மகிழினியை பார்த்த அட்சயா பதட்டப்பட்டது சிலநொடிகள் தான் பக்கத்தில் ஓடி வந்து முகத்தில் தண்ணீர் தெளித்து கொஞ்சம் தண்ணீர் கொடுத்து அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்துவிட்டு,
தன் கைபேசியை எடுத்து கூப்பிடவா வேண்டாமா? என ஒரு முறை யோசித்து யோசித்து விட்டு கடைசியாக அழைத்து விட்டாள்... டாக்டர் ராஜன் அறையில் ஒலித்தது அட்சயாவின் அழைப்பு.. இப்பொழுதுதான் தன் காலை உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான் அழைப்பை பார்த்தவுடன் சற்று யோசனைக்கு பின் அலைபேசியின் பச்சை பட்டனை தொடர்ந்து தொட்டான் ஹலோ என்று சொல்லும் முன் அட்சயாவின் குரல் வேகமாக ஒலித்தது எங்க இருக்கீங்க ஃப்ரீயா இருக்கீங்களா முடிஞ்சா ஹாஸ்பிடல் பின்புறம் உள்ள டீக்கடை பக்கத்தில் வர முடியுமா ப்ளீஸ் உடனே வாங்க என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாய் அழைப்பை துண்டித்து விட்ட கைப்பேசியை சில நொடிகள் வெறித்துப் பார்த்தான் பின் என்ன நினைத்தானோ.. உணவினை நிராகரித்துவிட்டு வேகமாக அந்த டீக்கடை நோக்கி சென்றான்
சென்று கொண்டிருந்தவன் கண்ணில் ஐந்து பேர் அந்த கடையின் பெஞ்சில் அரட்டை அடித்துக் கொண்டு தீ குடித்துக் கொண்டிருந்த காட்சிகள் வந்து போயின
வந்தவன் கண்டது இரண்டு பெண்கள் அழுத முகத்துடன் இருப்பதைத்தான் மகிளழினியின் சிவந்த முகமே சொல்லியது வெகு நேரம் அழுது கொண்டிருக்கிறாரள் என்று அவள் அழுவதே பார்த்தவுடன் இவளும் கண்கலங்கி நிற்கிறாள் என்பதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது
அக்ஷயாவின் அருகே வந்தவன் என்ன ஆச்சு ஆச்சு என்றான் அட்சயா அவனிடம் நடந்ததை சொல்ல கோபத்துடன் அவளை முறையைத்தான் இங்கு வருமுன் என்னிடம் கேட்டிருக்கலாமில்ல அவளைப் பற்றி உனக்கு தெரியாதா என்றபடி மகிழினியின் அருகே வந்தான், அவள் பார்வை முழுதும் இடிக்கப்பட்ட இடங்களின் மீதே இருந்தது
அவளின் அருகே வந்து மெல்ல அவள் தோளை தொட்டான். தொட்டது தான் தாமதம் அவன் இடுப்பை சுற்றி கைகளை போட்டுக்கொண்டு ராஜா... என்று அவன் பெயரை மட்டுமே சொல்லிக்கொண்டு கதறி கதறி அழ ஆரம்பித்தாள் அவளை சமாதானம் செய்வது எப்படி என்று இருவருக்குமே தெரியவில்லை
பக்கத்திலிருந்த ஸ்கூட்டியை பார்த்தவுடனே தெரிந்து விட்டது. அவள் ஏன் அவனை அழைத்தாள் என்று தன் கார் சாவியை அட்சயாவிடம் கொடுத்தான் ஒரு கரம் கொண்டு மகிழினியின் முதுகையும் மெல்ல தடவி கொடுத்து அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்தான்
கார் சாவியை வாங்கும் முன் ஒரு நிமிடம் மட்டும் அவன் முகத்தை பார்த்தால் அட்சயா அவன் முகத்தில் எந்த உணர்வும் அவளால் பிரித்து அறிய முடியவில்லை. சாவியை வாங்கி அவன் கார் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்றாள் ஐந்து நிமிடத்தில் ராஜாவின் காரை எடுத்துக் கொண்டு இவர்களிடம் வந்தாள் காரை விட்டு இறங்கி சாவியை ராஜாவிடம் கொடுத்துவிட்டு மகிழினி யை
கைத்தங்கலாக கூட்டிக்கொண்டு காரின் பின்புறம் ஏறிஉட்காந்தாள் ஒன்றும் சொல்லாமல் அவளிடம் ஸ்கூட்டியின் சாவியை வாங்கி ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு லாக் செய்து பின் சாவியை அட்சயவிமே கொடுத்தான் ராஜா.
ராஜா காரை மகிழினியின் வீட்டை நோக்கி ஓட்டினான் அதற்குள் மகிழினி சற்று தெளிந்திருந்தாள்.
வீட்டின் முன் கார் சத்தம் கேட்டதும் வாசல் வந்த சரஸ்வதி மூவரையும் பார்த்து குழம்பி நின்றார்.
அட்சயாய் ஏதோ சொல்ல வருமுன் ராஜா அம்மா ஒன்றுமில்லை பாப்பா என்னை பாக்க வந்தாள் அங்கு கட்டடம் இடிக்கும், வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கண்ணில் தூசி பட்டு கண் சிவந்துவிட்டது ஒரே அழுகை அவளைப் பற்றி உனக்கு தெரியாதா? சமாதானப்படுத்தி கூட்டி வந்தேன் என்றான் .
இவங்க பண்ணிய ரணகளத்தில் நான் காலை சாப்பிடவில்லை சாப்பிட என்ன இருக்கு என்று சரஸ்வதியிடம் கேட்டான் ராஜா.
உனக்கு இல்லாததா வா சாப்பிடலாம் என்றவர் இன்னும் அரை மணி, நேரத்தில் மதிய உணவே ரெடியாகிவிடும் சூடாக சாப்பிடலாம் பா
இப்பொழுது பழச்சாறு கொண்டு வரவா ? என்று கேட்டார் அவன் முகத்தை வருடியவாறு
அம்மா.. ஹாஸ்பிடல்ல ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் மட்டுமே சொல்லிக் கொண்டு வந்தேன் என்றவன் சரி சரி ரெடி செய்யுங்க என்று சொன்னவன் ...வாய்க்குள் எங்க கூட இருந்துதான் சமைத்து கொடுக்க உங்களுக்கு நேரமில்லை என்று புலம்பினான்
அது சரஸ்வதியின் காதில்விழதாதான் செய்தது
மகிழினி தன் அறைக்குச் சென்று உடையை மாற்றி வந்தால் அதுவரை செல்லில் தனது கவனத்தை பதித்திருந்தால் அட்சய மகுடினிடம் என்ன நடக்குது இங்க சச்சின் ராஜா வந்தா நம்ம கண்டு கொள்வதே இல்லை என்று சோகமான குரலில் சொல்ல அதைக் கேட்டபடி வந்த ராஜா ஏதோ கருகுவது போல இருக்கு பாப்பா என்று டைனிங் டேபிள் அமர்ந்தான் கையில் சாப்பாடு பாத்திரத்தை சுமந்தபடி வந்து
டேய் அவளை வம்பு இழுக்கவில்லை என்றால் உனக்கு தூக்கமே வராது சரி சரி பேசாம சாப்பிடுங்க என்று மூவருக்கும்
பரிமாறத் துவங்கினால் சரஸ்வதி அட்சயா நீங்களும் எங்களுடன் சாப்பிடுங்க என்று அனைவருக்கும் அவருக்கும் ஒரு தட்டை எடுத்து பரிமாற துவங்கினார் நால்வரும் அரட்டை அடித்து சாப்பிட துவங்கினர் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்தான் விஜய் நேராக டைனிங் டேபிள் வந்தான் ராஜாவை கண்டு தன் அறைநோக்கி சென்றான்
அவனைக் கண்டதும் ராஜாவின் சிரிப்பு முற்றிலும் காணாமல் போனது போதும் நான் கிளம்புறேன் என்று கிளம்ப துவங்கினார் அவனை நிறுத்திட முடியாது என்று மூவருக்கும் தெரியும்
ஒரு நிமிஷம் நில்லுப்பா என்ற சரஸ்வதி சமையலறை சென்று ஒரு டிபன் கரியரை எடுத்துக்கொண்டு வந்து போகும் வழியில் அப்பாவிடம் கொடுத்துவிட்டு போ என்றார் .
ராஜாவும் ஒன்றும் சொல்லாமல் அதனை வாங்கிக் கொண்டு நான் ஒரு டாக்டர் என்பதே என் அம்மாவுக்கு மறந்து விடுகிறது என்று புலம்பியபடி காரின் முன் பக்க இருக்கையின் கேரியரை வைத்து விட்டு தன் வீடு நோக்கி சென்றான்