• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உலா வரும் வெண்ணிலா - 4

Vishakini

Moderator
Staff member

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 4

"ஹ்ம்!" என்று கதையை கேட்டுவிட்டு தலையை ஆட்டினாள் அஞ்சனா.

"எப்படி இவங்க அம்மா அப்பா இவரை தனியா அனுப்பிருப்பாங்க அஞ்சனா? என்கிட்ட பிரண்ட்லியா பேசுறாரு. என்னால அண்டர்ஸ்டான்ட் பண்ணிக்க முடியுது. பட் சட்டுனு அவரை மாதிரி சேர்ந்துக்க முடியல. அதுக்காக ஒதுங்கிப் போகவும் முடியல!" என அதிரனைப் பற்றி அரை மணி நேரமாய் அந்த இரவு நேரத்தில் அவளிடம் புலம்பிக் கொண்டிருந்தான் தாமஸ்.

"ண்ணா! கொஞ்சம் கேப் குடுங்க. தண்ணி குடிச்சுட்டு வர்றேன்!" என அஞ்சனா எழுந்து கொள்ள,

"எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன். கதையா தெரியுதா உனக்கு?" என்றவன் அடிக்க வர, வீட்டுக்குள் ஓடினாள் அஞ்சனா.

"ஹே பார்த்து டா!" என கண்ணன் அவளிடம் சொல்லியவன் வாசலுக்கு வர, முற்றத்தில் அமர்ந்திருந்தான் தாமஸ்.

தாமஸ் அறையின் எதிர் வீடு தான் அஞ்சனாவின் வீடு. அவன் சொல்லி தான் அஞ்சனா இங்கே வேலையில் சேர்ந்ததுமே.

"எப்ப டா வந்த? என்ன சொன்னனு இந்த ஓட்டம் ஓடுறா?" என்று கண்ணன் கேட்க,

"சும்மா ஆபீஸ் கதை தான் கண்ணா. அம்மா எங்க? சாப்பிட்டீங்களா?" என கண்ணனுடன் பேச,

"ம்மா பசிக்குது!" என சமையலறை வந்து நின்றாள் அஞ்சனா.

"இதோ தோசையும் மல்லி சட்னியும். நேரமாகிட்டே வரலியேனு நினைச்சேன். வந்துட்ட!" என்று தட்டில் வைத்து மகளிடம் நீட்டினார் ராஜேஸ்வரி.

"அதை குடுங்க முதல்ல. சாப்பிட்டு நல்லா தூங்கணும். தலை வலிக்குது!" என அவள் வாங்க,

"தலை வலிக்குதா? ஏன் என்னாச்சு?" என ராஜேஸ்வரி இன்னும் மகளை நெருங்கினார்.

"அதை ஏன் மா கேட்குறீங்க! வெளில ஒருத்தன் இருக்கான். கொலையா கொல்றான். ஆத்தி!" என்று காதில் கை வைத்துப் பார்த்து,

"நல்லவேளைக்கு ரத்தம் வரல!" என்றும் அஞ்சனா சொல்ல,

"தாமஸையா சொல்ற!" என முறைத்துவிட்டு ஒரு தட்டில் தோசையும் சட்னியும் என எடுத்துக் கொண்டு வர, அங்கே தாமஸ் இல்லை.

"எங்க டா அவனை?" என மகனிடம் கேட்க,

"போன் வந்துச்சு. அதான் கிளம்பிட்டான்!" என்றான் கண்ணன்.

"அவன் சாப்பிடுவானேனு எடுத்துட்டு வந்தேன்!" என்றவர் அதை மகனுக்கு கொடுத்துவிட்டு செல்ல, அஞ்சனாவும் சாப்பிட அண்ணன் அருகில் வந்து அமர்ந்தாள்.

"கிளம்பிட்டாங்களா தாமஸ் அண்ணா?" என்று கிண்டலாய் அவள் கேட்டவள்,

"புதுசா வந்த சார் ரொம்ப பாவமாம். துணைக்கு ஆள் இல்லாம கஷ்டப்படுறாராம். யாராச்சும் கம்பெனி குடுத்தா நல்லாருக்குமாம் அவருக்கு. ஓவரா உருகுறார் ண்ணா!" என்றாள் கண்ணனிடம்.

"ஒரு நாளைக்கேவா?" கண்ணன் கேட்க,

"நீங்க வேற! நாங்களே மதிய சாப்பாடை எடுத்துட்டு நாலு மணிக்கு சாப்பிட போனா இந்த தாமஸ் அண்ணா போய் அந்த சாரையும் கூட்டிட்டு வந்தாச்சு" என்றவள்,

"உங்களுக்கு எதுவும் இஸ்ஸுஸ் இருக்கான்னு கேட்குறார் வந்தவர். என்னத்த சொல்ல? இல்ல சார் பரவாயில்லைனு சொன்னேன்!" என்று சொல்லி,

"அப்பவும் விழுந்து விழுந்து தான் கொண்டு வந்த சாப்பாட்டுல பாதிக்கு மேல அள்ளி அளக்குறார் அந்த மனுஷனுக்கு. நான் பக்கத்துல இருக்கேன் என்ன பண்றது? இதையும் சாப்பிட்டுப் பாருங்கன்னு கொஞ்சமா குடுத்துட்டு தான் சாப்பிட்டேன். எனக்கு பத்தவே இல்லை தெரியுமா?" என்று சொல்லி கண்களை மூடி திறந்தாள்.

"பசிச்சா போய் கடையில சாப்பிட்டு வர வேண்டியது தானேனு வரும் போது அவரைப் பத்தி இந்த அண்ணாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுக்காக வீட்டுக்கு வந்து இப்படி ஒரு ப்ளேடு!" என்றாள்.

"இது நல்லாருக்கே!" என்ற கண்ணன்,

"உனக்கு இது ப்ளேட் மாதிரி இருக்கா? நேத்து உன் சார் கூட தான் தாமஸ் சுத்தி இருக்கான். எப்படியும் கொஞ்சம் தெரிஞ்சுட்டு வந்துருப்பான் இல்ல? அதை வச்சு அவன் சொன்னது உனக்கு ப்ளேட் மாதிரி இருக்கா?" என்று கேட்க,

"நான் அப்படி சொல்லலை ண்ணா. இப்படி வான்டெட்டா போய் கூட்டிட்டு வந்து சாப்பிட குடுக்குற அளவுக்கு ஏன் பண்ணனும்!" என்றாள் அப்பொழுதும்.

"அந்த அளவுக்கு உங்களுக்கு சார் பேசி பழகி இருக்கலாம். அதனால அந்த மனுஷனை விட்டுட்டு சாப்பிடுறோமேனு தாமஸ்க்கு தோணி இருக்கலாம்!" என்றான் கண்ணன்.

'ஆமாம் தானே!' என இப்பொழுது தான் புரிவதாய் இருந்தது அஞ்சனாவிற்கு.

"தாமஸ் சொன்னது உனக்கு புரியலையோ என்னவோ. இல்ல உனக்கு புரியுற மாதிரி தாமஸ்க்கு சொல்ல தெரியலையோ என்னவோ!" என்ற கண்ணன்,

"தாமஸ் என்ன சின்ன பிள்ளையா அவன் சாப்பாட்டை குடுத்துட்டு பட்னி இருக்க? அந்த அளவுக்கு அவனுக்கு பிடிச்சிருக்குன்னு கூட எடுத்துக்கலாம் இல்ல?" என்று சொல்ல,

"ஓஹ்!" என்றாள் அஞ்சனா.

"எதுவாவும் இருக்கட்டும் டா. அடுத்தவங்க ஃபீலிங்ஸ் ஹர்ட் ஆகுற மாதிரி நீ எதுவும் நடந்துக்காத!" என கண்ணன் சொல்ல,

"நான் அப்படி எதுவும் செய்யல!" என்றாள் வேகமாய்.

"இப்ப தாமஸ் பேசிட்டு இருக்கும்போதே வீட்டுக்குள்ள போய்ட்டியே! அது தப்பில்லையா?" என்று கேட்க,

"அச்சோ ண்ணா! நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லையே!" என்றவளுக்கு வருத்தமாகிப் போனது.

ஒரே நாளில் இப்படி அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறானே என்று நினைத்து அவள் செய்தது அப்பொழுது தெரியவில்லை. கண்ணன் சொல்லிய பின் தான் உரைத்தது.

"இட்ஸ் ஓகே! இனி கவனமா இரு. நிஜமாவே உன் சார் தனியா கஷ்டப்படவும் வாய்ப்பிருக்கு. இல்ல அது பொய்யாகவும் வாய்ப்பிருக்கு. அதெல்லாம் தாமஸ் பார்த்துப்பான். அவன் குழந்தை இல்லையே! சோ நீயும் கன்ஃபியுஸ் ஆகிக்காத!" என்று முடிக்க,

"என்ன அட்வைஸ் எல்லாம் பண்ணிட்டு இருக்க?" என்று இன்னும் தோசைகளுடன் வந்தார் ராஜேஸ்வரி.

இருவருமே போதும் என்றுவிட்டனர். இனி தன் கண்ணோட்டத்தை தான் மாற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டாள் அஞ்சனா.

இங்கே இவ்வளவு பேச்சுக்கள் நடக்க காரணமான தாமஸ் அஞ்சனா பேச்சுக்களை செயலை எல்லாம் பெரிதாய் நினைக்கவே இல்லை.

அறைக்கு வந்து தன் சகோதரன் செய்து வைத்ததை சாப்பிடும் பொழுதும் அவனுக்கு அதிரனின் நியாபகம் தான்.

சாப்பிட்டு முடித்து சில நிமிட சிந்தனைகளுக்கு பின் மணியைப் பார்த்துவிட்டு தாமஸ் அதிரனுக்கு அழைக்க,

"வாட் அ சர்ப்ரைஸ் தாமஸ்? எட்டு மணிக்கு உன் கால் எதிர்பார்க்களையே நான்?" என்றான் புன்னகையுடனே அதிரன்.

"சாரி சார் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்ற தாமஸிடமும் அவன் புன்னகை ஒட்டிக் கொண்டது.

"நீ வேற! சரி போர் தெரியுமா? என்ன பண்றதுன்னு தெரியாம உருண்டுட்டு இருக்கேன்!" என்றவன் நேற்றை போல தான் இப்பொழுதும் ஹாலில் படுத்திருந்தான்.

"ஓஹ்! சாப்பிட்டீங்களா சார்?" தாமஸ் கேட்க,

"நீ சாப்பிட்டியானு கேட்டது சந்தோஷம். ஆனா இந்த சார் இருக்கே.." என்றவன் தலையை இடவலமாய் அசைக்க,

"அது அப்படி தான் வருது சார்!" என்றான் தாமஸ் சிரித்தபடி.

"சீக்கிரம் மாத்து டா. ஆபீஸ் டைம்ல கூட ஓகே. மத்த டைம் அதிக்கு மாறிடு. அப்போ தான் இன்னும் நெருக்கமா உனக்கும் ஃபீல் ஆகும்!" என்றவன் சொல்லில் தாமஸ் சிரிக்க,

"சிரிக்காத மேன்! தெரியாத ஊர்ல தனி வீட்டுல... கொடுமையா இருக்கு டா!" என்றான் அதிரன்.

"அப்புறம் எப்படி சார் இங்க வந்திங்க? அதுவும் தனியா? உங்க வீட்டுல எதுவும் சொல்லலையா?" அதிரன் அவ்வளவு எளிதாய் பேசி சிரித்ததில் தானும் ஒரு வேகத்தில் கேட்டுவிட்டு தாமஸ் "ஸ்ஸ்ஸ்ஸ்!" என பல்லைக் கடிக்க, அதை அதிரனும் உணர்ந்தான்.

"ஆமா ஆச்சுவல்லி நீயும் அப்படி தானே தனியா வந்திருப்ப? எப்படி டா மேனேஜ் பண்ணின?" அதிரன் பேச்சை மாற்றிட,

"அய்யோ நான் எல்லாம் தனியா உக்காந்து கண்ணீர் வடிச்சேன் சார். அம்மாட்ட போனும்னு மூட்டை கட்டாத குறை தான்!" என்று சொல்ல, மென்புன்னகை அதிரனிடம்.

"ஊருக்கு அடிக்கடி போக வசதி எல்லாம் இல்லை. அம்மாகிட்ட அப்பப்ப பேசிப்பேன். நான் காட்டிக்கலைனாலும் அவங்களுக்கு தெரியும். அம்மாக்கு நான்னா கொஞ்சம் ஸ்பெஷல் தான்!" என அவன் பேச பேச அதிரன் உள்ளம் தன் குடும்பத்திற்கு சென்றது.

"நீங்க எப்படி சார்? மாசம் மாசம் ஊருக்கு போவீங்களா? இல்ல அம்மா அப்பா இங்க வருவாங்களா?" என்று கேட்ட தாமஸ் அதிரனின் அமைதியில்,

"சார். சார் லைன்ல இருக்கீங்களா?" என்று மீண்டும் மீண்டும் கேட்டபின்,

"ஹ்ம் சொல்லு தாமஸ்!" என்றான் களைந்து.

"ஆமா சாப்பிட்டீங்களான்னு கேட்டேன். பதில் சொல்லலையே நீங்க?" என்றான் தாமஸ்.

"போனும் டா. உங்க கூட தானே சாப்பிட்டேன். அதான். நீ சாப்பிட்டியா? என்ன பண்ற?" என அதிரன் கேட்க,

"இப்ப தான் சார் ரூம்க்கு வந்து சாப்பிட்டேன்." என்றவன் சொல்லில்,

"இப்ப தான் ரூம் போனியா? இவ்வளவு நேரம் எங்க டா போன? தனியா போற மாதிரி பிளேஸ் இருந்தா எனக்கும் சொல்லு நானும் போய்ட்டு வர்றேன். இல்லை என்னையும் கூட்டிட்டு போ!" என்று அதிரன் சொல்ல, சிரித்துவிட்டான் தாமஸ்.

ஆனால் இப்பொழுதும் உறுதியானது அதிரனுக்கு இந்த தனிமை பிடிக்கவில்லை என்பது.

"சார்! நம்ம ஆபீஸ் அஞ்சனா இருக்கா இல்லையா? அவங்க வீடு இங்க பக்கத்துல தான் சார். அங்க தான் அஞ்சனாவோடவும் அவங்க அண்ணாவோடவும் பேசிட்டு இருந்தேன்" என்று அந்த சிரிப்போடே சொல்ல,

"ஓஹ்!" என்றவன்,

"இங்க எனக்கு பக்கத்து வீட்டுல ஒரு பாட்டி இருக்காங்க டா. பேசி பார்க்கவா?" என்று கேட்க,

"பாட்டி பாட்டி மாதிரி பேசினா உங்களுக்கு ஓகேனா யுவர் விஷ் சார்!" என்ற தாமஸ் கிண்டலில்,

"டேய்!" என்று முறைத்து சிரித்தான் அதிரன்.

அதிரனுக்கு இலகுவாய் அமைந்தது அந்த நேரம். நிச்சயம் தாமஸ் அழைப்பை எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் நேற்று வந்த அதே ஒரு அழைப்பு என்று எண்ணி தான் பார்த்தான்.

தாமஸ் என்றதும் சிரித்தபடி எடுத்து பேசியவன் மனநிலையே அப்பொழுது மாறிவிட்டது கொஞ்சம் நிம்மதியாய்.

"ஓகே சார் நீங்க போய் சாப்பிடுங்க. ரொம்ப நேரமாச்சே!" என்று தாமஸ் சொல்லிய பின் தான்,

"ஓகே டா. பார்க்கலாம்!" என அதிரனும் வைத்திருந்தான்.

"அம்மா அப்பாவைப் பத்தி கேட்டா மட்டும் பதில் சொல்ல மாட்றாங்க!" என அதிரனின் அந்த செயலை கண்டு கொண்ட தாமஸ் புரிந்து கொண்டான். ஆனால் ஏன் என்ற கேள்வி. கூடவே அப்படி யாரும் இல்லையோ என்ற எண்ணம்.

"வேணாம் வேணாம்! தப்பா எதுவும் நினைக்காத டா! ஜீசஸ் அப்படி எதுவும் இருக்க கூடாது!" என்று வேண்டிக் கொண்ட தாமஸ், அப்படி இல்லாமலாவது இருந்திருக்கலாம் என்று நினைக்கும் காலமும் வந்தது
 
Top Bottom