அத்தியாயம் 3:
பூங்கொடியும் இளமாறனும் துணிக்கடையில் வண்டியை
நிறுத்தி விட்டு இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்.
முதலில் சுடிதார் பிரிவிற்குள் நுழைந்து நான்கு,ஐந்து என எடுத்துக் கொண்டே சென்றாள், பூங்கொடி.
அவனும் அதை பார்த்து விட்டு, 'அடியே! கொடி! இப்போ தான திருவிழான்னு அவ்ளோ டிரெஸ் வாங்குன, மறுபடியும் எதுக்கு இப்போ எடுக்குற?' என கேட்டான்.
'நான் எடுத்த துணி எல்லாம் பழசா ஆகிடுச்சு, காலேஜ்க்கு போட வேற டிரெஸ் இல்ல அத்தான்' என அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு கூறினாள்.
எது, போன மாசம் வாங்குன டிரெஸ் பழசா? என அவளை பார்த்து முறைத்தான்.
சரி, சரி உடனே முறைக்காதிங்க. இனிமே இப்படி எடுக்கல என கூறிவிட்டு, முகத்தை உம்மென வைத்துக் கொண்டாள்.
அதை பார்த்து சிரித்தவன், 'உடனே அப்பாவி மாதிரி முகத்த மாத்தாத. எவ்ளோ வேணுமா எடு' என கூறினான்.
அதைக்கேட்ட உடனே அவளது முகம் பிரசாகமானது. மேலும் இரண்டு செட் சுடிதாரை எடுத்து விட்டு அவனை பார்த்து தயங்கி நின்றாள்.
அவளை கவனித்து விட்டு, என்னாச்சு வா கிளம்புவோம் என கூறவும், அவனிடம் எப்பிடி கூறுவது? என கடையை சுற்றி சுற்றி சங்கடமாக பார்த்தாள். என்னாச்சுடி பாத்ரும் போகனுமா? என கேட்டான்.
இல்ல அத்தான் அது வந்து...எப்படி சொல்வது? என ஒரு நிமிடம் தயங்கியவள் கைகளை மட்டும் நீட்டினாள். அது பெண்களின் உள்ளாடை பிரிவு.
அவன் அதை கவனித்து விட்டு, அவள் தலையில் ஒரு தட்டு தட்டி, இதுக்கு தான் இவ்ளோ ஆர்ப்பாட்டமா.
போடி போய் வாங்கிட்டு வா. நான் கொஞ்சம் தள்ளி வெயிட் பண்றேன் என சிரித்து விட்டு சென்று விட்டான்.
அவளோ, அவனை பார்த்து பழிப்பு காட்டிவிட்டு தனது அளவை கூறி உள்ளாடைகளை பார்த்து கொண்டிருந்தாள்.
அந்த உள்ளாடை பிரிவில் அனைத்து இடங்களிலும் பெண்களே வேலை செய்தனர்.
அதனால், அவள் தயக்கம் இல்லாமல் வாங்கும் போது, ஒருவன் பின்னால் வந்து நின்று அவளை வக்கிரமாக ஒரு பார்வை பார்த்தான்.
அவனும் அவளது ஊரைச் சேர்ந்தவன் தான். தான் பெரிய மைனர் என நினைத்து கொண்டு பெண்களிடம் அத்து மீறி கொண்டு ஊரை சுற்றி கொண்டிருப்பவன். அவனது பெயர் கருணாகரன்.
"நாயகன் நாயகிய சொல்லும் போது வில்லனையும் அறிமுக படுத்தனும்ல"
'என்னமா கண்ணு எல்லாம் கரெக்டா காட்ராங்களா, இல்ல நானே பார்த்து சொல்லட்டா?' என இவளை பார்த்து பல்லைக் காட்டினான்.
அதைக் கேட்ட அவளது முகம் கோபத்திற்கு மாறியது. அவளது அத்தானை திரும்பி பார்த்தாள்.
கடையின் முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தவன் கருணாகரனை கவனித்து விட்டு வேகமாக அவள் அருகில் வந்தான்.
பூங்கொடி, உடனே ஒடிச் சென்று அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.
அவள் கைகளில் நடுக்கம், அதை உணர்ந்த மாறன், அவளை தோளோடு அணைத்து என்ன கொடி, அவன் வம்பு இழுத்தானா? ஏன் இப்படி பயந்து நடுங்குற? என கேட்டான்.
ஏற்கனவே இருவருக்கும் ஆகாது. இதில் அந்த கேடு கெட்டவன் கூறியதை கூறினால், கடை என்றும் பாராமல் அவனை அடித்து நொறுக்கி போலிஸ் பிரச்சனை ஆகிவிரும் என பயந்தவள்,
'இல்ல அத்தான் அதெல்லாம் ஒன்னுமில்ல வாங்க போகலாம், இங்க ஒன்னும் நல்லா இல்ல' என அவனை பிடித்து இழுத்தாள்.
அவன் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தான். இதைப் பார்த்த கருணாகரன் உடனே அந்த இடத்தை விட்டு காலி செய்தான்.
அதை கவனித்து விட்ட மாறன் அவன் பின்னால் செல்ல போக, பூங்கொடி அவனை விடவில்லை.
அத்தான் ஒன்னுமில்லைன்னு சொல்றேன்ல என அவனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டாள்.
நன்றாக இருந்த மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அவன் கோபமாக கை காப்பை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்.
இவள் அவனைப் பார்த்து பயந்து மெதுவாக 'அத்தான்' என அழைத்தாள். சடாரென திரும்பியவன் அவளை எரிக்கும் பார்வை பார்த்தான்.
இப்போ அவன் என்ன சொன்னான்னு சொல்ல போறியா இல்லையா கொடி? என அதட்டினான்.
அவளும் நடந்ததை கூறினாள், கூறும் போதே கண்கள் கலங்கி விட்டன.
அவன் பற்களை கடித்து கோபத்தை கட்டுபடுத்தி அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
அழாத கொடி, இதுக்கு போய் யாராச்சும் இப்படி அழுவாங்களா? அவனுக்கு அங்கேயே நாலு அரை விடாம அவனை பார்த்து பயப்பிடலாமா? அவன நான் பாத்துக்குறேன் என கண்களை துடைத்து விட்டான்.
சரி வா, வேற என்ன வாங்கனும் போய் வாங்கலாம் என அழைத்தான். அவளுக்கு இருந்த மனநிலையில் எதுவும் வாங்க பிடிக்கவில்லை.
எனவே, வேண்டாம் அத்தான் வீட்டுக்கு போகலாம் என கூறிவிட்டாள். அவனும், அவளின் மனநிலையை புரிந்து கொண்டு பைக்கை கிளப்பினான்.
போகும் வழியில் நெடுஞ்சாலையில் ஓரமாக இருந்த இளநீர் கடையில் வண்டியை நிறுத்தி அவளுக்கும் அவனுக்குமாக இளநீர் வாங்கினான்.
இருவரும் குடிக்கும் போது அவளது முகத்தை பார்த்த இளமாறன், "என்ன உனக்கு புடிக்குமா கொடி?" என கேட்டான்.
அவனின் தீடீர் கேள்வியில் அதிர்ந்தவள், பின்பு தன்னை சுதாரித்து, இது என்ன அத்தான் கேள்வி உங்களுக்கே தெரியாதா? என அவனிடம் எதிர் கேள்வி கேட்டாள்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என முறைத்தான். "ஆமா பிடிக்கும்" என கூறினாள்.
"கொடி ரொம்ப நாளா உன் கிட்ட ஒன்னு சொல்லம்னு நினைச்சிட்டே இருக்கேன்.
நம்ம ரெண்டு பேருக்கும் வீட்ல சொன்னா கல்யாணம் செய்து வைப்பாங்க தான். ஆனா எனக்கு உன்னோட விருப்பம் தெரிஞ்சுக்கனும்.
உனக்கு என்னை பிடிச்சு இருக்கான்னு தெரியனும். என்னோட வாழ்நாள் முழுக்க என் பொண்டாட்டியா வருவியாடி?" என கேட்டான், இளமாறன்.
ஒரு நொடி அவனையே இமைக்காமல் பார்த்த பூங்கொடி, எதுவும் கூறாமல் பைக்கின் அருகில் சென்று நின்றாள். அவன் ஒரு பார்வை பார்த்து விட்டு பைக்கை கிளப்பினான்.
இப்போது ஒரு பக்கம் மட்டும் கால் போட்டு பைக்கின் கம்பியை பிடித்தாள். அவன் திரும்பி பார்த்து முறைத்து விட்டு வண்டியை கிளப்பினான்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவள் வீட்டின் முன்பு இருந்த மரத்தடியில் பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான்.
யாரையும் காணவில்லை. அவள் இறங்கி நின்று அவனை பார்த்தாள். அவன் இவள் பக்கமே திரும்பவில்லை.
"நான் உங்கள தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். நான் எப்போதும் உங்களுக்கு தான்.
இது உங்களுக்கே தெரியாதா அத்தான். நான் உங்களுக்கு மட்டும் தான் மாறன் அத்தான்" எனக் கூறிவிட்டு, அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் பதித்துவிட்டு நிற்காமல் வீட்டிற்குள் ஓடி வந்து விட்டாள்.
கதவின் பின்னால் வந்து நின்றவளுக்கு மூச்சு வாங்கியது.
அவனுக்கு அப்போது தான் சுய நினைவே வந்தது. கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.
அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் அது கனவில்லை நிஜம் தான்டா மடையா! என அவன் மண்டையில் தட்டியது, மனசாட்சி.
அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சடைத்தது .யாரும் இல்லாமல் வீட்டிற்குள் செல்லவும் மனதில்லை. அவளின் கைப்பேசிக்கு அழைத்தான்.
"என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு...
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்...
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன் செய்தி அனுப்பு...
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்...
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை...
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லிஅனுப்பு ...
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்...
மரங்கள் கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்...
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்...
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்..."
"மாறன் அத்தான்" என கைப்பேசி மின்னி மறைந்தது அவள் கைகளில்...
அவனுக்கும் அந்த பாடல் கேட்டது. அவன் முகத்தில் வெட்கச் சிரிப்பு. ஆண்களின் வெட்கம் என்றுமே அழகு தான்.
கதவின் பின்னே நின்று தலையை மட்டும் எட்டி அவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். கண்களாலே காதல் மொழி பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்...
"விழி மூடினாலும் உன் முகம்,
விழி திறந்தால் உன் நினைவு!
மரணமே வந்தாலும்...
மாற்ற முடியாது,
உன் மடியில் நான் கொள்ளும் மயக்கத்தை..!"