மறுநாள் காலை 4;50 மணிக்கு சரஸ்வதி எழும்போதே அவரின் கைப்பேசி குரல் கொடுத்தது எடுத்து பார்த்து பச்சை பட்டனை அழுத்தினார் சண்முகவேல் குரல் கதவை திற சரஸ்வதி ஐயா வந்திருக்காங்க என்று பரபரப்பாக கூறினார்
சரஸ்வதிக்கு சிறிது நேரம் எதுவும் தோனவில்லை இதுவரை பாஸகரவர்மன் இந்த வீட்டிற்கு வந்த நிகழ்வுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் இன்று வந்து இருக்கிறார் ஏன்?
என்று நினைத்துக் கொண்டே விளக்குகளை எரிதய விட்டு குளிர விட்டு கதவை திறந்த சரஸ்வதி வாங்கப்பா என்ன என்று வரவேற்று நீர் கொடுத்தும்
அடுப்பில் கடும் காப்பி (கருப்பட்டி காப்பி)யை வைத்தார் பாஸ்கரவர்மனிடம் பிள்ளைகளை எழுப்ப வாப்பா? என்றார்
இருவரும் காப்பியை பருகிக் கொண்டே இரவு எல்லாம் தூக்கமில்லை நான் சென்று சற்று ஓய்வெடுக்கிறேன் பின் பிள்ளைகளை அவர்கள் எழுந்தவுடன் பார்த்துக் கொள்கிறேன் என்று தன் அறையில் ஓய்வெடுக்கச் சென்றார் அவர் தன் அறையை புகுந்தவுடன் சண்முகவேல் சரஸ்வதி முகத்தை பார்த்த அந்த பார்வையில் என்ன கண்டாரோ ....எனக்கும் எதுவும் தெரியவில்லை சரஸ்வதி திடீரென்று சொன்னார் சென்னை போக வேண்டும் இப்போதே என்று என்ன எது என்று நாம் அவரிடம் கேட்க முடியுமா ஆனாலும் காலை கிளம்பலாம் என்று சொன்னேன் ஆனால் அவர் கேட்கவே இல்லை வேறு வழி இல்லை உடனே கிளம்பி வந்து விட்டோம் இரவு உன்னை தொந்தரவு செய்ய மனம் இல்லை என்று தான் விடியற்காலையில் வந்தோம் சரஸ்வதி என்றவர் சரஸ்வதி அறையில் புகுந்து கட்டியில் மெல்ல அமர்ந்து சரஸ்வதியை பார்த்து நீயும் கொஞ்சம் தூங்கு மெதுவாக எழுந்து கொள்ளலாம் என்று கூறி மெல்ல கண்மூடினார்.
இங்கு ரெசாட்டில் தன் காலை பணிகளை முடித்துவிட்டு தன் உடற்பயிற்சியை தொடங்கினான் ஆதித்யா இளஞ்செழியன் சிறிது நேரத்தில் அவனுடன் இணைந்து கொண்டனர் அவன் தந்தை விவேகன், பிஏ பிரின்ஸ்சும்.
செழியன் அப்பா நமக்கு லோக்கலில் கார் ஓட்ட ஒரு டிரைவர் அரேஞ்ச் செய்யுங்க நாம் இங்கே உள்ள சாலையில் இடப்புறம் ஓட்டுவது கொஞ்சம் கஷ்டம் நாம் அனைவரும் இன்டர்நேஷனல் லைசன்ஸ் வச்சிருந்தாலும் இங்கே வலப்புறம் வாகனம் ஓட்டி பழக்கம் சோ கொஞ்சம் பழகும் வரை ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளலாம் சரி தானே என்றான் தம் தந்தையிடம்
பிரின்ஸ் பாஸ் நான் பேப்பரில் ஒரு விளம்பரம்
கொடுக்க ரெடி செய்து கொண்டிருந்த பொழுது விஜய் சார் நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று அந்த விளம்பர பேப்பரை தன் கையோடு எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்றான்
.
ரெசாட்டில் உள்ளே விஜயவர்மன் கார் நுழைந்தது அதிலிருந்து இறங்கி வந்த விஜயவர்மனுடன் ஒரு டிரைவரும் இருந்தார் அவரை அனைவரிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு அவரிடம் அனைவரும் பெரியவங்க கவனமாக ஓட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் அப்பா அம்மா பாட்டிக்கு தான் அவர் டிரைவர் உனக்கு நான் தான் கார் ஓட்ட வேண்டும் என்று உன் அண்ணன் உத்தரவு போட்டு இருக்கிறான் உன் ப்ரோக்ராம் சொல்லிவிட்டால் என் ப்ரோக்ராமை அதற்கு தகுந்தபடி அமைத்துக் கொள்வேன் என்றான் விஜயவர்மன் செழியனிடம்.
உங்கள் வேலை என்னால் கெட்டுவிடும் நான் வேற அரேஞ்ச்மென்ட் செய்து கொள்கிறேன் என்றான் செழியன்
விஜயவர்மனும் சிரித்துக்கொண்டே கொஞ்ச நாள் ....நீ எல்லா நாட்டிலும் கார் ஓட்ட உனக்கு லைசென்ஸ் உண்டு என்று எனக்கு தெரியும் பட் இது இந்தியா எனவே பழகும் வரை நான் கார் ஓட்டுகிறேன் அத்தோடு ஆபீஸ் பற்றியும் சில விஷயங்கள் பேசவும் வசதியாக இருக்கும் என்றவன்
பத்மினி சாப்பிட அழைக்க தான் இப்போதுதான் சாப்பிட்டு வந்தேன் என்று அவரின் கட்டாயத்தின் பேரில் ஒரு காப்பியினை பருகிக் கொண்டு ஒரு சோபாவில் அமர்ந்தான்
மகிழினி பேலஸ்சின் உள் ஆரவாரத்துடன் நுழைந்தாள் அட்சயா தாத்தா எப்படி இருக்கீங்க? திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க பேரன் பேத்திய வேவு பாக்குறீங்களோ? என்றவளின் காதை பிடித்து திருகிய சரஸ்வதி "உன் விளையாட்டுத் தனத்திற்கு அளவே இல்லை நீ வந்த வேலை உன் தோழியை பார்க்க தானே மாடிக்கு போ...
அப்பா வெளியூர் பயணம் செய்ய இங்க வந்து இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மகிழினி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்
தாத்தா எப்ப வந்தீங்க என்னை எழுப்பி இருக்கலாமே என்று ஓடிச்சென்று ன்அவர் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள் மகிழினி
பேத்தியை கண்டவுடன் அவரும் குழந்தையாய் மாறி போனார் ஊர் கதையெல்லாம் பேசி சிரித்துக்கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதியும் சண்முகம் சாப்பாட்டு பாத்திரங்களை டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தனர் அப்பொழுது எல்லோரும் சாப்பிட வாங்க என்று சரஸ்வதி அழைக்க சச்சிம்மா நான் சாப்பிட்டு விட்டு தான் வந்தேன் என்று இன்னைக்கு அப்பா வீட்ல இருந்தாங்க சோ என்னுடன் சாப்பிட்டாங்க என்று அட்சயா சொல்லும்போது அவளுடைய மகிழ்ச்சியில் அவள் முகத்தில் தெரிந்தது
பாஸ்கவர்மன் சரி சரி எங்க கூடவும் கொஞ்சம் சாப்பிடு ஒன்றும் ஆகிவிடாது என்று சேரை நகர்த்தி அமர்ந்தார்.
அனைவரும் சாப்பிட தயாராகும் பொழுது உள்ளே நான் வரலாமா? என்று வாசலில் கேட்ட குரலில் அனைவரும் வாசம் நோக்கி திரும்பினர் அங்கு டாக்டர் ராஜன் பெட்டி படுக்கையுடன் நின்று கொண்டிருந்தான்
வாப்பா வா உன்ன நானே வர சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன் நீயே வந்து விட்டாய் என்ற பாஸ்கரவர்மன் தன் அருகில் இருக்குமாறு சேரை காட்டினார் ஆனால் தான் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன் என்று , டவல் எடுத்துக் கொண்டு சென்றான்
அவன் வரட்டும் அப்பா நீங்க சாப்பிடுங்கள் ஏன்று சச்சிம்மா உணவை பரிமாற ஆரம்பித்தார்
ராஜாவும் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான் எனக்கு நாளையில் இருந்து ஒரு வாரம் மெடிக்கல்கேம்ப் அதனால இன்னைக்கு நைட்டு கிளம்ப வேண்டியது இருக்கு என்றான்.