• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 17

Vishakini

Moderator
Staff member
உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 17

அட்சயா சார் நாளை என் கார்லேயே போவோமா சார் ?... என்றாள் இவளுக்கு என்ன ஆச்சு என்ற அட்சயாவை அனைவரும் குழப்பத்துடன் பார்த்தனர் சற்றும் தயக்கம் இல்லை ஓகே மா நானே உனக்கு கால் செய்கிறேன் ...வாங்க எல்லாரும் கிளம்பலாம் என்று சொல்லிக்கொண்டு கிளம்பும்போது கேட்டில் உள்ள செக்யூரிட்டி வேக வேகமாக உள்ளே வந்து விஜய்வர்மனிடம் சார் மீடியாக்கள் வாசலில் வெளியே நின்று கொண்டு சாரை பார்க்க வேண்டும் என்கிறார்கள், எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்றார்,

5 நிமிடங்கள் சாரை பார்த்து பேசிவிட்டு போய்விடுவோம் என்று கேட்கிறார்கள் என்ன செய்ய சார்? என்று விஜயவர்மனிடம் டம் கேட்க விஜய் வர்மன் பதில் சொல்லும் முன் அட்சயா அண்ணா காலைல நீங்க கிளம்பியது முதல்ல அப்பா அம்மா இங்க வந்தது வரை மீடியாவில் அப்டேட் ஆகி கொண்டு தன் இருக்கிறது எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க சோ அத தெளிவுபடுத்த வேண்டியது பாஸ்சோட கடமை இல்லையென்றால் இப்படித்தான் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள் என்றாள்

ஓகே ...மீட் பண்ணிடலாம் ... கூல்... என்ற படி லொகேஷன் ஒன்று சொல்லி அவர்களை வர சொல்லிவிடலாம் என்றான் செழியன் பின் செக்யூரிட்டியிடம் எத்தனை பேர் வந்திருக்காங்க என்றான் அவரும் 20 ,25 பேர் இருப்பார்கள் சார் என்றார்

மகிழினி ஒரு பத்து நிமிஷம் டைம் தாங்க சார் என்று கேட்டுவிட்டு ... சில உத்தரவுகளை பிறப்பித்த படியே நுழைவாயில் நோக்கி சென்றாள் அங்கே சென்று மீடியாக்காரர்களை பார்த்து ஒரு 30 நிமிடம் வெயிட் செய்யுங்க ...சார் உங்களைப் பார்த்து பேசாமல் போக மாட்டார் என்று அனைவரையும் போர்டிகோவில் உள்ள சேர்களில் அமர சொல்லி விட்டு அவர்களுக்கு தேநீரும் ஸ்னாக்ஸும் கொடுக்க சொல்லி உத்தரவு கொடுத்துவிட்டு வந்து அண்ணா அவர்கள் எல்லோரும் வெயிட பண்ணுவாங்க .... நம்ம மீட்டிங் ஹால அரேஞ்ச் செய்ய சொல்லி இருக்கேன் நீங்களும் அங்கிளும் மட்டும் பேசினால் போதும் தானே மைக்கின் முன் இரண்டு சேர் மட்டும் போட்டால் போதும் தானே என்றாள்,

மிஸ் மகிழினி...மூணு சேர் போடுங்க உங்க அண்ணனும் எங்க கூட இருக்க வேண்டும்

சார் நீங்க மாடியில் உள்ள கெஸ்ட் ரூம்ல ரெடி ஆயிட்டு வாங்க நான் பாட்டியையும் அன்டியையும் பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு வரேன் என்றபடி அட்சயா நீ அவங்க கூட கிளம்பு 20 நிமிஷம் தானே போயிட்டு வந்துரு என்று சொல்லி அவர்களை ஆபீஸின் பின்வாசல் நோக்கி செல்லும் பொழுது ரூம்பை விட்டு வெளியே வரும் பொழுதே விஜயவர்மன் உடல் மொழியில் உள்ள மாற்றங்களையும் அட்சயா மகிழினி இருவரும் சில அடிகள் பின்னே நடந்து சென்ற விதமும் அவர்கள் இந்த அறையில் மட்டுமே அண்ணன் தங்கை என்றும் இப்பொழுது நாங்கள் பிஏ மற்றும் எம்பிளாயீஸ் என்பதை தெளிவாக காட்டியது செழியனும் விவேகனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்

அவர்களை அனுப்பிவிட்டு மாடிக்கு வந்த செழியன் அங்கிருந்த முதல் அறையில் புகுந்தான் உள்ளே சென்றவன் திகைத்து நின்றான் அங்கே அத்தனை வகை ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ரசனையுடன் ரசித்து பார்க்க நேரம் இல்லை என்று அதனை தன் கைபேசியில் பதிவு செய்து கொண்டு இது தப்பு தான் ஆனாலும் சா...ரி. நிச்சயம் மிஸ்யூஸ் செய்ய மாட்டேன் என்று அங்கு இருந்த மகிழினியின் புகைப்படத்தின் முன் சென்று சொல்லி விட்டு தன்னை கொஞ்சம் சரி செய்து ரெடியானான்

இவர்கள் ரெடியாகி கீழே வரும் முன்னே பாஸ்கர வர்மன் ஆபீஸ் அறையில் நுழைந்தார் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் வர்மனின் தனி அறையில் இருந்து வெளியே வந்த விவேகன் என்ன ஐயா நீங்க வந்து வந்து இருக்கீங்க என்று கேட்க இங்கு நடக்கிறதெல்லாம் எனக்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டார் செக்யூரிட்டி அதான் உடனே வந்து விட்டோம் பா என்றார் உடன் சரஸ்வதி சண்முகவேல் இருவரும் நின்றுகொண்டு இருந்தார்கள்

சரி அம்மாவும் பத்மினியும் எங்க என்று கேட்க ஐயா அவங்க அப்பமே கிளம்பி விட்டாங்க பத்திரமா அனுப்பி வெச்சிட்டார் வர்மன் தம்பி என்றார்

நானும் செழியனும் தான் ஐயா இங்கே இருக்கோம் என்றார்.

ஐயா பிரியா வர்மா பற்றி நம்ம எடுத்த முடிவு அதை இன்றே சொல்லி வடுவோமா?
அப்பாவும் அதைத்தான் சொன்னாங்க நீங்க என்ன சொல்றீங்க என்று பாஸ்கர்வர்மன் பதிலை தெரிந்து கொள்ள அவர் முகம் பார்த்து நின்றான் விவேகன்

பிள்ளைகள் கிட்ட இத பத்தி நான் பேசவில்லை அதான் யோசிக்கிறேன் அதே சமயம் அவர்கள் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கவில்லையோ என்று அவர்கள் நினைத்து விட்டால் ...என்ன செய்வது என்று யோசிக்கிறேன் என்றார் பாஸ்கர வர்மன் சிறு யோசனையுடன்

சரஸ்வதி "ஐயா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க பிள்ளைகளுக்கு உங்களை நல்லா தெரியும் நீங்க ஒரு முடிவு எடுத்தால் பிள்ளைகளின் நலன்தான் முதலாவதாக இருக்கும் என்று "

நான் உள்ளே வரலாமா தாத்தா? நான் உங்க கூட கொஞ்சம் பேச வேண்டும் பேசலாமா ?என்று உள்ளே நுழைந்தான் செழியன்

அவர்கள் பேசட்டும் என்று சரஸ்வதியும் சண்முகவேல்லும் வெளியே செல்ல முயலும் போது நீங்களும் இருங்க ஆன்ட்டி நீங்க இந்த குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று தாத்தா சொன்னாங்க ம... ஓகே

நேற்றிரவு தாத்தா எங்க மேரேஜ் பத்தியும் பேசினாங்க எனக்கு அதில் சம்மதம் தான் தாத்தா என்ன இதுவரை கல்யாணம் குடும்பம் என்று நான் யோசித்ததில்லை பிசினஸ் பத்தி மட்டுமே சிந்தித்து இருக்கிறேன்தான் ஆனால் துறவறம் போகும் என்னமெல்லாம் இல்லை என்றான் சிரித்தபடி

உங்கள் பேரன் பற்றிய முடிவை மட்டும் தெளிவாக எடுக்க முடிந்த உங்களால் ஏன் பேத்தியை பற்றி யோசிக்கும் போது மட்டும் இத்தனை குழப்பம் தாத்தா?

இல்ல தம்பி எனக்கு நீ வேற விஜய் வேற இல்ல அதனால தான் இவ்வளவு தூரம் யோசிக்கிறேன் அவளோட பிரச்சினைகள் எல்லாம் சரியாகும் வரை பொறுத்து இருக்கலாம் என்று பார்க்கிறேன்

மற்ற எல்லாவற்றிலும் பெஸ்ட்டா இருக்கும் என் பேத்தி மரணம் ..விபத்து.. இரத்தம் என்றால் மட்டும் தன்னை மறந்து தன் பழைய நிலையை எட்டி விடுகிறாள் அதனால்தான் விஜய் கூட திருமணத்தைப் பற்றி பேசும்பொழுது அதைப்பற்றி பிடி கொடுக்காமல் இருக்கிறான் அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்தும் என்னால் அவனிடம் பேச தயங்க வேண்டியது இருக்கிறது என்றார்

ஓகே தாத்தா உங்க பேத்தி எங்க வீட்ல சந்தோசமா இருப்பானு நம்புறீங்க தானே? என்று பாஸ்கரவர்மனை ஆழ்ந்து பார்த்தான் செழியன்...செழியனை நிமிர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்தார் விவேகன். இந்த செழியன் அவருக்கே புதியவன்

கடந்த அரை மணி நேரத்துக்கு முன்னால கூட எனக்குள்ள ஒரு சின்ன குழப்பம் இருந்தது ஆனா அந்த ரூமுக்கு போனதுக்கு அப்புறம் என்னோட குழப்பம் 100% இல்லை தப்பா நினைக்காதீங்க தாத்தா மேலே உள்ள உங்க பேத்தி ரூமுக்கு போய் இருந்தேன்
அங்குள்ள ஒவ்வொரு ஓவியமும் என் மனசின் பிரதிபலிப்பாகவே இருந்தது எங்க ரெண்டு பேரின் சிந்தனையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு சோ..நாங்க பிரண்டா ஆகிறது ஈசி ஹஸ்பண்ட் ஒய்ஃப் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும் அவ்வளவுதான்

நான் முடிவு எடுத்துட்டேன் ... தாத்தா ,அண்ணன் கிட்ட கூட சொல்லவில்லை உங்களிடமும் அப்பாவிடமும் தான் முதலில் சொல்கிறேன்

நான் ஒரு முறை தான் முடிவு எடுப்பேன் அதை சரியானதாக நானே மாற்றிக்கொள்வேன் எனக்கு என் மேல நம்பிக்கை உண்டு நீங்க என்ன சொல்றீங்க என்று அவர் முகத்தை பார்த்து நின்ற செழியனைபார்க்கும் பார்வை பாஸ்கர வர்மனுக்கு ஆதித்ய சேதமானை நினைவு நினைவு படுத்தியது அவரும் அப்படித்தான் பலமுறை சிந்தித்து முடிவு செய்வார் ஆனால் தன் முடிவை மாற்றிக் கொள்ளவே மாட்டார் எக்காரணம் கொண்டும்

மகிழினி அவர்களை அழைக்க வர பேச்சு அத்துடன் முடிந்தது மிஸ் மகிழினி உங்கள் தாத்தாவும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு சோ அவருக்கும் சேர் போட்டு விடுங்க என்றும் முன்னால் நடக்க ஆரம்பித்தான் மீட்டிங் ஹால் நோக்கி செழியன்

பாக்கரவர்மன் அடுத்து விஜயவர்மன் இளஞ்செழியன் மற்றும் விவேகன் நால்வரும் வரிசையாக அமர்ந்து கொண்டு மிடியாவின் கேள்விக்காக காத்திருந்தனர் .

ஒரு நபர் சார் நீங்க இந்தியாவுக்கு முதல் முறையாக வந்து இருக்கீங்க ஆனால் இன்று ஆரம்பிக்கும் போதே பாஸ்கரவர்மன் அய்யாவும் என் அப்பா ஆதித்யா சேரமானும் பல வருட நண்பர்கள் இந்த தலைமுறைவரை அந்த நட்பு தொடர்கிறது அது மட்டும் இல்லாமல் இது வெறும் பிஸ்னஸ் ட்ரிப்பாக மட்டும் இருந்திருந்தால் உங்களுக்கு என் பிஏ மூலமா அப்டேஷன் வந்து இருக்கும் சில முக்கிய வேலைகள் முடிந்தவுடன் மெதுவாக அலோன்ஸ் செய்யலாம் என்று இருந்தோம் ஆனால் நீங்க எங்கள் பின் தொடர்ந்து எங்கள் ஃப்ரீடமாக இயங்க விடாமல் பின் தொடர்வதால் இதனை இப்பொழுதே சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறோம் என்றார் விவேகன்.

எதிர் வரிசையில் அமர்ந்திருந்த மகிழினியின் முகம் யோசனையாய் சுருங்கியது
 
Top Bottom