உன் காதலால் என்னை மீட்டுவிடு - 33

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 33

வாசலை பார்த்து அதிர்ந்து நின்றாள் அட்சயா அவள் அதிர்ந்து இருப்பதை பார்த்து அனைவரும் வாசலை நோக்கி பார்த்தனர்

அங்கு கண்ணீரோடு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் மகிழினி

மெல்ல நடந்து வந்தாள் அட்யாவிடம் கொடு என்று செய்கையில் கையை நீட்டினாள்
அவளோ கொடுக்க மாட்டேன் என்று தன் அந்த செல்லை தன் பின்புறம் கொண்டு சென்றாள்

விஜய வர்மன் அவளை நோக்கி நெருங்கி வர முயற்சித்த பொழுது அங்கேயே நில் என்று செய்கை செய்தாள் மகிழினி

மீண்டும் அட்சயாவிடம் திரும்பி கையை நீட்டினார் அவள் பார்த்த பார்வையிலேயே இவள் கையில் விஜய் வர்மனின் செல்லை வைத்தாள் அட்சயா

கடகடவென்று பாஸ்வேர்டு போட்டு திறக்க முயற்சித்தாள் அது ராங் பாஸ்வேர்டு என்று காட்டியது

மீண்டும் முயற்சி செய்தாள் அதுவும் தவறு என்று காட்டியது அண்ணன் முன் செல்லை நீட்டினாள் அவன் பாஸ்வேர்ட் போட்டான் வி...க்..ர...ம் என்று அதையும் கவனித்துக் கொண்டாள்

அவனிடம் மீண்டும் செல்லை நீட்டினாள் அவன் புரிந்து கொண்டு அந்த வீடியோவை ஆன் செய்தான்
மெல்ல நடந்து சென்று அருகில் உள்ள சேரில் நிதானமாக அமர்ந்தாள் நிதானமாக மூச்சை இழுத்து விட்டாள்

அந்த வீடியோவில் உள்ள அனைத்தையும் அவனையும் அவன் பின்னால் இருந்து செழியனையும் கூர்ந்து பார்த்தாள்

அவன் வார்த்தைகளை ஒன்றொன்றாக உள்வாங்கினாள் நிதானமாக

அந்த வீடியோ முடியும் வரை காத்திருந்தாள் பின் மெல்ல எழுந்து விஜயவர்மன் அருகே வந்தாள்

மாறன் சாருக்கு போன் போடு என்றாள் விஜய வர்மன் அவள் முகத்தை பார்த்தான்

மீண்டும் சொன்னாள் மாறன் ...சாருக்கு ...
போன் ...போடு என்று நிதானமாக

நீ மாறன் சாரை கூப்பிடவில்லை என்றால் நான் சேரமான் தாத்தாவை செலுத்த வேண்டியது வரும் என்றால் தெளிவாக நிதானமாக

விஜயவர்மன் மாறனுக்கு அழைத்தான் முழு அழைப்பும் சென்று அழைப்பு முடிந்தது

அடுத்து ஒரு செகண்டில் அழைப்பு வந்தது மாறனிடமிருந்து விஜயவர்மன் அட்டென்ட் செய்யும் முன்பே போனை வாங்கி காதில் வைத்தாள்

என்னடா வர்மா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்க? எல்லாம் ஓகே தானே? எல்லோரும் நல்லா இருக்காங்க தானே? பாப்பா எப்படி இருக்கா?

என்று கேட்கும் முன் மகிழினி பேச ஆரம்பித்தாள் விக்ரம் எத்தனை மனிதர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றாள்

மாறனுக்கு அதை புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது புரிந்த போது அவளின் தெளிவு அவனை மீண்டும் குழப்பியது

அதே கேள்வியை மீண்டும் கேட்டாள் விக்ரம் எத்தனை மனிதர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்


அவன் சொன்னான் 25 பேரில் என்று அவன் உடல் முழுவதும் தானம் செய்யப்பட்டது அவன் மூளை மட்டுமே பாதிப்படைந்திருந்தது

அவள் மௌனமாக இருப்பது அவள் விளக்கம் கேட்கிறாள் என்று மாறனுக்கு தெரிந்தது

கண்கள் இரு சிறு குழந்தைகளுக்கு ,இதயம் செழியனுக்கு ,கல்லீரல் ஒரு ஏழை பெண்ணிற்கு, சிறுநீரகம் இரண்டும் அவன் வயதை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு
நுரையீரல் கணையம் சிறுகுடல் அனைத்தும் அவன் ஆசைப்பட்டது போல ஏழைகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது

அதுபோக அவன் உடலிலாலில் மற்ற எந்த இடமும் பாதிப்பில்லாததால் அவன் தோல், எலும்புகள் தசைநார் ,ரத்த நாளங்கள் எல்லாமே தானமாக கொடுக்கப்பட்டது

விக்ரம் சார்பில் உங்களுக்கு நன்றி என்று சொல்லி விட்டு விஜயவர்மனிடம் செல்லை கொடுத்தாள்

தன் அறையை நோக்கி செல்ல தொடங்கினாள் அவளை பின்தொடர்ந்தாள் அட்சயா அவளை நிறுத்தி நிதானமாக சொன்னாள்

விக்ரம் 26 ஆவது நபராக எனக்கும் தைரியத்தை தானம் கொண்டிருக்கிறான்

மீண்டும் அண்ணனிடம் வந்தாள் ஒரே ஒரு கேள்வி எனக்கு என்று ஒன்றுமே சொல்ல தோணவில்லையோ அவனுக்கு என்றாள் விஜயவருமனை நோக்கி

அவன் தலை குனிந்தான்
பின் தன் மேஜை டிராயரை திறந்து விக்ரமனின் போனை எடுத்துக் கொடுத்தான்

அதை வாங்கிக்கொண்டு அவள் அறை நோக்கி நடந்தால் அவரை பின்தொடர்ந்த அட்சயாவை நில் அட்சயா என்றார் சரஸ்வதி

நீ போ பாப்பா என்று அவளை அனுப்பிவிட்டு தண்ணீர் மட்டும் கொண்டு போ என்றாள் சரஸ்வதி

விஜயவர்மனிடம் வந்து அட்சயா அவன் போனை வாங்கினாள் கடகடவென்று அந்த வீடியோவை ராஜாவுக்கு அனுப்பி வைத்தாள் கூடவே கம்சூன் அண்ட் பாஸ்ட் என்ற மெசேஜ் அனுப்பி வைத்தாள்

ஒரு நிமிடத்தில் அடசயாவை அழைத்தான் ராஜா எடுத்த எடுப்பில் கேட்டான் அங்கு என்னடி புடுங்கிட்டு இருக்க இவ்வளவு நடந்து இருக்கு என்னன்னு சொல்ல மாட்டியா மெசேஜ் அனுப்புற

பாப்பா எங்க? என்ன நடந்தது என்றான் .

அவள் செழியன் பற்றி விசாரித்ததில் இருந்து அவன் இறப்பு மகிழினி நடந்து கொண்ட விதம் மாறனிடம் கேட்ட கேள்விகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள் ராஜாவிடம்

ஒன்றும் பயப்பட வேண்டாம் அவள் இப்போது முன்பு இருந்த மகிழினி இல்லை தெளிவாகவும் நிதானமாகவும் இருப்பாள் என்று எனக்கு தெரியும் அதனால தான் இந்த மாதிரி சூழ்நிலையிலும் அவளை தனியாக விட்டு வந்தேன் என்றான் ராஜா

அம்மா பக்கத்துல இருக்காங்களா என்றான்

ம்.. என்று பதில் சொன்னால் அட்சயா அவங்க கிட்ட செல்ல குடு என்றான்

அவள் சரஸ்வதி அம்மாவின் தோளை தொட்டு ராஜா உங்களிடம் பேசணுமாம் என்று அவரிடம் நீட்டினாள்

ஒரு பெருமூச்சுடன் நான் அந்த போனை வாங்கிக் கொண்டார் சரஸ்வதி காதில் வைத்து என்ன சொல்லுப்பா என்றார்

வேற யாரையும் அவள் ரூமுக்கு விட வேண்டாம் நீங்க மட்டும் போங்க கொஞ்சம் கிரீன் டீ எடுத்துட்டு போங்க அவள் உங்களிடம் மட்டும் தான் மனம் திறப்பாள் என்றான்

அவளிடம் நீங்கள் ஒன்றுமே பேசாதீங்க

நான் ஏர்போர்ட் சென்று கொண்டிருக்கிறேன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கு இருப்பேன் அதுவரை நிலைமையை கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள் என்றான் ராஜா

அட்சயா விடம் செல்லை குடுங்க என்றான் அட்சயா செல்லை வாங்கிக்கொண்டு சில அடி நடந்து சென்றாள்

படபடவென்று சில வேலைகளை செய்ய சொன்னான் நான் ஃப்ளைட் ஏற போகிறேன் இரண்டு மணி நேரத்தில் அங்கே இருப்பேன் அதுவரை அம்மா பாப்பா கூடவே இருக்கட்டும் என்றான்

ம்.. என்றாள் என்ன? நீ பயப்படுற அளவுக்கு எதுவும் நட க்காது சில இழப்புகளை நம் கடந்து தான் ஆக வேண்டும்

விக்ரம் உயிருடன் இல்லை என்ற விஷயம் எனக்கு 15 நாளைக்கு முன்னாடி தெரியும்

15 நாளைக்கு முன் விஜய வர்மன் என் வீட்டுக்கு வந்திருந்தார் முதல் முதலாக குடித்து இருந்தான்

அவன் முகத்தை பார்த்தேன் அவர் தலையை குனிந்து கொண்டு உள்ளே சென்று படுத்துக்கொண்டான் நான் அவனுக்கு சாப்பாடு கொடுக்க உள்ளே சென்ற பொழுது அவன் அழுது கொண்டிருந்தான் உன் லட்சியத்தை ஏன்டா என்கிட்ட சொன்ன? இவன் எத்தனை தடவை சொன்னான் உன்னை அனுப்ப வேண்டாம் என்று என்ற புலம்பிக் கொண்டிருந்தான்


சரி அதெல்லாம் விடு இப்போ நீ பாப்பா கூட இருக்கிறத விட உன் அண்ணன் கூட இரு அதுதான் நல்லது

அவனை எப்படி டீல் பண்ணணும் என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என்றான்

தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்து அவரை தூங்க வை என்றான்

சரி போர்டிங் குள்ள போறேன் ஏன் போன் ரீச் ஆகாது என்ன இருந்தாலும் தைரியமா இரு என்றான்


அட்சயாவுக்கு என்ன பேசுவது எனறே தெரியவில்லை
எத்தனை நாள் கழித்து எத்தனை வார்த்தைகள் பேசி இருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்படலாமா? இங்கு உள்ள சூழ்நிலை கண்டு வருத்தப்பட வா என்று கூட தெரியவில்லை.

தாத்தாவை மெல்ல அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் இருக்க வைத்து இரண்டு தோசைகள் ஊத்தி கொடுத்தாள்

அட்சயா நீயும் சாப்பிடுமா என்ற தாத்தா ஏன்னா நீ தான் எல்லாத்தையும் பாத்துக்குற உனக்கு தான் அதிக சக்தி வேண்டும் என்று மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு என்னம்மா பாவம் செய்தேன் வாழ வேண்டிய வயசுல என் மகனையும் மருமகளையும் இழந்தேன்

என் பேர புள்ளைங்க என்ன வாழ்க்கை வாழ போறாங்க நினைச்சாலே பயமா இருக்கு

இவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும் என்பதற்கு தான் நான் இவ்வளவு போராடிட்டு இருக்கேன்

அந்த கடவுளுக்கு என் மேல இரக்கமே வராதா? என்று புலம்பிக் கொண்டே நடந்து சென்றார் தாத்தா

அட்சயாவின் கையில் இருந்த விஜயவர்மனின் செல் சிணுங்கியது மாறன் என்ற பெயர் ஒளிர்ந்தது

விஜய வர்மனிடம் கொடுக்க ஒரு அடி எடுத்து வைத்தாள் ராஜா சொன்னது நினைவுக்கு வந்தது வேண்டாம் என்று முடிவு செய்து அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்து நான் அட்சயா பேசுகிறேன் என்றாள்

பாப்பா எப்படிம்மா இருக்குறா? அங்க என்ன பிரச்சனை? அங்க வந்துருவேன் தனி ஹெலிகாப்டரில் வரேன்

நான் அப்போது இருந்து செழியனுக்கு பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் செழியன் போன் நாட் ரீச்சபிள் ஏரியாவில் இருக்கிறது ஏதாவது சொன்னானா ?என்று கேட்டான் மாறன்

நான் அவரிடம் பேசவில்லை அங்கிள் மட்டும் தான் சென்று ஒரு அரை மணி நேரத்தில் என்னிடம் நாங்கள் வந்து விட்டோம் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்
இங்கு உள்ள பிரச்சனைகள் எதுவும் அவர்களுக்கு தெரியாது என்றாள் அட்சயா

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் குண்டூரில் விக்ரம் அம்மாவின் வீட்டு கதவை தட்டிக் கொண்டுதான் செழியன்

















 

Author: Vishakini
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
செழியனுக்கு அது விக்ரம் ஓட ஹார்ட் அப்படின்னு தெரியுமா முன்னாடியே இல்ல இப்ப தான் தெரியுமா