அத்தியாயம் - 2
முதலிரவிற்காக கௌதமின் அறையில் தான் அமர்ந்திருந்தாள் பவித்ரா, கட்டில் எதுவும் பூக்களால் அலங்கரிக்கப்படவில்லை, ஆனாலும் அவளுக்குள் அவ்வளவு பதட்டம், அவனது குடும்பத்தினருடன் தான் வெகு நேரம் இருந்தாள், அப்பபோதெல்லாம் அவளுக்குள் பதட்டம் இல்லை, ஆனால் எப்போது முதல் இரவு என்ற பேச்சு வந்ததோ அந்த கணத்திலிருந்து அவளுக்குள் நடுக்கம் ஆரம்பித்துவிட்டது...
ஊதா நிற சாஃப்ட் சில்க் புடவையில் எளிய அலங்காரத்தில் தலை நிறைய மல்லிகை பூ சூடி ஒரு தேவதை போல் அலங்கரித்து அவளை அவனது அறைக்குள் விட்டு சென்றாள் சரண்யா. 'இதெல்லாம் வேண்டாமே' என்று சொல்ல வாய் வந்தது தான் ஆனால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்ற பயத்தில் மௌனமாகி விட்டாள்.
அந்த அறைக்கு கௌதம் இன்னும் வரவில்லை, வந்தால் அவன் என்ன சொல்வானோ எப்படி நடந்து கொள்வானோ என்ற பயமே அவளை மூச்சு முட்ட வைத்தது. அவளது கடந்த கால கசப்பான நினைவுகள் எல்லாம் நிழலாடி அவளை அச்சுறுத்தியது, கைகள் தானாக நடுங்கிக் கொண்டிருந்தன.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பவித்ரா. உள்ளே நுழைந்த கௌதம் அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு கதவை தாழிட, அவளது இதயம் இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. பயத்தில் கண்கள் கலங்கித் தலை குனிந்து கொண்டவளுக்கு அவளது நடுக்கம் அவளுக்கே ஒருவித அவஸ்தையைத் தந்தது.
மெல்ல அவளை நோக்கித் திரும்பியவன், அவளது நடுக்கத்தைக் கவனித்து ஒரு பெருமூச்சு விட்டு, மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு, "பவித்ரா" என்று அமைதியாக அழைத்தான்.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் விழிகளோ கலங்கிப் போயிருக்க, அவனோ, "இப்போ எதுக்கு கண்கலங்குற? நான் உன்னை என்ன பண்ணேன்?" என்று மிகவும் மென்மையாகத் தான் கேட்டான். அவனது குரலில் மிரட்டல் இல்லை, ஒருவிதமான தேறுதல் இருந்தது.
அவளோ விழிகளைத் துடைத்துக் கொண்டு.. "எ.. எனக்குத் தெரியல, கண்ணீர் தானா வருது" என்று திக்கித் திணறி சொல்ல, "எதுக்கு உன் உடல் இப்படி நடுங்குது?" என்றான் அவளது கண்களை நேரடியாகப் பார்த்தபடி.
"எனக்கு அப்படித்தான் அடிக்கடி ஆகும்" என்று அவள் சமாளிக்க முயல, மீண்டும் ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு அவனிடம்.
"உன் அண்ணன் என்கிட்ட எல்லாமே சொல்லியிருக்கான் பவித்ரா, உன் பயம் எனக்குப் புரியுது. இந்த கல்யாணம் என் குடும்பத்துக்காக நடந்தது தான், அதே போல தான் உனக்கும். அதனால நீ எதற்கும் பயப்பட வேண்டாம். உனக்கு எப்ப என் மேல நம்பிக்கை வருதோ, அப்போ நாம இந்த வாழ்க்கையைப் பத்தி யோசிக்கலாம். அதுவரைக்கும் நீ பயம் இல்லாம நிம்மதியா இங்கே இருக்கலாம்" என்றவன், சற்றுத் தயங்கி... "டிவி சீரியல்ல வர மாதிரி என்னால சோஃபாலைலாம் படுக்க முடியாது, நான் பெட்டோட ஒரு ஓரமா படுத்துக்கிறேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா நீயும் இதே பெட்ல இன்னொரு பக்கம் படுத்துக்கலாம்" என்று யதார்த்தமாகப் பேசிவிட்டு, அவன் போய் படுத்துக் கொண்டான்.
அவன் சொன்ன வார்த்தைகள் பவித்ராவிற்கு ஒரு பெரும் நிம்மதியைத் தந்தது. அவன் அவளை வற்புறுத்தவில்லை, அதே சமயம் போலியான நாடகமும் ஆடவில்லை என்பதும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அந்த முதிர்ச்சியான அணுகுமுறை அவளுக்குள் இருந்த பயத்தை மெல்ல நீக்கியிருக்க அவளும் மெல்ல ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
அந்த அறைக்குள் நிலவியது வெறும் மௌனம் மட்டுமல்ல, ஒரு புதிய நம்பிக்கையும் தான். கௌதம் தூங்கிவிட்டானா என்று அவளுக்கு தெரியவில்லை, ஆனால் அவன் கொடுத்த அந்த இடைவெளி பவித்ராவிற்கு ஒரு நிம்மதியான உறக்கத்தைத் தரத் தயாரானது.
அவனது பேச்சின் ஆறுதலா அல்லது திருமணத்தின் அலைச்சலா என்று தெரியவில்லை, கண்கள் மூடிய கொஞ்ச நேரத்திலேயே உறங்கி விட்டாள் பெண்ணவள். ஆனால், ஆணவனுக்கோ உறக்கம் வரவில்லை. மெல்லத் திரும்பி விட்டத்தைப் பார்த்தபடி படுத்தவன், என்ன நினைத்தானோ மெதுவாகத் தலைசாய்த்து அவளைப் பார்க்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கிங் சைஸ் கட்டில் என்பதால் இருவருக்கும் இடையில் தாராளமாக இடைவெளி இருந்தது. அந்த தூரம் தான் பவித்ராவிற்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்திருக்க வேண்டும்.
ஒரு பெருமூச்சுடன் மீண்டும் விட்டத்தைப் பார்த்தவனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை தான் இன்னொரு கல்யாணம் செய்திருக்கிறோம் என்பதை.
முதல் திருமணத்தைக் கௌசல்யாவுடன் அவ்வளவு ஆசையாகச் செய்து கொண்டான் கௌதம். வீட்டில் பார்த்து முடித்த திருமணம் தான் என்றாலும், கௌசல்யாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளைத் தலையில் வைத்துத் தாங்கினான், காதலை அள்ளித் தெளித்தான். அவளும் அவன் மீது கொள்ளைப் பாசம் வைத்திருப்பதாய்த் தான் அவன் நம்பினான்.
ஆனால், அதெல்லாம் வெறும் நடிப்பு என்பதும், எல்லாம் பணத்திற்காக என்பதும் போகப் போகத் தான் தெரிந்தது. அதுமட்டுமல்லாது, திருமணத்திற்கு முன்பே அவளுக்கு இன்னொருவனுடன் பழக்கம் இருந்ததும், அது திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்ததையும் கேள்விப்பட்டு துடித்துப் போய்விட்டான். அதனைப் பற்றி அவளிடம் கேட்டபோது, "ஆமா, நான் இன்னொருவனை விரும்புறேன்" என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அன்றோடு அவன் தான் வேண்டும் என்று கிளம்பியும் விட்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவளுடன் வாழ்ந்திருக்கிறான். அந்த நினைவுகள் அனைத்தும் கானல்நீராகிப் போனதை எண்ணி, அன்று அவன் கண்ணீர் விட்டுக் கதறினான். போதாக்குறைக்கு, அவன் மனைவி அவனை விட்டுச் சென்றதைக் கேள்விப்பட்டு, பல பேர் பல விதமாகப் பேச, பெரும் அவமானத்திற்கு உள்ளானான். அந்த வடுதான் அவனைத் திருமணத்தையே அடியோடு வெறுக்க வைத்தது.
தன் வாழ்வில் இன்னொரு பெண்ணுக்கு நிச்சயம் இடமில்லை என்ற உறுதியான முடிவில் இருந்தவன், தன் தாயின் எமோஷனல் பிளாக் மெயிலுக்குக் கட்டுப்பட்டும், தமக்கை சரண்யாவின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கியும் தான் இத்திருமணத்திற்கே சம்மதித்தான்.
திருமணம் முடியும் முன்னரே, தான் மணம் முடிக்கப் போகும் பெண்ணைப் பற்றி நன்கு விசாரித்தான் கௌதம். மீண்டும் ஒரு பெண்ணிடம் ஏமாற அவன் மனதிலோ உடலிலோ தெம்பில்லை அல்லவா? பவித்ராவின் கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்தபோது, அவளது காயங்கள் தன் காயங்களை விடப் பெரியவை என்பதை அவன் உணர்ந்தான்.
அவளைப் பார்த்தபோது அவனுக்குக் காதல் வரவில்லை, ஆனால் ஒருவிதமான பரிதாபமும் பாதுகாக்கும் உணர்வும் எழுந்தது. ஒருவேளை இவளும் என்னைப் போலக் காயப்பட்டவள் என்பதால், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியுமோ? என்ற கேள்வி மட்டும் அவன் மனதில் எஞ்சியிருந்தது.
அமைதியாக உறங்கும் பவித்ராவையே சிறிது நேரம் பார்த்திருந்த கௌதம், மெல்லக் கண்களை மூடினான். நாளை தொடங்கப்போகும் புதிய விடியல், அவர்கள் இருவரின் வாழ்விலும் ஒளியைக் கொண்டு வருமா என்பது காலத்தின் கையில்..
காலையில் சூரிய ஒளியின் வெளிச்சம் அறைக்குள் மெல்ல ஊடுருவ, தூக்கம் கலைந்து மெல்ல கண்விழித்தாள் பவித்ரா. தான் எங்கு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே அவளுக்குச் சில கணங்கள் பிடித்தன. கடந்த காலத் துயரங்கள் ஏதுமின்றி, அன்று ஏனோ பல நாட்களுக்கு பிறகு ஒரு நிம்மதியான உறக்கத்தை தழுவியிருந்தாள்.
அவள் இன்னொருவரின் மனைவியானதும், இந்த வீட்டிற்கு வந்ததும், முக்கியமாக இரவில் கௌதம் பேசியதும் ஒவ்வொன்றாக நினைவில் வர... அவளது பார்வை அனிச்சையாக அவன் படுத்திருந்த பக்கம் சென்றது. ஆனால், அந்த இடமோ இப்போது காலியாக இருந்தது, 'அவன் எங்கே போனான்' என்பதை பற்றி யோசிக்கத் தோன்றாமல், தனது பெட்டியிலிருந்து ஒரு சேலையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து முடித்து ஈரக் கூந்தலோடு வெளிவந்தவள், அங்கிருந்த நிலைக் கண்ணாடியின் முன்பு வந்து நின்றாள். பேரழகி இல்லாவிட்டாலும், கண்ணைப் பறிக்கும் எலுமிச்சை நிற அழகி தான் அவள். முதல் திருமணத்திற்கு முன்பு பலமுறை தன் அழகைக் கண்ணாடியில் ரசித்திருக்கிறாள். ஆனால் கிஷோர் தந்த நரகத்திற்குப் பிறகு, அவளுக்கு ரசிக்கவும் தோன்றவில்லை, அதற்கான மனநிலையும் இருந்ததில்லை.
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் தன் முகத்தை முழுமையாகக் கண்ணாடியில் பார்க்கிறாள். கழுத்தில் புது மஞ்சள் தாலி கயிறு மின்னிட, ஒரு தேவதையாய் காட்சியளித்தாள். தன் முகத்தைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவள், கூந்தலை உலர்த்தி, கூந்தலை தளரப் பின்னிவிட்டுத் தயக்கத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
மாடிபடியிலிருந்து இறங்கி வந்தவளை முதலில் கவனித்தது ஹாலில் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த சரவணன் தான். "குட் மார்னிங்மா!" என்று அவர் புன்னகையோடு காலை வணக்கம் வைக்க, அவளும் தயங்கிப் பின் புன்னகைத்து, "கு.. குட் மார்னிங்" என்றாள் மெல்லிய குரலில்.
"என்னமா ஒட்டாம சொல்ற? குட் மார்னிங் சித்தப்பான்னு உரிமையா சொல்லு," என்று அவர் வாஞ்சையுடன் கூற, அவளும் இந்த முறை தயக்கத்தைத் தூரம் தள்ளிவிட்டு, தாராளமாக இதழ் பிரித்து, "குட் மார்னிங் சித்தப்பா!" என்றாள்.
"ம்ம்... அப்படித்தான் சொல்லணும்," என்று நகைத்தவர், "வாமா வந்து உட்காரு," என்றார் தன் அருகில் இருந்த சோபாவைக் காட்டி.
"இ.. இல்ல பரவாயில்லை," என்று அவள் மறுக்க முயல, "அட சும்மா வந்து உட்காரும்மா. எதுக்கு தயக்கம் உனக்கு? என்னை உன் அப்பாவா நினைச்சுக்கோ," என்று அவர் சொல்ல, அந்த கணம் அவளது தந்தை மாணிக்கத்தின் முகம் நினைவில் வந்து போக, தயக்கம் நீங்கி வந்து அமர்ந்தாள் பெண்ணவள்.
"நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் எல்லாம் இருக்காமா?" என்று அவர் இயல்பாக வினவ, "முன்னாடி இருந்தது, ஆனா இப்போ இல்லப்பா, அதுல வர ஏதாவது நியூஸை பார்த்தாலே பயம் தான் வரும்" என்று மெல்லிய குரலில் கூறினாள்.
அவளது வார்த்தைகளில் இருந்த அந்தத் தவிப்பும், கடந்த காலத்தின் வடுக்களும் அவர் மனதை என்னவோ செய்தது. இந்தச் சிறிய வயதில் அவள் எவ்வளவு மன உளைச்சலைச் சந்தித்திருந்தால், செய்தித்தாள் படிக்கக் கூட இப்படி அஞ்சுவாள் என்று நினைத்தவருக்கு மிகவும் வருத்தமாக இருக்க, நீண்ட மூச்சை இழுத்து விட்டு வாஞ்சையோடு அவளது தலை கோதிவிட்டு.. "அதெல்லாம் பழைய காலம்மா... இனி அதைப் பத்தி யோசிச்சு பயப்படாதே. இந்த வீட்ல நீ ரொம்ப பாதுகாப்பா இருப்பே. உனக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் செய். உன்னை யாரும் இங்கே கட்டாயப்படுத்த மாட்டாங்க," என்று ஆறுதல் கூறினார்.
அவரது அந்த ஸ்பரிசமும் ஆறுதல் வார்த்தையும் பவித்ராவிற்குப் பெரும் தெம்பைத் தந்தது. தன் பிறந்த வீட்டில் அண்ணனும் அப்பாவும் காட்டிய அதே அன்பை இங்கும் உணர்ந்தபோது, அவளது கண்கள் லேசாகக் கலங்கி தான் போனது...