உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 19
டாக்டர் விக்ரம் பற்றி தெரியுமா ? என்று செழியன் வர்மனிடம் கேட்டுக் கொண்டிருந்தபோதே கதவை தட்டும் ஓசை கேட்டு கதவை திறந்தான் விஜயவர்மன்
அங்கே விவேகன் நினறு கொண்டிருந்தார் செழியா பாட்டி உன்னிடம் பேச வேண்டும் என்று வெயிட் செய்யறாங்க அவங்கள நீ தான் சரி கட்ட முடியும் நான் ரெசார்ட் போய் பேசலாம் என்று சொன்னேன் அவங்க இப்பமே உன்கிட்ட பேசணும்னு சொல்றாங்க என்று முடிக்கும், முன் அவர்கள் அறையை நோக்கி நடந்தான் செழியன்.
விஜய வர்மன் அங்கிள் செழியன் டாக்டர் விக்ரம் பத்தி கேட்டான் நல்லவேளை நீங்க வந்து காப்பாத்திட்டீங்க என்றான் !
எங்க தாத்தா மகிழியியை சமாதானப்படுத்த முயற்சி செய்து தோற்றுப் போனார்
தாத்தா யோசிக்காமல் எதையும் செய்ய மாட்டேன் என்று உனக்கு தெரியும் தானே பாப்பா உனக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று சொல்லு அல்லது வேறு காரணம் இருந்தால் சொல்லு இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் ஆனால் காரணமே இல்லாமல் எப்படி நிறுத்த முடியும் யாரையாவது விரும்புகிறாயா? என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய் நாங்கள் உங்கள் இருவரின் வாழ்வும் நலமாக இருக்க வேண்டும் என்று தான் இந்த முடிவை எடுத்தோம் அந்த வீட்டில் அனைவரையும் உனக்கு தெரியும்... சரி உனக்கு டைம் தருகிறோம்... ஏதாவது காரணம் சொல் அது எங்களுக்கு சரியானதாக பட்டால் திருமணத்தை நிறுத்துவது பற்றி யோசிப்போம்
இதனால் உன் அண்ணன் வாழ்வு பாதிக்குமோ என்று யோசிக்க வேண்டாம் ...ஏனென்றால் வதன பிரியாவை உன் அண்ணனுக்கு பிடிக்கும், அதே போல் அவளுக்கும் உன் அண்ணனை ரொம்ப... பிடிக்கும் ..அதனால் அவர்கள் திருமணத்தில் எந்த இடையூறும் இருக்காது வேண்டும் என்றால் திருமணத்தை ஒரு 3 மாதம் கழித்து வைக்கச் சொலகிறேன் சரியா ?என்றார் தாத்தா இந்த இடைப்பட்ட 3 மாதத்தை தனது சாதகமாக பயன்படுத்த நினைத்தாள் மகிழினி சரி என்று தலை அசைத்தாள்
ராஜாவோ அம்மா வீட்டுக்கு போய் நான் வேற கேம்புக்கு கிளம்பனும் என் திங்ஸ் எல்லாமே மகிழினி பேலசில் தான் இருக்கிறது நான் இப்ப கிளம்பினால் தான் சரியான நேரத்தில்
கிளம்ப முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீதியை வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் என்றார் தாத்தா. சண்முகம் எல்லாரும் கிளம்பியாச்சா? நம்ம கிளம்பலாமா? என்று கேட்கும் பொழுது உள்ளே வரலாமா? என்றான் செழியன் தாத்தா நாங்க ரெசார்ட் கிளம்புறோம் என்றான், உங்களுக்கு அங்கே சென்றவுடன் கால் செய்கிறேன் என்றவரின் பார்வை மகிழினியை தொட்டு மீண்டது கலைந்திருந்த கூந்தலும் கசங்கிய உடைகளுமே அவள் அழுது இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது .
வெளியே வரும் பொழுது மிஸ்டர் ராஜா என்று அழைத்துக் கொண்டே மெல்ல நடந்தான் பின் வந்த ராஜா என்ன சார் ஏதும் பேசணுமா? என்றான் என் மீது கோபமா திடீரென்று உங்கள் தங்கையின் திருமணம் பற்றிபேசியது என்றான்
அதற்கு மறுப்பாய் தலை அசைத்த ராஜா உங்களைப் பற்றியும் எனக்கு கொஞ்சம் தெரியும், உங்களை கேட்டு தான் உங்க தாத்தாவும் உங்க அண்ணாவும் எந்த ஒரு முடிவும் எடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நீங்கள் உங்கள் திருமணம் பற்றி யோசிக்காமல் முடிவு செய்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் அதைவிட முக்கியம் தாத்தா ... பாப்பாவை பத்தி முழு விவரங்களும் உங்களுக்கு தெரியும் என்று சொன்னாங்க உங்களிடம் நானும் கொஞ்சம் பேசணும் ஆனா இந்த சூழ்நிலையில் வேண்டாம் நான் ஊருக்கு போயிட்டு வந்து உங்க கிட்ட பேசுறேன் என்றான் ராஜா
கேம்ப் போக இருப்பதாக கேள்விப்பட்டேன்! எப்போது கிளம்ப வேண்டும்? ஹவ் எ நைஸ் ஜெனி என்று விடைபெறும் போது எதிரே வந்த அட்சயாவை பார்த்து நாளை நானே கூப்பிடுறேன் அச்சு என்று வாசலை நோக்கி சென்றான் செழியன்
ராஜாவை பார்த்தும் பார்க்காதது போல் சென்ற அட்சயாவை ஒரு நிமிடம்.... இன்று நீ பாப்பா கூட இரு நான் அங்கிள் கிட்ட இன்பார்ம் செய்து விடுகிறேன் என்றான் ம்... என்று ஒற்றை எழுத்தில் பதில் சொல்லிக்கொண்டு மகிழினி அறை நோக்கி நகர்தவளை நிறுத்தி எல்லாரையும் பார்த்துக்கொள் சாப்பிடவை நீயும் சாப்பிடு என்று ராஜா காரை செட்டில் இருந்து எடுத்து வர கிளம்பினான்.
அனைவரும் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்
செழியன் வர்மனிடம் சொல்லிவிட்டு செல்ல வந்த போது அவன் யாரிடமோ போன்ல சண்டை போட்டுக் கொண்டிருந்தான் எத்தனை முறை சொன்னேன் ? நீ கேட்கவில்லை நீ நினைத்தது நடக்க வேண்டும் அப்படித்தானே? நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் எத்தனை முறை சொன்னேன்? , நீ
வளர்ந்த கல்ச்சர் வேற இங்கு உள்ள கல்ச்சர் வேற ..உன் லைப் ஸ்டைல் வேற ...இங்க உள்ள லைப ஸ்டைல் வேற மேரேஜ் ஆனா கூட உன்னால ஆறு மாசம் தாக்குபிடிக்க முடியாது
நீ உன் விருப்பத்தை சொன்ன போது கூட உன் மேல கோபப்படாமல் விலகி வந்ததுக்கு காரணமே
நீ சின்ன பொண்ணு உன் மனச கெடுக்க கூடாது என்று தான் அங்கே வருவதையே நிறுத்தினேன்... வயசு கோளாறு என்னை பாக்காம இருந்தா எல்லாம் சரியாயிடும் மறந்து விடுவாய் என்று நினைத்தேன் உன் படிப்பில் கவனம் செலுத்துவாய் என்று நினைத்தால் நீ.... ஓகே நீயா மாறன் இடம் போய் பேசினாயா?
இவ்வளவு நேரம் பேசுறேன் பதில் சொல்றியா டி நீ! வது என்ன ஆச்சு ? ஏய் ஏதாவது பேசுடி என்றான் விஜயவர்மன்
அது எப்படிடா மச்சான் பேசுவா நான் வந்து நிக்கும் போது என்ற அந்த பக்கம் கேட்ட மாறனின் குரல் கேட்டு திகைத்து நின்றான் விஜயவர்மன்
அவளா இதுவரை எதுவும் சொன்னது இல்ல லைட்டா டவுட்டு இருந்தது ஜெனிபர் தான் கரெக்டா கண்டுபிடிச்சு தாத்தா கிட்ட சொல்லி இருக்காடா.. அது மட்டும் இல்ல மச்சான் அதுக்கு முன்னாலே ரெண்டு தாத்தாவும் உங்க கல்யாணத்தை முடிவு பண்ணினாங்க இப்போ திடீர்னு வந்த ட்விஸ்ட் என்னன்னா செழியன் மகிழினி மேரேஜ் தான் ஓகேடா இப்ப என் டவுட்டு கிளியர் ஆயிடுச்சு மச்சான்... உன்கிட்ட நாளைக்கு காலையில பேசுறேன் மச்சான் என்று போனை தங்கையிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான் மாறன்
வது போன ஒரு நிமிஷம் அண்ணா கிட்ட கொடு என்றான் விஜய வர்மன் என்னடா இப்ப தான் பிரண்டு கிட்ட பேசணும்னு தோணுதோ என்றான் மாறன்
தன் குரலை தாழ்த்தி கொஞ்சம் சீரியஸா கேள்டா இன்னைக்கு செழியன் டாக்டர் விக்ரம் பற்றி என்கிட்ட பேசினான் டா அது பத்தி நான் உன்கிட்ட பேசணும் கொஞ்சம் கழிச்சு கூப்பிடு டா நான் அதற்குள் வீட்டுக்கு போய் விடுகிறேன் ...டேய் என்ன ஒரு மணி நேரம் போதுமா இல்லன்னா ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சு பேசவா என்று நக்கல் செய்து கொண்டே தன் தங்கையின் கன்னத்தை மெல்ல கிள்ளி கொண்டு கிளம்பினான் மாறன்.
வந்த சுவடு தெரியாமல் கிளம்பினான் செழியன்