உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 22
ஜெர்மனியில் ஆதித்ய நெடுமாறன் மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பினான் அவனுக்காக காத்திருந்தாள் அவன் மனைவி ஜெனிஃபர் சாப்பாடு எடுத்து வைக்க வா பாஸ் என்றவளை பார்த்து நீ சாப்பிட்டியா? குட்டீஸ் தாத்தா சாப்பிட்டாங்களா ?என்று கேட்டுக்கொண்டே தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள சென்றான், 10 நிமிடங்கள் கழித்து டைனிங் டேபிளில் அமர்ந்தான் தட்டில் உள்ள தந்தூரி ரொட்டியை குருமாவில் முக்கிய அவளுக்கு ஊட்டினான் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் அவனுக்கு தெரியும் அவள் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்று எப்போதுமே பாட்டி, அம்மாவுடன் சேர்ந்து சாப்பிட்டு விடுவாள் தனியாக சாப்பிட மாட்டாள் அதனால்தான் மீட்டிங்கில் அனைவரிடமும் சேர்ந்து தான் சாப்பிட்டதை கூறாமல் அவளுக்கு ஊட்டி விட துவங்கினான்
நம்ம வீட்ல என்னங்க நடக்குது தாத்தா சொன்னாங்க பாஸ்கர் தாத்தாவின் ப்ரோக்ராமும் கேன்சல் ஆயிடுச்சு நீங்க இந்தியா போறீங்களா என்ன ? மெயில்ல ரெண்டு ஓபன் டிக்கெட் பார்த்தேன் என்றாள் ஜெனி.
ஒரு வாயை எடுத்து மாறனுக்கு ஊட்டிக்கொண்டே இன்னைக்கு சோபி பேசினாள்
சாரி கேட்டாள் ரெம்ப நேரம் பேசினாள் எல்லாம்... சொன்னாள்.
ஆதித்ய நெடுமாறன் மனதிற்குள் எதை எல்லாம் சொன்னாள் என்று தெரியவில்லையே... நாம் வாய் குடுத்து மாட்டிக்ககூடாது மாறா.. என்று நினைத்துக்கொண்டான்
ஏங்க என்ன யோசனை. நான் கூப்பிடுவது கூட காதில் விழாமல் ....அவள் தான் உங்களிடம் சொல்லி அந்த திருமணப் பேச்சை நிறுத்த சொன்னாளாம்! என்று ஜெனிபர் சொன்னதும் இதுக்கே இவ்வளவு ஷாக்கா இன்னும் எவ்வளவு இருக்கு மனதிற்குள் புலம்பிக் கொண்டான்
எல்லாரும் அக்கா கிட்ட தான் பிரச்சினைகளை சொல்லுவாங்க கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இவ என்னவோ அக்காவை விட்டுட்டு அத்தான் கிட்ட தான் எல்லா பிரச்சனைகளையும் சொல்கிறாள்...நீங்க அவ்வளவு கிளோஸ் ஆயிட்டீங்க அவளுக்கு கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு, உன் சமயம் உங்கள நினைச்சா பெருமையாவும் இருக்கு, ஆமா அவ அடுத்து என்ன செய்யணும் உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா?
என்ன சொல்லுவது என்று தெரியாமல் மாறன் இவளை திசை திருப்பும் போட்டுட்டு ஜெனி எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு
ஒரு கிரீன் டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவது கிடைக்குமா? என்றவனைப் பார்த்து என்ன பாஸ் கிடைக்குமானு கேள்வியெலாம் கேக்குறீங்க? ஒரு கிரீன் டீ வேணும்னா போட்டு தர போறேன் என்று சிரித்துக் கொண்டே சமையல் அறை நோக்கி சென்றாள்.
ஜெனிநான் ரூம் பில் வேயிட் செய்றேன் என்று ரூமுக்கு செல்ல தொடங்கினான் நெடுமாறன்.
ரூமுக்கு வந்து முதல் வேலையாக செய்தது சோபிக்கு கால் செய்தான் அவள் ஆன்லைனில் இருப்பது தெரிந்துதான்! சொல்லுங்க அத்தான் என்றாள் சோபி
ஏய் என்ன இன்னும் ஆன்லைன்ல உக்காந்து இருக்க? சரி உங்க அக்கா கிட்ட எத பத்தி பேசின? என்ன பேசின? உங்க அக்கா நீ எல்லாம் சொல்லிட்டேன்னு சொன்னா எல்லாத்தையும் சொல்லிட்டியா என்ன?
உடனே பதறிய சோபி நான் எல்லாத்தையும் சொல்லல நீங்க சொன்ன கல்யாணத்தை நிறுத்துவதற்கு சொன்ன காரணத்தையும் மேல படிக்கணும் அப்படிங்கறது மட்டும்தான் சொல்லி இருக்கேன் , நீங்க எல்லாத்தையும் சொல்லிடாதீங்க ஏன்றாள் சோபி.
அதைக் கேட்டு பெருமூச்சுவிட்டு கொண்டு எத்தனைய தாண்டி சமாளிக்கிறது ஒன்றை சமாளிக்கிறதே கஷ்டமா இருக்கு இதுல உன்னையும் சமாளிக்க வேண்டியதா இருக்கு என்றான் சிரித்துக் கொண்டே.
சரி என்ன முடிவு எடுத்திருக்க படிக்கிறதுக்கு?
இங்க படிக்கிறியா நியுயார்க் போறியா? என்றான் மாறன்
நீ கொஞ்ச நாள் இங்கு இருக்க வேண்டாம் புரியுது இல்ல நான் எதுக்கு சொல்றேன்னு நீ படிச்சி முடிச்சிட்டு உன் காலில் நிற்கும்போது நீ கேட்டத நான் செஞ்சு தருவேன் அதுவரை கொஞ்சம் பொறு என்றான் செழியன்
வேறு சில காரணங்களால் காலேஜ்ல சேரும்போதுஉன்கூட நான் இருக்க முடியாது என்னோட பிஏ பிபஞ்சன் இருப்பான் புரியுதா? அவன் என்னோட பிஏ மட்டும் தான் ,அவன் என் சொல்ல 100% கேட்பான் என்ற போதே சோபி முந்தி கொண்டு அத்தான் நானும் உங்களுக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என்றாள் .
நீ என்பதால் மட்டும் அல்ல இந்த இடத்தில் பிரியா இருந்தாலும் இதை தான் சொல்லி இருப்பேன் எனக்கு நீ வேற பிரியா வேற கிடையாது சொல்வதை கேட்டு நடக்கணும் புரியுதா என்றான் மாறன்
கதவை தட்டிக் கொண்டு உள்ளேன் நுழைந்தாள் ஜெனிஃபர் என்ன பாஸ் சோபி கிட்டயா பேசிட்டு இருக்கீங்க? என்றாள்
இன்னும் அவ தூங்கலையா? என்ன பண்ணிட்டு இருக்கா இன்னும் ?என்ற ஜெனிஃபர் போனை வாங்கி என்னடி தூக்கம் வரலையா? என்றாள் ரொம்ப எல்லாம் கவலைப்படற மாதிரி ஆக்டிங் கொடுக்காத நீ எதை பத்தியும் கவலைப்பட மாட்டேன்னு எனக்கும் தெரியும் என்றாள் தங்கையிடம்,
எவ்வளவு கரெக்டா தெரிஞ்சு வச்சு இருக்கா தங்கைய பத்தி குட் என்று மனதிற்குள் பாராட்டி கொண்டாலும் முக்கியமான விஷயத்தை கண்காணிக்காம விட்டுட்டியேடி என்று நினைத்துக் கொண்டான் ஒருவேளை அந்த வீட்டில் இருந்திருந்தால் உனக்கு தெரிந்திருக்குமோ எனனவோஎன்று நினைத்துக் கொண்டான்
சரி சரி அவளை ஆன்லைன்ல இருந்து வெளியே வந்து தூங்கு ன்னு சொல்லு என்றான் டீயை குடித்தபடி அவளிடம்
நாளைக்கு பிரபஞ்சன் அவளை கூட்டிட்டு போய் அவபடிப்பு சம்மந்தப்பட்ட வசதிகள் எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு வருவான் பிரபஞ்சன் வந்து கூப்பிட்டா அனுப்பி வைங்க புரியுதா? தன் மனைவியிடம்! உனக்கு வீண் அலைச்சல் எல்லாம் வேண்டாம், அவளை அவன் பாத்துக்குவான்
ஒரு வருடம் போகட்டும் அதற்குப் பிறகு அவள் திருமணத்தை பற்றியோ அவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய யோசிப்போம் அவள் முழு மனதுடன் படிக்கட்டும். சரியா என்றான் அத்தையுடன் பேசு நானும் பேசுகிறேன் என்று முடிக்கும் முன் செழியன் பாஸ் இப்பமெல்லாம் முன்ன மாதிரி கோபப்படுறது இல்லை அத பத்தி பேசலாம் இல்ல அவர் ஆஃபீஸ்க்கு வந்தாலே ஆபீஸ்சில் வேலையை இழுத்து போட்டு கொண்டு எங்கேயாவது போய் நின்னுக்குவேன் அவர் ஒரு பார்வை பார்த்தாலே எனக்கு ஜுரமே வந்துரும் ரொம்ப பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்ப்பாரு கோவப்படுவாரு அப்படிப்பட்டவர் இப்ப எவ்வளவு சேஞ்ச் ஆயிருக்காரு அதை அவள்கிட்ட சொல்லலாம் இல்ல என்றாள் ஜெனி
ஜெனி திருமணத்தின் அடிப்படையே அன்பு தான்... பயம்... இல்லை, அத்தான் எனக்கு செழியன் அத்தான பார்த்தாலே பயமா இருக்கு என்று சொல்பவளை என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது அது மட்டுமில்லாமல் கடவுள் யார் யாருக்கு என்ன முடிச்சி போட்டிருக்காரு நமக்கு தெரியாது அப்படி தான் நடக்கும் நாம் ஒரு நிமிஷமாவது மகிழினிய இந்த இடத்தில் வைத்து யோசித்து பார்த்திருக்கோமா?
எனக்கு தான் சோபி நம்ம வீட்ல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு, நான் ஆசைப்பட்டேன் அது மட்டும் இல்லாம உன்னையும் ஆசைப்பட வைத்து விட்டேன், அனைவரும் அந்த திருமணத்திற்கு சம்மதிக்க ஒரே காரணம் நீ மட்டும் தான் உன் மேல உள்ள அன்பும் நம்பிக்கை தான்.
உன்னை காதலிக்கும் போது இல்லாத பயம் திருமணம் என்ற போது வந்தது டி....அம்மா அப்பா தாத்தா பாட்டி சம்மதம், அதற்கு பின் உன் வாழ்க்கை முறை வணங்கும் தெய்வம் முதல் எல்லாமே வேறு, அதனால எனக்கு பயம் நம்ம வீட்ல அனைவரும் இந்திய கலாச்சாரம் பாரம்பரியத்தை பின்பற்றுவாங்க நீ எப்படி இது அக்செப்ட் பண்ணிக் கோள்வாயோ தெரியல அப்படின்னு ரொம்ப யோசிச்சு இருக்கேன்
ஏன் நான் காதலை முதல்ல அம்மா அப்பா கிட்ட சொல்ல முன்னாலே நம் காதலை கண்டுபிடித்து அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை நான் அனைவரிடம் பேசும் முன்பே உனக்காக அவன் அனைவரிடம் பேசினான், அது மட்டும் இல்லாமல் திருமணம் முடிந்தாலும், எத்தனை அசிஸ்டன்ட் பிஏ வேணும்னாலும் வச்சுக்கோ ஆனா எல்லாரும் ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டியது உன்கிட்ட மட்டும்தான் என்றான்ஜெனியிடம்
ஆபீஸ்ல எந்தவித பிரச்சனையானாலும் சரி செய்ய முடியும் அவங்களால என்று அவன் உனக்கு கரண்டி கொடுத்தான்.
அப்பொழுது இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவன் சொன்னான் எனக்கு அப்புறம் உன்னை என் இடத்தில் இருந்து பார்த்துக்குவாங்க எல்லா இடத்திலும் நேரத்திலும் உனக்கு ஹெல்ப் பண்ண ரெடியா இருப்பாங்க என்று சொன்னான் என்னிடம்
அது மட்டும் இல்ல ஜெனி உனக்கு நம்ம கம்பெனியில் உள்ள ஷேர்ல ஒரு குறிப்பிட்ட பங்க உன் பேர்ல ஆட்டோமேட்டிக்கா டிரான்ஸ்பர் ஆகுற மாதிரி ரெடி பண்ணி வச்சிருக்கான் நம்ம திருமணம் உறுதியாகும் போதே ரெடி பண்ணி வச்சிருக்கான் இது எனக்கே தெரியாது சமீபத்துல தான் ஆடிட்டர் சொன்னார்
எத்தனை நாள் வாழ்வோம் என்று தெரியாமல் வாழ்வது எவ்வளவு கொடுமையான லைஃப் ஜெனி நாளைக்கு இருப்போமா இல்லையான்னு தெரியாம ஒரு லைஃப்... இல்ல ..என் தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்...
அவனுக்கு என்று எங்கோ இருந்து வந்தான் டாக்டர் விக்ரம் அவனை இவ்வளவு தூரம் மாத்துனதுல அவரோட பங்குதான்ரொம்ப அதிகம், இப்ப அவன் உயிரோடு இருப்பதற்கு காரணமும் அவர்தான் என்று கூறும்போதே கண் கலங்கிய கணவனை அணைத்துக்கொண்டாள்ஜெனி.
எல்லாம் சரியாகும் ,உங்களால எல்லாம் சரி பண்ண முடியும் அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள் அவன் முதுகை தடவிக் கொண்டே...
ரொம்ப நாள் கழிச்சு என் வீட்டுக்காரர் என்கூட இருக்கிறாரே கொஞ்சம் ஜாலியா பேசிட்டு சந்தோஷமா இருக்கலாம் நினைச்சா உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க என்று அவனை நக்கல் செய்த படி அவன் உச்சந்தலையில் முத்தமிட்டால் ஜெனி...