• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 10

ரோசி கஜன்

Administrator
Staff member

விவேகனுக்கு புரிந்து விட்டது தன் மகன் இங்கு நடப்பதை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தாங்கள் மூவரும் அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கும் முன் அவன் நமக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டான் என்று.. அந்த ரெசார்ட்டின் கடைக்கோடியில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் நோக்கி வேக நடைப போட்டார் தொடர்ந்தார்கள் விஜய் மற்றும் பிரின்ஸ் இருவரும்
அங்கே பாதுகாப்பு பணியில் இருந்தனர் புதிதாக 5 பேர்

உள்ளே காலை வைக்கும் முன்னே வெல்கம் பாதர் ஆப் ஆதித்யா இளஞ்செழியன் அண்ட் தி கிரேட் ஃப்ரெண்ட் ஆப் மை ப்ரோ என்று சாய்வு நாற்காலியில் இருந்து ஆள் உயரத்திற்கு எழுந்து நின்றான் ஆதித்ய இளஞ்செழியன் அவனைக் காணும் பொழுது அவன் மனநிலை என்ன என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை இதழ்களில் புன்னகை, கண்களில் கூர்மை, நின்றதொரணையில் தொக்கி நின்ற வினா? பாட்டியின் வரவு அவன் இதழ்களின் புன்னகையை அதிகரித்தது டார்லிங் உங்க மகன் நீங்க வரும் வரை ஏதும் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார் என்றபடி அந்த ஜூசை கொடுத்து விரதத்தை முடித்து வையுங்க என்று அப்பாவின் முகத்தைப் பார்த்தான்

அப்பொழுதுதான் அவருக்கே ஞாபகம் வந்தது தான் சாப்பிடாமல் இருப்பது எப்படி தெரியும் இவனுக்கு? ....

ம்...ம்....மகிழினி கண்ஸ்ட்ரக்ஷன் இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று விஜயவர்மனை பார்த்து இருக்கையை கை காட்டினான் செழியன்.
தேங்க்யூ செழியன் என்றபடி அவன் காட்டியயிருக்கையில் அமர்ந்தான் விஜயவர்மன் தன் தங்கையை நினைத்து ஒருபுறம் கவலை இருந்தாலும் அவள் அருகில் அலுவலகத்தில் பாதுகாப்பாய் அட்சயா இருப்பாள் என்ன பிரச்சனை என்றாலும் அவனுக்கு அழைப்பு வந்திருக்கும் இதுவரை வரவில்லை என்றபோதே அவர்கள் நேரம் போவது தெரியாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று

அப்பா எனக்கு பிசினஸ் கத்து கொடுத்தது நீங்கதான் ஆனால் அதனை உலகம் முழுவதும் ஒரே இடத்தில் இருந்து நடத்துபவன் நான் ....ரெசார்ட் சிசிடிவி கேமராவை அகற்றினால் மட்டும் போதாது அந்த நொடி அந்த இடம் முழுதும் நம் கண்ட்ரோலில் தான் இருக்க வேண்டும் மேனஜர் முதல் செக்யூரிட்டி வரையில்...

ஓகே ...நீங்க சென்னை வந்தது வரை ஓகே ...என் பிஏவை உங்க கூட கூட்டிட்டு வந்தது தான் நீங்க பண்ணிய தப்பு.. என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே விஜயின் செல் தன் இருப்பை காட்டியது அதை கவனித்த செழியன் விஜய் சார் நீங்க கிளம்புங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு வீட்ல தேடுவாங்க என்று அவனை கிளம்ப சொல்ல

ஓகே சார் நான் கிளம்புறேன் என்று விவேகனையை பார்த்து நின்றான் விஜய்

ஓகே பா காலையில பார்க்கலாம் என்று விடை கொடுத்தார் விவேகன்.

என்னப்பா எனக்கு தெரியாம ரொம்ப வேலைகள் நடக்குது போல எனக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா? எனக்கு தெரியவே கூடாதுனு நினைக்கிறீங்களா ?என்று தன் தந்தையை பார்த்து வினா எழுப்பி நின்றான் செழியன்.

சர்ப்ரைஸ் பிளான் பண்றவன் அதை முதலில் சொல்லணும் சம்பந்தப்பட்டவங்க கிட்ட நீ எதுவுமே சொல்லல நானும் நாங்க இந்தியா வர்றோம் அப்படின்னு நான் உன் பையன் கிட்ட சொல்லிட்டேன் ஆனா சென்னை.. சொல்லலப்பா என்ற தமிழரசியை முறைத்துக் கொண்டு நின்றார் விவேகன்
.
சரி தம்பி சாப்பிட வாங்க என்று டைனிங் ஹாலையை நோக்கி சென்றார் மகனையும் பேரனையும் அழைத்துக் கொண்டு...

மகிழினி கண்ஸ்ட்ரக்ஷன்ஸ் விஜயின் கார் வந்து நின்ற போது மகிழினி வாசலில் நின்று கொண்டிருப்பதை பார்த்த உடனே தெரிந்து விட்டது அவள் டென்ஷனில் இருக்கிறாள் என்று தன் மேனேஜரை கிளம்ப சொல்லிவிட்டு மகிழினியின் பக்கத்தில் வந்தான் விஜய் மகிழினியின் முகம் பயத்தில் வெளரிப் போயிருந்தது விஜயை இறுக்கி அணைத்துக் கொண்டுடாள்.

ஓகே...டா
கிளம்பலாமா ? என்று கேட்டவாரே சில கோப்புகளை மேற்பார்வையிட்டு.. சிசிடிவி புட்டேஜ்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்ப ரெடி ஆனான் விஜயவர்மன்

உன்னை நானே வீட்டில் விட்டுட்டு போறேன் என்றான் விஜய் அட்சயாவிடம்
அண்ணா! நான் அப்பாவிடம் இன்பார்ம் செய்து விட்டேன் அப்பா கார் அனுப்பி இருக்காங்க நான் அதிலேயே வகையில் சென்று விடுவேன் என்று சொல்ல சொல்லிக் லபோதே கார் வர பை.. அண்ணா மகிழ் என்று சிட்டாய் பறந்து சென்றாள் அட்சயா.

காடுவெட்டி
சண்முகவேல் பாஸ்கரவர்மனின் குரல் கேட்டு பின் வாசல் வழியே தோட்டத்திற்கு சென்றார்

வா...
சண்முகா பிள்ளைகள் சரஸ்வதி எல்லாரும் எப்படி இருக்காங்க என்றவாறு அங்கு தாவர கொடியால் அமைக்கப்பட்ட பந்தலின் அடியில் போடப்பட்ட கட்டிலில் அமர்ந்தார். பாஸ்கர வர்மன்

சண்முகவேல் சலித்துக் கொண்டே அவங்க எல்லாரும் நல்லாதான் இருக்காங்க நீங்க தான் பிள்ளைகள் சொல்றதையும் கேட்பதில்லை நான் சொல்றதையும் கேட்பதில்லை உங்களை இந்த ஊர்ல இருக்க விடுவதே தவறு தன் ஐயா என்றார் ஆதங்கத்துடன்.

அவ்வளவு வசதி வாய்ப்போடு வீடு கட்டி கொடுத்திருக்கார் சின்னையா அந்த வீட்டைவிட இந்த ஓட்டு வீட்டில் நீங்கள் இருப்பது தான் அதிகம்..

அங்க இருக்கறத விட்டுட்டு இந்த ஓட்டு வீட்டில் என்ன இருக்கிறது? என்று இங்கே இங்கே வந்து இருக்கீங்க ஐயா? என்ற சண்முகவேல்

சண்முகா அந்த வீட்டில் சின்னையா சின்னம்மா ஞாபகம் அதிகமா... வருது அங்க நான் தனியா இருக்கனும் இங்கு அப்படி இல்ல அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வெளித்திண்ணையில் இருந்து கொஞ்சம் மனம் விட்டு பேசலாம் சாய்வு நாற்காலியில் கொஞ்சம் சாய்ந்து படுக்கலாம் பயம் இல்லாத சுத்தி வெள்ளந்தியான மக்களின் வாழும் இடம் இது

சரஸ்வதி எனக்காக தான் உன்னை விட்டுட்டு பிள்ளைகளோடு இருக்கிறாள் அவள் என் பேரப்பிள்ளைகளுக்கும் அம்மாவாய் ஆகியவள்டா இந்த வீடு பல இனிய நினைவுகளைக் கொண்ட இடம் வசதி குறைவு தான் ஆனால் மகிழ்ச்சி அதிக உள்ள இடம் இது என்றார் பாஸ்கர வர்மன்

சாப்பிட வாங்க ஐயா என்று அழைத்தால் கண்ணம்மா வா சண்முகா சாப்பாடு சாப்பிடலாம் நேத்து நைட்டு சாப்பிட்டது தானே காலையில் ஒன்றும் சாப்பிட்டு இருக்க மாட்டாய் அங்கு வீட்டில் புறப்பட்ட கார் இங்கு வந்து தானே இறங்கி இருப்பாய் என்றவரை பார்த்து சிரித்துக் கொண்டே சரஸ்வதி சாப்பாடு கட்டி கொடுத்து அனுப்பினால் உங்களுக்கும் தேங்காய் போடாமல் கறி குழம்பு கருவாட்டு குழம்பும் கொடுத்துவிட்டு இருக்கிறாள் என்றார் சண்முகவேல், அண்ணே! கறி குழம்பு கருவாட்டு குழம்பு ரெண்டும் எடுத்து சூடாக்கி வைத்து விட்டேன் என்றாள் கண்ணம்மா

இருவருக்கும் இலை போட்டு பரிமாற ஆரம்பித்தாள் கண்ணம்மா
 
Top Bottom