க;
முதலில் ஶ்ரீராம்க்கு கொடுத்து பிறகு தூரிகாவிடம் கொடுத்தனர்..
ம்க்கும் இவன் குடிச்சு கொடுக்கற பால் நான் குடிக்கனுமா, எல்லாம் என் தலை விதி என்று முகத்தை சுளித்தாள்..
அதை புரிந்து கொண்டு, நீ என்ன யோசிக்கறேன்னு எனக்கு தெரியும் டி, இப்ப பாரு என்று மனதிற்குள் நினைத்தவன், ஆதிராவிடம் இருந்து பழத்தை வாங்கி அவன் கடித்த இடத்தையே வாயில் வைத்து ஊட்டி விட , ஆத்தி இவன் என்ன இப்படி ஆக்டிங் கொடுக்கிறான், ஆதிரை அக்கா கொடுக்கும் போது கூட இப்படி யாருமே பார்க்கலாயே, இப்ப எல்லாரோட அட்டென்ஷனும் நம்ம மேல தானே இருக்கு இப்ப இத சாப்பிடற மாதிரி ஆக்டிங் கூட கொடுக்க முடியாதே என்று
ஒரு ஓரமாக அந்த பழத்தை பல்லின் நுனியில் வேண்டா வெறுப்பாக கடிக்க , அவனோ பாதி வாழைப்பழத்தை வாயில் துணித்து விட்டான்...
அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும் போல இருக்க, யார் முன்னாலும் துப்ப முடியாது கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டாள்...
அவனுக்கு சிரிப்பு, கஷ்டப்பட்டு சிரிப்பை வாய்க்குள் அடங்கிக் கொண்டான்..
அங்கிருந்த பெண்களில் ஒருவர், மாப்பிள்ளைக்கு தூரி மேல ரொம்ப பாசம் போல அதான் அவரே ஊட்டி விடறாரு என்று கிண்டல் பேச,
தூரிகவோ ஓரக் கண்ணில் அவனை பார்த்து முறைக்க தவறவில்லை...


அடுத்து இருவரையும் சாங்கியத்திற்கு தயாராக்கிக் கொண்டிருந்தனர் தனித்தனி அறையில்..இனியா வை திருமணமாகாத பெண் என்பதால் அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தனர்...

டேய் தம்பி ஶ்ரீ , என்ன பதட்டமான இருக்கியா என்று கேட்டான் கதிர்..

ஐயோ அப்படி எல்லாம் இல்லை என்றான் ஶ்ரீ ராம்...

சரி சரி, ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் என்று அலங்காரம் செய்து இருந்த அறைக்குள் அவனை அனுப்பி வைத்து விட்டு அவன் வீட்டுக்கு சென்று விட்டான்..

இருவரின் வீடும் பக்கம் பக்கம் இருக்க, உறவினர்கள் அனைவரும் கதிர் வீட்டில் தான் தங்கி இருந்தார்கள்...

ஆதிராவும் , தூரிகாவை அணைத்து விடுவித்து பால் சொம்பை கையில் கொடுத்து ஆல் த பெஸ்ட் என்று சொல்ல ஐயோ அக்கா எனக்கு பயமா இருக்கு நான் போகல என்று அதிரையின் கையை விடாமல் பிடித்துக் கொண்டாள்..அடியேய் என்ன டி சொல்ற.. பயம் எல்லாம் இல்லை ஒழுங்கா உள்ள போ.. வேற யாரும் வந்து அட்வைஸ் பண்ணற பேர்ல ஏதாவது சொல்ல போறாங்க என்று அவளை சமாதானம் செய்து அறைக்கு அனுப்பி விட்டு அவளும் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்..

ஒரு‌பெருமூச்சை விட்டு மனதில் தைரியத்தை வரவழைத்து, ஐயனாரப்பா இந்த சின்னப் பிள்ளைய காப்பாத்துப்பா என்று பல வேண்டுதல் வைத்து உள்ளே சென்றாள்..

அவன் ஒரு புறம் அமர்ந்து இருந்தான்..
இவளோ கட்டிலின் இன்னொரு புறம் அமர்ந்து இருந்தாள்...

இருவருக்கும் படபடப்பு, யார் முதலில் பேசுவது என்றிருந்தனர்..

தூரிகாவே தான் பேச்சை ஆரம்பித்தாள்.
இங்க பாரு நீ என்ன தான் தாலி கட்டினாலும், எனக்கு கொஞ்சம் டைம் வேணும்; இந்த தொட்டு பேசற வேலையெல்லாம் வெச்சுக்காத என்றாள் ...
அடிங்க என்று கையை ஓங்கியவன், ஐயே மூஞ்சப் பாரு, உன்னைப் பார்த்தாலே புடிக்காது, இதுல தொட்டு வேற பேசப் போறாங்களாம்;
சரித்தான் போடி என்று போர்வையை போர்த்தி படுத்து விட்டான்...
சென்னைக்கு வாடி மகளே உனக்கு இருக்கு, அங்க தனியா சிக்குவ பாரு என்று மனதிற்குள் நினைத்தவன் தூங்கியும் போனான்...

ஹப்பாடா, என்று நெஞ்சில் கை வைத்து இவன டென்ஷன் பண்ணா நம்ம பக்கத்தில வரமாட்டான், இனி இதே ஃபாலோ பண்ணணும்..இப்ப நாம நிம்மதியா தூங்கலாம் என்று‌ அவளும் உறங்கி விட்டாள்...

அடுத்த நாள் அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது,
ஆதிரை தூரிகாவை பார்க்க அவளோ யாரையும் பார்க்காது பம்மிக் கொண்டே சுற்றினாள்..
எல்லாம் ஓகே வா என்று ஆதிரை சிக்னல் செய்ய இல்லை என்று இவள் சிக்னல் அனுப்பினாள்..
ஶ்ரீ ராம் தயக்கமின்றி அங்கிருந்த ஆண்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்..
காலை குல தெய்வக் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்..

மாலையில் , தூரிகாவை சென்னைக்கு அனுப்ப தயாரகிக் கொண்டு இருந்தார்கள்...

கிளம்பும் நேரம் வந்தது...

தூரிகா தன் மாமன் கதிரை அணைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்..
அவனுமே கட்டுப்படுத்த நினைத்து முடியாமல் போக அழுது விட்டான்..
அவள் தானே அவனுக்கு மூத்த மகள் போல ; மிகவும் செல்லம்.
தன் அம்மா, அப்பாவை காட்டிலும் மாமனைத் தான் பிடிக்கும்..

அம்மா அப்பாவும், சித்தியும் எதுக்கு அழுகறாங்க என்று தன் மகன் கேட்க, அதன் பிறகு தான் ஓரளவுக்கு அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, உனக்கு ஏதாவது ன்னா எனக்கு போன் பண்ணு நான் எப்படியாவது உன்னை பார்க்க வந்திருவேன் என்று அவளை சமாதானப் படுத்தினான்...

சரி சரி இப்ப எதுக்கு அழுகிற, உன்னை என்ன யாரும் தெரியாத ஆளுக்கா கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கோம் என்று கோதை கேட்க?

ஏம்மா , உன் புள்ளை தான, நான் இவ்வளோ அழுகறனே உனக்கு கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?
இல்லை தொல்லை முடிஞ்சது கிளம்பட்டும்ன்னு சந்தோஷப் படறியா ?
எனக்கு ன்னு இப்படி ஒரு அம்மாவா?
இங்க பாத்தியா மாமா உன் அக்கா வ என்று கதிரிடம் கூற, அனைவருக்கும் சிரிப்பு வந்தது...

நான் ஏன் டி அழுகப் போறேன் என் பொண்ணு சந்தோஷம , உன்னை நல்லா பாத்துக்கற ஆளு இருக்கும் போது எனக்கு கவலை இல்லை என்று சந்தோஷமாக கூறினார்..

அம்மாச்சி, இனியா,ஆதிரை, ஆரவ் தன் அப்பா என அனைவரிடமும் அழுது கொண்டே விடை பெற்றுக்கொண்டாள்...

கதிர் தன் குடும்பத்தோடு ஏர்போர்ட் சென்று மும்பை கிளம்பி விட்டான்...

ஒரு வழியாக கல்யாணம், ரிஷெப்ஷன், சடங்கு எல்லாம் முடிஞ்சு போச்சு..
இனிமேல் இவங்க வாழ்க்கையில நடக்குற அட்ராசிட்டிஸ் பார்க்கலாம்...

அடுத்த அத்தியாயம் சென்னையில், யாரு யார வெச்சி போறாங்களோ பார்க்கலாம்…
 
Top Bottom