உன் காதலால் என்னை மீட்டுவிடு - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113

சென்னை கடற்கரை ரெசார்ட்டில் :- என்ன அப்பா வயசாகி போச்சா? ஷார்ப்னஸ் குறைந்த மாதிரி இருக்கு என்று தன் தகப்பனை கேலி செய்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான் செழியன்

நீங்க அம்மா பாட்டி ஏன் இன்னும் வரவில்லை என்று நினைக்கும் முன்னே அண்ணா மாறா கரெக்டா எனக்கு கால் செய்து பாட்டியையும் அம்மாவையும் ரிசீவ் செய்து விட்டாயா ? என்று கேட்டான் என்ன சொல்றீங்க? என்று கேட்டதற்கு எனக்கு உன்னை ..தெரியும்டா என்றான் அவனிடம் தப்பிக்க முடியவில்லை கடைசியாக ஒத்துக் கொண்டேன் அதன் பின் அழைப்பை துண்டிக்க விடாமல் பேசிக்கொண்டே ரெகார்ட் வந்து விட்டேன் எப்படி ? என்று சிரித்துக் கொண்டே வினா எழுப்பி நின்றான் விவேகனின் இளைய மகன்.

சரி சரி போய் ஓய்வெடுங்க எங்களுக்கும் பயணக் களைப்பு தீரவில்லை என்று பத்மினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே விவேகனை அழைத்தான் மாறன் என்னப்பா அம்மாவை பார்த்து சந்தோஷத்துல எங்கள மறந்துட்டீங்களா நீங்க கூப்பிடுவீங்க என்று நினைத்தேன் ஆனால் ஒரு மணி நேரம் ஆயிற்று உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை அதனால் தான் கூப்பிட்டேன் என்று சற்று நேரம் ஆபீஸ் விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான் மாறன்.

மகிழினி பேலஸிசின் உள்நுழைந்தது விஜயவர்மனின் கார் வாசலிலேயே அமர்ந்திருந்தார் சரஸ்வதி என்ன அம்மா இன்னும் தூங்க போகவில்லையா மா என்று கேட்டபடி காரில் இருந்து இறங்கினான் வர்மன் தன் அருகில் தூக்கத்தில் இருந்த தங்கையை மெல்ல எழுப்பினான் பாப்பா ..வீடு வந்துவிட்டது வாங்க.... சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் ... என்று தங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவனை கண்ட சரஸ்வதிக்கு சிரிப்பு தான் வந்தது

தூக்க கலக்கத்தில் எழுந்த தங்கையை கைத்தாங்களாக அழைத்து கொண்டு சாப்பாடு மேஜை அருகே உள்ள நாற்காலியில் அமர வைத்துவிட்டு தன் கை கால்களை கழுவி வரவும் சச்சிமா சாப்பாடு எடுத்து வரவும் சரியாக இருந்தது.

தட்டில் வைத்த சப்பாத்தியை தங்கைக்கு ஊட்டி விட்டுக்கொண்டே நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க சச்சிம்மா என்று... இன்று நடந்த கதைகளை சச்சிமாவிடம் சொல்ல ஆரம்பித்தான் காலையில் ஆபீஸ்ல கிளம்பியது முதல் வீடு வந்தது வரை சொல்லி முடித்தான். இது தினம் நடப்பது தான் இவன் மட்டுமல்ல மகிழினையும் அப்படித்தான் அவள் சொல்லாமல் விட்டது ஒரே ஒரு விஷயம் அதுவும் மறைக்க வேண்டும் என்று அல்ல ..ஒரு சின்ன தயக்கம் ...அவள் காதல் விசயம் மட்டும்தான் அவரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை

மாடியில் ஏறிய படியே விஜய் ராஜா சாப்பிட்டானா ?வந்தானா? என்று கேட்டான், வந்தான் பா .. பாப்பாவை பார்க்க வந்தான் அவள் வரவில்லை என்றதும் சாப்பிட்டு கிளம்பி விட்டான் என்றவர் பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு தான் அறையில் புகுந்து கொண்டார்

அவர் தன் அறைக்குள் செல்லும் வரை பால்கனியில் நின்று சச்சிமாவை பார்த்தபடி நின்றான் விஜய் பின் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் அறைநோக்கி சென்றான்.
தன் அறைக்கு வந்தவனின் நினைவு முழுவதும் சச்சிமாவை சுற்றியே வந்தது தன்னால் தான் அவர் தன் மகனுடன் இல்லை என்ற நினைப்பு அவனை அதிகமாக பாதித்தது

தன் அம்மாவை விட ஒரு படி அதிகமாகவே சச்சிமாவை பிடிக்கும் இவனுக்கு

சச்சிம்மா இவனுக்கு அம்மா மட்டுமல்ல ..நல்ல தோழி ,ஆசான் ,இவன் வாழ்க்கை மேல் அக்கறை கொண்டவர் தன் தாத்தாவுக்கு அடுத்து அதிக மதிக்கும் நபர் இந்த சச்சிம்மா தான்,

சச்சிமாவின் படிப்பு குறைவு தான் ஆனால் அவர் கூறும் ஆலோசனைகள் படித்த மேதாவிகளையும் மிஞ்சிவிடும் பல அலுவலக விஷயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத போது அவன் நாடுவது தாத்தாவையும் சச்சிமாவையும்தான்.. இவன் மண்டையை குழப்பி கொண்ட பல விஷயங்களை மிக சாதாரணமாக தன் அனுபவ அறிவு மூலம் தீர்த்ததுவும் உண்டு அவர்

எவ்வளவு அன்பு உண்டோ அதே அளவு கண்டிப்பும் உண்டு அவரிடம்

தாத்தா பாபா பாஸ்கர வர்மனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என நினைத்து மணியைப் பார்த்தான் அது 11:50 என்று காட்டியது நல்ல தூக்கத்தில் இருப்பார் ..காலை பேசி கொள்ளலாம் .என்று விளக்கினைந அணைத்துவிட்டு தன் விழிகளை மூடி நித்ரா தேவியிடம் சரணடைந்தான் விஜய்


.
 

Author: ரோசி கஜன்
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.