உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 13
கேம்ப் போக வேண்டும் என்று ராஜா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சரஸ்வதி நேற்று இரவு பேசும் போது கூட சொல்லவில்லையே ராஜா என்றார் ,ராஜா சச்சிம்மாவிடம் இன்று காலை ஹாஸ்பிடல் சென்ற பிறகுதான் எனக்கே தெரியும்மா டாக்டர் இமான் தான் முதலில் போவதாக இருந்தது அவர் மனைவிக்கு பிரசவ தேதிக்கு முன்பே பிரசவவலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்காங்க அதனால் அவர் போக முடியவில்லை என்றான்
பாஸ்கரவர்மனின்
பார்வை முழுதும் ராஜனை துளைத்துக் கொண்டிருந்தது அவனும் அதனை அறிவான் ஆனால் அவனுக்கு தெரியும், அவர் அவனிடத்தில் என்ன கேட்க போகிறார் என்று அவன் நினைத்தது போலவே அவரும் அதை அதே கேள்வியை தான் கேட்டார் ராஜவிடம் ஏன் ராஜா மேல ஏதும் படிக்கும் எண்ணம் இல்லையா? ஏதோ ஸ்பெஷலிஸ்ட் படிப்பு படிக்க வேண்டும் என்றாயே? ஆனால் அதை பற்றி ஏதும் பேச மாட்டேன் என்கிறாயே ஏன்?... இல்ல... தாத்தா. . மெரிட்டில்சீட்டு கிடைத்தவுடன் படிக்கிறேன் நான் என் சொந்த காலில்நிற்க வேண்டும் ப்ளீஸ் என்னை என் வழியிலேயே விட்டு விடுங்கள் என்றவன் எழுந்து கை கழுவிட சென்றான்
அந்தக் கடின சூழ்நிலையை மாற்றும் பொருட்டு அட்சயா சச்சிமா உங்க பையனுக்கு பத்து நாளைக்கு பலகாரம் செய்யவில்லையா? என்று கேட்க அவரை கோபமாக முறைக்க முயற்சி செய்து சண்முகம் ,சரஸ்வதி இருவருமே தோற்று விட்டார்கள்.
சாப்பிட்டு முடித்த பாஸ்கரவர்மன் பால்கனியில் சென்று லேப்டாப்பில் தனக்கு வந்த மெயில்களை பார்வையிட்டு கொண்டிருந்தார்
சேரமான் அனுப்பிய செய்தியை கண்ணுற்ற பின் ஆழ்ந்த ... யோசனைக்கு பிறகு அவருக்கு பதில் அனுப்பினார் கொஞ்சம் யோசித்து முடிவு செய் சேரா ...நட்பு வேறு வாழ்க்கை என்பது வேறு இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள். நேரில் சந்திக்கிறேன் என்று பதில் எழுதினார் அதனை அனுப்பிவிட்டு கொஞ்சம் ஆபீஸ் வரை போயிட்டு வருவோமா? சண்முகா என்று சண்முகவேலை அழைத்தார் கொஞ்சம் வேலை இருக்கு என்னதான் வர்மன் அன்று அன்று எனக்கு... விவரங்களை தெரியப்படுத்தினாலும் நாம் சென்று பார்த்தால் தான் எனக்கு மனதிருப்தி கிடைக்கும் என்றார்.
சரி ஐயா பத்து மணிக்கு மேல போகலாம் இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றவர் நேராக சரஸ்வதி.. சரஸ்வதி... என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தார் சரஸ்வதி இடம் அய்யாவும் ஆபீசுக்கு போகணும்னு சொல்றாங்க அவங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கட்டிவிடு என்று சொல்லிக்கொண்டே நீங்க எப்போ கிளம்ப போறீங்க என்று கேட்டார் அட்சயா மற்றும் மகிழினி இடம்
மகிழினி அவரிடம் ஒன்பதரை மணிக்கு மேல கிளம்பினால் சரியா இருக்கும் பா என்றாள்
இங்க ரெசாட்டில் செழியன் தன் தந்தையிடம் அப்ப ஜெர்மனியில் சில டாக்குமெண்ட் கேட்டிருக்கேன் அது ஆபீஸ் ஐ டி க்கு தான் வரும் அதை சரி பார்த்து எனக்கு கொஞ்சம் அப்டேட் செய்யுங்க நான் வர்மன் சார் கூட நம்ம ஹாஸ்பிடல் வர போயிட்டு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்படியே மகிழினி கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ் வரை போயிட்டு வீடு வந்து விடுவேன்
நீங்க இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க.... அப்படி இல்லன்னா பாட்டி கபாலீஸ்வரர் கோயில் அஸ்டலட்சுமி கோயில் முருகன் கோவில் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருந்தாங்க ...கூட போயிட்டு வாங்க நான் எஸ்கேப் ..என்று வர்மனை அழைத்துக்கொண்டு காரருகில் வந்தான் செழியன்
வர்மன் பின் கதவை திறக்கச் செல்லும் முன் முன்பக்கம் ஏரி அமர்ந்தான் செழியன் அவனை வியப்புடன் பார்த்தான் விஜயவர்மன் பின் உட்கார்ந்து சீட் பெல்ட் போட்டுக்கொண்டே எங்கே சார் போக வேண்டும் என்றான் செழியனிடம்...
ஒரு அரை மணி நேரம் கடற்கரை பக்கம் வண்டிய நிறுத்துங்க பின்னால ஹாஸ்பிடல் கிளம்பலாம் என்றான் விஜயவர்மனுக்கோ வியப்போ வியப்பு அவனுக்கு தெரிந்தவரை ஆதித்ய இளஞ்செழியன் வீடு ஆபீஸ் இரண்டையும் தவிர வேறு எங்கும் சென்று பார்த்ததில்லை இவன் ஆபீஸ் பார்ட்டிகளில் கூட சென்ற வேலை முடிந்தவுடன் கிளம்பி விடுவான் ...இவன் அண்ணன் மாறன் மட்டுமே கடைசி வரை இருந்து அனைவரையும் அனுப்பிவிட்டு கிளம்புவான்
இவனின் நட்பு வட்டம் மிக மிக குறுகியது இவன் யாரிடமும் நட்பு பாராட்டி பார்த்ததில்லை ஒரு சில நண்பர்கள் மட்டுமே...அவர்களும் இவன் ஸ்டேட்டஸுக்கு சமமான ஸ்டேட்டஸ் உடையவர்கள் தான் இவன் வீட்டில் சிரித்து பேசியதே அபூர்வம் எனலாம் தன்னிடம் கூட நின்று பேசியது கிடையாது விஜயவர்மன் மாறனை பார்க்க வீட்டுக்குச் சென்றால் அனைவரும் அவனிடம் சிரித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் இவன் மட்டும் அமைதியாக எழுந்து சென்று விடுவான்.
ஆபிஸ் விஷயமாக ஏதாவது பேசினால் மட்டும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பானே தவிர ஒரு பதிலும் சொல்ல மாட்டான் அப்படிப்பட்டவன் கடற்கரைக்கு செல் என்று சொன்னால் , இவன் அருகில் உட்கார்ந்து பயணம் செய்தால்... இத்தனை முறை சார் போட்டு பேசியது ..வியப்பு வரத்தானே செய்யும்.
கேட்டுக் கொண்டது போலவே கடற்கரையில் காரைநிறுத்தியதும் இறங்கிய செழியன் அக்கம் பக்கம் பார்த்து எதையோ தேடினார் பின் மெதுவாக நடந்த சென்று ஒரு பாறை மீது ஏறி அமர்ந்தான் பின் கண்கள் மூடி ஏதோ யோசித்தான் வர்மனை நோக்கி சார் இங்கு அடிக்கடி வருவீங்களா? என்று கேட்டவனை பார்த்தான் விஜய் ...சார் பாப்பாவுக்கு கடல் என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால அடிக்கடி அவளைகளை கூட்டிட்டு வருவேன் என்றவன் அதற்கு மேல் ஏதும் சொல்லவில்லை
கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு சரி வாங்க போகலாம் என்று சொன்னவன் தன் அலைபேசியின் மெசேஜ் வர கண்டு அதனைப் பார்த்து அவர்களை தொந்தரவு செய்யாமல் பாலோ செய்யுங்கள் அவங்களுக்கு தெரிய கூடாது புரியுதா என்று பதில் அனுப்பிவிட்டு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான்
வேலைகளை மேற்ப்பார்வையிட்டவன் அலுவலக அறையில்அமர்ந்து கொண்டு வர்மா சார் உங்களுக்கு இப்ப எது முக்கியமான வேலை இருக்கா? என்று கேட்க ஆம் பக்கத்தில் நம் மால் கன்ஸ்ட்ரக்சன் நடந்து கொண்டிருக்கிறது
கொஞ்சம் சில அப்டேஷன் கொடுத்துட்டு வரலாம் என்று நினைக்கிறேன் போயிட்டு வரவா? என்று செழியன் முகம் பார்க்க ஓகே என்றவன் தன் கணினியில் முகம் புதைத்தான்
கதவு வரை சென்ற வர்மன் மெல்ல திரும்பி செழியா என்னை சார்னு கூப்பிடாத ஏதோ வித்தியாசமா இருக்கு பேர் சொல்லி கூப்பிடு, அண்ணானு சொல்லி கூப்பிடு அல்லது எப்போதும் போலவே தொண்டையைச்செருமி எப்போதும் பேசுவியே அதே போல பேசு என்று தன் பணியை தொடர காரை நோக்கி புறப்பட்டு சென்றான் வர்மன்.