மறுநாள் காலை விஜய் ஆபீஸ் போக ரெடி ஆகும் முன்பே மகிழினி டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தாள் குட் மார்னிங் அண்ணா என்றபடி,
சச்சிமா டிபன் பரிமாறிக்கொண்டு அட்சயா வருவாளா மகிமா என்றார்
சச்சிம்மா அவ என்னைக்கு ஆபீஸ் போக முன்னால இங்க வந்து இருக்கா அவன் நேரா ஆஃபீஸ்க்கு வந்துடுவாமா என்றபடி அண்ணா நான் கார்ல வெயிட் செய்கிறேன் என்று மெல்ல நடக்க ஆரம்பித்தால் மகிழினி
பின்னாலே வந்த விஜய் கார் சாவியை தன் தங்கையிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியிடம் தஞ்சம் புகுந்தான்
கார் அவர்களின் மகிழினி கண்ஸ்ட்ரக்ஷன் நோக்கி சென்று கொண்டிருந்தது இடையில் வந்த காலை எடுத்து பேசிய விஜய் போன் எடுத்து அட்சயாவுக்குமெசேஜ் செய்து பின் காரை ஒரு ஓரமாக நிறுத்த சொல்லி காரை விட்டு கீழே இறங்கி நின்றான்
பத்து நிமிட தாமதத்திற்கு பின் வந்து சேர்ந்தாள் அட்சயா
அண்ணனிடம் என்ன என்று கேட்கும் முன் வா மகிள் நாம் ஆபீஸ் போகலாம் அண்ணா அப்புறம் வருவாங்களாம் என்று தன் ஸ்கூட்டியை கிளப்பினாள் அட்சயா,
விஜய் காரை எடுத்துக் கொண்டு சென்று நின்ற இடம் சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஒரு பெரிய ரெசார்ட் அனைத்து வசதிகளையும் தன்னுள் அடக்கி உள்ள அந்த உலக உயர்தர ரெசாட்டின்தடின் உள் சென்று சென்று தன் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு காத்திருக்க ஆரம்பித்தான்.
அடுத்த இரண்டாவது நிமிடம் அவனை வரச் சொல்லி உத்தரவு கிடைத்தது பின் சிறிது சிறிது புல்வெளியை ரசித்தபடி நடந்து வந்து அந்த ஓப்பன் ரெஸ்டாரன்ட் அடைந்தான் அவனை நேர்கொண்டு அழைத்தால் நம் ஆதித்யா குரூப்ஸ் பி ஏ பிரின்ஸ் இருவரும் கைகள் குலுக்கிக் கொண்டடு
அந்த பெரிய அறையில் நுழைந்தனர்.
உள்ளே நுழைந்த விஜய்யை எப்படி இருக்கப்பா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்றபடி வந்து ஆரத் தழுவிக் கொண்டார் விவேகன்.
பைன் சார் அடுத்த வாரம் தான் வருவதா சொன்னீங்க ஆனா இப்போதே வந்தவுடன் கொஞ்சம் யோசித்தேன் சார் என்றவனை பார்த்து மெல்ல சிரித்த விவேகம் நீ என் ஆபீஸில் என்னை பார்க்க வந்தால் சார் ஓகே பட் நீயோ என் ரெசார்ட் டில் என்னை பார்க்க வந்திருக்கிறாய் சோ கால் மீ அங்கிள் என்று சொல்லவும் , பிரின்ஸ் ஜூஸ் கொண்டு வரவும் சரியாக இருந்தது.
விவேகம் விஜய்விடம் நேற்று இரவு நடந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தார்
ஜெர்மனி
சேரமான் தாத்தாவுக்கு பேச அழைப்பு விடுத்தார் விவேகன் அவரதை எடுக்கும் முன் தமிழ் பாட்டு எடுத்து காதில் வைத்தார் அதை அறியாத விவேகானோ "அப்பா உங்க மருமகளிடம் பேசுங்க இந்தியா உடனே வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன் கேட்க மாட்டேங்கிறா" என்றார்
இங்கோ தமிழ் பாட்டி தாத்தாவிடம்பதில் சொல்ல சொல்லி கண்ணை காட்டினார் ,
எத்தனை பெரிய பிசினஸ்மேனாக இருந்தாலும் தாத்தா எப்படி தன் மனைவி என்று கோரிக்கை நிராகரிப்பார் உடனே "விவேகா இந்தியாவில் எங்கு நமக்கு பேலஸ் வாங்கலாம் "என்று கேட்டார் மகனிடம் தந்தையின் கேள்வியில் குழம்பி நிற்பது விவேகனின் முறையாயிற்று.
இந்தக் கேள்வியை மகனிடம் கணவர் கேட்ட உடனேயே தமிழ் பாட்டி சிரித்துக் கொண்டே மருமகளிடம் பேச சென்று விட்டார்
அவர் சென்றதை உறுதி செய்து கொண்ட சேரமான் மகனிடம் "யார் போன் எடுத்தாங்க என்று தெரியாமலே பேசுகிறாயே ...நீ எல்லாம் என்னடா பெரிய பிசினஸ்மேன் "என்று அவரிடம் கத்த ஆரம்பித்தார் சேரமான்
நீங்க இந்தியா போய் மூணு நாள் ஆகுது செழியன் இடம் பேசியதிலிருந்து ரெண்டு நாளா உன் அம்மாவும் உன் பொண்டாட்டியும் இந்தியா போறோம் எப்படியாவது எங்களை இந்தியா அனுப்புங்க என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள் வேற வழியே இல்ல
இன்னும் ஒரு வாரம் கழிஞ்ச பின்னால பல சில ஏற்பாடுகள் செய்த பின் அம்மாவையும் உன் பொண்டாட்டி யையும்இந்தியா அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன் அதற்குள் இங்கு இரண்டு பேரும் என்னை ஒரு வழிப்படுத்திட்டாங்க
நம்மிடம் பேசுவதற்கு பதில் செழியனிடம் பேசி இருந்தால் இன்றே அவர்களை இந்தியா வர வைத்திருப்பான் அவன்.
பின் அப்பாவும் நானும் பேசி சென்னையில் ஒரு பேலஸ் வாங்க முடிவு செய்தோம் ,அதன் தொடர்ச்சியே இந்த ரெசார்ட் இந்த ரெசார்ட் ஓனர் ஜெர்மனியில் இருக்கிறார் அவரிடம் உடனே பேசி இந்த இடம் முழுவதும் அப்படியே வாங்கி விட்டோம் டா என்று நேற்று நடந்த நிகழ்வுகளில் சொன்னார் விவேகம்
சரி அங்கிள் மாறா என்ன சொன்னான் ?.அவனும் இந்தியா வரானா ?.பாட்டி ஆன்ட்டி மட்டும் தான் வராங்களா?நான் ஏதாவது அரேஞ்ச்மென்ட் செய்ய வேண்டுமா? என்று கேள்விக்கனைங்களை தொடுக்க ஆரம்பித்தான் விஜய் என்ற விஜய் வர்மன்..