உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 15
சாப்பிட்டுக்கொண்டே அட்சயாவை பார்த்த செழியன் நீங்க எப்போ... சாப்பிடுவீங்க லஞ்ச் டைம் முடிய போகுது? என்று வினவ டீ டைம் பிரேக் போதும் அவ சாப்பிட என்று பதில் வந்தது என்னவோ விஜயவர்மனிடமிருந்து, அவளுக்கு சாதம் சாப்பிட வேண்டும் என்றால் அவ்வளவு கஷ்டமான விஷயம் பீசா ,பர்கர்,ரோல் என்று சாப்பிடும் ரகம் அந்த ஒரு விஷயத்தில்தான் இவளும் என் தங்கையும் வட துருவம் தென் துருவம் போல அவள் விதவிதமா சாதம் சாப்பிடுவாள் இவள் விதவிதமா ஸ்னாக்ஸ் சாப்பிடுவாள் என்று சாப்பிட்டு எழுந்த வர்மனை முறைத்துக் கொண்டிருந்தாள் அட்சயா அவன ஏமா முறைக்கிற அவன் உண்மையைத்தானே சொன்னான் என்ற தாத்தா எழும்பி ...கை கழுவிக்கொண்டே தம்பி நான் வீட்டுக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன், அப்பொழுது தான் இரவு கிளம்ப. சரியாக இருக்கும் என்றபடி சண்முகவேலை பார்க்க அவர் சரி என்பதாய் தலையசைத்து இருவரும் கிளம்ப தயாராயினர்.
செழியனும் ஸ்பைசி புட் பட் டேஸ்டி என்றபடி எழுந்து வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு அதன் அழகினை பார்த்து ரசிக்க ஆரம்பித்தான் பின் வர்மனிடம் சார் இஃப் யூ டோன்ட் மைண்ட் உங்க ஆபீஸை நான் சுற்றி பார்க்கலாமா என்றான்
சாரி சார் நீங்க... வந்த உடனே சுற்றிக்காட்டி எல்லாரையும்.... அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும் ஆனால் நீங்க பசியிலிருந்ததால நேரா டைனிங் ரூம் கூட்டிட்டு போயிட்டேன்... ஒரு அரை மணி நேரம் வேலை இருக்கு அதை முடித்துவிட்டு உங்களை நானே கூட்டிட்டு போய் காட்டுகிறேன் என்றான் வர்மன்
நோ வர்மா சார்.. இவங்கள கூட வர சொல்லுங்க போதும் என்று அட்சயாவை கை காட்டினான் செழியன் சார் நான் சுற்றிக்காட்டுறேன் என்று வர்மரிடம் சொல்லிவிட்டு வாங்க சார் என்றபடி நடக்க ஆரம்பித்தாள் அட்சயா ஒவ்வொரு அறையும் காட்டி அங்கு இருந்தவர்களை இவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு அவர்களிடம் ஒன் ஆஃப் தி சேர் மெம்பர் என்று இவனை என்று இவனை அறிமுகப்படுத்தினாள் அவள் அறிமுகப்படுத்தி விதமே இவளுக்கு அனைத்து விஷயங்களையும் தெரியும் என்று செழியனை யோசிக்க வைத்தது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது ஏனென்றால் இங்கு உள்ள அனைவருக்கும் பாஸ்கரவர்மன் தாத்தாவும் அவர் நண்பனும் சேர்ந்து ஆரம்பிக்க ஆஃபீஸ் இன்று இந்த வளர்ந்துள்ளது.
சமீப காலத்தில் தான் விஜயவர்மனின் கட்டாயத்தின் பெயரில் செழியனின் தாத்தா ஆதித்ய சேரமான் இவனை சேர் மெம்பராக நியமித்தார்.
அப்படி என்றால் அனைத்து டாக்குமெண்ட்ஸும் இவளின் கவனத்திற்கும் வருகிறது என்று அறிந்து கொள்ள செழியனுக்கு வெகு நேரம் எடுக்கவில்லை
சரி ஆபீஸ் ரூம் போவோம் வெளியே சுத்தி பார்க்க ஒருநாள் வேண்டும்போல இந்த இடம் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ் போலவே இல்லை ஏதோ கிரீன் பார்க் ஏரியாவுல இருப்பது போல இருக்கு என்றபடி திரும்பியவன் கண்ணில் படியிலிருந்து இறங்கி சோர்வாய், எழில் ஓவியமாய் ,வான நிறத்தில் வெள்ளை நிற பூக்கள் தூவியது போல தழைய தழைய சேலை அணிந்து அதற்கு தகுந்தார் போல் மெல்லிய நகைகளுடன் மாடியில் இருந்து இறங்கி வந்த மகிழினி பட்டாள்
அவன் அவளை கண்டது சில நொடிகள் தான் மீண்டும் நடக்க ஆரம்பித்தான் ஆபீஸ் ரூம் நோக்கி
அவள் வரவை கண்காட்சி மேடம் கூப்பிடு இருக்கலாமே. என்றபடி மகிழனி அருகில் சென்றாள் ... செழியன் ஓகே கேரியான் என்று சொல்லிவிட்டு வர்மன் அரை நோக்கி சென்றான்
அவன் பேச்சு சத்தம் கேட்டவுடன் தான் வேறு ஒரு புது நபர் இருப்பதையே உணர்ந்தாள் மகிழினி நிமிர்ந்து நோக்கும் முன் அவன் அவளைக் கடந்து சென்றிருந்தான்
அருகில் வந்தா அட்சய விவரங்களை சொல்லிக்கொண்டே சாப்பிடுறீங்களா மேடம் என்று கேட்க இல்லை எனக்கு பசி இல்லை நான் பிரஷ் ஆகி வருகிறேன் வந்தவுடன் அண்ணா ரூம் போய் பார்க்கலாம் என்று தன் அறையில் நுழைந்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சோர்வு நீங்க கழுவி மெல்லிய ஒப்பனையுடன் வெளியே வந்தாள் மகிழினி.
அதுவரை வெளியே காத்திருந்த அட்சயா சில பைல்களை எடுத்துக்கொண்டு விஜயவர்மன் எம்டி என்ற பெயர் பலகையுடன் உடைய அறையை மெல்ல தட்டி தன் வரவை சொல்ல உள்ளே வர அனுமதி கொடுத்தான் வர்மன்.
இருவரும் உள்ளே நுழைய ...ஏதோ மும்முரமா பேசிக் கொண்டிருந்த வர்மன் எழுந்து வந்து தங்கையிடம் சாப்பிட்டாயா டா? ஏன்? எல்லா வேலையும் இன்றே முடிக்க வேண்டுமா? எத்தனை முறை சொல்லி இருக்கேன் ரொம்ப உன்னை பார்த்து கொள்ளாதே என்று? எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டாயா? என்று செழியன் என்ற ஒருவன் இருப்பதை மறந்து தங்கையின் நாடி வந்தான் விஜய் வர்மன்.
அதை கண்டு புன்னகை
சிந்தி கொண்டே தன் தமிழின நினைத்துக் கொண்டான் செழியன் அவன் புன்னகை சிரிப்பாக மாறியது அந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு திரும்பிய வர்மன் அசடு வழிந்தான்,
இதிலும் பிரண்டு ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பீர்களோ? என்று சொல்லிக் கொண்டு
"நைஸ் டு மீட் யு மிஸ் மகிழினி வர்மன்" என்று தன் கையை மகிழினி நோக்க நீட்டினான் செழியன்.
இதை சிறிதும் எதிர்பாக்காத மகிழினி திகைத்து நின்றபொழுது அவளின் கையை செழியன் கையோடு இணைத்து வைப்பது அட்சயாவின் கடமையாகிற்று
சுதாரித்துக் கொண்ட மகிழினி "ஹாய் சார் நைஸ் டு மீட் யு"என்று பதில் உரைக்க வர்மனின் கைபேசி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க அதனை எடுத்து காதில் வைத்து வர்மன் எக்ஸ்கியூஸ் மீ என்று தன் அறையை விட்டு வெளியே சென்றான்.
மகிழினி செல்லியனே சோபாவில் அமர சொல்லிவிட்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் அட்சயா
மகி உன் இன்டீரியர் வொர்க்ஸ்எல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சார் சொன்னாங்க என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ...ஏய் வாலு அத நாங்க சொல்ல மாட்டோமா? என்று செழியன் சொல்லும் முன் வாலு என்று நீங்க எல்லாம் சொல்லக்கூடாது அண்ணா மட்டும்தான் சொல்லணும். என்று முகத்தை சுளித்துக்கொண்டவளை பார்த்து சிரித்துக் கொண்டார் இருவரும்.
எஸ் மேம் என்ட்ரன்ஸ்ல உள்ள இன்டீரியர் ஒர்க் நார்த் இந்தியா அண்ட் சவுத் இந்தியன் மிக்ஸ்ட் பார்ம்ல இருந்தது என்று சொல்ல மகிழினி விழி விழித்து பார்த்தாள் செழியனை.
அந்தப் பார்வையின் பொருளை அறிந்துகொண்ட செழியன் நான் ஆசைப்பட்டு படித்தது பிஇ ஆர்க்கிடெக்ட் தான் ஆனால் என்னால் அதில் முழு நேரமும் செலவிட முடியவில்லை பல பிசினஸ் மீட்டிங்ஸ் வேர்ல்ட் வைஸ் சுத்திக்கொண்டே இருப்பேன் அதனால் என்னுள் இருக்கும் ரசிகன் தொலைந்து போய்விட்டான்இங்கு வந்து உங்கள் ஒர்க்சை பார்த்தவுடன் அந்த ரசிகன் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறான் என்றான் செழியன்
எந்த ரசிகன் வெளியே வருகிறான் சார் ...என்றபடி உள்ளே நுழைந்தார் செழியனின் தந்தை விவேகன் மகிழினியும் அட்சயாவும் சட்டென எழுந்து விட ஹாய் டாட் என்ன இந்த பக்கம் என்று எழுந்து நின்றான் செழியன்.
Author: Vishakini
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.