உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 27
விக்ரமின் விளக்கத்தை கேட்ட சேரமான் மனநிலையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை ஒரு பக்கம் பார்க்க இது சிறந்த முடிவாக தெரிந்தது ஒரு பக்கம் பார்க்க குழப்பமாக தோன்றியது
சரி எதுவாயினும் நாளை செழியனுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவரை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கைக்கு சென்றார் ஓய்வெடுக்க
இன்னும் ஒரு வாரத்தில் மகிழினியின் பிறந்தநாள் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது
செழியன் விக்ரமை பார்க்க வந்தான் "என்ன டாக்டர் ரொம்ப யோசனையாக இருக்கிறீர்கள் போல? எந்த கோட்டையை பிடிக்க? "என்று கேட்டுக் கொண்டே வந்து அவன் அருகில் கட்டிலில் உட்கார்ந்தான்
அது ஒன்றும் இல்லை செழியா மகிழினிக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருது என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்
சரி அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லு எனக்கு ரொம்ப போர் அடிக்குது உன் காதல் கதையை கொஞ்சம் கேட்போம் என்று விக்ரமனின் தலையணையை எடுத்து மடியில் வைத்த பொழுது அங்கு அவன் தலையனை அடியில் இருந்த இரண்டு டைரியையும் கவனித்தான்.
சார் டைரிஎல்லாம் எழுதுவீங்களா?
நான் எல்லாம் டைரி எழுதுறது இல்லை வேறு என்ன எழுத என் மருத்துவ குறிப்பையும் மாத்திரை பேரையும் தான் எழுத வேண்டும் என்று சொன்னபொழுது
அவன் முதுகை தடவிக் கொண்டு ஒரு மருத்துவனாய் ஜெயிக்க வேண்டும் என்று வெறியோடு ஒரு நண்பனாய் காப்பாற்ற வேண்டும் என்ற வெறி அதிகம் டா உன்னை என் உயிரை கொடுத்தேனும் காப்பாற்றுவேன் என்றான் என்று செழியனை அணைத்து கொண்டு
சரி சரி சொல்லு கேட்கலாம் என்றான் செழியன்
நானும் ராஜாவும் ஒன்றாகவே எம்பிபிஎஸ் படித்து இதயம் சம்பந்தமான பிரிவு எடுத்து படித்தோம் அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்
நான் கல்லூரியில் சேர்ந்து சில நாள்களில் என் அப்பா இதயத்தை சரி பிரச்சனை காரணமாக உயிர் இழந்தார் அதன் பின் அவ சேர்த்து வைத்திருந்த பணம் அம்மாவின் நகை இவற்றை வைத்து தான் என் படிப்பை முடித்தேன்
எனக்கு கவர்மெண்ட் உதவித்தொகையும் கிடைத்தவுடன் உயர் படிப்பை முடித்தேன்
எம் எம் மருத்துவமனையின்றி எங்கள் கல்லூரியில் சில வகுப்புகளை எடுத்தார் எங்கள் மீது கொண்ட பாசத்தினால் அந்த மருத்துவமனையில் எங்களுக்கு வேலை போட்டு கொடுத்தார் நாங்களும் எங்களால் முடிந்த அளவு உழைத்தோம்
எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார்
ஒரு சில சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்ததால் எங்கள் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது.
முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் டீனின் பிசினஸ் நண்பர்கள் அனைவரும் எங்கள் மருத்துவமனையை நோக்கி வர ஆரம்பித்தனர்
புதிய அட்வான்ஸ் மருத்துவ முறை மூலம் சிகிச்சை செய்ததால் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தால் போதும் என்ற பொழுது இன்னும் பிரபலமானோம்
ராஜா ஒவ்வொரு முறையும் என் பாப்பா வெயிட் செய்வா ,என் பாப்பா என்னை திட்டுவா, என் பாப்பா என் கூட பேசவே மாட்டா, இது பாப்பா எடுத்து கொடுத்த டிரஸ் எப்படி இருக்கு? என் பாப்பா எனக்கு பிடிச்சதை சமைத்து கொடுத்து அனுப்பி இருக்கா... என்று மூச்சுககு 300 முறை என் பாப்பா என் பாப்பா என்று
மகிழினியை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பான்
அதனாலயே அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது
மார்ச் 8 மகிழினியின்பிறந்த நாள் ராஜா என்னிடம் பாப்பா இன்று என்னிடம் மதியம் ட்ரீட் கேட்டிருக்கா நான் கொடுக்கவில்லை என்றால் என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவாள் நீயும் வருகிறாயா? என்றான்
கரும்பு தின்ன கசக்குமா என்ன எப்பொழுது பார்ப்பேன் என்று காத்திருந்த நான் அவளை பார்க்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சரி என்றேன்
உண்மையை சொன்னால் அவளை பார்க்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன் அவளை ஏன் காதலிப்பேன் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை என்றான்
விக்ரம்
நாங்கள் மருத்துவமனைக்கு அருகில் இருந்த பிரபல ஹோட்டலுக்கு 1 மணிக்கு சென்று ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எப்பொழுது வருவாங்க என்றேன்? அவள் 1;30 க்கு கரெக்டா வந்து விடுவாள் என்றான் அது என்னடா 1:30 என்றேன் அது அப்படித்தான் பஞ்சுவாலிட்டி என்றான்
நானும் அவனும் வாசலை பார்த்து காத்துக் கொண்டிருந்தோம்
சரியாக 1.29 வெள்ளை நிற bmw கார் வழுக்கிக் கொண்டு வந்தது அதிலிருந்து வான நிறப் பட்டு புடைவையில் தங்க நிற பார்டரும் சின்ன சின்ன வேலைப்பாடும் கூடிய புடவையில் ஒற்றை முந்தானையை மட்டும் பிடித்துக் கொண்டு முகத்தில் விழுந்த கற்றை முடியை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டு மறுக்கையில் உள்ள போனில் யாருடனுனோ பேசிக்கொண்டு உள்ளே வந்தாள்
அவள் பேசுவதற்கு தகுந்தார் போல அவள் ஜிமிக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தது
இரண்டு முழம் பூவை முன்னால் எடுத்து விட்டிருந்தாள், கையில் சின்ன பிரேஸ்லெட ஒரு கையில் சின்ன வாட்ச்
பிறை நெற்றியில் ஒரு சின்ன பொட்டு அத்துடன் ஒரு சிறு திருநீறு கீற்று
போட்டு இருக்கிறாளா இல்லையா என்று தெரியாதபடி லிப்ஸ்டிக்
நான் அவளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவள் நேராக என்னிடம் வந்தாள்
ஹாய் என்று கையை நீட்டி நீட்டினாள் நானும் கை கொடுத்துக் கொண்டேன் நீங்க டாக்டர் விக்ரம் தானே அண்ணா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்காங்க என்று என் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தாள்
நான் மெல்லவா ராஜாவை பார்த்தேன் அவன் பார்வை வாசலில் காரை நிறுத்திக் கொண்டு வந்த பெண்ணின் மீது இருந்தது
இவள் சேலை வண்ணத்தில் தான் அவளும் சேலை கட்டி இருந்தாள் இவளை விட சற்று குள்ளம்
ஏனோ அவளை பார்த்தவுடன் என் தங்கைதான் ஞாபகத்திற்கு வந்தது அவளின் பார்வையூம் ராஜாவின் மீதுதான் இருந்தது
அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என் பக்கத்தில் உள்ள சேரில் வந்த அமர்ந்தாள் என்னை பார்த்து ஹாய் விக்ரம் அண்ணா ஐ அம் அட்சயா மகிழினியின் க்ளோஸ் ஃப்ரெண்ட் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு என் அருகில் உள்ள சேரில் அமர்ந்தாள்
நான் ஹாய் டா என்று நானும் சிரித்துக் கொண்டேன்
என்ன அண்ணா வந்து ரொம்ப நேரம் ஆயிற்றா என்றாள் மகிழினி
ராஜாவும் மகிழினியிடம் இப்பதான் வந்தோம் என்று சொல்ல நாங்க 1 மணிக்கு இங்க ஒரு வந்தோம்
வரும்போதே சொல்லிவிட்டான் நீங்கள் 1:30க்கு தான் வருவீங்க என்று சோ நோ ப்ராப்ளம் என்று கூறிக்கொண்டு மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே என்றேன் அவள் தேங்க்ஸ் என்று சொல்லி மெல்ல சிரித்து கொண்டே என்ன சாப்பிடலாம் என்றாள்
ராஜாவோ உனக்கு தான் பிறந்தநாள் நீ தான் மெனு சொல்ல வேண்டும் என்றான் ஆனால் ஸ்வீட் மட்டும் நான் தான் ஆர்டர் செய்வேன் என்றான்
சரி என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்று கேட்டு அதனையும் சேர்த்து ஆர்டர் செய்தாள்
ராஜா குலோப் ஜாமுனை ஆர்டர் செய்து வந்தவுடன் அதை எடுத்து தங்கை வாயில் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா எப்பொழுதும் நீ மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினான்
அவை தோழி அட்சயாவுக்கு மகிழினியே குலோப்ஜாமுனை எடுத்து ஊட்டி விட்டாள் வாங்கிக் கொண்ட போதும் அவளின் பார்வை ராஜாவை ஏக்கமாய் பார்த்தது
ராஜா கண்டும் காணாதது போல் குலோப்ஜாமுனை எடுத்து எனக்கு ஊட்ட ஆரம்பித்தான்
ஸ்வீட் சாப்பிட்டு முடித்த பொழுது தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்தான் ராஜா
அதிலிருந்து ஒரு ஒற்றை கல் வைர மோதிரத்தை எடுத்து அண்ணாவோட சின்ன கிப்ட் என்று கூறி அவள் கையில் போட்டு விட கையை காட்டு பாப்பா என்றான்
வலக்கையை நீட்டி மோதிர விரலை சற்று மேல் எழுப்பி காட்டினாள் அவனும் பாப்பா ஆள்காட்டி விரலை காட்டு என்றான்
இப்பொழுது இது தேவையா? என்றாள் மகிழினி.
கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைத்தேன் பாப்பா நீ இப்பொழுது தன் ஆபீஸ் பொறுப்பை ஏற்றி இருக்கிறாய் நீ கையெழுத்து போடும் பொழுது உன் கையில் இந்த மோதிரம் இருக்க வேண்டும் என்றான்
சரி அதை மோதிர விரலில் போட வேண்டியதுதானே என்றாள்
இடவலமாக தலையாட்டிக்கொண்டு உனக்கு வரும் மாப்பிள்ளை உனக்கு நிச்சயதார்த்த மோதிரம் போடுவார்
அப்பொழுது நீ இந்த மோதிரத்தை கழற்ற சற்று தயங்குவாய் அந்த தயக்கம் உனக்கு வரக்கூடாது என்று தான் ஆள்காட்டி விரலில் போடுகிறேன் இதை எப்பொழுதும் கழட்டக்கூடாது பாப்பா என்றான்
கொஞ்சம் ஆச்சரியப்பட்டு போனேன் நான் எனக்கு தெரியும் அவள் இவன் சொந்த தங்கை இல்லை என்று
உணவு வந்தது அனைத்து உணவையும் நால்வர் தட்டிலும் பகிர்ந்து வைத்தாள் பின் சாப்பிட ஆரம்பித்தாள்
விஜய் அண்ணா இன்னைக்கு மத்தியானம் சாப்பிட கூப்பிட்டாங்க நான் உங்களிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன் என்றேன்
சரி இரவில் அனைவரும் வெளியே சாப்பிட்டு கொள்ளலாம் என்றார் என்றாள் மகிழினி
நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க சாயந்திரம் தாத்தா வந்துடுவாங்க அதனால தாத்தா சச்சிமா அண்ணா அட்சயா எல்லாரும் சேர்ந்து போகலாம் என்று நினைத்தேன் என்றாள் மகிழினி
சரிடா பார்த்து போ என்று ரெண்டு பாசலே மகிழினியிடம் கொடுத்தான்
இந்த சேலையை அம்மாவிடம் கொடுத்து விடு, இது உன் குளோஸ் பிரண்டுக்கு எப்போதுமே எடுத்து பழகிடுச்சு என்று கொடுத்துவிட்டு சரி டா ஹாஸ்பிடலுக்கு டைம் ஆயிடுச்சு ஓபி பார்க்கணும் பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க நாங்க கிளம்புறோம் என்று கிளம்பினான் ராஜா
Author: Vishakini
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.