Vikashini Novels
New member
உயிர் 4
புது திருமண ஜோடியுடன், ஶ்ரீ ராமின் பெற்றோர்களும் சென்னை வந்தனர்..
அவர்களுடன் ஒரு வாரம் தங்கி தூரிகாவிற்கு எல்லாம் பழக்கப்படுத்தி விட்டு அவர்கள் சிதம்பரம் சென்றனர்..
ராகவனுக்கு அங்கு தான் வேலை ..
ஶ்ரீ ராமிற்கு சென்னையில் வேலை..
ஒரு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸராக இருக்கிறான்..அதனால் இங்கேயே அவனுக்கு ஃப்ளாட் சொந்தமாக வாங்கி செட்டில் ஆகி விட்டான்...
வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு தூரிகா பரவால்ல வீடு நல்லாத்தான் அடுக்கி வச்சு இருக்கான்.. இவனுக்கு இவ்வளோ திறமை இருக்கா? உன்னைய நினைச்சு பெருமையா இருக்கு என்று மனதிற்குள் மட்டுமே அவனை பாராட்டினாள்..
ஏனென்றால் இவளுக்கு இந்த அடுக்கி வைப்பது பார்த்து பார்த்து ரசித்து பொருட்கள் வாங்கி அழகாக்குவது என்றாள் பிடிக்காது.. பிடிக்காது என்பதை விட அதைப் போய் நாம ஏன் செய்யனும், அந்தப் பொருள் கடையிலயே அழகாகத் தான் இருக்கும்..அங்கேயே இருக்கட்டும் என்று அவள் அம்மாவிடம் வாயடிப்பாள்..
வீட்டில் பெரியவர்கள் இருப்பதால் புது ஜோடிக்கு எந்த வாய்க்கால்
தகராறும் வரவில்லை..
அவன் ஆபிஸ் சென்று விட்டு இரவு 7 மேல் தான் வீட்டுக்கு வருவான்..
இந்த ஒரு வாரத்தில் அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, வேலைக்கு செல்லும் நேரம் என எல்லாம் தெரிந்து கொண்டாள்...
கீதாவும், ராகவனும் ஊரூக்கு கிளம்பும் நாளும் வந்தது..
கீதா தன் மகனை அழைத்து, நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை டா, வம்பிழுத்துட்டு, கிண்டல் பண்ணிட்டு இருக்காத...
என்னையும், உன் அப்பாவையும் நம்பித்தான் அவள நம்ம வீட்டுக்கு மருமகளா அனுப்பி இருக்காங்க..
ரிசப்ஷன்ல நீ கோபமா நடந்துக்கிட்டத நாங்க பாத்துட்டு தான் இருந்தோம் என்று அவனுக்கு அறிவுரைகளை கூறிவிட்டு, தன் மருமகளிடம் பத்திரமாக இருக்குமாறு கூறி கிளம்பி விட்டார்கள்...
அத்தை இங்கேயே இருங்க, இல்லைன்னா என்னை உங்க கூட ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று அவர் கையைப் பிடித்து கொண்டு விடவே இல்லை..
அடேய் பாப்பா மாமாவுக்கு அங்க வேலை நிறையவே இருக்கு.. நீங்க அடுத்த வாரம் வாங்க என்று அவளை சமாதானம் செய்து கிளம்பி விட்டனர்..
ட்ரைவர் ஒருவரை ஏற்பாடு செய்து அவர்களை காரில் அனுப்பி வைத்தான்...
அன்று இருவரும் தனியே இருந்ததால் வீடு சற்று அமைதியாக இருந்தது...
இருவருமே பேசிக் கொள்ளவே இல்லை..
ஒரு வாரமும் கீதாவின் பின்னால் வால் பிடித்து சுற்றிக்கொண்டு இருந்த தூரிகா ஒரு இடத்தில் அமைதியாக ஃபோனை நோண்டிக் கொண்டு இனியாவுடனும், அவள் பெற்றோருடனும் பேசிக் கொண்டு நேரத்தை கடத்தினாள்...
தூக்கம் எல்லாம் ஒரே அறையில் தான்..
உடல் அசதியாய் இருந்ததால் இருவருமே தூங்கியும் போனார்கள்...
அடுத்த நாள் நேரத்திற்கே. எழுந்து குளித்து விட்டு, கடைக்கு போகலாம் என்று அவளுடைய பர்ஸை எடுக்க போனவள் திடிரென என்ன நினைத்தாளோ அதை அப்படியே வைத்து விட்டு, ஶ்ரீயின் பர்ஸை திறந்து பார்த்தாள், அதில் 500 ரூபாய் தாள்கள் 20 இருந்தது...
பர்ஸ்லயே இவ்வளோ காசு இருக்குன்னா , எவ்ளோ சம்பளம் வாங்குவான்..
சமூகம் பெரிய இடம் தான் போல ..
இவனுக்கும் சேர்த்து தானே செய்யப் போறேன் அதனால இவன் பர்ஸ்ல இருந்தே காசு எடுத்துக்கலாம் என்று அதில் இருந்து 2000 ரூபாயை எடுத்துக் கொண்டு, வீட்டை பூட்டி விட்டு ,லிஃப்டில் இறங்கி வந்து , செக்யூரிட்டியிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, தேவையான பொருட்களை வாங்கி வந்தாள்..
அவள் கதவை திறக்கவும், இவன் எழுந்து வரவும் சரியாக இருந்தது...
கையில் பொருட்களுடனும், வாயில் குச்சி மிட்டாயோடும் இருந்தவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வர,அடக்கிக் கொண்டே, கருமம் இதுக்கு இன்னும் இந்த பழக்கம் வேற இருக்கா என்று கிண்டலாக சிரித்தபடியே,
ஏதாவது வேணும்னா, தனியா போகாத என் கிட்ட சொல்லு நான் வாங்கிட்டு வரேன், இல்லைன்னா ரெண்டு பேரும் போகலாம் என்றான்...
ம்க்கும் ரொம்பத் தான் அக்கறை என நினைத்தவள்,
ம் ,ஓகே , இந்தாங்க மீதி காசு என்று அவனிடம் கொடுத்து அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சென்று விட்டாள்...
என் பர்ஸ்ல இருந்து காசு எடுத்தா என் கிட்ட கேட்டுட்டு எடு என்றான் தூரிகாவிடம்..
அதற்கு அவளிடம் ம்ம் என்று பதில் மட்டுமே வந்தது..
சிறிது நேரத்தில் அவனும், குளித்து விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து,
தூரிகா எனக்கும் காஃபி ? என்று அவளிடம் கேட்டான்?
நான் எனக்கு மட்டும் தான் போட்டேன்.
பால் சூடா தான் இருக்கு நீயே போய் போட்டுக்கோ என்று அவளுடைய காஃபியை ருசித்துச் கொண்டு இருந்தாள்...
என்னது , போட்டுக்கோ வா, எங்க டி மரியாதை என்று அவன் முறைக்க!
அவனை மேலிருந்து கீழாக பார்த்து ஓஹ் மரியாதை வேற குடுக்கனுமா?
போங்க சார், பால் சூடா தான் இருக்கு, போட்டு குடிங்க சார் என்றாள் நக்கல் தொனியில்..
உன் கிட்ட கேட்டேன் பாத்தியா என்ன சொல்லனும், என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவன் நகர,
சரித்தான் போடா , உனக்கு காஃபி வேற போட்டுக் கொடுக்கணுமா, என்று முனுமுனுத்தது அவன் காதில் கேட்டு விட!
என்ன டி ! சொன்ன என்று அவளிடம் நெருங்கினான்..
நான் ஏதும் சொல்லயே என்றாள்,
அப்போ நீ எதும் பேசல நான் ஏதும் கேட்கல அப்படித் தானே என்றான்..
ஆமா, நான் ஏதும் சொல்லயே என்று தூரிகா திருட்டு முழி முழிக்க!
அவளருகில் வந்தவன், அவள் காஃபி கப்பை பிடுங்கி மேஜையில் வைத்து விட்டு. அவளுடைய இரு கைகளையும் பிடித்து தலைக்கு மேல் தூக்கியவன்,
அவளுடைய இரு கைகளையும் ஒரு கையால் பிடித்துத் தலைக்கு மேல் தூக்கி சோஃபாவோடு அணைத்தவன், அவளது கண்களை நேராக ஊடுருவினான். தூரிகாவின் நக்கல் இப்போது காணாமல் போயிருந்தது; அதற்குப் பதில் ஒருவிதத் தவிப்பும், படபடப்பும் அவளிடம் தொற்றிக்கொண்டது.
நீ , பேசல நான் கேட்கல அப்படித்தானே? என்று அவன் குரலைத் தாழ்த்திக் கேட்க, அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டது.
அவன் இன்னும் நெருங்கினான். அவளது பிடிமானத்தைத் தளர்த்தாமல், "இப்போ சொல்லு... காஃபி போட்டுத் தரச் சொன்னது தப்பா?"
தூரிகா தப்பிக்க வழி தேடி அங்கும் இங்கும் விழிகளை உருட்டினாள். "ச... கை வலிக்குது... விடு.. இல்லை கை வலிக்குது விடுங்க என்றாள்"
விட முடியாது! நீ பண்ணின நக்கலுக்கு ஒரு தண்டனை வேண்டாமா?" என்றவன், அவளது பயந்த முகத்தைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் கோபத்தை விடக் காதல் அதிகமாக இருந்தது.
அவள் கைகளை மெல்ல விடுவித்தவன், சட்டென அவளது நெற்றியில் இருந்த முடிகளை தனது விரலால் ஒரு சுண்டிவிட்டு, "இனிமேல் இப்படித் திருட்டு முழி முழிச்சா அப்புறம் என்ன பண்ணுவேன் தெரியுமா என்று இன்னும் அருகில் வந்தான்..
இல்லை நான் அப்படி பேச மாட்டேன் கையை விடு என்றாள்..
ஒழுங்கா போய் எனக்கு ஒரு ஸ்ட்ராங் காஃபி போட்டு எடுத்துட்டு வா. சர்க்கரை கரெக்டா இருக்கணும், புரியுதா?"என்றான்..
தூரிகா தன் கைகளைத் தடவிக்கொண்டே, அவனை ஒரு முறை முறைத்துவிட்டு, "ராட்சசன்... ஒரு காஃபிக்கு இவ்வளவு பில்டப்பா?" என்று முணுமுணுத்தபடி கிச்சனுக்கு ஓடினாள்.
அவன் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, அவள் ஓடுவதைப் பார்த்து ரசனையுடன் புன்னகைத்தான்...
அங்கிருந்த தட்டில் அவள் முகத்தைப் பார்த்தவள், கன்னங்கள் சிவந்து போயிருப்பதைப் பார்த்தாள்..சட்டென்று கைகளால் அவள் முகத்தை மூடிக் கொண்டாள்..
"அடியேய் தூரிகா... என்னடி இது? இவ்வளவு நேரமா அவன்கிட்ட சண்டை போட்டுட்டு, இப்ப என்னவோ புதுப் பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுட்டு இருக்க?" என்று தனக்குத்தானே திட்டிக்கொண்டாள்...
அடச்சே நீயும் புதுப் பொண்ணு தான் டி என்று மைண்ட் வாய்ஸ் அவளின் மண்டையில் அடித்தது...
அவள் கொண்டு வந்த காஃபியை அவளையே குடிக்க சொன்னான்..
நீ போட்டு நீயே குடி, கோபத்தில நீ எச்சி துப்பி குடுத்தாலும் குடுப்ப எனக்கு வேண்டாம் என்று அவளுக்கு முதலில் போட்ட காஃபியை குடித்து முடித்து இருந்தான்.. பேப்பர் படித்து விட்டு சிறிது நேரத்தில் அவன் அலுவலகம் கிளம்பத் தயாரானான். கண்ணாடி முன் நின்று அவன் டை கட்டிக் கொண்டிருக்க, தூரிகா ஹால் சோஃபாவில் அமர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் சட்டையைச் சரிசெய்து, வாட்சை மாட்டிக் கொண்டு, பெர்ஃப்யூமை ஸ்ப்ரே செய்தான்... ம்க்கும் பெர்ஃப்யூம் போட்டு போய் ஆஃபிஸ்ல யாரை மயக்கப் போறான் என்று மனதிற்குள் நக்கல் பேச்சு வேறு அவளுக்கு வந்தது..
அவன் கண்ணாடியின் வழியாகவே அவளைப் பார்த்து, "என்ன நான் ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்கேன் அதனால சைட் அடிக்கிறயா என்றான்..
சைட் அடிக்கிற அளவுக்கு நீ ஒன்னும் ஒர்த் இல்லை ; உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு அந்த ஞாபகம் இருக்கட்டும் என்று கூறி விட்டு,
தான் ஏன் அப்படி சொன்னோம் என்று அவள் வாயை கைகளால் பொத்திக் கொண்டாள்...
அவளை முறைத்து விட்டு, இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது...
இன்னும் அங்கேயே தான் உக்காந்துட்டு இருப்பியா? வந்து ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்து வை டி ?" என்று அதட்டலாகக் கேட்டான்.
"ஏன்? உங்களுக்கு கை இருக்கு தானே நீங்களே போட்டு சாப்பிடுங்க, நான் எதுக்கு வரணும்?" என்று அவள் நாக்கை துருத்தினாள்...
எனக்கு டைம் ஆச்சு , ஈவினிங் வந்து பாத்துக்கிறேன் டி, என்று அவனே பரிமாறி உணவு உண்டு சென்று விட்டான்....
அவன் சென்றதும்,
தன் அம்மா, தோழி, கதிர், தன் மாமியார் அனைவருடனும் பேசி பொழுதைக் கழித்தாள்…