அத்தியாயம் - 19
கௌதமின் அந்தக் கேள்விக்கு...
"எப்படிங்க என்னால அவனை எதிர்க்க முடியும்?" என்று உடைந்த குரலில் கேட்கத் தொடங்கியவள், வார்த்தைகளை வேக வேகமாகக் கொட்ட ஆரம்பித்தாள்..
"பொண்ணுங்கனாலே வீக்கானவங்க தானே? அதனாலதானே எத்தனையோ பெண்கள் சில மிருகத்தனமான ஆம்பிளைங்ககிட்ட மாட்டிக்கிட்டு, குடும்ப மானத்துக்காக அத்தனை வலி, அவமானங்களை எல்லாம் தாங்கிக்கிட்டு, அமைதியா அவங்க காலடியில விழுந்து கிடக்கிறாங்க? நானும் அந்த ஒரு வருஷம் அப்படித்தான் இருந்தேன்."
"ஆசை ஆசையா எனக்குக் கல்யாணம் பண்ணி வச்ச என் குடும்பம், என் வாழ்க்கை பாழாப்போயிடுச்சுன்னு நினைச்சு வருத்தப்படக் கூடாதுங்கிறதுக்காகத்தான் அவங்ககிட்ட எதையும் சொல்லாம அத்தனையையும் தாங்கிக்கிட்டு இருந்தேன். கல்யாணம் முடிந்த முதல் ராத்திரியிலேயே அவன் எத்தகைய சைக்கோன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. அப்போ எனக்கு இப்போ இருக்கிறதவிட ரொம்ப சின்ன வயசு தான், ரொம்பத் துடிச்சுப் போனேன். என்னை விட்டுட சொல்லி அவன் கால்ல விழுந்து கெஞ்சி கதறினேன். ஆனா அவன் விடல..." என்று சொல்லும்போதே பவித்ராவின் உடல் மீண்டும் நடுங்கியது.
"அடுத்த நாளே எனக்கு மாமியாரா இருந்த, அவனைப் பெத்த தாய்கிட்ட போய் அழுது சொன்னேன். ஒரே ராத்திரி கொடுமையையே தாங்க முடியாமத்தான், அடுத்த நாளே அவங்களை என் அம்மாவா நினைச்சு எல்லாத்தையும் சொன்னேன். ஆனா அவங்க கொஞ்சமும் நெஞ்சில் ஈரம் இல்லாம 'ஆம்பிளைனா அப்படித்தான் இருப்பாங்க, நீதான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும். கல்யாணமான அடுத்த நாளே என் மகனைப் பத்தி என்கிட்டயே வந்து புகார் சொல்றியா?'னு என் கன்னத்துலேயே ஓங்கி அறைஞ்சாங்க!" பவித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.
கௌதமின் கைகள் ஆத்திரத்தில் இறுகின. அவனது பற்கள் ஒன்றோடொன்று நறநறவெனக் கடித்தன. ஆனால், பவித்ரா தன் கதறலை நிறுத்தவில்லை.
"நாளுக்கு நாள் அவனோட அராஜகம் கூடிக்கிட்டே போச்சு, நான் அவனுக்கு உடன்பட்டுப் போகலைனா, ஒவ்வொரு முறைக்கும் என் உடம்புல பழுக்கக் காய்ச்சின கம்பியால சூடு வைப்பான்! அவன் தினமும் கொடுத்த வலியை விட, அந்த சூட்டுக் காயம் எனக்குக் கம்மியாத்தான் தெரிஞ்சது. அதனால அதையும் தாங்கிக்கிட்டேன். கோபம் வர்ற நேரமெல்லாம் பெல்ட்டால போட்டு அடிப்பான். என் அம்மா, அப்பா, அண்ணாக்கு என் வாழ்க்கையில ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்குன்னு மட்டும் புரிஞ்சது. ஆனா அது என்ன மாதிரியான பிரச்சினைன்னு அவங்களுக்குத் தெரியல. 'ஏதாவது பிரச்சினையாமா?'னு அவங்க கேட்கும்போதெல்லாம், 'ஒன்னும் இல்லமா நல்லாத்தான் இருக்கேன்'னு சொல்லிச் சமாளிச்சேன். எல்லாம் அவங்க நிம்மதிக்காகவும், கௌரவத்துக்காகவும் மட்டும்தான்..."
அவள் தன் மூச்சை இழுத்துவிட்டு, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தாள்.
"ஆனா ஒரு நாள்... ஒரு நாள் அவன் தன் பிரெண்ட்னு யாரையோ வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தான். நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க, அப்போ திடீர்னு என்கிட்ட வந்து, 'இவனுக்கு உன்னைப்பிடிச்சிருக்காம், ஒரு ராத்திரி இவனோடு இரு'ன்னு சொன்னான். அந்த வார்த்தையைக் கேட்டப்போ... எனக்கு அந்த இடத்துலயே செத்துடலாம் போல இருந்ததுங்க! அலறிக்கிட்டே ஓடிப்போய் அவனைப் பெத்தவ கால்ல விழுந்தேன் 'என்னைக்காப்பாத்துங்க'னு. ஆனா அந்தப் பொம்பளையும் அத்தனையையும் பார்த்துட்டு ஒரு கல் மாதிரி அசையாம தான் நின்னா! இதுக்கு மேல அந்த நரகத்துல என்னால இருக்கவே முடியாதுன்னு முடிவெடுத்து, ஓடிப்போய் ரூமுக்குள்ள லாக் பண்ணிக்கிட்டேன். உடனே என் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி எல்லாத்தையும் சொல்லி அழுதுட்டேன். ஆனா... அவன் என்னை இன்னொருத்தனுக்கு விருந்தாக்க நினைச்ச அந்த ஒரு விஷயத்தை மட்டும் நான் என் அண்ணன்கிட்ட சொல்லல... ஏன்னா, அதைச் சொல்றதுக்கே எனக்கு அசிங்கமா இருந்தது."
"ஃபோன் பண்ணின அடுத்த கொஞ்ச நேரத்துலயே என் அண்ணன் ஆவேசமா அங்க வந்துட்டாரு, அந்த கிஷோரை அங்கேயே கொல்ற அளவுக்கு அவருக்குக் கோபம் வந்தது. ஆனா, வம்படியா நான்தான் அவரை இழுத்துட்டு அங்கிருந்து வந்துட்டேன்..." என்று அவள் தன் கடந்த காலத்தின் கொடூரமான பக்கங்களை முதன்முறையாக வாய் திறந்து கூறி முடித்தாள்.
அவள் சொல்லி முடித்தபோது, அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த கௌதமின் விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எப்போதும் பாறை போலக் கம்பீரமாக இருக்கும் அவனது இதயம், அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் துண்டு துண்டாக உடைந்து சிதறியிருந்தது. அவளுக்குள் இத்தனை பெரிய ரணங்களா? இவ்வளவு கொடுமைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவள் தன் முன்னால் நிற்கிறாளா?
அவனுக்குள் கோபமும், கிஷோரின் மீதான கொலவெறி ஒருபுறம் தலைக்கேறினாலும், மறுபுறம் பவித்ராவின் மீதான பேரன்பும் பரிவும் அவனது கட்டுப்பாட்டை உடைத்திட, அழுதுகொண்டிருந்தவளை தன் பலமான கரங்களால் வாரியணைத்துக் கொண்டான். அவளது முகத்தைத் தன் மார்போடு சேர்த்து, அவளை தன்னோடு ஆழமாக இறுக்கிக் கொண்டவன், அவளது அத்தனை வலிகளையும் தன் நெஞ்சுக்குள் வாங்கிக் கொள்ளத் துடிப்பவன் போல, அவளது தலையைக் கோதித் தன் கண்ணீரால் அவளது கூந்தலை நனைத்தான்...
கேவி கேவி அழுதுகொண்டிருந்தவளோ கௌதமின் அந்த இறுக்கமான அணைப்பில் மெல்ல மெல்ல அமைதியானாள். அவனது மார்பின் வெதுவெதுப்பும், அவளது முதுகைத் தடவிக் கொடுத்த அவனது கரங்களும் அவளுக்குள் இருந்த பயத்தை அப்படியே உறிஞ்சி எடுத்தது போல இருந்தது. இதுவரை இந்த உலகத்தில் தனக்கென்று யாரும் இல்லை என்று ஏங்கியவளுக்கு, அவனின் இந்த அணைப்பு ஆயிரம் யானைகளின் பலத்தையும், இனி தனக்கு எந்தத் தீங்கும் நேராது என்ற பாதுகாப்பையும் கொடுத்தது.
சற்று நேரம் அந்த அறையில் இருவரின் மூச்சுக்காற்று மட்டுமே சத்தமாக ஒலித்தது. கௌதம் அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடியே, அவளது தலையை மென்மையாக வருடிக்கொண்டிருந்தான். ஓரளவுக்கு அவளது அழுகை நின்றதை உணர்ந்த பிறகு, அவளை விட்டு மெல்ல விலகியவன்.. "ஸாரி பவித்ரா... நீ மறக்கணும்னு நினைச்ச உன்னோட கடந்த கால நரகத்தை எல்லாம், நானே திரும்பக் கேட்டு உனக்கு ஞாபகப்படுத்திட்டேன்," என்று குற்றவுணர்ச்சியோடு, மிகவும் மென்மையான குரலில் கூறினான்.
"இல்லைங்க... இந்த ரணத்தை எல்லாம் இத்தனை வருஷமா எனக்குள்ளேயே பூட்டி வச்சு வச்சுட்டு இருந்தேன், என் அம்மா கிட்ட கூட நிறைய விஷயங்களை சொன்னதில்ல, இன்னைக்கு உங்ககிட்ட எல்லாத்தையும் கொட்டித் தீர்த்ததுக்கு அப்புறம்தான் என் மனசுக்கு ரொம்ப லேசான மாதிரி இருக்கு," என்றாள் ஓரளவு நிம்மதியுடன்.
"சரி, இவ்வளவு நடந்ததே... நீங்க ஏன் அப்போவே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கல?" என்று வினவிட, "அண்ணன் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் கம்ப்ளைன்ட் பண்ணாருங்க. ஆனா, அவன்கிட்ட இருக்குற பணத்தைவச்சு, அந்த கேஸை அப்படியே அமுக்கி ஒன்னும் இல்லாம பண்ணிட்டான்," என்று அவள் ஏமாற்றத்துடன் கூறினாள்.
அவன் சொன்னதைக் கேட்டதும் கௌதமிற்குள் கோபம் தலைக்கேறியது. தாடைகள் இறுக, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான். பணமிருந்தால் எதையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அவனது கொழுப்புக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று கௌதமின் கூர்மையான மூளை கணக்குப் போடத் தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பாகத் தன் மனைவி இனி அவனை பார்த்தால் பயந்து நடுங்கக் கூடாது, அவளுக்குள் ஒரு துணிச்சல் வர வேண்டும் என்று நினைத்தவன்..
"இதுக்கு அப்புறமும் அவனை நீ எங்கேயாவது பார்த்தா... இதே மாதிரி பயந்து நடுங்கிட்டுதான் இருக்கப் போறியா பவித்ரா?" என்று அவளது கண்களை நேராகப் பார்த்து வினவினான்.
அவளோ சட்டென்று அவள் கரத்தை பற்றிக்கொண்டு... "அதான் இப்போ நீங்க என் பக்கத்துல இருக்கீங்களே... அப்புறம் எனக்கு என்ன பயம்?" என்று அவனையே தன் முழு பலமாக நினைத்துக் கூறினாள்.
கௌதம் அவளது கள்ளமில்லாப் பதிலை ரசித்தாலும், அவளைத் தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். "சம்டைம்ஸ் நேத்து லேக்ல நடந்த மாதிரி நான் உன்னை விட்டு சும்மா தள்ளிப் போயிருந்தா, அப்போ நீ என்ன பண்ணுவ பவித்ரா?" என்று யதார்த்தத்தைக் புரிய வைக்கக் கேட்டான்.
அவளோ அவனது மார்பில் ஆழமாக முகம் புதைத்துக் கொண்டு, "மாட்டேன்... இனிமே என்னை விட்டு உங்களை நான் எங்கேயும் போக விட மாட்டேன். நீங்க எங்க போனாலும் நானும் உங்க கூடவே நிழல் மாதிரி வருவேன்," என்று ஒரு குழந்தையைப் போல சொல்ல,
அவளது அந்த மழலைத் தனமான பதிலில் கௌதமிற்குள் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
அவளது கன்னத்தை மெல்லக் கிள்ளியவன், "எல்லா இடத்துலயும் இப்படி என் பின்னாடியே வந்தா எப்படி பவித்ரா? உனக்குன்னு ஒரு செல்ஃப் கான்ஃபிடன்ஸ், தைரியம் வேண்டாமா?" என்று அவன் வினவ,.. அவளோ "எனக்கு நீங்கதான் என் தைரியமே! உங்க பின்னாடி வர்றதுல எனக்கு எந்த பிரட்சனையும் இல்லை," என்று மீண்டும் அவனது அணைப்பிற்குள் தஞ்சம் புகுந்தாள்.
அவளது அந்த எல்லையற்ற நம்பிக்கையும் காதலும் கௌதமின் நெஞ்சை நெகிழச் செய்தாலும், அவளது கடந்த கால பயத்தை அவளுக்குள்ளிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற உறுதியாக முடிவோடு அவளது தலையை மென்மையாக வருடிவிட்டு, அவளது முகத்தை நிமிர்த்தியவன்.. "பவித்ரா, நான் எப்போவும் உன் கூடத்தான் இருப்பேன். ஆனா, இன்னொருத்தன் உன்னை அச்சுறுத்துறப்போ, உன்னோட பாதுகாப்புக்காக நீ என் பின்னாடி வந்து ஒளியக் கூடாது, நீ அவனுக்கு முன்னாடி நிமிர்ந்து நிக்கணும். நீ பயந்து பின்வாங்கற ஒவ்வொரு அடியும், அவனுக்கு இன்னும் தைரியத்தைக் கொடுக்கும். நேத்து லேக்ல அவன் உன்னைப்பார்க்க வந்திருக்கான்னா நீ இன்னும் பயந்து நடுங்குவன்ற திமிர்லதான். இனி அந்தத் தப்பை நீ பண்ணக் கூடாது," என்றான் கௌதம் மிக ஆழமான, உறுதியான குரலில்.
அவள் கௌதமின் முகத்தையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ மேலும்.. "அவன் உன் வாழ்க்கையை நரகமாக்கினப்போ நீ தனியா இருந்த, ஆனா இப்போ நீ தனியா இல்லை. உனக்கு பின்னாடி நான் இருக்கேன், இப்போ நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை, அவன் தான் உன்னைப் பார்த்துப் பயந்து ஓடணும். உன்னோட இந்தத் தைரியமான மாற்றத்தைத்தான் நான் பார்க்கணும். எனக்காக இதை நீ பண்ணுவியா?" என்று அவளது கைகளைப் பற்றி ஆவலோடு கேட்டான்.
கௌதமின் ஒவ்வொரு வார்த்தையும் பவித்ராவின் மனதிற்குள் ஒரு புதுத் தெம்பையும், இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு புதுத் துணிச்சலையும் விதைப்பது போல் இருந்தது. அவன் தன் மீது வைத்திருக்கும் அந்தப் பேராதரவை உணர்ந்தவள், தன் கண்களில் இருந்த பயத்தின் மிச்சத்தைத் துடைத்துவிட்டு, மெல்லத் தலையசைத்தவள்... "ம்ம்... கண்டிப்பா முயற்சி பண்றேங்க," என்றாள் உறுதியான குரலில்.
"தட்ஸ் மை கேர்ள்" என்று அவள் கன்னத்தை தட்டியவன்,.. "சரி நேத்து நைட் நீ சாப்பிடவே இல்ல, போய் ஃபிரஷ்-அப் ஆகிட்டு வா, நாம சாப்பிட்டு வரலாம்" என்று அவளைத் தட்டி எழுப்பிட, அவளும் ஒரு நிம்மதியான புன்னகையுடன் படுக்கையை விட்டு எழுந்து பாத்ரூமை நோக்கிச் சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும், கௌதமின் முகத்தில் இருந்த மென்மை மறைந்து, சட்டென்று ஒரு கொடூரமான அமைதி குடியேறியது. பவித்ராவிற்கு நரக வேதனையைக் கொடுத்து, அவளது வாழ்வையே சிதைக்கத் துணிந்த அந்தப் பாவிக்கு, சும்மா அடிதடி என்று இல்லாமல் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத ஒரு தரமான தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று அவனது மூளை தீவிரமாகக் கணக்குப் போட்டது.
ஆனால், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவசரப்பட்டு அவனே இதில் நேரடியாக இறங்க அவனுக்கு விரும்பவில்லை. எதிரியை வீழ்த்துவது என்று முடிவான பிறகு, அது சட்டப்படியும் இருக்க வேண்டும், அதே சமயம் அவனுக்கு மரண அடியாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தவன், காவல் துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் தனது நெருங்கிய நண்பனை தான் உடனடியாகத் தொடர்பு கொண்டான்...

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.