உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 32
எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது நான் இந்த பாலிசி விஷயம் பற்றி ஜெர்மனியில் இருந்த மாறனிடம் பேசியிருந்தேன்
அவன் அதைப் பற்றி விவரம் தெரிந்து கொள்ள என்னை ஜெர்மனி வர சொன்னான் அந்த பயணம் தான் விக்ரமின் தலைவிதியவே மாற்றிவிட்டது.
அங்கு போன போது தான் எனக்கு செழியனின் உடல்நிலை பற்றிய விவரங்கள் தெரிய வந்தது
அவனைக் காப்பாற்ற நினைத்து இவனை இழந்து நிற்கிறேன் என்று கதறி அழுக ஆரம்பித்தான் விஜய வர்மன்
அந்த வார்த்தையை கேட்ட அட்சயா சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்
அண்ணா என்ன சொல்றீங்க இது எப்படி சாத்தியம் நீங்க சொன்ன வார்த்தை உண்மையா என்று அவன் சட்டை காலரின் இரு பக்கங்களையும் பிடித்துக்கொண்டு அவனை உலுக்கினாள் பின் அவன் மார்பிலேயே சாய்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்
"இது எப்போது நடந்தது எங்கே நடந்தது? ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?என்று புலம்ப ஆரம்பித்தாள் அட்சயா விஜயவர்மனிடம்
எப்படி சொல்ல சொல்கிறாய் என் தங்கை காதலிப்பவனை நானே கூட்டிக் கொண்டு கொன்று விட்டேன் என்றா
அதை அவளிடம் சொல்ல தைரியம் இல்லாமல் ஓடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன் என்றா
தினம் தினம் அவன் எழுதிய கடிதத்தை பார்த்து அழுது கொண்டு கதறிக் கொண்டிருகிறவளை பார்த்து நானும் உள்ளுக்குள் கதறி அழுகிறேன்
என்னையே என்னால் மன்னிக்க முடியவில்லை நான் எப்படி சொல்வது அவன் இப்பொழுது இல்லை என்று
உன் கனவு கோட்டைகளின் நானே தகர்த்து விட்டேன் என்று எப்படி சொல்லுவேன் என் தங்கையிடம் என்று புலம்பிக் கொண்டிருந்தான்
இவர்களின் கதறல் சத்தம் கேட்டு சரஸ்வதி, பாஸ்கரவர்மன் இருவரும் விஜயவர்மனின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்
இருவரும் அழுவதை கொண்டு பாஸ்கரவரமன் புரிந்து கொண்டார் என்ன நடந்திருக்கும் என்று
ஆனால் சரஸ்வதியும் குழப்பத்தில் நின்றது சில நொடிகள் தான் நேரான அட்சயாவிடம் வந்து அவள் தோளை தொட்டார்
தொட்டது தான் தாமதம் அட்சயா அவரை இறுக்கி அணைத்து கொண்டு அம்மா என்று கதறி கதறி அழ ஆரம்பித்தாள்.
அவள் முதுகை வருடிக் கொண்டேன பாஸ்கரவர்மனை ஒரு பார்வை பார்த்தாள் சரஸ்வதி
என்னப்பா என்ன நடக்குது இங்க என்றது அந்தப் பார்வை.
அட்சயா தன்னை சமன்படுத்திக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள்
மீண்டும் விஜயவர்மனிடம் வந்தாள் என்ன நடந்தது என்று முழுசா சொல்லுங்க அண்ணா என்றாள்
உனக்கு ஞாபகம் இருக்கா மார்ச் 5 ம் தேதி இரவு நான் உடனடியாக ஜெர்மனி செல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்ய சொல்லி நானும் தாத்தாவும் கிளம்பினோம்
நீ கூட என்ன எதுவும் பிரச்சனையா? என்று கேட்டாய் நான் கூட வந்து சொல்கிறேன் என்று கிளம்பினோம்
அன்று இரவு எனக்கு ஒரு வீடியோ வந்தது விக்ரமிடமிருந்து அதுதான் அவன் கடைசியாக எடுத்த வீடியோ
அன்று காலை விக்ரம் செழியன் உடன் சேர்ந்து மகிழினிக்கு பிறந்தநாள் பரிசு வாங்க வெளியே சென்று கொண்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது
எதிர்பாராத விதமாக பெரிய ட்ரக் ஒன்று திரும்ப முயற்சிக்கும் பொழுது ரோட்டு பக்கமாக நின்று கொண்டிருந்த ,சென்று கொண்டிருந்த பல கார்களின் மீது விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர் அந்த விபத்தில் விக்ரமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
அருகில் இருந்த செழியனின் இடது பாகம் முழுவதும் அடிபட்டு அவன் காலை காரில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் இருந்தான்
அவனை கஷ்டப்பட்டு வெளியே எடுத்து விட்டு எங்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி இருந்தான் அந்த வீடியோவை அனைவருக்கும் போட்டு காட்டினான் விஜயவர்மன்
அதில் விக்ரமின் தலையில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, அவன் பின்புறம் செழியன் ரத்தக்காயத்துடன் மயக்கத்தில் இருந்தான்
விக்ரம் பேச ஆரம்பித்திருந்தான் நான் டாக்டர் விக்ரம் கம் ஃபிரம் இந்தியா நான் என் ஆராய்ச்சி படிப்பை முடிக்க ஜெர்மனி வந்து இருந்தேன்
இந்த விபத்து நாங்கள் எதிர்பாராமல் நடந்தது என் தலையில் அடிபட்டு இருப்பதால் நான் விரைவில் என் சுயநலவை இழந்து கோமாவிற்கு போகவோ, மரணத்தை தழுவவோ செய்யலாம் அதற்கு முன் என் சுயநினைவுடன் என் நண்பனும் என் முதலாளியும் ஆகிய செழியனுக்கு என் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
அத்துடன் எனது லட்சியத்தை செழியனே நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
இது நன்றி கடன் அல்ல ஒரு வேண்டுகோள்
உங்களால் அது எளிதில் முடியும் என்று தெரியும் அது மட்டும் அல்லாமல் என் குடும்பத்திற்கு ஒரு வேண்டுகோள்
என் உடலில் உள்ள மற்ற பாகங்களை தானமாக கொடுக்க நான் ஆசைப்படுகிறேன் அதற்கு அம்மா நீங்கள் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்கிறேன்
ஒரு மருத்துவராக எனக்குத் தெரியும் நான் இன்னும் சில நேரத்தில் இறந்து விடுவேன் என்று ப்ளீஸ் மாறன் சார் "என்னை பல மனிதர்களில் வாழ வைக்க உங்களால் மட்டுமே முடியும்
என் லொகேஷன் உங்களுக்கு ஷேர் செய்து இருக்கிறேன் என்று பெரிய பெரிய சிவலை விட்டு செழியன் மீது சாய்ந்து படுத்திருந்தான் அத்துடன் அந்த வீடியோ முடிந்தது
இந்த வீடியோவை நான் எப்படி பாப்பாவிடம் காட்டுவேன் ?
மறுபடியும் அவள் பழைய நிலைக்கு சென்று விட்டால் நான் என்ன செய்வேன்?
ஏதாவது தவறான முடிவு எடுத்து வைத்தால் எனக்கு எனறு யார் இருக்கிறார்கள்?
நீ விக்ரமை பற்றி மருத்துவமனையில் விசாரிப்பது தெரிந்து அவனைப் பற்றிய விவரங்கள் யாரிடம் சொல்ல கூடாது என்று கேட்டுக்கொண்டு அவனைப் பற்றி விவரங்களை அழித்து விட்டோம்
அவனைப் பற்றிய நினைவுகள் பாப்பாவுக்கு வரக்கூடாது என்று தான் அவளுக்கு அதிக வேலைப்பழுவே கொடுத்தேன்
அவளுக்கு பிடித்த ஓவியங்களை வரைய வைத்து அவள் கவனத்தை திசை திருப்ப எண்ணினேன்
பகலில் செய்ய முடிந்த என்னால் இரவில் செய்ய முடியவில்லை தினமும் அந்த கடிதத்தை வைத்து அவள் அழுவதை பார்த்து நானும் அழுது கொண்டிருக்கிறேன்
அவன் லட்சியத்தை இன்னும் ஐந்து மாதத்தில் நாங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் அதற்கு புதிதாக கட்டடங்கள் கட்ட முடியாது அதனால் தான் அவன் வேலை பார்த்த மருத்துவமனையை ஒன்றுக்கு இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கி வாங்கினான் ஆதித்ய நெடுமாறன்
நீங்கள் சுற்றி திரிந்த அனைத்து இடங்களும் மகிழினிக்கு பழைய நினைவுகளைகொண்டு வரக்கூடாது என்று திட்டமிட்டு அந்த இடங்களை இடித்து புது கட்டடங்கள் கட்ட செய்தேன்
அனைத்தையும் தாண்டி நீங்கள் அவனைத் தேடும் பொழுது குற்றவாளியாக இருக்கிறேன்
எப்படி அவளை தேற்றுவேன் அவனை நான் தானே அனுப்பினேன் என்று ஒவ்வொரு நிமிடமும் என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டிருக்கிறது
சரி ரெண்டு மூணு மாதங்கள் தேடிவிட்டு தேடுவதை விட்டு வடுவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் விக்ரம் வீடு வரை
சென்றது எனக்கு இன்னும் அதிர்ச்சியை தந்தது
அவன் அம்மா தங்கை இருவரையும் அவன் மாமா வீட்டின் அருகே ஒரு வீட்டை வாங்கி அங்கேயே இருக்க வைத்தோம் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தோம் நான் அடிக்கடி சென்று அவர்களை பார்த்து வந்தேன் என்றான்
இதை எல்லாம் கேட்டு பொத் என்று பக்கத்தில் உள்ள சோபாவில் அமர்ந்தார் சரஸ்வதி
இங்கே பாஸ்கர வர்மன் ஒரு காட்சி பொருளாக மட்டுமே நின்று கொண்டிருந்தார் இந்த உணர்ச்சிப் பெருக்கில் அவர் என்ன சொல்வது என்று அனைவர் முகங்களை மட்டுமே அவதானித்துக் கொண்டிருந்தார்
மீண்டும் அந்த போனை வாங்கினாள் ராஜாவுக்கு அனுப்பினாள் கம் சூன் என்று மட்டும் ஒரு ஒரு வார்த்தை மட்டும் அனுப்பி விட்டு திரும்பியவள் வாசலை பார்த்து அதிர்ந்து நின்றாள்
Author: Vishakini
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 32
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 32
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.