உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 34
இங்கு அனைவரும் செழியன் தேடிக் கொண்டிருக்க அவனோ ஆந்திராவில் உள்ள குண்டூரில் விக்ரம் அம்மா வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருந்தான்
சரோஜினி அம்மா கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்ணை விழித்து நேரத்தை பார்த்தார் சரியாக விடியற்காலை 4 மணி இந்த நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று யோசித்தபடி விளக்கை போட்டார் சரோஜினி
கட்டிலில் பக்கத்தில் படுத்து கொண்டிருந்த தன் மகள் (விக்ரமின் தங்கை) சுபாவை எழுப்பினார் அம்மா
இந்த நேரம் யார் வந்திருப்பா? ஒருவேளை விஜயவர்மன் வந்திருப்பாரோ? என்ற படி வெளியில் உள்ள விளக்கை போட்டார் சரோஜினி
அம்மா யாராயிருந்தாலும் பரவாயில்லை ஜன்னல் வழியா பாத்துட்டு கதவை திற என்றாள் சுபா தன் அம்மாவிடம்
சரி என்றபடி ஜன்னலை திறந்து பார்த்தார் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்
அவர் இறந்து நிற்பதை பார்த்த சுபா நலமாக ஓடிவந்து ஜன்னல் வழியில் எட்டிப் பார்த்தார் அங்கு நின்றிருந்த செழியினை கண்டு அவளும் அதிர்ச்சி அடைந்தாள்
என்னம்மா அண்ணன் இங்க வந்து இருக்கு மாறன் அண்ணாவும் விஜயவர்மன் அண்ணாவும் எதுவுமே சொல்லலையே என்றாள் சற்று குழப்பத்துடன்
அம்மா நீ அண்ணன் கிட்ட பேசிக்கொண்டு இரு நான் உள்ளே போய் சில வேலைகள் செய்து விட்டு வந்து விடுகிறேன் என்று உள்ளே ஓடினாள் விக்ரமின் தங்கை சுபா
அவள் எதற்கு உள்ளே ஓடுகிறாள் என்று சரோஜினிக்கு தெரியும் அவர் மெதுவாக கதவை திறந்தார்
அம்மா எப்படி இருக்கீங்க? என்று கேட்டான் சிரித்துக் கொண்டே செழியன்
வாப்பா ..! எப்படி இருக்க நான் நல்லா இருக்கேன் நீ என்னப்பா எதுவுமே சொல்லாம திடீர்னு வந்து நிக்கிற என்று கேட்டபடி பின்பக்கம் எட்டிப் பார்த்தார்
யாராவது உடன் வந்திருக்கிறார்களா என்று? என்னம்மா பாக்குறீங்க நான் மட்டும்தான் வந்தேன் இந்த பக்கம் சென்னை வர வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்றான்
இல்ல வாப்பா என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்
அவரைத் தொடர்ந்து உள்ளே வந்து செழியன் எப்படிமா இருக்கிறீங்க சுபா எப்படி இருக்குறா என்று கேட்ட கொண்டே உள்ளே கொண்டு வந்த தன் சோல்டர் பேக்கை கீழே வைத்தான்
தண்ணீரை சூடு பண்ணி கொண்டு வந்து நீட்டினாள் விக்ரமின் தங்கை சுபா
ஒரு நிமிடம் அவள் முகத்தை உத்து பார்த்திருந்தான்செழியன்
இல்ல... அண்ணா சொல்லி இருக்கு உங்களுக்கு தண்ணீரை சூடு பண்ணி தான் கொடுக்கணும்னு என்று சொல்லிவிட்டு எப்படி வந்தீங்க ? தனியா இவ்வளவு தூரம் டிராவல் பண்ணீங்களா? என்று பேசிக்கொண்டே விஜய் அண்ணா வந்திருக்காங்களா? என்றாள்
அவன் மெல்ல சிரித்துக்கொண்டே வஜய் அண்ணா மட்டும்தான் வர வேண்டுமா நான் வரக்கூடாதா என்றான்
அதுக்கு இல்ல அண்ணா உங்களுக்கு இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சது நீங்க இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வர்றது நல்லது இல்ல அதனால தான் கேட்டேன் என்றாள்
அப்போ எனக்கு ஆபரேஷன் பண்ணதெல்லாம் உனக்கு தெரியுமா? என்றான் பீடிகையுடன்
தன் நாக்கை கடித்துக் கொண்டு இல்ல விஜய் அண்ணா சொன்னாங்க என்றாள்
தம்பி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நைட் எலலாம் டிராவல் பண்ணி வந்து இருக்கீங்க
இல்லனா ஏதாவது குடிக்கிறீங்களா?
காபி டீ என்று...
அம்மா அண்ணா கிரீன் டீ தான் குடிப்பாங்க உனக்கு தெரியாதா என்றாள் அம்மாவிடம் சுபா
ஆமால மறந்தே போயிட்டேன் புள்ள தம்பி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் 6 மணிக்கு அந்த கடை திறந்துடுவாங்க அப்பம் போய் கிரீன் டீ மற்றும் இவங்க சாப்பிடறது போல எல்லாம் வாங்கிக்கலாம் என்று தம்பி உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா என்றார் சரோஜினி
இல்லம்மா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கு அப்புறமா எதுனாலும் சாப்பிடுகிறேன் என்றபடி நான் எங்கம்மா ரெஸ்ட் எடுக்குது என்றான் உரிமையோடு
சரோஜினி அம்மா சுபா தம்பிய அந்த ஏசி ரூம்ல தங்க வை அந்த ஏசிய போட்டுவிட்டு வா என்றார்
சுபா செழியினை அழைத்துக் கொண்டு அந்த ரூமுக்குச் சென்றாள் பின் ஏசியை போட்டு விட்டுக்கொண்டு அண்ணா ஏதாவது தேவைனா கூப்பிடுங்க நான் பக்கத்துல ரூம்ல தான் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு
நல்லா ரெஸ்ட் எடுங்க அண்ணா என்று வெளியே வந்தாள்
வந்தவள் நேரா சரோஜினி அம்மாவிடம் வந்து என்னம்மா திடீர்னு இந்த அண்ணா இங்க வந்து இருக்கு
மாறன் அண்ணாக்கு தெரிஞ்சு வந்துதா தெரியாம வந்துதான்னு தெரியலையே போன் பண்ணி சொல்லுவோமா அல்லது விஜய் அண்ணா கிட்ட கால் பண்ணி சொல்லலாமா? என்று கேட்டா
ஏய் ..சத்தம் போடாதே அவனுக்கு நம்ம அண்ணனை பத்தி எந்த விஷயமும் தெரியாது நீயும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே எதுக்கும் மாறனுக்கு ஒரு மெசேஜ் போட்டு விடு என்றார்
உடனே சுபா மாறனுக்கு மெசேஜ் போட்டாள் செழியன் அண்ணா இஸ் இன் அவர் ஹோம் என்று ஆனால் அவள் நேரமோ என்னவோ அவன் ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருந்தான் அவன் போனை ரீச் செய்ய முடியவில்லை அந்த மெசேஜ்சால்
சரோஜினி படுக்கைகள் படுத்துக்கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு தூக்கம் தான் வரவில்லை
விக்ரம் மறைவுக்குப் பின் அவர் கொஞ்சம் உடைந்து தான் போனார்
தன்னையும் தன் மகளையும் தன் மகன் பார்த்துக் கொண்டுதான் எனது நம்பிக்கையில் இருந்தவருக்கு விக்ரமின் மரணம் பெரிய இடியாய் அமைந்தது
சரோஜினி அம்மாவின் மனம் ஆறு மாதத்திற்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தது
திடீரென தன் வீட்டில் முன்னாள் வந்து நின்ற காரையும் அதிலிருந்து இறங்கிய விஜய வரமனையும் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டு என்ன தம்பி நீங்க மட்டும் வந்து இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தார் சரோஜினி அம்மாள்
விஜய வர்மனுக்கோ தர்ம சங்கடமான நிலை எப்படி இவர்களை சொல்லி அங்கு வரை அழைத்து செல்வது அவன் முடிவெடுத்தான்
இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்
ஜெர்மனியில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று அ ...அ..ம்..மா நீங்களும் பாப்பாவும் ரெடியாகுங்கம்மா ஒரு பத்து நாளைக்கு தேவையான டிரஸ் எடுத்து வச்சுக்கோங்க என்றான் விஜய வர்மன்
என்ன தம்பி போறோம் விக்ரம் எதுவுமே சொல்லலையே என்றார் தாய் வெகுளியாக
அது விக்ரமுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்மா அவன் உங்களை பாக்கணும்னு சொல்றான்
அதனாலதான் சரி நானே கூட்டிட்டு வரேன்னு வந்தேன் என்று அவர்கள் முகம் பார்க்க முடியாமல் சுவரை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் விஜய வர்மன்
அவனுக்கு அழைப்பு வந்து கொண்டு இருந்து வந்து கொண்டே இருந்தது மாறனிடம் இருந்து
நான் பண்ணக்கூடிய ஃபார்மட்டஸ் எல்லாம் முடிச்சிட்டேன் இனி நான் சொந்தக்காரங்க வந்தா தான் மற்ற பார்மாலிட்டீஸ் செய்ய முடியும்
அவனுக்கு வென்டிலேஷன் கொடுக்கப்பட்டிருக்கு சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது என்ற டாக்டர் சொல்றாங்க ஆனா என்னை அடையாளம் கண்டு கொண்டான் என்றான் மாறன் அழுகையோடு
செழியன் எப்படி இருக்கிறான் என்று கேட்டான் விஜய் வர்மன்
இப்போதைக்கு அவன் உயிருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் இடது பக்க முழுவதும் நல்ல அடி அவனும் மயக்கத்தில் தான் இருக்கிறான் என்றான் மாறன்
செடியன் என்ற பெயரை கேட்டதும் சரோஜினி அம்மா கேட்டார் செழியனுக்கும் அடிபட்டிருக்கா தம்பி? என்று ஐயோ பாவம் அந்த பிள்ளைக்கு ஏற்கனவே பிரச்சனை அதுல இதுவரையா? என்ற புலம்பிக்கொண்டே அனைத்தையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்
கடவுளே அந்த செழியன் புள்ளைய காப்பாத்து என்ற வேண்டிக் கொண்டார் தன் மகனை காப்பாற்று என்று கேட்க மறந்து விட்டாள் அந்த தாய்
விமான நிலையம் வந்த போது அவர்களுக்காக காத்திருந்தார் பாஸ்கர வர்மன் தாத்தா தனி பிளைட்ல ஏறி.. உட்கார்ந்து கொண்டே எவ்வளவு நேரம் ஆகும் அண்ணாவை பார்க்க என்றாள் தங்கை சுபா
குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும் பாப்பா என்று நீ சாப்பிட்டு தூங்கு என்றான் விஜய வர்மன் முதல் முதலில் பிளைட் ஏறிய தாயும் மகளும் பயத்தில் படபடத்துக் கொண்டிருந்தனர்
அவர்களின் படபடப்பை உணர்ந்து கொண்ட விஜயவர்மன் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட வைத்தான் கொஞ்சம் பாலில் தூக்க மாத்திர போட்டு இருவரையும் தூங்க வைத்தான்
தூங்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார்கள் இல்லை என்றால் பல பொய்கள் சொல்ல வேண்டியதிருக்கும் என்று அவனுக்கு தெரியும்
அன்று மதியம் மருத்துவமனை அடைந்தனர் அம்மாவும் மகளும் விஜயவர்மன் மற்றும் தாத்தாவுடன்
மாறன் அம்மாவையும் மகளையும் மெதுவாக அழைத்துக் கொண்டு வென்டிலேஷன் வழியே விக்ரமை பார்க்க வைத்தனர்
விக்ரமை பார்த்த அம்மா கதறி அழுதார் என்ன தம்பி இப்படி அடிபட்டு இருக்கு என்ன ஆச்சு என்று கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார்
அவன் உங்கள பாக்கணும்னு சொல்றான்மா என்றான் மாறன்
சிறப்பு அனுமதி பெற்று அம்மாவும் மகளும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் உள்ளே சென்றபோது அவர்களின் குரல் கேட்டதோ அவர்களின் உணர்வு சொன்னதோ தெரியாது
விக்ரம் வெல்ல கண்ணே கண்விழித்தான்
தன் தாயைப் பார்த்தவுடன் மெல்ல கைய சைத்தான்
அவர்கள் நீ உள்ளே அனுப்பிவிட்டு கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த மாறனையும் பார்த்தான் மாறன் ஏதோ புரிவது போல் இருந்தது உள்ளே சென்றான்
வென்டிலேட்டரை எடுத்து விட்டு மாறனை அருகே வரச் சொன்னான்
தன் தங்கை சுபாவின் கையைப் பிடித்து மாறனின் கையில் ஒப்படைத்தான்.
வெளியே நின்று இருந்தா விஜயவர்மனையும் பாஸ்கரவர்மனையும் பார்த்து கையை தூக்கி காட்டினான்
அதன் பின் மயக்கத்திற்கு சென்றான் டாக்டருடன் பேசிய மாறன் இப்போதைக்கு வென்டிலேட்டர் எடுக்க வேண்டாம் அவனை காப்பாற்ற உங்களால் முடிந்த முயற்சியை செய்யுங்கள் என்றார்
டாக்டர் வீ ட்ரை அவர் பெஸ்ட் என்று அவன் அரை நோக்கி சென்றார்
எல்லோரிடமும் சரோஜினி அம்மாவிடம் எப்படி பேசுவது என்ற தயங்கி தயங்கி நின்றபோது
சரோஜினி கேட்டார்
.தங்கச்சி கைய உன்கிட்ட ஒப்படைக்கும் போதே தெரியும் அவன் பிழைக்க மாட்டான் என்று அவன் ஏதோ ஒன்று உன்னிடம் சொல்லி இருக்கிறான் என்ன சொன்னான் என்றார்
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் அங்கு இருந்து அனைவரும்
சுபா நீ இங்க இரு நான் மாறன் இடம் தனியா பேசிக் கொண்டு வருகிறேன் என்று மாறனுடன் சென்றார் சரோஜினி அம்மாள்
அங்கு சென்றதும் மாறன் தம்பி உன்னை எனக்கு நல்லாவே தெரியும் என் பையனோட கடைசி ஆசை என்ன என்றார்
கடைசியில் அவருக்கு சமாதானம் சொல்ல நினைத்த மாறன் தான் கதறி அழ வேண்டியது ஆயிற்று
அவன் மெல்ல அந்த வீடியோவை போட்டு காட்டினான் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சரோஜினி அம்மாள் கண்கள் கலங்கியது,
நான் என்ன செய்ய வேண்டும் என்றார் துணிவுடன்
அனைத்து ஃபார்மாலிட்டிகளும் முடிக்கப்பட்டன
விக்ரமின் மூளை செயல்பாடுகள் துளி அளவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்ட பின் அவன் உடலில் பாகங்கள் அகற்று முன் அவரை முழுமையாக பார்த்துக் கொள்ள சில நிமிடம் அனுமதிக்கப்பட்டனர் அனைவரும்
தம்பி என்று அழைத்தார் சரோஜினி அம்மாள் மாறனும் விஜயவர்மனும் ஒரே நிமிடத்தில் திரும்பி பார்த்தனர்
உங்க தம்பி செழியன் நான் பாக்கணும் பார்க்க முடியுமா என்றார்
அவர் செழியன் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு இடப்பக்கம் முழுதும் காயங்களாய் படுத்திருந்த செழியனை கண்டு எனக்கு இன்னொரு பிள்ளை கிடைச்சிட்டான் என்றார் சிரிப்புடன்
மருத்துவமனையில் அனைத்த ஃபார்மாலிட்டிசும் முடிந்து உடல் உறுப்புகள் தேவையான ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன
பத்து நாட்கள் அம்மாவும் மகளும் செழியன் வீட்டிலேயே இருந்தனர் விக்ரமின் இதயம் செழியனுக்கு பொருத்தப்பட்ட பின் அவன் நடக்கலாம் உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் வரை அங்கேயே இருந்தனர் பின் அவனைப் பார்த்துவிட்டு கிளம்பினர்
கிளம்பும் முன் தம்பி நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா கிடைக்குமா என்றார் சரோஜினி
சொல்லுங்கம்மா என்றான் மாறன் உன் வீட்டில நீங்க நாலு பேரும் சேர்ந்து எடுத்த ஒரு போட்டோ இருக்கு அது எனக்கு கிடைக்குமா என்றார்
அரை மணி நேரத்தில் பெரிய பிரேம் உடன் அந்த போட்டோ அவர்கள் கையில் இருந்தது
டிரைவர் வந்து கதவை தட்டும் சத்தத்தில் தன் நினைவு கலைந்தார் சரோஜினி அம்மா
அம்மா நீங்க வர சொன்னிங்கன்னு பாப்பா போன் பண்ணுச்சு என்றார்
அது வேற ஒன்னும் இல்ல தம்பியோட ஃப்ரெண்ட் வந்து இருக்காப்ல அவரு ஜெர்மனியில் உள்ளவர்
அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று எனக்கு தெரியல அதனால கொஞ்சம் கிரீன் டீ நூடுல்ஸ் போன்ற சாமான்கள் வாங்க வேண்டும் பாப்பாவை கூட்டிக்கொண்டு வாங்கி வருகிறீர்களா என்றார் சரோஜினி அம்மா
நான் இங்க வெயிட் பண்றேன் பாப்பா வந்தவுடன் சொல்லுங்க கூட்டிட்டு போயிட்டு வரேன் என்ற இந்த சத்தத்தில் செழியன் விழித்து வெளியே வந்தான்
சரோஜினி அம்மா தம்பி இது நம்ம டிரைவர் உங்களுக்கு சில பொருள்கள் வாங்கணும்னு பாப்பா வெளிய போக கிளம்பி கிட்டு இருக்கா உங்களுக்கு வேற ஏதாவது வேணும்னா சொல்லுங்க தம்பி வாங்கிட்டு வந்துருவாங்க எனறார்
நானும் கூட வரேன் அங்கிள் என்று அவனும் கிளம்பினான்
அவர்கள் கார் காம்பவுண்டை விட்டு வெளியே சென்ற பொழுது அவர் காரை பின்தொடர்ந்து வந்தன இரண்டு கார்கள்