• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என்னைக் களவாட வந்தவளே - 9

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 9 :



கருணாகரனின் அச்சுறுத்தல்கள் மறைந்து, செந்தூர் பாண்டியனின் நிலம் மீட்கப்பட்ட பிறகு, அந்தக் குடும்பத்தில் நிம்மதி குடியேறியது.

இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் செந்தூர் பாண்டியன் - அல்லிராணி தம்பதியின் முதல் குழந்தையின் வருகைக்காகத்தான் இருந்தது.


ஒரு அதிகாலை வேளை, நிலவில் பனி படர்ந்திருந்த நேரத்தில் அல்லிராணிக்கு பிரசவ வலி எடுத்தது.

வீடே சுறுசுறுப்பானது.
தனலட்சுமியும் முருகவள்ளியும் பதற்றத்துடன் அல்லியைத் தேற்றினர்.


ஜெயராணியும் பூங்கொடியும் மற்றும் தேவையான துணிகளை பொருட்களை எடுத்து வைத்தனர்.

செந்தூர் பாண்டியன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, இளமாறன் துரிதமாகச் செயல்பட்டான்.


"அத்தான், நீங்க வண்டியில ஏறுங்க. அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது," என்று தைரியம் கூறிய இளமாறன், காரை மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.

அவனோடு செந்தூரின் தம்பிகளான பொற்செழியனும் இளஞ்செழியனும் குடும்பத்துடன் மற்றொரு வண்டியில் பின் தொடர்ந்தனர்.


மருத்துவமனை வாசலில் இரண்டு குடும்பங்களும் திரண்டிருந்தன.
கதிரேசன் - தனலட்சுமி தம்பதியினர் ஒரு பக்கம் வேண்டிக் கொண்டிருந்தனர்.


சுப்பிரமணி - முருகவள்ளி தம்பதியினர் தன் மகள் நலமாகப் பிரசவிக்க வேண்டும் எனப் பதற்றத்துடன் இருந்தனர்.


பிரசவ அறையின் வெளியே செந்தூர் பாண்டியன் அமர்ந்திருக்க, இளமாறன் அவன் தோளில் கையை வைத்து, "அத்தான், அக்கா ஒரு தைரியசாலி. கவலைப்படாதீங்க," என்றான்.


பூங்கொடியும் ஜெயராணியும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு பயத்துடன் நின்றனர்.

திடீரென அந்த நிசப்தத்தை உடைத்துக்கொண்டு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

நர்ஸ் வெளியே வந்து புன்னகையுடன், "வாழ்த்துகள்! அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு!" என கூறிச் சென்றார்.


அந்தச் செய்தியைக் கேட்டதும் கதிரேசனும் சுப்பிரமணியும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். செந்தூர் பாண்டியன் கண்கள் கலங்க நின்றான்.


நர்ஸ் குழந்தையைத் தூக்கி வந்து காட்டியபோது, அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.

"எங்க அண்ணனை அப்படியே உரிச்சு வெச்சிருக்கான்பா!" என பொற்செழியனும் இளஞ்செழியனும் குதித்தனர்.


"இல்ல... இது என் அக்கா ஜாடை," என்று ஜெயராணி உரிமை கொண்டாடினாள்.

இளமாறன் தன் மருமகனை முதன்முதலில் கையில் ஏந்தியபோது, அவன் கண்களில் ஈரம் கசிந்தது.


"தாய்மாமனுக்கு ஏத்த மருமகன் வந்தாச்சு!" என்று அவன் குழந்தையைத் தூக்க, பூங்கொடி ஓடிவந்து குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.


சில நாட்களுக்குப் பிறகு குழந்தை வீட்டிற்கு அழைத்து வரப்பட்டது.

தனலட்சுமியும் முருகவள்ளியும் வாசலில் அவர்களை நிற்க வைத்து குடும்பத்தோடு ஆரத்தி எடுத்துத் தங்கள் வாரிசை வரவேற்றனர்.

அவர்கள் வீட்டுக்கு முதல் குழந்தை.
பெயர் சூட்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.

செந்தூர் பாண்டியனும் அல்லிராணியும் தன் மகனுக்கு "மிதுன்" என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மிதுன் அவர்கள் வீட்டின் செல்ல பிள்ளையாக வளரத் தொடங்கினான்...

-----------------------------------------------------------------


சில வருடங்களுக்கு பிறகு...

மிதுன் முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தான். அல்லிராணிக்கு இரண்டு வயதில் தூரிகா என்ற மகளும் இருக்கிறாள்.

இளமாறன் தன் மருமகளை காண அல்லியின் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனை கண்டதும் தூரிகா வேகமாக ஓடி வந்து மாமனை தூக்க சொன்னாள்.

அவனும் சிரிப்புடன் அவளை கைகளில் தூக்கி செல்லம் கொஞ்சினான்.

அப்போது அங்கு வந்தாள் பூங்கொடி. அவளை கண்ட தூரிகா அடுத்து அவளிடம் தாவினாள்.

அவளும் சிரிப்புடன் "என்னடி தங்கம் வாங்க அத்தை உனக்கு சாப்பாடு ஊட்டி விடவா?" என அவளிடம் வினவினாள்.

அவர்களையே பார்த்து கொண்டிருந்த இளமாறன் பார்வையில் ரசனை கூடியது.

பூங்கொடி படித்து முடித்து ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று இப்பொழுது அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள்.

ஒரு பச்சை வண்ண காட்டன் புடவையில் மிகவும் அழகாக இளமாறனின் கண்ணை கவர்ந்தாள்.

அவனின் பார்வையை உணர்ந்த பூங்கொடி அவனை திருப்பி பார்த்து என்ன? என புருவத்தை உயர்த்தினாள்.

அவன் மயக்கம் வருவது போல் சைகை செய்து காட்டினான் சிரிப்புடன்...

அவனை பார்த்து பலிப்பு காட்டி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

இளமாறனும் மகிழ்வுடன் பைக்கை கிளப்பி சென்று விட்டான்..


"மெல்லிய ஆண்மகனை
பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்...

தொட்டதும் விழுந்துவிடும்
ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்...

முடி குத்தும் உந்தன் மார்பு
என் பஞ்சு மெத்தையோ...

என் உயிர் திறக்கும் முத்தம்
அது என்ன வித்தையோ...

உன்னைப் போலே
ஆண் இல்லையே
நீயும் போனால்
நான் இல்லையே...!"
 
Top Bottom