ஏதாவது அரேஞ்ச்மென்ட் செய்ய வேண்டுமா? என்று கேட்ட விஜய் இடம் "எல்லா அரேஞ்ச்மெண்டும் மாறன் பார்த்துக் கொள்வான் ,நான் இன்று சென்னை வந்தது உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்றுதான், உன்னை வரச் சொன்னது உன்னிடம் ஒரு பெரிய வேலையை கொடுக்கத்தான்" என்றார் விவேகன்
இந்தியாவில் எங்கு தங்க வேண்டும் என்று கேட்டதற்கு மாறனும் செழியனும் தேர்ந்தெடுத்த இடம் சென்னை அதனால்தான் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த இந்த ரெசார்ட் முழுவதையும் வாங்கி விட்டேன் என்றார்
ஓகே அங்கிள் "இங்கு நம்ம ஆபீஸ விசிட் செய்ற ஐடியா எதும் இருக்கிறதா? "என்று கேட்டான் விஜய்
உங்க ஆன்ட்டியும் பாட்டியும் சென்னை வராங்க அவங்க வருவது யாருக்கும் தெரிய வேண்டாம் டூரிஸ்ட் விசாவில் தான் வர சொல்லி இருக்கேன் அவர்களை இங்கே யாருக்கும் தெரியாது அதனால் அவர்களை மீடியாக்கள் கண்டுகொள்ளாது. ஆனால் நான சென்று அவர்களை அழைத்து வந்தால் அவர்கள் மேல் மீடியாக்களின் பார்வை திரும்பிவிடும் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம் சோ என்று அவர் நிறுத்தும் முன் நான் கூட்டிட்டு வரேன் அங்கிள் என்று அவர் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தான் விஜய் வர்மன்
"இங்கே கூட்டிட்டு வரவா? வேறு ஏதும் நியூ லொகேஷன் இருக்கா? என்று கேட்டவனை பெருமிதத்தோடு பார்த்தார் விவேகன்.
இங்கேயே கூட்டிட்டு வா இங்கு சிசிடிவி கேமராக்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டது மெல்ல மெல்ல ஒவ்வொரு ரூமும் நமக்கு தேவையானவர்களை தங்க வைத்து விடலாம் எந்த தொந்தரவும் இருக்காது என்று நினைக்கிறேன், என்றார் விவேகம்
சிறிது அமைதிக்குப்பின் தாழ்ந்த குறைவு குரலில் வர்மா அவங்களை போய் பார்த்தாயா? அவர்களுக்கு தேவையானவை எல்லாம் ஓகே தானே? என்று கேட்டார்
அங்கிள் ...அவங்க எல்லோரும் பாதுகாப்பா நல்லபடியா இருக்காங்க ஆனா ..அவங்க இங்க இல்ல வேற ஒரு இடத்துல இருக்காங்க மத்ததை நேரம் வரும்போது சொல்றேன் என்றான் விஜய் வர்மன் .
அவர் மீண்டும் ஏதோ கேட்க வருமுன் அந்த பேச்சை தொடர விடாது ஆன்ட்டி எத்தனை மணிக்கு வராங்க என்று கடிகாரத்தை பார்த்தான் வர்மன்
இன்று இரவு 8:10க்கு வர்மா இப்பொழுது உனக்கு வேறு வேலை இருந்தால் பார் .ஈவினிங் மீட் பண்ணலாம் என்றார் விவேகன்.
அங்கிள் "நீங்க இப்போ ஃப்ரீ தானே நம்ம ஆபீசுக்கு ஒரு விசில் போகலாம் நானும் பலமுறை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கதான் கண்டு கொள்வதே இல்லை" என்றான் விஜய்.
விஜய வர்மா...... நீ... பாஸ்கர வர்மனின் பேரன் அது மட்டும் இல்லாமல் உன் சம்பந்தமான முடிவுகள் முழுதும் என்னால் அல்ல எங்களால் எடுக்கப்பட்டது அல்ல "தி கிரேட் ஆதித்ய சேரமான் "....என் அப்பாவால் எடுக்கப்பட்டது அதில் தலையிடவோ ,கேள்வி கேட்கவோ, தடுக்கவோ யாராலும் முடியாது என்பது உனக்கே தெரியும் ....சோ அது உன் கம்பெனி நீ மட்டும் தான் அதற்கு முழு பொறுப்பாளர் என்றவர் மௌனமானார்
அந்த மௌனம் அதற்கு மேல் அவரிடம் இது பற்றி பேசாதே என்று பொருள் கொண்டிருந்தது.
விஜய் அவரிடம் விடைபெறும் முன் விஜய்யின் கைபேசி சிணுங்கியது அதை பார்த்தவன் விவேகன் முகம் பார்த்தான் அவர் சின்ன தலையசைப்பு கிடைத்தவுடன் வேகமாக வெளியே வந்து "சொல்லு பாப்பா "என்றான் அண்ணா எங்கே இருக்கீங்க? ஏன் இன்னும் ஆபீஸ் வரவில்லை ?என்ற பல கேள்விகளை அடுக்க துவங்கினாள் அவனின் தங்கை மகிழினி ,தான் வந்து விவரங்களை சொல்வதாக சொன்னவன் சில அலுவலக விவரங்களையும் கேட்டுக் கொண்டு சில வேலைகளையும் கொடுத்துவிட்டு விரைவில் வந்து விடுவதாக கூறினான் பின் அழைப்பை துண்டித்து விட்டு விவேகம் அறையை நோக்கிச் சென்றான்
மும்பை
மும்பை அலுவலக மேனேஜர் செழியனின் அறைக்குள் நுழைந்தார் மெல்ல குரல் கொடுத்தார்.சா....ர்.... நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும் நீங்க அத பத்தி எந்த ஒரு அப்டேட்டும் தரவில்லையே
என்றவனை தீயாய் முறைதான் செழியன் இப்பொழுது சென்னை செல்லும் திட்டம் எதுவுமில்லை அதுவும் இன்று சென்னை செல்லும் திட்டம் ஏதும் இல்லை ஆனால் அப்பா ஏன் இன்றே சென்னை போனாங்க? என்று கேட்டவனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தார் மேனேஜர்
பின் மெல்ல சா...ர் சில லீகல் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் செய்ய வேண்டியது இருக்கு அதனால் சார் முன்னே சென்றுவிட்டார் என்றார்
செழியனுக்கு தெரியும் ஏதோ ஒரு காரணம் இருக்கு என்று உலகில் எந்த மூலையிலும் எந்த ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றாலும் ஒரு போன் அழைப்பு மூலம் முடித்து விடும் தன் தந்தை நேரில் சென்று இருக்கிறார் என்றால்... சரி நேரில் சென்று பார்க்கும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான் செழியன்.