அத்தியாயம் 31:
கோவிலிலிருந்து திரும்பிய பிறகு, வீட்டில் கொண்டாட்ட மனநிலை குறையவே இல்லை. ஆனால், இளமாறனின் கண்கள் மட்டும் அடிக்கடி பூங்கொடியைத் தேடி அலைந்தன.
ஒரு வழியாக இரவு வந்தது. அல்லிராணியும் தீபிகாவும் சேர்ந்து பூங்கொடியையும் ஜெயராணியையும் அலங்கரித்து, பால் செம்புடனும் மலர்ச் சரங்களுடனும் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
இங்கே பொற்செழியன் நிலைமையோ வேறு. வழக்கமாக ஊரே அதிரப் பேசும் பொற்செழியன், இன்று தன் அறைக்கு வெளியே பூனை போலக் காத்து நின்றான்.
அறையினுள் நுழையும்போது, ஜெயராணி கட்டிலில் அமர்ந்து பூக்களைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தாள். இவன் உள்ளே வந்ததும் அவள் நிமிர்ந்து பார்க்க, பொற்செழியனுக்குத் தொண்டை காய்ந்து போனது.
"என்னங்க... அங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? உள்ள வாங்க," என ஜெயராணி அழைத்தாள்.
மெல்ல நடந்து வந்தவன், அவளுக்குப் பக்கத்தில் அமராமல் தள்ளி அமர்ந்தான். "இல்ல ஜெயா... அண்ணன் செந்தூரும், இளஞ்செழியனும் சேர்ந்து நம்மளை செமையா ஓட்டிட்டாங்கல்ல? அதான்... இன்னமும் அந்த அதிர்ச்சியிலயே இருக்கேன்," எனச் சமாளித்தான்.
ஜெயராணி மெல்லச் சிரித்துக்கொண்டு அவன் அருகில் வந்தாள். "அவங்க ஓட்டுனது இருக்கட்டும்... இப்போ எதுக்கு இவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்து இருக்கீங்க? நான் என்ன உங்களைக் கடிச்சா தின்னுடுவேன்?" என அவனது சட்டைக் காலரைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தாள்.
அவளது இந்தத் திடீர் நெருக்கத்தில் பொற்செழியன் நிலைகுலைந்து போனான். அவளுடைய கைகள் அவன் கழுத்தைச் சுற்றிக் கொள்ள, அவனது இதயம் மேளம் அடித்தது.
"ஜெயா... மெதுவா... யாராவது பாக்கப் போறாங்க," என அவன் உளற,
"கதவைப் பூட்டியாச்சுங்க மச்சான்! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்," எனச் சொல்லி அவனது கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.
அந்த ஒரு முத்தம் பொற்செழியனின் பயத்தை விரட்டியது. "ஓ... மேடம் ஃபார்ம்ல இருக்கீங்களா? அப்போ நான் சும்மா இருப்பேனா?" எனச் சொல்லி அவளை வாரி அணைத்துக் கொண்டான்.
அவன் அவளது உதடுகளில் தன் முத்திரையைப் பதிக்க, ஜெயராணி அவனது அணைப்பில் சிலிர்த்தாள். பொற்செழியன் மெல்ல அவளது தலைமுடி மல்லிகைச் சரத்தை விலக்கி, அவளது தோள்களில் முத்த மழையைப் பொழிந்தான்.
அவன் கை விரல்கள் மெல்ல அவளது புடவையின் மடிப்புகளைத் தீண்ட, ஜெயராணி வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அந்த அறை அவர்களின் சிரிப்பொலியிலும், பின் மௌனமான காதலிலும் நிறைந்தது.
கதவு மெல்லத் திறக்கும் சத்தம் கேட்டதும், ஜன்னல் ஓரம் நின்றிருந்த இளமாறன் திரும்பினான். பட்டுப்புடவையில், மல்லிகைச் சரத்தின் வாசத்துடன், வெட்கத்தில் தலை குனிந்து உள்ளே வந்த பூங்கொடியைப் பார்த்ததும் அவன் இதயத்துடிப்பு ஒரு நிமிடம் நின்றது.
பூங்கொடி பால் சொம்பை மேஜையில் வைத்துவிட்டு, கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். இளமாறன் மெல்ல அவளருகே வந்து அமர்ந்தான். அவளுடைய விரல்கள் படபடப்பில் புடவை முந்தானையைப் பிசைந்து கொண்டிருந்தன.
"கொடி..." என அவன் மென்மையாக அழைக்க, அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அத்தனை காதல் ததும்பியது.
"நேத்து ராத்திரி முழுக்க உன்னைப் பிரியப் போறோம்னு நினைச்சு நான் பட்ட கஷ்டம் இருக்கே... அதுக்கு இன்னைக்கு ஒரு தண்டனை கொடுக்கணும்னு நினைக்கிறேன்," என அவன் குறும்பாகச் சொன்னான்.
"என்ன அத்தான் தண்டனை?" என அவள் குரல் தழுதழுக்கக் கேட்டாள்.
இளமாறன் அவள் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தினான். அவனது கட்டை விரல்கள் அவளது மென்மையான கன்னங்களை வருட, பூங்கொடியின் கண்கள் தானாக மூடிக்கொண்டன. மெல்ல அவளது நெற்றியில் முத்தமிட்டவன், அப்படியே மூக்கின் நுனியில் உரசி, அவளது இதழ்களுக்கு அருகே வந்தான்.
அவள் மூச்சுக்காற்று அவன் முகத்தில் பட, அந்த நெருக்கம் இருவரையும் நிலைகுலையச் செய்தது.
இளமாறன் மெல்ல அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான். அது ஒரு நீண்ட, ஆழமான முத்தமாக மாறியது. அந்த ஒரு முத்தத்தில் அவர்களின் மொத்தக் காதலும், பிரிவின் தவிப்பும் அடங்கியிருந்தது.
முத்தத்தின் வெப்பத்தில் பூங்கொடி அவன் தோள்களைப் பலமாகப் பற்றிக்கொண்டாள். இளமாறன் அவளது கழுத்து வளைவுகளில் முத்தமிட்டுக்கொண்டே, மெல்ல அவளது தோள் பட்டையில் இருந்த புடவை முந்தானையை விலக்கினான்.
"அத்தான்..." என அவள் மெல்லிய குரலில் முனக,
"இனிமேல் நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது கொடி," என அவன் அவளது காதோரம் கிசுகிசுத்தான்.
மெல்ல அவளது ஆடையின் முடிச்சுகளை அவன் தளர்த்த, அறையில் இருந்த மல்லிகை வாசமும், விளக்கொளியும் அவர்களின் காதலுக்குச் சாட்சியாக நின்றன.
நிலவின் ஒளி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்க்க, அந்த இரவு இரு உயிர்களின் சங்கமத்தில் முழுமையடைந்தது.