உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 14
விஜய் வர்மன் தன் பணிகளை பார்க்க கிளம்பி விட்டான்
இங்கு இளஞ்செழியனும் அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு ஹாஸ்பிடலில் சிசிடிவி கேமரா அறைக்குள் நுழைந்தான் அங்கு இருந்தவர்களிடம் பல கேள்விகளை கேட்டு இன்னும் அரை மணி நேரத்தில் நான் கேட்ட முழுதும் என் அறையில் இருக்க வேண்டும் இப்பொழுது கடந்த மாதத்தில் உள்ளது மட்டும் என் மெயிலுக்கு அனுப்புங்க பின் அனைத்து பேக்கப்பும் எடுத்து எனக்கு அனுப்புங்க என்று சொல்லிவிட்டு நடந்து சென்று தன் அறையில் புகுந்து கொண்டான்.
வெளியே வந்த விஜய வர்மன் தன் தோழன் மாறனுக்கு அழைத்தான்
என்ன மச்சான் எப்படி இருக்கே? ரொம்ப அதிகமா வேலை பார்க்கிறாயோ? என்றபடி அழைப்பை ஏற்றான் ஜெர்மனியின் தோட்டத்தில் தாத்தாவுடன் தேநீர் பருகிக் கொண்டிருந்த மாறன் .
சொல்லமாட்டாய்டா இங்கு எல்லாத்தையும் அனுப்பிவிட்டு அங்க நீ மட்டும் ...என்னடா.... செய்கிறாய்? ஜாலியா இருக்கியாடா?
டேய் ... நான் மட்டுமா? இங்கு என் தாத்தா என் பொண்டாட்டி இரண்டு குட்டிஸ் என்னோட ....செல்ல தங்கச்சி எல்லாரும் இருக்கோம்டா
என்னடா? என் தம்பி உன்ன ரொம்ப படுத்துரானோ.? காலையிலேயே அப்பா பேசுனாங்க உன் கூட வரேன்னு சொன்னானாம் நல்ல முன்னேற்றம் தான் டா இவன் இப்படி இருக்கத்தான் எங்க வீட்ல எல்லாரும் ஆசைப்பட்டோம் ஆனால் அவன் ஹிட்லர் என்று
பெயர் எடுத்தது தான் மிச்சம் சரிடா நீ என்ன திடீர்னு கூப்பிட்டு இருக்க ஏதும் முக்கியமான விஷயமா என்று கேட்டான் மாறன்.
சேரன் தாத்தா என் தாத்தாவை நேர்ல பாக்கணும்னு வர சொன்னாங்களாம் ஏன்டா? எதாவதுமுக்கியமான விஷயமா என்றான் வர்மன்
என்னிடமும் ஏதும் சொல்லல ஆனா நான் "என் நண்பன் கிட்ட நிறைய பேச வேண்டும்" என்றான் மாறன்
சரி மகிழினி எப்படி இருக்கா? சச்சிமா ராஜா எல்லாம் எப்படி இருக்காங்க? மகிழினிக்கு டாக்டர் என்ன சொன்னாங்க? என்ன என்றாலும் பார்த்துக் கொள்ளலாம் வருத்தப்படாதடா என்றான் மாறன் இதைக் கேட்ட வருத்தப்படவில்லை மச்சான் முன்னமைக்கு இப்ப எவ்வளவோ தேவல நான் ஆனா நான் மறைத்து வைத்திருக்கும் உண்மைகள் தெரிந்தால் அவள் நிலைமை என்ன என்று யோசிக்கக்கூட முடியலடா... உனக்கே தெரியும் அவதான் என்னோட உலகம் .. அப்பா அம்மா சாவுக்கு பின்னால அவளை தேற்றி கொண்டு வர நான் பட்டப்பாடு இப்போது நினைத்தாலும் என்று பெருமூச்சு விட்டான் வர்மா
தவறாக எதுவும் செய்யல அவள் உடல்நிலை கருத்தில் கொண்டுதான் கொஞ்சம் அவளிடம் மறைத்து இருக்கிறோம் அவ்வளவுதான் சரிடா ரொம்ப யோசிக்காத சரி உன் திருமணம் பற்றி எதுவும் யோசித்திருக்கிறாயா? இல்ல கடைசி வரை பிரம்மச்சாரியாய் என்று அவன் மனதை மாற்ற முயற்சி செய்தால் மாறன்
பாப்பா நல்லா இருந்தா என் வாழ்வும் நன்றாக இருக்கும் டா நான் மறைத்த உண்மைகள் அப்படியே மறைந்து விடலாமா அல்லது சில விஷயங்களை மட்டும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் சில விஷயங்களை மட்டும் அவளிடம் தெரியப்படுத்தி அவளை சரி செய்வோம் என்று யோசிக்கிறேன்
சரி...டா எல்லாம் கடந்து போகும் இதைவிட அதிக பிரச்சனைகளை பார்த்தவன் நீ இதெல்லாம் சரியாகிவிடும்
சரி ..அவங்க எப்படி இருக்காங்க? அவங்களுக்கு என்ன தேவை என்று பார்த்து செய் அவன் இல்லை என்கிற நினைப்பே இல்லாம இருக்கணும் அவங்க. அவன் செய்த உதவிக்கு கட்டாயம் நாம் தான் அந்த குடும்பத்தின் பொறுப்பு முழுதும் ஏற்க வேண்டும் என் உயிர் தோழன் என்ற ஒரே காரணத்திற்காக நீயும் இதில் சிக்கிக் கொண்டிருக்கிறாய் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது மறு அழைப்பு வந்தது செழியனிடமிருந்து
சரி மச்சான் உன் தம்பி தான் அழைக்கிறான் நீ அவன் கூட பேசுறியா இல்ல நான் போன கட் பண்ணவாடா என்று கேட்டான் விஜய் வர்மன்
நைட் பேசுறேன் உன்கூட என்று அழைப்பை கட் செய்துதான் மாறன்
செழியன் சார் எனக்கு வயிறு பசிக்குது எங்கேயாவது சாப்பிடபோகலாம் சீக்கிரம் வாங்க என்றான்
அந்த வார்த்தையை கேட்ட பின்பு தான் வர்மனுக்கு நியாபகம் வந்தது ஜெர்மனியில் இதற்கு முன் சாப்பிட்டு முடித்து விடுவான் என்பதும்... தான் நேரத்தை கவனிக்காமல் ..மறந்த மடத்தனத்தையும் எண்ணி உடனே கிளம்பினால் செழியனை காண
மகிழினி பேலஸ்
பாஸ்கர வர்மன் அனைவரையும் தனித்தனியாக நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்
சண்முகா நம் தம்பியும் செழியன் தம்பியும் சாப்பிட வராங்க நம்ம டைனிங் ரூம்பை ரெடி பண்ணு என்று சொல்லிக்கொண்டு அப்படியே பாப்பாவ...ம் ரெண்டு பேரையும் வர சொல்லு என்று சொன்னார்.
சரி ஐயா என்றபடி சண்முகவேல் டைனிங் ரூம் நோக்கி நகர்ந்தார்
செழியனை பார்க்க வரும்பொழுது விஜய் ஒரு சிக்கன் சூப் வாங்கிக் கொண்டே வந்தான்
அவனுக்கு தெரியும் செழியன் பசி தாங்க மாட்டான் என்பதும் அவன் இப்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதும் இதை குடி முதல என்று அவனிடம் ஒரு கப்பில் ஊற்றி முன்னால் நகட்டி வைத்தான் பின் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தான் மெதுவாக..
ம்ம் ம்ம்... நைஸ் தேங்க்யூ என்று சொன்னபடி சூப்பை பருக ஆரம்பித்தான் செழியன்
இடைப்பட்ட நேரத்தில் வர்மன் அவன் டிரைவருக்கு போன் செய்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் சாப்பிட்டார்களா? என்ற விவரங்களை தெரிந்து கொண்டான்
இருவரும் மகிழினி கண்ஸ்ட்ரக்சன் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மகிழினி கன்ஸ்ட்ரக்ஸசன் டைனிங் அறையில் அட்சயா யார் தாத்தா வராங்க என்ன ஃபுட் எலலாம் புதுசா நிறைய ஆர்டர் பண்ணி இருக்கீங்க என்று கேட்டபடி எல்லாத்தையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்
கார் மகிழினி கண்ஸ்ட்ரக்ஷன் அருகில் வரும் பொழுது இயற்கை எழில் கொஞ்சும் அந்த தோட்டத்தை பார்த்து கொஞ்சம் மயங்கி தான் போனான் செழியன்
என்ன சார் ஆபீஸை கொண்டு காட்டுக்குள்ள வச்சிருக்கீங்க என்று நக்கலாய் கேட்ட செழியனை பார்த்து வேற வழி இல்ல இதுல ஒரு மரத்தை வெட்டினால் கூட என் தங்கச்சி எங்கிட்ட சண்டைக்கு வந்துருவா என்றான் விஜய் வர்மன்.
இதுவும் நல்லா... தான் சார் இருக்கு ... நல்லா... நிறைய ..பூ ஒரு மாதிரி வித்தியாசமா தான் இருக்கு என்றபடி
செல்லும் பாதையை பார்த்து இருந்தான் செழியன்
ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளே வந்தவுடன் கலர்கலரான குரோட்டன்ஸ்கள் அழகழகாக வெட்டிவிடப்பட்டிருந்தது அதையும் ரசித்துக் கண்டே வந்தான் செழியன்
போர்டிகோவில் அழகான விதவிதமான பூக்கள் குட்டி குட்டி தொட்டியில் வைக்கப்பட்டிருந்தன அதையும் பார்த்து சிரித்துக் கொண்டே காரில் இருந்து இறங்கினான் செழியன்.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பின் இன்டீரியர் ஒர்க் டிசைன் பார்த்து வியந்து கொண்டும் ரசித்துக்கொண்டும் விஜயுடன் நடக்க ஆரம்பித்தான்
தாத்தா இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று தாத்தாவை அறிமுகபடுத்தி சண்முகவேலை அறிமுகப்படுத்தினார்.
பாஸ்கர் வர்மன் அனைவரையும் சாப்பிட வாங்க என்று டைனிங் அறைக்கு அழைத்து கொண்டு போனார்
அங்கு சென்றவுடன் அட்சயா , தாத்தா எவ்வளவு நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பிங்க சச்சிம்மா 4 முறை போன் செய்து கேட்டுட்டாங்க,.. நானும் எத்தனை பேரை தான் சமாளிப்பது பேசுரதுக்கே... யோசிக்கிற ராஜா.. கூட 2 தடவை கேட்டுட்டாறு என்று சொல்லிக்கொண்டே வந்தவள் சட்டென்று பேசுவதை நிறுத்தி விட்டு... செழியனை கண் அகலமாக விழித்து பார்த்தாள்
ஏய் வாலு... மீட் மிஸ்டர் செழியன் என்று அறிமுகம் செய்ய .. அண்ணா நிறுத்துங்க.. இவரைப் பத்தி ஒரு வாரமா நியூஸ் சேனல் ஃபுல்லா ஓடிட்டு இருக்கு இவர தெரியும் ஆனா இவரு எப்படி நம்ம ஆபீசுக்கு வந்தார் என்று தான் தெரியல அதான் யோசிச்சிட்டு இருக்கேன் என்றாள் சிரித்துக்கொண்டே
பாப்பா எங்க சாப்பிட கூப்பிடலியா என்ற கேட்டான் விஜயவர்மன்
அண்ணா அவளைபத்தி உங்களுக்கு தெரியாதா நீங்க கொடுத்த அந்த ப்ராஜெக்ட் முடிச்சுட்டு நான் வெளியே வருவா அதுவரை அவள் என்ன கூப்பிட்டாலும் வரமாட்டா அந்த இன்டீரியர் ஒர்க் முடிச்சிட்டு தான் வருவாங்க மேடம்
ஒன்னும் கவலைப்படாதீங்க உங்க தங்கச்சி 11 மணிக்கு தான் ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு தான் உள்ளே போய் இருக்கா ..
.
வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்று சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள்
எத்தனை முறை சொல்வது நீ பரிமாறாதே ஆட்கள் இருக்கிறார்கள் என்று என்று வர்மன் அட்சயவை பார்த்து கேட்டான்
அதைக் கேட்டா ஆட்சயா சிரித்துக் கொண்டேன் அண்ணா நம்ம ஆபீஸ்ல தான் வந்து இருக்காங்கன்னா உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களா தான் இருக்கணும் அதனால தான் நான் பரிமாற ஆரம்பிக்கிறேன் ஒன்னும் தப்பில்ல .. உட்காருங்க என்று அவங்களுக்கு வேண்டியதை பார்த்து பரிமாறலாம்மில்ல என்று பரிமாற ஆரம்பித்தாள்
வர்மன் செழியனிடம் செழியன் இவங்க என் தங்கச்சியோட குளோஸ்பிரண்டு கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேலே அது மட்டும் இல்லாம நம்ம பார்ட்னர் ஓட பொண்ணு கூட அவங்க இங்க தான் ஒர்க் பண்றாங்க என் தங்கச்சிக்கு எல்லாமே இவங்க தான் என்று சொல்லிக் கொண்டே... பரிமாறிய உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார்கள்
சாப்பிட்டுக் கொண்டே இருந்த செழியன் திடீரென உங்க ஆபீஸ் இன்டீரியர் ஒர்க் எல்லாம் சூப்பரா இருக்கு யாரு ஐடியா உங்க ஐடியாவா இல்லன்னா உங்க தங்கச்சி ஐடியாவா என்று கேட்டான்
என்னோட ஐடியாவும் உண்டு ஆனால் முழுக்க முழுக்க உட்கார்ந்து என்னால் செய்ய முடியாது அதெல்லாம் கம்ப்ளீட் பண்றது என் தங்கச்சி தான் என்றான் வர்மன்
.
Author: Vishakini
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.