அத்தியாயம் - 25
"என்னங்க" தூங்குவதற்காகக் கண் மூடிப் படுத்திருந்த கௌதமின் கரத்தை மெல்லச் சுரண்டினாள் பவித்ரா.
'இப்போ எதுக்கு இந்த நேரத்துல இவ சுரண்டுறா?' என்று அவனுக்குள் சட்டென்று ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. மீண்டும் அவள் தன் உணர்வுகளுடன் விளையாடி, பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவாளோ என்ற பயம் அவனுக்கு. அவளுக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் அவன் பேசினாலும், ஒவ்வொரு முறையும் உணர்வுகளை உசுப்பேற்றிவிட்டு, பின் அதனை கட்டுப்படுத்திக் கொள்வது என்பது அவனுக்குப் பெரும் கஷ்டமாகத்தான் இருந்தது.
கடந்த ஐந்து நாட்களாக அவளும் அவனது அருகில் வரவில்லை, அவனும் அவளிடம் செல்லவில்லை. இந்த நிலையில், இன்று அவளாகவே வந்து இப்படி சுரண்டவும் அவனுக்கு பக்'கென்று ஆனது.
"என்னங்க..." என்றவளோ, அவன் பதில் பேசாததால் தொடர்ந்து சுரண்டிக் கொண்டே இருக்க... "தூக்கம் வருதுமா..." என்றான் அவன் தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு.
"கொஞ்ச நேரம் இன்னைக்கு உங்க தூக்கத்தை தூக்கி அங்குட்டு வச்சிட்டு முதல்ல இங்கிட்டு திரும்புங்க!" என்று அவள் செல்லமாய் அதட்டிட, "எதுக்கு?" என்றான் இன்னமும் அவள் பக்கம் திரும்பாமலேயே.
"இன்னைக்கு நான் பெர்ஃபெக்ட்டா நல்லா இருக்கேன்ங்க... அதனால..." என்று அவள் இழுக்க... "அதனால?" என்றான் அவன், அவளது அடுத்த வார்த்தை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு.
"எனக்கு... எனக்கு ஓகே தான்..." என்று அவள் வெட்கத்துடன் கூறிட, "என்ன ஓகே?" என்று அவன் வேண்டுமென்றே கேட்க... "ப்ச்... முதல்ல திரும்புங்க!" என்று தவித்துப் போனவளோ, அவனது புஜத்தில் பலமாகக் கிள்ளி வைத்தாள்.
'ஷ்ஷ்... என்ன, கிள்ளிலாம் வைக்கிறா!' என்ற அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் சட்டென்று திரும்பி எழுந்து அமர்ந்தவன், அவளது முகத்தையே விநோதமாகப் பார்க்க, அவளோ அவனது அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, லேசான புன்னகையுடன், "எதுக்கு இப்போ இப்படிப் பார்த்து வைக்கிறீங்க?" என்று செல்லமாக கேட்டபடியே, அவனது அகன்ற நெஞ்சில் மென்மையாக சாய்ந்து கொண்டாள்.
அவளது இந்த திடீர் மாற்றமும் நெருக்கமும் அவனுக்குள் இன்ப அதிர்ச்சியைத் தந்தாலும், உள்ளுக்குள் மீண்டும் பழையபடி ஏமாற்றம் வந்துவிடுமோ என்ற பயத்தில் தன் உணர்வுகளைக் காட்டிக் கொள்ளாமல், "என்ன பண்ணுற பவித்ரா? எனக்கு நிஜமாவே தூக்கம் வருது," என்றான்.
"இப்போ உங்களுக்குத் தூக்கம் தான் ரொம்ப அவசியம் பாருங்க!" சற்றே சிணுங்கலாகக் கூறியவளோ, அவனது நெஞ்சோடு தன் அணைப்பை இன்னும் நன்றாக இறுக்கிக் கொண்டாள்.
தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் எல்லையற்ற பாசம் அவளுக்குள் இருந்த பயத்தை இந்த முறை மொத்தமாக விரட்டியடித்திருக்க, அவனது மார்பின் சூட்டில் முகம் புதைத்தவள், இன்று எந்த காரணத்தைக் கொண்டும் அவனிடமிருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவளது அந்த இறுக்கமான அணைப்பே, அவள் இந்த முறை முழு மனதோடு தான் தயாராக வந்திருக்கிறாள் என்பதை அவனது ஆழ்மனதிற்கு உணர்த்தினாலும் கௌதம் தயங்கினான். கடந்த முறை அவள் அடைந்த அந்த தவிப்பும், சிந்திய கண்ணீரும் அவனது நினைவில் நிழலாட, மீண்டும் அவள் காயம்பட்டுவிடக் கூடாது என்ற பயத்தில் அவன் கைகள் அவளை அணைக்கத் தயங்கி அப்படியே நின்றன.
அவனது கரம் தன் மேனியில் தீண்டாமல் விலகி நின்றதில், பவித்ராவிற்குள் ஒரு மெல்லிய ஏமாற்றம் தலைதூக்கியது. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டவள், மெல்ல அவனது நெஞ்சில் இருந்து விலகி நேராக அவனது விழிகளைப் பார்த்து..
"என்னாச்சுங்க?" என்று மெதுவான குரலில் வினவினாள்.
"இல்ல பவித்ரா... நீ இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமே..." என்று அவன் அவளது நலன் கருதி மென்மையாகக் கூறிட "அதெல்லாம் இப்போ ஒன்னும் தேவை இல்லைங்க," என்று மறுத்தவள், அவனது இரு கைகளையும் தன் கைகளுக்குள் பற்றிக் கொண்டு,.. "நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம். இன்னைக்கு... இன்னைக்கு உங்க பவித்ரா உங்களை ஏமாத்த மாட்டா, நானும் வருத்தப்படுவேனு நீங்க கவலை படவும் வேண்டாம்" என்று அவனது பயத்தைப் போக்கும் விதமாக உறுதியோடு கூறியவள்,
அத்தோடு நின்றுவிடாமல், தன் வெட்கத்தை எல்லாம் மொத்தமாகத் தள்ளி வைத்துவிட்டு, மெல்லத் தன் உடலை எம்பி அவனது கன்னத்தில் ஆழமாகத் தன் இதழ்களைப் பதித்தாள். பின், மெல்லிய தயக்கத்துடனும் எல்லையற்ற காதலுடனும் அவனது செவ்விதழ்களில் தன் இதழ்களை ஒற்றி எடுக்க, அவளது அந்த ஒற்றைத் தீண்டலும், அவள் காட்டிய உரிமையும் அவனுக்குள் இருந்த அத்தனை கட்டுப்பாடுகளையும் நொடியில் சுக்குநூறாக உடைத்தெரிய, அதற்கு மேல் அவனாலும் தன்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவளது இடையோடு சேர்த்து அவளைத் தன் பலத்த கரங்களால் அள்ளித் எடுத்தவன், அவளது இதழ்களில் கவி பாட ஆரம்பித்து விட்டான்! அந்த அறையின் மௌனம் இருவரின் காதல் மூச்சுக் காற்றால் மெல்ல கரையத் தொடங்கியது.
அவசரப்படாமல், அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி தன் முத்தங்களின் வேகத்தைக் குறைத்து, அவளுக்குள் காதலை மட்டுமே அவன் நிரப்பிக் கொண்டிருக்க, அவனது இதழ்களின் ஆழமான தீண்டலில் பவித்ராவின் உலகம் மொத்தமாக சுழன்றது. அவனது அகன்ற தோள்களைத் தன் கைகளால் இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள், அவனது காதலின் நதியில் முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்து மிதக்க ஆரம்பித்தாள்.
மெல்ல அவளது இதழ்களிலிருந்து விடுபட்டு, அவளது மூச்சுக்காற்றின் வேகத்தை ரசித்தவன், அவளை அப்படியே அள்ளி மெத்தையில் கிடத்தி, அவளோடு தானும் சரிந்த கௌதமின் கரங்கள், மெதுவாக அவளது தோளில் இருந்த புடவையின் பின்னைக் கழற்றி, அவளது ஆடையை விலக்கத் தொடங்கின.
அந்த விநாடி... கடந்த முறை அவளை முடக்கிய அந்தப் பழைய பயமோ, நெஞ்சை அடைத்த பதற்றமோ, உடலை உலுக்கிய நடுக்கமோ இந்த முறை அவளுக்குள் துளிகூட எட்டிப் பார்க்கவில்லை. மாறாக, கௌதமின் அனல் பறக்கும் மூச்சின் வெம்மையும், அவனது கண்களில் தெரிந்த எல்லையற்ற காதலும் மட்டுமே அவளது கண்ணில் தெரிந்தன.
ஆடை விலகிய உடலோடு தன் கணவனின் மார்பில் தஞ்சமடைந்தவள், அவனது கண்களை நேராகப் பார்த்து, தன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையை ஏந்திட, அந்த ஒற்றை புன்னகையே 'நான் உனக்கானவள் மட்டுமே' என்பதை அவனுக்கு அப்பட்டமாய் உணர்த்தியது.
அவளது முகத்தில் தெரிந்த அந்த நிம்மதியையும், முழுமையான சம்மதத்தையும் கண்ட கௌதமிற்குள் இருந்த அத்தனை தயக்கங்களும் பறந்தோடின. அவளது நெற்றியில் முத்தத்தை விதைத்தவன், அவளது அழகிய மேனியில் தன் காதலின் முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினான்.
அன்று அந்த அறையின் விளக்கு வெளிச்சம் இருவரின் நிழல்களையும் ஒன்றாக இணைத்து அழகு பார்த்தது. பவித்ராவின் கடந்த கால ரணங்கள் அனைத்தும் கௌதமின் உன்னதமான காதலின் தீண்டலில் நிரந்தரமாகக் கரைந்து போனது.
இருவருக்குள்ளும் எந்த ஒரு தடையோ, தயக்கமோ இன்றி, அவர்களின் முதல் கூடல் விவரிக்க முடியாத பேரழகோடு, உன்னதமான காதலின் சாட்சியாக நிறைவடைந்தது.
நெடுநேரத்திற்குப் பின், கௌதமின் மார்பில் தன் தலை சாய்த்து, அவனது இதயம் துடிக்கும் சத்தத்தைக் கேட்டபடி படுத்திருந்த பவித்ராவின் முகத்தில், இதுவரை இல்லாத ஒரு பேரமைதியும், பெண்ணிற்கே உரிய முழுமையான நிறைவும் குடியேறியிருந்தது. அவளது நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளைத் தன் விரல்களால் மென்மையாகத் துடைத்துவிட்டு, அவளை இன்னும் தன் நெஞ்சோடு இறுக்கிக் அணைத்துக் கொண்டான் கௌதம். அந்த நள்ளிரவு வேளையில், அவர்களின் வாழ்க்கை அழகாகத் தொடங்கியிருந்தது...
அடுத்தடுத்த நாட்களும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு கழிந்தன. உடலால் ஒன்றிணைந்த அந்த நெருக்கம், மனதளவில் அவர்கள் இருவரையும் இன்னும் நெருக்கமாக்கியிருந்தது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட அந்தப் பிணைப்பு, அவர்களுக்குள் இருந்த மௌனத்தைத் தகர்த்து, வார்த்தைகளை விடவும் மேலான அன்பை அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ள வைத்தது.
இருப்பினும் கௌதமிற்க்கு ஒரு விஷயம் மட்டும் இன்னும் ரணத்தை ஏற்படுத்தியது பவித்ராவின் உடலில் அங்கங்கே இருந்த அந்த வடுக்கள். கிஷோர் கொடுத்த காயத் தழும்புகளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், கௌதமின் ரத்தம் கொதித்து போகும். அந்தப் பாவியின் அசுத்தமான தீண்டலின் அடையாளம் இன்றும் தன் மனைவியின் மேனியில் இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, ஆனாலும் பவித்ராவின் மனதைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், அவளது இந்த தழும்புகளையும் தன் காதலால் துடைத்துவிட வேண்டும் என்ற உறுதியுடனும், தன் கோபத்தைத் தன் பற்களைக் கடித்து அடக்கிக் கொள்பவன், ஒவ்வொரு முறை அவளைத் தொடும்போதும், அந்த தழும்புகள் மீது தன் இதழ்களைப் பதித்து, அவனது காதல் முத்திரையால் அழித்து விடுவான்..
பவித்ராவைப் பொறுத்தவரை, அவள் இப்போது முழுமையான நிம்மதியில் இருந்தாள். கௌதமிற்க்கு சொந்தமான அந்தத் திருப்தி அவளது மனதின் ஓரத்திலிருந்த பயத்தையெல்லாம் அடித்துச் சென்றிருந்தது. அவன் தன்னைப் பார்த்துக் கொள்ளும் விதமும், அவனது ஸ்பரிசத்தில் இருந்த மரியாதையும் அவளைப் புதியதொரு பெண்ணாக மாற்றியிருந்தது.
அவளது முகத்தில் இப்போது ஒரு புது தேஜஸ் மின்னியது, எப்போதும் இல்லாத ஒரு மெல்லிய வெட்கம் அவளது கண்ணோரத்தில் ஊஞ்சலாடியது. இதனை கவனித்த ஜானகிக்கும், சரண்யாவுக்கும் பெருத்த சந்தோஷம். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, மௌனமாகப் புன்னகைத்துக் கொண்டனர்.
வீடு இப்போது அமைதியோடும், மகிழ்ச்சியோடும் ஒரு நிறைவான இல்லமாக மாறியிருந்தது.
அன்று வழக்கம் போல் மதிய உணவிற்காக அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த கௌதம், ஒரு ரோட்டோர உணவகத்தின் அருகே காரைக் கடந்து சென்றபோது, அங்கே ஒரு உருவம் அவனது கவனத்தை ஈர்க்கவும், அவன் சட்டென்று காரை நிறுத்தினான்.
அங்கே நின்றிருந்த உருவம் வேறு யாருமல்ல, கௌசல்யா தான், அவளது காதலன் அவளை ஏமாற்றிவிட்டு, அவளை தவிக்கவிட்ட சென்றுவிட்ட நிலையில், செய்வதறியாத நிலையில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் நடுத்தெருவில் நின்றவள், வயிற்றுப் பிழைப்பிற்காக ரோட்டோர உணவகத்தில் எச்சில் பாத்திரங்களைக் கழுவும் வேலையில் சேர்ந்திருந்தாள்.
அன்று காலையிலிருந்து அந்த வேலையின் பாரமும், மனவேதனையும் அவளை வாட்டி வதைத்திருக்க, சோர்வாக இருந்தவள், ஏதோ ஒரு தட்டை அலட்சியமாகச் சுத்தம் செய்யவும், அங்கிருந்த கடையின் உரிமையாள பெண்மணி அதனை கவனித்து "ஏய்! என்னடி இது? ஒரு தட்டை கூட ஒழுங்கா கழுவத் தெரியாதா? நீயெல்லாம் எதுக்குடி வேலைக்கு வந்த? போயி ஒழுங்கா கழுவு!" என்று என்று கத்த, கௌசல்யா தலைகுனிந்து நின்றாள். அவளது கண்களில் அவமானக் கண்ணீர் துளிர்த்தது.
சரியாக அதே நேரத்தில் தான் கௌதம் தன் காரை அந்த உணவகத்தின் முன்னால் நிறுத்தினான். கண்களில் கூலர்ஸை அணிந்தபடி கம்பீரமாக காரிலிருந்து இறங்கியவனுக்கு, கௌசல்யாவின் இந்த நிலையைக் கண்டு இதழ்களில் ஒரு ஏளனமான புன்னகை தவழ்ந்தது.
கௌதமை எதிர்பாராத கௌசல்யாவோ, அவன் தன்னைப் பார்க்கும் அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அவமானத்தில் கூனிக்குறுகி நின்றான்...
"எப்படிம்மா இருக்க?" என்ற கௌதமின்குரலில், நக்கல் துளி கூட குறையாமல் வெளிப்பட,
அவனது அந்த திமிரான பேச்சைக் கேட்ட கௌசல்யா, கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்து, "என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது நீ தானே கௌதம்!" என்று கேட்டாள்.
அவளது அழுகையைப் பார்த்துச் சற்றும் கலங்காத கௌதம், உதட்டின் ஓரத்திலே ஒரு ஏளனமான புன்னகையை உதிர்த்தபடி.. "அட... உனக்கு தெரிஞ்சுதான் இருக்கு? சரி சரி!" என்றவன், கூலர்ஸை ஒருமுறை சரி செய்து கொண்டு, "அன்னைக்கே சொன்னேன்ல, உன்னைச் சும்மா விடமாட்டேன்னு. அதோட இது வெறும் சின்னதா ஒரு பனிஷ்மெண்ட் மட்டும்தான்," மிகவும் நிதானமாக சொன்னவன்
அவளது தற்போதைய அவல நிலையை கண் குளிர பார்த்துவிட்டு "இனியாவது திருந்து," என்று மிகக் குளிர்ந்த குரலில் சொல்லிவிட்டு, அவளைத் திரும்பிப் பார்க்காமல் தன் காரை நோக்கி நடந்தான்.
கௌதம் காரில் ஏறிச் சென்ற பிறகும், அந்த இடத்திலேயே சிலையென நின்றிருந்தாள் கௌசல்யா. தான் இழந்த அந்த அழகான குடும்பம், கௌதமின் அன்பு, தன் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுத்த மதிப்பு என அனைத்தையும் எண்ணிப் பார்த்தவளுக்கு, ஒரு நல்ல வாழ்க்கையைத் தன் கைகளாலேயே தொலைத்துவிட்டோம் என்பது புரிய, அந்த எச்சில் தட்டுகளுக்கு நடுவே அமர்ந்து, தன் செயலை எண்ணி பார்த்து வாய்விட்டு கதறி அழுதாள்.