அத்தியாயம் - 15
ஒருவழியாக அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்திற்கும் வந்து சேர்ந்திருந்தனர். கொடைக்கானலின் மையப்பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலையின் சரிவில் அமைந்திருந்த ஒரு சொகுசு ரிசார்ட்டில்தான் கௌதம் அறையை முன்பதிவு செய்திருந்தான்.
ரிசார்ட்டின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றபோதே அந்த இடத்தின் பிரம்மாண்டம் பவித்ராவை அப்படியே கட்டிப்போட்டது. அந்த ஹோட்டலுக்குக் கீழேயே, திறந்தவெளியில் மிகப் பெரிய பரந்த கார்டன் ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் காரை விட்டு வந்து இறங்கிய நேரம், மாலை மங்கி மெல்ல இருள் சூழும் அந்திப் பொழுதாக இருந்தது.
மலைப் பிரதேசத்துக்கே உரிய அந்த மாலை நேரத்து இருட்டில், ரிசார்ட் முழுவதும் ஆங்காங்கே எரியவிடப்பட்டிருந்த வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில், அந்த இடம் பார்க்கவே ஒரு மாயாஜால உலகம் போல அவ்வளவு அழகாகக் காட்சியளித்தது. மரங்களின் கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த சிறிய மஞ்சள் நிற விளக்குகள், பனிமூட்டத்திற்கு நடுவே நட்சத்திரங்களைப் போல மின்னிக் கொண்டிருந்தன.
காரை விட்டு இறங்கிய அடுத்த நொடியே, ஊசி போன்ற கொடைக்கானலின் குளிர் பவித்ராவின் உடலைத் தீண்டி, அவளை ஒரு நிமிடம் நடுங்க வைத்தது. குளிர் ஒரு பக்கம் அவளது மேனியை வாட்டினாலும், சுற்றிலும் இருந்த அந்த அழகிய சூழலையும், காற்றில் கலந்திருந்த பைன் மரங்களின் நறுமணத்தையும் அவள் கண்கள் விரிய மிகவும் ரசித்துப் பார்த்தாள். கௌதம் அவளது குளிர் நடுக்கத்தைக் கவனித்து, தன் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கிக் கொண்டான்.
அதன் பிறகு, இருவரும் ரிசார்ட்டின் பிரதான வரவேற்பறைக்கு சென்றனர். அங்கிருந்த மர வேலைப்பாடுகளும், நடுவில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு மூட்டியும் அந்த இடத்திற்கு ஒரு கதகதப்பான தோற்றத்தைத் தந்திருந்தன. அங்கிருந்த மேலாளரிடம் கௌதம் தன் முன்பதிவு விவரங்களைக் கூறி, அடையாள அட்டைகளை வழங்கி, அறைக்கான சாவி மற்றும் இதர ஃபார்மாலிட்டீஸ்களை மிக நளினமாக முடித்தான். அவனது அந்தப் பொறுப்பான மேலாண்மை பவித்ராவிற்குப் பெரும் பாதுகாப்பாகத் தோன்றியது.
அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், தங்களுக்கான பிரத்யேக அறையை நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர். அங்கிருந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர், கௌதமின் கார் டிக்கியிலிருந்து அவர்களது பைகளை மிகுந்த மரியாதையுடன் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு முன்னால் வழி காட்டியபடி நடந்தான்.
நீண்ட தாழ்வாரத்தைக் கடந்து, ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த அந்த அறையை நோக்கி அவர்கள் செல்லச் செல்ல, பவித்ராவின் மனதிற்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அள்ளித் தந்தது. ஒவ்வொரு அடியும் அவளுக்கு ஒரு புதிய உலகிற்குள் நுழைவது போன்ற பரவசத்தைத் தந்தது.
அறைக்குள் இருவரும் நுழைந்தனர். அது மிகவும் விசாலமான, ஆடம்பரமான அறையாக இருந்தது. கௌதமின் வீட்டில் இருக்கும் அவனது அறையே மிகவும் பெரியதாகவும் அழகாகவும் தான் இருக்கும். ஆனால், இங்கு காதலுக்காகவே செதுக்கப்பட்டது போல அதைவிட அழகாக இருந்தது. மெத்தென்ற சோபாவில் ஆரம்பித்து, ஒரு மூலையில் மினி ஃபிரிட்ஜ், தேநீர் தயாரிக்கும் நவீன வசதிகள் என அனைத்தும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.
அறையின் நடுநாயகமாக இருந்த அந்தப் பெரிய கட்டிலின் மீது, படுக்கை விரிப்பில் இரண்டு வெள்ளை நிறத் துண்டுகளைக் கொண்டு, இரண்டு அன்னப் பறவைகள் ஒன்றோடு ஒன்று கழுத்தைத் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருப்பது போல அழகாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தன. அதைத் தற்செயலாகப் பார்த்த பவித்ராவின் கன்னங்கள் சட்டென்று சிவந்து, அவளது இதழ்களில் ஒரு வெட்கப் புன்னகை அரும்பியது.
அந்த அறையையே பிரமிப்போடும் அத்தனை ரசனையுடனும் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்ற கௌதம், அவளது முக மாற்றங்களைக் கவனித்தபடி, "பிடிச்சிருக்கா?" என்றான் மிக மென்மையான குரலில்.
அவனிடம் இருந்து வந்த அந்தத் தழுவக் குரலில் உடல் சிலிர்த்தவள், அவனைத் திரும்பிப் பார்த்து, "ரொம்ப பிடிச்சிருக்கு!" என்றாள். அவளது கண்களில் தெரிந்த அந்த மகிழ்ச்சியே கௌதமிற்குப் போதுமானதாக இருந்தது.
ஊழியரிடம் பைகளை வைக்க சொல்லிவிட்டு அவனுக்கு டிப்ஸ் கொடுத்து அனுப்பி வைத்தவன், பவித்ராவின் பக்கம் திரும்பினான். நீண்ட தூரப் பயணத்தின் களைப்பு அவளது முகத்தில் லேசாகத் தெரிந்தாலும், அந்த இடத்தின் அழகும் மகிழ்ச்சியும் அவளது கண்களில் இன்னும் குறையாமல் அப்படியே இருந்தது.
"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிட போலாமா?" என்று கௌதம் மிகவும் கனிவோடு கேட்க, அவளும் மெல்லத் தலையசைத்து, "சரி" என்றாள்.
"ஃபிரஷ் ஆகுறதுனா ஆகிட்டு வா," என்று கூறி, கட்டிலின் நடுவே துண்டுகளால் செய்யப்பட்டிருந்த அந்த அன்னப் பறவைகளையும், அதைச் சுற்றியிருந்த ரோஜா இதழ்களையும் கலைக்க மனமில்லாமல் கட்டிலின் ஓரமாக வந்து மெத்தென்ற மெத்தையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
அவன் அமர்ந்த தோரணையை ஒரு நொடிப் பார்த்துவிட்டு, தன் துணிப்பையைத் திறந்து மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள், குளிர் உடலை நடுங்க வைத்ததால், சுடுதண்ணீரில் முகத்தைக் கழுவி, தன்னைச் சற்றே புதுப்பித்துக் கொண்டாள்.
அவள் உள்ளே சென்றதும், கௌதம் தன் கைகளைத் தலைக்குக் பின்னால் கட்டிக்கொண்டு அறையின் மேற்கூரையைப் பார்த்தபடி படுத்தான். இத்தனை வருடங்களாக அவனது மனதை வாட்டிக்கொண்டிருந்த கௌசல்யாவின் நினைவுகளோ, அல்லது பிஸ்னஸ் ரீதியான அழுத்தங்களோ இப்போது அவனிடம் இல்லை. பவித்ராவின் அந்த வெள்ளந்திப் புன்னகையும், அவளது கள்ளத்தனமான பார்வைகளும் மட்டுமே அவனது மனதை நிறைத்திருந்தன.
சிறிது நேரத்தில் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க, கௌதம் நிமிர்ந்து பார்த்தான். சுடுநீர் கழுவலில் முகம் இன்னும் சற்றுப் பொலிவடைய, காது ஓரங்களில் ஈரக்கூந்தல் ஒட்டியிருக்க, கௌதம் வாங்கித் தந்த அந்தப் புதிய உடையில் தேவதையாய் வெளியே வந்து நின்றாள் அவள், குளிரின் காரணமாக அவளது உதடுகள் லேசாக நடுங்கிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்த கௌதமின் பார்வையில் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு குடியேறியது.
அவளோ அவனது அந்தப் ஆழ்ந்த ஈர்ப்பை அறியாது, முகத்தை அங்கிருந்த வெள்ளை நிற டவலால் துடைத்துவிட்டு, பல்லெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க அவசர அவசரமாக வந்து, கட்டிலில் இருந்த தடிமனான போர்வையை இழுத்து முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அவளது இந்த அவசரத்தையும் பதட்டத்தையும் கண்டு புரியாமல், "ஏய்... என்னாச்சு பவித்ரா?" என்று கௌதம் கேட்க, "குளிர் தாங்க முடியல! இனிமே நான் பாத்ரூம்குள்ள போகப் போறதும் இல்ல, வெளில வரப்போறதும் இல்ல... இப்படியே படுத்துக்கிறேன்," என்றவள், தன் முகம் வரை போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள்.
அவளது மழலைத் தனமான பேச்சைக் கேட்டுச் சிரித்தவன், "இப்படி சொன்னா எப்படி பவித்ரா? வெளில போகணும், கொடைக்கானலைச் சுத்திப் பார்க்கணும்ல?" என்று அவளை வம்புக்கு இழுக்க, "ஐயோ... இப்போ என்னால முடியாதுங்க, காலையில வேணா பார்த்துக்கலாம்," என்றாள் போர்வைக்குள்ளிருந்தே மஃப்ளர் குரலில்.
"சரி, வெளில சுத்திப் பார்க்க வேண்டாம்... வா கீழே போய் சாப்பிட்டாவது வரலாம்," என்று அவன் அழைக்க, "இல்ல இல்ல நான் வரல, எனக்குக் குளிர் தாங்கவே முடியல," என்று பிடிவாதமாய் மறுத்தாள்.
அவளது நடுக்கத்தைக் குறைக்கவும், அவளது பயத்தைப் போக்கவும் நினைத்த கௌதம், மெல்ல தன் குரலை தாழ்த்தி, "ஷால் ஐ ஹெல்ப் யூ?" என்றான்.
சட்டென்று புரியாமல், லேசாகப் போர்வையை மட்டும் முகத்திலிருந்து விலக்கி, தன் பெரிய விழிகளால் அவனைப் பார்த்தவள், "என்ன ஹெல்ப்?" என்று அப்பாவியாகக் கேட்க,
கௌதமோ அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவளது இதழ்களையும், குளிரில் சிவந்திருந்த மூக்கு நுனியையும் தன் காந்தப் பார்வையால் ஆழ்ந்து பார்த்தானே தவிர, உதடுகள் திறந்து எதுவும் சொல்லவில்லை. அவனது அந்த ஒற்றைப் பார்வையும், அதில் தெரிந்த ஆண்மையின் தவிப்பும் பவித்ராவிற்குச் சட்டென்று அவன் கேட்டதற்கான அர்த்தத்தைப் புரிய வைத்தது. 'குளிரைப் போக்க அவன் தரும் அரவணைப்பு' என்பது புரிந்த அடுத்த நொடி, வெட்கத்துடன் மீண்டும் போர்வையால் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் கன்னங்கள் செம்பருத்திப் பூவாய் சிவந்து போனது. போர்வைக்குள்ளே அவளது இதயம் ரயிலாய் இறங்கத் தொடங்கியது.
அவளது வெட்கத்தை ரசித்த கௌதம் விடாமல், "ரிப்ளை பண்ணுமா" என்று மேலும் அவளிடம் குறும்போடு கேட்க,
"ஹெல்ப் எல்லாம் வேண்டாம்... நானே சமாளிச்சுக்கிறேன்," என்று சொன்னவளுக்குள் அவ்வளவு வெட்கம் பிதுங்கி வழிந்தது.
அவளது தழுதழுத்த, வெட்கம் கலந்த குரலே அவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைக்க, அவன் இதழ்களிலும் ஒரு அழகான புன்னகை அரும்பியது. அதற்கு மேல் அவளது எல்லைக்குள் நுழைந்து அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், அவளது வெட்கத்திற்கு மதிப்பளித்து, அவனும் அப்படியே படுத்துக்கொண்டான்.
பயணக் களைப்பினால் இருவருமே அப்படியே ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின், அறையின் அமைதியைக் கலைத்தபடி முதலில் விழித்தது கௌதம் தான்.
கண்களைத் திறந்து பக்கவாட்டாக பார்த்தவன், தன் பக்கத்தில் படுத்திருக்கும் பவித்ராவின் கோலத்தைக் கண்டு மென்மையாகச் சிரித்தான். அங்கே ஒரு மனிதர் தான் படுத்திருக்கிறாரா என்பதே தெரியாத அளவுக்கு, தலை முதல் கால் வரை போர்வையைச் சுருட்டிப் பொதிந்து கொண்டு, ஒரு பனிப் பொம்மை போலத் தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்
'மூச்சு முட்ட போகுது' என்ற தவிப்பில், மெல்ல அவளுக்கு அருகில் நகர்ந்து வந்தவன், அவளது உறக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்ற கவனத்துடனே, மிக மெதுவாக அவளது முகத்தில் இருந்த போர்வையை மட்டும் கீழே விலக்கி விட்டான்.
போர்வை விலகியதும், உள்ளே குழந்தை போல் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவனது இதழ்கள் தானாக விரிந்தன. குளிரின் காரணமாக அவளது கன்னங்கள் ஆப்பிள் பழமாய் சிவந்திருக்க, அவளது நெற்றிச் சுருக்கமும், சீரான மூச்சுக்காற்றின் அசைவும் அவளை இன்னும் அழகாகக் காட்டியது.
அவளது அந்த நிம்மதியான முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு, காலத்தின் சக்கரம் அவளைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்த விதத்தை நினைத்து வியப்பாக இருந்தது. அவளது நெற்றியில் விழுந்திருந்த சில முடிக்கற்றைகளைத் தன் விரல்களால் மிக மென்மையாக ஒதுக்கி விட்டவன், அந்த அமைதியான நொடியில் அவளது அழகை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கினான்.
இத்தனை நாட்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவளது உடைந்த வாழ்க்கைக்குத் துணையாக நிற்க வேண்டும் என்பது மட்டும்தான் அவனது நோக்கமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அவளை ஒரு பெண்ணாக ரசிக்க வேண்டும், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் அவனுக்குள் மெல்ல முளைவிடத் தொடங்கி இருந்தன.
அவளுக்குள்ளும் இப்போது தன் மீது ஒரு புதிய ஈர்ப்பு உருவாகி இருக்கிறது என்பதை, அவளது அந்தத் திருட்டுத்தனமான கள்ளப் பார்வைகளும், அவசரமாய் விலகிக்கொள்ளும் விழி அசைவுகளும் அவனுக்குத் துல்லியமாக உணர்த்தியிருந்தது, இருப்பினும் அவளது கடந்த காலக் காயங்களை அறிவான் என்பதால், அவளை நெருங்குவதற்கு அவனுக்குள் ஒரு மெல்லிய தயக்கமும் ஜாக்கிரதை உணர்வும் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
அதனால் தான் இத்தனை நாட்கள் அவளிடம் இருந்து சற்று விலகியே இருந்தவன், இன்று இந்தத் தனிமையான சூழலும், கொடைக்கானலின் வாட்டும் குளிர் தந்த சந்தர்ப்பத்தில், 'குளிருக்கு உதவியாக வரலாமா' என்று தன் மனதின் ஆசையை வார்த்தையாகக் கேட்டும் விட்டான். அவள் மறுத்திருந்தாலும், அந்த மறுப்பில் இருந்தது பயமல்ல, அக்மார்க் வெட்கம் மட்டுமே என்பதை அவன் நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்.
உறங்கிக் கொண்டிருக்கும் அவளது முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்லக் குனிந்து அவளது சிவந்த கன்னத்திற்கு மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு சென்றான். அவளது சீரான மூச்சுக்காற்று அவனது முகத்தில் பட்டுத் தெறித்தது. அவளைத் தொட்டுவிடத் துடித்த தன் விரல்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவளது நெற்றியில் தன் இதழ்களால் அழுத்தமாக, அதே சமயம் மிக மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தான். அது காமத்தின் வெளிப்பாடு அல்ல, அவளைத் தன் ஆயுள் வரை தாங்கப் போகும் ஒரு கணவனின் தவிப்பும் பேரன்பும் கலந்த ஆத்மார்த்தமான முத்தம்.
அந்த மெல்லிய தீண்டலில் பவித்ரா தூக்கத்திலேயே லேசாக முணகிவிட்டு, இன்னும் கொஞ்சம் அவனது பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ள, அவளது அந்த அசைவில் கௌதமின் இதழ்களில் ஒரு கனிவான புன்னகை அரும்பியது. 'இனி இவள் நமக்கானவள் மட்டுமே' என்ற நிம்மதியுடன், அவளுக்கு மிக அருகில் அவனும் தன் கண்களை மூடி படுத்துக் கொண்டான்,..