• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 1

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டு விடு

அத்தியாயம் 1

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையமே டிவி வீடியோக்களின் கேமராக்களின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது அனைத்து சேனல்களிலும் பரபரப்பான ஒரே பெயர் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது ஆதித்யா குரூப்ஸ் கம்பெனியின் தற்போதைய சிஏஓவும் பிரபல இளம் தொழிலதிபருமான ஆதித்ய இளஞ்செழியன் முதல் முறை இந்தியா வருகை இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு ஆதித்யா குரூப்ஸ் தலைமை உறுப்பினர்கள் தன் தாயகத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர்

மருத்துவத்துறையில் கால் பதிக்கும் ஆதித்யா குரூப் உலகின் இவர்கள் தொடாத துறைகளே இல்லை கல்வி, கட்டுமானம் ,நகை, உடை, உணவு, விவசாயம், கணினி அனைத்திலும் தனக்கு என்று தனி இடம் பெற்று வந்த ஆதித்யா குரூப்ஸ் தொடாத ஒரே துறை மருத்துவத்துறை மட்டுமே இன்று அதனிலும் தனது
தனித்தன்மையை நிலை நிறுத்த தயாராகிவிட்டனர்

நேரடி காட்சிகள் என்று ஆதித்த இளஞ்செழியன் அவனது தந்தையும் முன்னாள் சி ஏ ஓ வுமாகிய ஆதித்ய விவேகனுடன் படை சூழ நடை போட்டு வரும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்க அனைத்து டிவி மீடியாக்களும் அவர்களிடம் ஒரு வார்த்தையாவது வாங்கிவிட வேண்டும் தம் சேனலின் ரேட்டிங்கை பல மடங்கு உயர்த்த உதவும் என்ற எண்ணத்தோடு மைக்கை இவர்கள் முன்ன நீட்டி நிற்க

அவர்களின் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்தது என்னவோ முன்னாள் சி ஏ ஓ ஆதித்ய விவேகன் தான் நாங்கள் இங்கு வந்திருப்பது இந்தியாவில் பல இடங்களில் ஆதித்யா மல்டி நேஷனல் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை செயல்படுத்தவே அதன் முதல் படியாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் அதாவது சென்னை ,மும்பை, கல்கத்தா, பெங்களூர் போன்ற முதல் நிலை நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த மருத்துவமனைகளை ஆதித்யா குரூப்ஸ் வாங்கி உள்ளது அதன் தரத்தினை பொறுத்து அதனை விரிவுபடுத்தவோ மாற்றி அமைப்பது குறித்தோ எங்கள் டீம் ஆராய்ந்து முடிவு செய்யும்

எங்களது இந்த முயற்சி பல ஏழை எளிய மக்களின் வாழ்வில் வெளிச்சம் கொண்டுவரும் என்று நம்புகிறோம் நன்றி என்றவர் மகனை ஒரு பார்வை பார்த்தார் அவனும் சின்ன சிரிப்பை மட்டுமே பதிலாக தந்துவிட்டு தன் கார் நோக்கி நடக்க
அவனை பின்தொடர்ந்தனர் அவன் அலுவலக பட்டாளம்

நேரடி ஒளிபரப்பு இப்போது விவாத மேடையாகி போனது ஏன் எதற்கு பல விமர்சனங்களை தாங்கி சென்றது இந்த விவாத மேடை

ஆதித்யா குரூப்ஸ் ஷார்களின் விலை வரலாறு காணாத ஏற்றம் என்ற செய்தி ஒரு புறம் என்று சென்று கொண்டிருக்க
அதற்கு காரணமானவனோ ஏதோ அறியாதவன் போல் மணிக்கணியில் விழிபதித்து அமர்ந்திருந்தான்

அவன் நினைவுகளை கலைத்தது அவன் கைபேசி அழைப்பு எடுத்துப் பார்த்தவன் இதழ்களில் மெல்லியபுன்னகை எட்டிப் பார்த்தது கைபேசியை ஆன் செய்து
"சொல்லுங்க" கிராண்ட்ஃபா என்றான் "என்ன பேரா எல்லாம் ஓகே தானே" என்றார் தாத்தா அவனது அப்பாவின் அப்பா ஆதித்ய சேரமான்

"கடைசில நீயும் உன் அண்ணன் சொல்றது தான் கேட்டு நடக்கிற" என்றவர் குரல் வெகுவாய் சோர்ந்திருந்தது

கிராண்ட் பா "சில்... இத மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் ஆதித்யா குரூப்ஸ் எந்த நாட்டையும் எந்த தொழிலையும் விட்டு வைக்கவில்லை என்ற பெருமையாய் சொல்லும் நாள் வரும் "
கிராண்ட்ஃபா

ம்ம்ம்.... "என் அரசி டார்லிங் எங்கே ?"என்ற பெயர் கேட்டது தான் மிச்சம் '
" எப்படிடா இருக்க இளா " என்ற குரல் துள்ளல்ஒலித்தது செழியனின் பாட்டியும் சேரமானின் மனைவியும் மாகிய தமிழரசியின் குரல்

இட்ஸ் டு மச் டார்லிங் நான் வீட்ல இருந்து கிளம்பி ஒரு நாள் கூட முடியல அதுக்குள்ள என் டார்லிங் என்ன ரொம்ப மிஸ் பண்றீங்க அப்படித்தானே என்றவன் வாய்விட்ட சிரிக்கத் தொடங்கினான்

அவன் சத்தம் கேட்டு நோன்பை விட்டு வெளியே வந்தார் விவேகன ஆரம்பிச்சிட்டீங்களா உங்க டார்லிங் கூட அரட்டை என்று அவன் அருகில் உள்ள சேரில் உட்கார்ந்தார்

அதே நேரத்தில் வேறு ஒரு அறையில் இருந்து கணினியை ஆராய்ந்து கொண்டு இருந்த செழியனின் பி ஏ பிரின்சின் கைபேசி ஒலித்தது எடுத்துப் பார்த்த பிரின்ஸ்
எழுந்து சென்ற கதவை சாத்திவிட்டு சொல்லுங்க பாஸ் என்றான்

அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டது தெரியாது ஆனால் பிரண்ட்ஸ் எஸ் பாஸ் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான்

அடுத்தது சென்னை பாஸ்
........….
டெமாலிஸ் செய்ய சொல்லியாச்சு பாஸ்
........,.....
நான் கூடவே இருக்கேன் பாஸ்
.............
முடித்துவிட்டு தான் பாஸ் ஜெர்மனி ...வருவேன்....நம்பலாம் பாஸ்
............
நானே உங்களுக்கு பேசுறேன் பாஸ் .
........

எல்லா வசதியும் இருக்கு பாஸ் டாக்டர் உட்பட பக்கத்து ரூம்ல .......எல்லாரும் இருக்காங்க
............சரி ஓகே பாஸ் என்று கைப்பேசியை வைத்துவிட்டு செழியன் தந்தையும் இருந்து அறையை நோக்கி வந்தான் அவர்கள் உரையாடலில் கலந்து கொண்டான்

பேச்சு நீண்டு கொண்டே சென்றது அம்மா பத்மினி, அண்ணி ஜெனிபர் குட்டீஸ் ஆத்விக் ஆதிரன் உட்பட அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான் பேசிக் கொண்டிருப்பவனை அதிசயமாக பார்த்தான் பிரின்ஸ்




 
Top Bottom