• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் உயிரினில் கலந்தேன் கரைந்தேனே 6

உயிர் 6
அடுத்த நாள் ஞாயிறு..அவன் வழக்கம் போல நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விட்டு மதியம் தான் வருவான்...

வழக்கமான வேலைகளை செய்தவளுக்கு , பிறந்த வீட்டினரின் ஞாபகம்..பிறந்த வீட்டினரின் அருகாமையை தேடினாள் தூரிகா..

தன் அம்மாவுக்கு ஃபோன் செய்து சிறிது நேரம் அனைவரிடமும் பேசினாள்‌...

"அம்மா எனக்கு உங்களை பார்க்கனும் போல இருக்கு..நீங்க வரீங்களா? இல்லை நான் அங்க வரட்டுமா" என்றாள் ஏக்கமாக..

"கண்ணு , ஆதிரை மாசமா இருக்காளாம்... உன் மாமன் என்னை அங்க வரச் சொல்லி இருக்கான் டி"..

அப்படியா மாமா என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லை என்றாள்..
ஆதிரைக்கு கொஞ்சம் முடியலையாம் டி‌‌... நானும் அம்மாச்சியும் போறோம்..

அவ அம்மாவும் இப்ப வர முடியாது..

நான் வேணும்ன்னா அத்தைய வரச் சொல்லட்டுமா என்றார்.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. அப்புறம் மாமா தனியா இருப்பாங்க, அவருக்கு கடைல சாப்பிட்டு சேராது என்றாள்..

சரி விடுங்க அப்புறம் அப்பா என்ன சொன்னாரு ? என்றாள் ‌‌..
"அப்பாக்கு வேலை அதிகம் இருக்காம் அவருக்கு என்ன ஏதாவது கடையில வாங்கி சாப்பிடுவாறு, இல்லன்னா இனியா வீட்டுல இருந்து வரும் என்றார் "..
"ஏன் மா! மாமா என்கிட்ட கூட சொல்லவே இல்லை" என்று மறுபடியும் கேட்டாள்..

அது நான் தான் டி மூனு மாசத்துக்கு அப்புறம் சொல்லிக்க சொன்னேன்..



ஓஹ் அப்போ நான் வேற யாரோ வா .. என் கிட்ட கூட சொல்லக்கூடான்னு சொல்லி இருக்க..



கண்ணாலம் பண்ணி தாட்டி விட்டுட்டு அப்படியே ஒதுக்கி வெச்சிட்ட,



என் மேல யாருக்குமே அக்கறை இல்லை என்று அவள் பாட்டுக்கு புலம்ப,



தூரி ஏதும் பிரச்சனையா டி?



மாப்பிள்ளை கூட சண்டை ஏதும் போட்டியா? என்று அவளை கேட்க?
சண்டையா , அதெல்லாம் சண்டை போடலையே, சும்மா தான் கேட்டேன்" என்று சமாளித்தாள் தூரிகா.



"இல்லடி கண்ணு... உன் குரலே சரியில்லை. மாப்பிள்ளை உன்னை நல்லா தானே பார்த்துக்கிறார்?" என்று அம்மா பதற, "ம்ம் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைம்மா, நான் சும்மா தான் உங்க ஞாபகம் வந்துச்சுன்னு கேட்டேன்.
சரி நீங்க அங்க ஆதிரை அக்கா கூட இருங்க, அவங்களுக்கு தான் இப்போ ஆள் துணை தேவை" என்று பேச்சை மாற்றி, அரக்கப்பரக்க போனை வைத்தாள் தூரிகா.



போனை வைத்த பின்னும் அவளுக்குள் இருந்த ஏக்கம் குறையவில்லை; மாறாக, லேசான பொறாமையும் ஏமாற்றமும் சேர்ந்துகொண்டது.



எனக்கும் கல்யாணம் ஆகி மூணு மாசம் தான் ஆகுது... ஆனா என்னை எல்லாரும் அப்படியே மறந்துட்டாங்க. நான் கேட்டா மட்டும் 'அத்தையை வரச்சொல்லவா?' அப்படின்னு கேக்குறாங்க. நான் என் அம்மாவை பார்க்கணும்னு நினைச்சா கூட முடியாதா?" என்று மனதுக்குள் புலம்பினாள்.



கல்யாணத்திற்கு முன்பு வரை அந்த வீட்டில் எல்லாவற்றிலும் முதல் ஆளாக நின்றவள் தான். ஆதிரை முதல் கர்ப்பம் உறுதியான நாட்களில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது..கதிர் ஒருபுறம், தூரிகா ஒரு புறம் என்று அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்...ஆனால் இன்று தனக்குத் தெரியாமல் தன் குடும்பத்தில் இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை..

ஶ்ரீ ராம் கூட எப்ப நார்மலா பேசறான், எப்ப கோபமா பேசறானன்னு தெரியல; ஆனா எப்ப எது பேசினாலும் சண்டை தான் வருது..

அப்படியே இருந்தாலும் அவன் வேலைக்கு போவான், வருவான், ஒரு வார்த்தை கூட உனக்கு என்ன வேணும் ன்னு கேட்க மாட்டான்..

சன்டே ஆனதும் ஃப்ரெண்ட்ஸ் கூட போயிடுவான்..

நான் என்ன பண்றது, இங்க எனக்கு தெரிஞ்சு யாருமே இல்லை..



ஊருக்கு போவோம் ன்னு பார்த்தா அம்மா மும்பை போறாங்க என்று அவளால் வருத்தம் மட்டுமே பட முடிந்தது..
எல்லாம் மனதை குழப்பி யோசித்துக் கொண்டு இருந்தவளின்



மொபைலில் "கதிர் மாமா" காலிங் என்று அவளுக்கு ஒரு வீடியோ கால் வந்தது.



ஸ்கிரீனில் கதிர் மாமாவின் முகம் மின்னியதும், தூரிகா அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு போனை எடுத்தாள்.



"என்ன தூரிம்மா... உங்க அம்மா கூப்பிட்டு சொன்னாங்க. போன்ல ஏதோ அழுதுட்டே பேசினியாமே? என்னாச்சுடா? மாப்பிள்ளை ஏதும் திட்டினாரா? இல்ல, உனக்கு உடம்பு ஏதும் முடியலையா?" என்று கதிரின் குரலில் அத்தனை பதற்றம் இருந்தது.



"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா..." என்று அவள் இழுக்க,



"ஏய், எனக்குத் தெரியாதா உன்னை பத்தி? உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது, அழுதுருக்கனு. என்ன விஷயம்னு சொல்லு" என்று அதட்டலாகவும் பாசமாகவும் கேட்டான் கதிர்.



தூரிகா மெல்லத் தன் மனக்குமுறலைக் கொட்டினாள். "ஆதிரை அக்காக்கு விசேஷம்ங்கிற விஷயத்தை என்கிட்ட சொல்லணும்னு கூட உங்களுக்குத் தோணல இல்ல மாமா? நான் கல்யாணம் பண்ணி வந்துட்டேன்னு என்னை வேற ஆளா பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க. அம்மாச்சி, அம்மா எல்லாரும் அங்க வர்றாங்க... எனக்கு மட்டும் உங்க ஞாபகம் இருக்காதா?" என்று ஏக்கமாகக் கேட்டாள்.



அவள் பேசியதைக் கேட்டு கதிர் கலகலவென சிரிக்கத் தொடங்கினான்.

"அடப்பாவமே! இதுக்குத் தான் இப்படி அழுதுட்டு இருந்தியா? ஏய் லூசு ஆதிரைக்கு இப்போ ரெண்டு மாசம் கூட ஆகல. ஆரம்பத்துலேயே வெளிய சொல்லக் கூடாதுன்னு அக்கா தான் என் வாயைக் கட்டிப் போட்டாங்க. உன்கிட்ட சொன்னா, நீ உடனே ஆதிரைக்கு ஃபோன் பண்ணி கத்தி ஊரைக் கூட்டிடுவ, அவளுக்கு இப்போ தான் கொஞ்சம் வாந்தி, மயக்கம்னு உடம்பு முடியாம இருக்கு, அதான் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு சொல்லல" என்று கதிர் விளக்கினான்..அப்புறம் ஆதிரையைப் பார்க்க மட்டும் இல்ல தூரி. அவளுக்கு கொஞ்சம் சமையல் செஞ்சு கொடுத்துட்டு, அப்படியே ஆரவ் குட்டியவும் பார்த்துக்கத்தான் வராங்க மா என்றான்..
மாமாவின் பேச்சைக் கேட்டதும் தான் தூரிகாவின் பாரமான நெஞ்சம் கொஞ்சம் லேசானது. தான் தவறாகப் புரிந்து கொண்டதை நினைத்து அவளுக்குச் சிரிப்பும் வந்தது..
"அக்கா தூங்கறாங்களா ?" என்று வினவ..
ஆமா டா ஆரவ் குட்டியும் கூட சேர்ந்து தூங்கறான்..
எழும்புனதும் கால் பண்றேன் என்றான் கதிர்..
அப்போது தான் விளையாடி முடித்து வீட்டுக்கு வந்தான் ஶ்ரீ..
" ஶ்ரீ இருக்கானா? எங்க காணோம் என்றான் "..
இப்ப தான் மாமா வந்தாங்க என்று

தூரிகா போனைத் தன் கணவன் ஸ்ரீராமிடம் கொடுக்க, அவன் சிரித்துக் கொண்டே வாங்கினான்.

"என்ன அண்ணா நல்லா இருக்கீங்களா?, கிரிக்கெட் விளையாடிட்டு இப்பதான் வந்தேன். என்ன சொல்றா உங்க செல்லப் பிள்ளை என்று ஸ்ரீராம் கிண்டலாகக் கேட்க, தூரிகா அவனை முறைத்தாள்.


"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்பிள்ளை, அவ சும்மா சின்ன பிள்ளை தனமா கோவிச்சுக்கிட்டா, நான் பேசி சமாதானம் பண்ணிட்டேன்" என்று சிரித்த கதிர், அடுத்த நொடியே லேசான வம்புச் சிரிப்போடு குரலை மாற்றினான்..
ஆதிரையும் எழுந்து வர,

சரி , அப்படியே லைன்ல இருங்க, ஆதிரையும் வந்துட்டா" என்று சொல்லி, ஆதிரையையும் வீடியோ காலில் இணைத்தான். ஆதிரை முகத்தில் கர்ப்பகாலத்து சோர்வு இருந்தாலும், தூரிகாவைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
அக்கா கங்ராட்ஸ்.. அடுத்து குட்டி பாப்பா வேணும் என்றாள்..
அதுக்கென்ன கண்டிப்பா என்றாள்..
ஶ்ரீ ராமும் அவர்கள் விஷயத்தை அறிந்து வாழ்த்துக்கள் கூறினான்..

"


"நாங்க குட் நியூஸ் சொல்லிட்டோம். அடுத்து நீங்க ரெண்டு பேரும் எப்ப எங்களுக்கு குட் நியூஸ் சொல்லப் போறீங்க? "நாங்க சீக்கிரம் பெரியப்பா, பெரியம்மா ஆகணும்ல!" என்று கதிர் கலகலவெனக் கேட்டுவிட்டு ஸ்ரீராமின் முகத்தையே உற்றுப் பார்த்தான்.


அப்படி கேட்டதும்,"ஸ்ரீராமும் தூரிகாவும் ஒரு நொடி அப்படியே உறைந்து போனார்கள்". ஸ்ரீராம் சட்டென்று தூரிகாவைப் பார்க்க, தூரிகாவும் திருதிருவென விழித்துக் கொண்டு ஸ்ரீராமைப் பார்த்தாள். இருவர் முகத்திலும் அப்பட்டமான பதற்றமும், ஒருவிதத் தவிப்பும் தெரிந்தது. அதை மறைப்பதற்காக இருவரும் மாற்றி மாற்றி அசடு வழிந்து சிரித்துக் கொண்டனர்.


வீடியோ காலில் இருந்தாலும் கதிரின் கண்கள் அதைத் துல்லியமாகக் கவனித்துவிட்டான்.

வழக்கமாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் புதுமணத் தம்பதிகள் வெட்கப்படுவார்கள், அல்லது 'போங்க மாமா' என்று மழுப்புவார்கள். ஆனால், இவர்களின் முகத்தில் தெரிந்தது வெட்கம் இல்லை; ஏதோ ஒரு தயக்கமும் பயமும்.



கதிரின் மனதில் சட்டென்று ஒரு சந்தேகம் முளைத்தது. 'கல்யாணம் ஆகி மூனு மாசம் ஆகுது... ஆனா இவங்க ரெண்டு பேரோட பார்வையும் நடந்துக்கற விதமும் இன்னும் அந்நியமாவே இருக்கு. ஒருவேளை... இவங்க ரெண்டு பேரும் இன்னும் முறைப்படி ஒண்ணா சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலையோ? கணவன் மனைவியா இவங்களுக்குள்ள நெருக்கமே வரலையோ?'



யோசிக்க யோசிக்க கதிருக்குத் தலை சுற்றியது. தூரிகா அவனுக்குப் பாசமான மருமகள் மட்டுமல்ல, தன் கைகளால் வளர்த்த பிள்ளை. அவளது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பார்த்துப் பார்த்து இந்தத் திருமணத்தைச் செய்து வைத்தார்கள்.



கதிருக்கோ சந்தேகம் வலுத்தது. ஆனால், இதை எப்படி இவர்களிடம் வெளிப்படையாகக் கேக்கறது? 'நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்கீங்களா?' என்று ஒரு மாமனாக நின்று அவளிடம் கேட்பது நாகரீகமாக இருக்காது என்று நினைத்துக்கொண்டான்..



என்ன தம்பி... பதிலே இல்லை?" என்று தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு சாதாரணக் குரலில் கேட்டான் கதிர்.



"ஆ... அது... அதுக்கென்ன அண்ணா, சீக்கிரம் சொல்லிட்டா போச்சு" என்று ஸ்ரீராம் எப்படியோ சமாளித்துப் பேசினான். தூரிகா தரையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.



"சரிடா கண்ணு... ஆதிரைக்கு மாத்திரை கொடுக்கணும். நான் அப்புறமா கூப்பிடுறேன். மாப்பிள்ளை, பார்த்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு கதிர் போனை வைத்தான்.



போனை வைத்த பிறகும் கதிரின் மனம் அமைதியாகவில்லை. அவனது பார்வை நேராக ஆதிரையின் பக்கம் திரும்பியது. தன் சந்தேகத்தை ஆதிரையிடம் சொல்லி, அவளை வைத்து தூரிகாவிடம் மெதுவாகப் பேசச் சொல்லலாமா என்று அவன் யோசிக்கத் தொடங்கினான்.

















""



"




" ..
 
Top Bottom