சம்யுக்தன் மற்றும் வசுமதியின் கல்யாணம் முடிந்து மணப்பெண்ணின் பிறந்தகத்திற்கு
அனைவரும் வந்து விட, இருவருக்கும் பால், பழம் கொடுக்கும் சம்பிரதாயமும் முடிந்தது.
அதற்குப் பிறகான அனைத்துச் சடங்குகளையும் நிவர்த்தி செய்த பின்னர் தனது
பெற்றோரின் வீட்டிலிருந்து புறப்பட்டுப் புகுந்த வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்து
விட்டிருந்ததை அறிந்ததும் தன் தாய், தந்தையைக் கலக்கத்துடன் பார்த்தாள் வசுமதி.
அதைப் புரிந்து கொண்டு மகளின் அருகில் சென்றார்கள் விஜயன் மற்றும் கண்மணி.
அவர்களுக்குத் தனிமை கொடுக்கும் விதமாக,”நீங்கப் பேசுங்க”என்று அவர்களிடம் கூறி
விட்டுத் தன் தம்பியின் அருகே சென்று உட்கார்ந்து கொண்டான் சம்யுக்தன்.
”வசு! இங்கே பாருடி! உனக்கும், சம்யுக்தனுக்கும் கல்யாணம் நல்லபடியாக முடிஞ்சிருச்சு.
இனிமேல் உன் கல்யாண வாழ்க்கையை நீ தான் காப்பாத்திக்கனும். அப்போ தான், நீ
கஷ்டப்படாமல் ஜம்முன்னு வாழ முடியும்! புரியாதா?”என்று மகளிடம் மெதுவான குரலில்
சொன்னார் விஜயன்.
அவரைத் தொடர்ந்து,”ஆமா வசு. உனக்கு இந்த வீட்டில் மருமகளாகுற பாக்கியம்
கிடைச்சதைப் பார்த்து இங்கேயிருக்கிற எல்லாரும் இப்போவே வயிறு எரிஞ்சிட்டுத் தான்
இருக்காங்க. இதே மாதிரியே அவங்க நீ இன்னும் நல்லா வாழுறதைப் பார்த்துப்
பொறாமைப்படனும்! அதே சமயம் உன் புருஷன் கிட்ட எப்பவுமே உன்னோட
உண்மையான குணத்தைக் காட்டவே கூடாது!”என்று தானும் தன் பங்கிற்கு அவளுக்கு
அறிவுரை வழங்கினார் கண்மணி.
அவர்களது வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டவளுக்கோ தனது கலங்கிய
கண்களை அனைவருக்கும் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது
நினைவிலேயே இல்லை.
ஆனால் அதைக் கவனித்து விட்டு,”அண்ணியோட கண்ணுக் கலங்கி இருக்குப்
பாருண்ணா”என்று தனது தமையனிடம் கூறினான் பிரதீபன்.
அதைக் கேட்டுத் தன் மனைவியை ஏறிட்டு விட்டு அவள் எதற்காக அழுகிறாள் என்பதை
அறிந்து கொள்ளத் தன் இடத்திலிருந்து எழ முயன்ற சம்யுக்தனைத் தடுத்து,
“அவங்க அப்பா, அம்மாவைப் பிரியுறோமேன்னு அழுதுட்டு இருக்கா. அவங்க மூனு
பேரையும் கொஞ்சம் தனியாக இருக்க விடலாம்”என அவனுக்குப் புரிய வைத்தார்
கலாவதி.
“ஓஹ்! அதன் விஷயமா? சரிம்மா”என்றுரைத்து விட்டுத் தன்னைச் சுயமிகளை எடுத்துக்
கொள்ள ஆரம்பித்து விட்டான் பிரதீபன்.
அவனைப் போலவே தானும் சமாதானம் அடைந்து இருந்தாலும் கூட வசுமதியைப்
பார்த்த வண்ணமே தான் அமர்ந்திருந்தான் சம்யுக்தன்.
அதைக் கண்ட அங்கேயிருந்த உறவினப் பெண்மணியோ,”ஏம்ப்பா சம்யுக்தா! உன்
பொண்டாட்டியை வச்சக் கண் வாங்காமல் பார்த்துட்டு இருக்கிறியே! இன்னும் கொஞ்ச
நேரம் தான். அதுக்கப்புறம் அவ தான் காலம் முழுக்க உன் கூடத் தான் இருப்பாள்.
அப்போ இப்படி பார்த்துக்கோ!”என்று அவனைக் கேலி செய்ய அவருடன் சேர்ந்து
அங்கிருந்த மற்றவர்களும் நகைத்தனர்.
அதில் அவனுக்கு என்னவோ போலாகி விடச் சட்டென்று தன் பார்வையை
வசுமதியிடமிருந்து வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
“பார்த்தியா? மாப்பிள்ளை உன்னையே தான் பார்த்துட்டு இருந்து இருக்கார்! நீ அவர்
கூட நல்லா வாழப் போறன்றதை நினைச்சு எனக்கு இப்போ நம்பிக்கை
வந்துருச்சு!”என்றார் கண்மணி.
“கலாம்மா. நல்ல நேரம் முடியிறதுக்குள்ளே நம்ம மகனையும், மருமகளையும் வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போவோமா?”என மனைவியிடம் கேட்டார் ஜெயராம்.
“சரிங்க”என்றவரோ, அதை வசுமதியின் பெற்றோரிடம் தெரிவிக்க,
அவர்களும்,”ஆமாம் சம்பந்தி. நாங்கப் பேச்சு மும்முரத்தில் மறந்துட்டோம்”என்றுரைத்து
விட்டுத் தங்களது மகளை நெகிழ்ச்சியுடன் அணைத்து விடுவிக்க,
இப்போது தனது மனைவியின் அருகே வந்து அவளுடன் சேர்ந்து தன் மாமனார்,
மாமியாரின் கால்களில் விழுந்து எழுந்தான் சம்யுக்தன்.
அவர்களை ஆசீர்வதித்து எழுப்பி விட்டு,”எங்கப் பொண்ணுக் கூடச் சந்தோஷமாக
வாழுங்க மாப்பிள்ளை!”என்று அவனிடம் கூறி விட்டு,
ஜெயராம் மற்றும் கலாவதியிடம்,”நீங்களும் அவளை நல்லா
பார்த்துக்கோங்க”என்றுரைத்து விட்டுத் தங்களது கண்கள் கலங்க கேட்டுக்
கொண்டார்கள் வசுமதியின் பெற்றோர்.
“இனிமேல் அவ எங்க வீட்டுப் பொண்ணு. நாங்க அவளை நல்லா பார்த்துக்குவோம்
சம்பந்தி”என அவர்களுக்கு வாக்களித்து விட்டுத், தங்களது மகன் மற்றும் மருமகளை
அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.
வசுமதியைப் பூஜையறையில் விளக்கேற்றுமாறு கூறவும், அவளும் அதைச் செய்து
முடித்திருந்தாள்.
தனது வீட்டிலிருந்து கிளம்பிக் காரில் பயணிக்கும் போதும், இப்போது தன் புகுந்த வீட்டுச்
சாமி அறையில் விளக்கேற்றி முடித்த வரையிலும் கூட அனைவரிடமும் ஒன்றிரண்டு
வார்த்தைகள் மட்டுமே பேசி இருந்தாள் வசுமதி.
அவள் கொஞ்சம் அமைதியான பெண் தான். ஆனால் இப்படி சொற்களை எண்ணிப்
பேசும் அளவிற்கு எல்லாம் பேரமைதியான குணம் கொண்ட பெண் கிடையாது!
தன்னுடைய நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களிடம் நன்றாகவே வாயாடுவாள்!
ஆனால், இதையெல்லாம் இனிமேல் கைவிட்டு விட வேண்டும் என்று எண்ணும் போதே,
தன் நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையில் இருந்து தப்பித்துச் சந்தோஷமாக வாழப்
போகிறோம் என்ற தன் ஆசைக்காக தன்னுடைய சுயத்தை இழந்து விடப் போகிறோமே
என்ற அழுத்தம் அவளுக்குள் உருவாகி விட்டிருந்தது.
அதிலேயே உழன்று கொண்டிருந்தவளை இரவுச் சடங்கிற்காகத் தாயாராக்கி முடித்தனர்.
அவளைத் தன் மகனுடைய அறைக்கு அனுப்பி வைக்கும் முன்,”வசும்மா! என் பையன்
எதிர்பார்த்த மாதிரியான குணங்களோட நீ அவனுக்கு மனைவி ஆகிட்ட! அதே மாதிரி
நீங்க ரெண்டு பேரும் மனசு ஒத்துப் போய், எப்பவும் ஒத்துமையா, சந்தோஷமாக
வாழனும்! அடுத்த ஒரு வருஷத்தில் எனக்கு ஒரு பேத்தியையோ, பேரனையோ பெத்துக்
கொடுத்துடுங்க”என்ற கலாவதியிடம்,
“சரிங்கத்தை”என்றுரைத்து விட்டு உறவினப் பெண்களுடன் நடந்தாள் வசுமதி.
அவர்களோ அவளைக் கேலி செய்கிறேன் பேர்வழி என்று அவளது மனநிலையை
இன்னும் மோசமாக்கி விட்டுச் சம்யுக்தனின் அறைக்குள் அனுப்பி வைத்து விட்டுச்
சென்றனர்.
அவளது வரவை அறிந்ததும்,”உள்ளே வந்து உட்காருங்க”என்று அழைத்துக் கட்டிலில்
அமர வைத்தான் சம்யுக்தன்.
அவன் கூறியதை எல்லாம் சாவி கொடுத்தப் பொம்மையைப் போல் செய்தாள் வசுமதி.
கட்டிலில் அமர்ந்ததும், தன்னுடைய அலங்காரத்தையும், கட்டிலில் செய்திருந்த
அலங்காரங்களையும் வெறிக்க, வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,”நமக்கு
இப்போ ஃபர்ஸ்ட் நைட். ஆனால் உங்க முகத்தைப் பார்த்தால் நீங்க ரொம்பவே
களைப்பாக இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது! அதனால் இன்னைக்கு நமக்குள்ளே
எதுவும் நடக்க வேண்டாம்னு நினைக்கிறேன். உங்களுக்கும் ஓகேவா? இல்லை…”என்று
தன் குரலால் அவளது கவனத்தை தன் புறம் திருப்பி இருந்தான் சம்யுக்தன்.
அதில் சற்றே தனது சிந்தனையிலிருந்து வெளியே வந்து,”ஹான்!”என்று அவனைப்
பார்த்தாள் வசுமதி.
அதில், தான் சொன்ன எதையுமே அவள் கேட்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு
மீண்டுமொரு முறை விஷயத்தை மொழிந்தான் சம்யுக்தன்.
அதைக் கேட்டதும் ஏனோ அவளுக்குள் ஒரு நிம்மதி உருவாயிற்று.
அதனாலேயே,”ஆமாம். நான் ரொம்ப டயர்ட் ஆகத் தான் இருக்கேன். நாம இன்னொரு
நாள் இதையெல்லாம் பார்த்துக்கலாம்”என்று களைப்பு மிகுந்த குரலில் கூறினாள் வசுமதி.
“சரி. குட் நைட்” என்றுரைத்து விட்டுக் கட்டிலின் மறுபுறத்தில் படுத்துக் கொள்ள
அவனைப் பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டுத் தனது அலங்காரத்தைக் கூடக்
கலைக்காமல் அப்படியே உறங்கி விடக்,
காலையில் விழித்து எழுந்த வசுமதிக்கு இன்னும் மனச்சஞ்சலம் குறைந்த பாடில்லை.
அப்படியே தனது மடியில் கோர்த்த விரல்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதே சமயம் சம்யுக்தனும் உறக்கம் கலைந்து எழுந்து,”குட் மார்னிங்”என்றான்.
“குட் மார்னிங்”என்று பதிலுக்கு உரைத்தாள் வசுமதி.
அவர்கள் கண் விழித்ததை அறிந்து கொண்டதும் அப்போது செய்ய வேண்டிய
சடங்கையும் தனது உறவுக்காரப் பெண்களை வைத்துச் செய்து முடித்திருந்தார் கலாவதி.
அதற்கடுத்து வந்த நாட்களில் மறு வீட்டு விருந்து சம்பிரதாயங்களும் முடிந்திருக்க,
எப்போதும் போல தனது வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டிருந்தான் சம்யுக்தன்.
தங்களது முதலிரவு அன்றும், அடுத்து வந்த நாட்களிலும் தங்களுக்குள் எதுவுமே
நடக்கவில்லை என்பதைப் பற்றிய கவலை எல்லாம் வசுமதிக்கு இல்லை.
ஆனால், தனது சுயத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோம் என்ற
ஆதங்கமும், அழுத்தமும் தான், அவளை இரவு, பகல் பாராமல் அழுத்திக் கொண்டிருந்தது.
அதனாலேயே, தனது கணவனிடம் மட்டுமின்றி அந்தக் குடும்பத்தில் இருந்த
மற்றவர்களிடம் கூட வசுமதியால் இயல்பாகப் பழக முடியவில்லை.
தன் அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டி அனைத்து வீட்டு வேலைகளையும்
தானே செய்யத் தொடங்கி விட்டாள்.
அதுவும் கூட, அவள்,’பொறுப்பான மருமகள்’ என்று அனைவரிடமும் பெயர் வாங்கிக்
கொடுத்ததே தவிர அவளது மன அழுத்தம் குறையவே இல்லை.
அதே சமயம், தங்கள் மகளின் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தனர் விஜயன் மற்றும் கண்மணி.
“வசு! நீ சந்தோஷமாக இருக்கியாம்மா?”என்ற தாயிடம்,
அதற்கு வசுமதியோ,”ம்ம். இருக்கேன்ம்மா”என்றவளது முகத்தில் அருளே இல்லை.
ஆனால் அவள் அணிந்திருந்த உடை மற்றும் நகைகளைப் பார்த்துப் பூரித்துப்
போனார்கள் இருவரும்.
அதனாலேயே அவளது மனதில் இருப்பதைக் கேட்டறியாமல் விட்டு விட்டனர்.
“எப்போ பார்த்தாலும் வேலை, வேலைன்னுச் சுத்தாமல் காலேஜூக்கு லீவ் போட்டுட்டு
மருமகளை எங்கேயாவது வெளியே கூட்டிட்டுப் போடா!”என்று மகனுக்கு
அறிவுறுத்தினார் ஜெயராம்.
“ப்ச்! அப்பா! நான் காலேஜூக்கு லீவ் போட்டதே இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்
தானே?”என்று சிடுசிடுத்தான் சம்யுக்தன்.
“அதனால் என்ன? உன் கூட வெளியே போகனும்னு மருமகளுக்கும் ஆசை இருக்கும்
தானே?”என்ற தந்தையிடம்,
“அவங்களுக்கு அதெல்லாம் பிடிக்காதுப்பா. ஏன்னா, அவங்களும் என்னை மாதிரி
தானே? அதான்!”என்றவனது வார்த்தைகள் கொடுத்த அழுத்தத்தால் வசுமதிக்குத் தலை
கனத்துப் போயிற்று!
- தொடரும்