STN 22
New member
வசுமதியின் உயிரற்ற உடலைப் பார்க்கும் போது எல்லாம் அவனுக்குள் மனப் புழுக்கத்தையும், குற்ற உணர்வையும் மேலெழும்பச் செய்தது!
அவளும் தன்னைப் போன்றதொரு குணாதிசயங்களைக் கொண்டவள் என்பதால் தான் அவளுக்குத் தன்னைப் பற்றிப் புரிந்து இருக்கும். எனவே தான், தங்களது தாம்பத்திய வாழ்க்கையை மெதுவாக ஆரம்பிக்கலாம் என்று காத்திருந்தான் சம்யுக்தன்.
ஆனால் வசுமதிக்கு அதில் விருப்பம் இல்லை என்பதையும், அவளுக்குத் தன்னுடன் தாம்பத்திய வாழ்க்கையை வாழ நாட்டம் இருந்திருக்கிறது என்பதையும் சிறிது நேரத்திற்கு முன்பு அவளது அன்னையின் வாயிலாக அறிந்தவுடன் தனது எண்ணம் தவறு என்பதை உணர்ந்து மொத்தமாக உடைந்து விட்டிருந்தான்.
இதற்கிடையில், அவளது மரணத்திற்குத் துக்கம் விசாரிக்க வந்தவர்களோ,”வசுவுக்குக் கல்யாணம் ஆகி இவ்வளவு நாளாகி இருக்கு! ஆனால் குழந்தைப் பெத்துக்க முயற்சி எடுக்கவே இல்லையே! ஒருவேளை இவளுக்கு அதில் ஏதாவது சிக்கல் இருந்து இருக்குமோ! அதனால் தான் இப்படி அல்பாயுசுல போயிட்டாளோ?”என்றெல்லாம் தங்களது ஊகங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அதைக் கேட்டு மேலும் பாறையாக இறுகிப் போய் விட்டான் சம்யுக்தன்.
ஆனால்,”நீங்க கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா? என் மருமகளுக்கு அப்படி எந்தக் குறையும் இல்லை! அவ மாடியிலிருந்து தவறிக் கீழே விழுந்து இருக்கிறாள்! அதை தெரிஞ்சிக்கிட்டுப் பேசுங்க! தயவு செஞ்சி உங்களோட தேவையில்லாத கற்பனைகளை எல்லார் கிட்டேயும் சொல்லி அவளோட ஆன்மாவுக்குச் சாந்திக் கிடைக்காமல் பண்ணிடாதீங்க!”என்று கூறித் தன் மருமகளைப் பற்றி இல்லாதது, பொல்லாததைப் பேசியவர்களின் வாயை அடைத்து விட்டார் கலாவதி.
அதைக் கேட்டதும் தான், தங்களது மகளுக்கு எந்தவித அவப்பெயரும் வந்து விடக் கூடாது என்று தான் தாங்களும் கூடத் தங்களது மகளின் இறப்புத் தற்கொலையாக இருக்குமோ என்றத் தங்களின் சந்தேகத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், அவளைச் சம்யுக்தனுக்குத் திருமணம் செய்து வைக்க கூறியப் பொய்யையும் யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்!
அப்படி இருக்கும் போது அவளது உடலுக்கு இறுதி மரியாதை கொடுப்பதற்காக வருபவர்கள் பேசும் வீண் சொற்கள் ஏதாவது அவளது புகுந்த வீட்டாருக்குச் சந்தேகத்தை அளித்து விடுமோ என்று கலங்கிப் போயிருந்தார்கள்.
ஆனால் அதற்கு வழி வகுக்காமல் தங்களது சம்பந்தி வீட்டாரே அவர்களுக்குத் தக்கப் பதிலடி தந்து விட்டதை எண்ணி வசுமதியின் பெற்றோரான விஜயன் மற்றும் கண்மணிக்கு ஆசுவாசமாக இருந்தது.
அதே சமயம் வசுமதியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரமும் வந்து விட அவளது கணவனாக அதைச் செய்து முடித்து இருந்தான் சம்யுக்தன்.
அதேபோல் அவளது உற்றார், உறவினர்கள் அனைவரும் இறுதிச் சடங்குகள் செய்து முடித்தப் பின்னர் அவளது உடலை மின் மயானத்திற்குத் தூக்கிச் சென்றார்கள்.
அப்போதே இடிந்து போய் உட்கார்ந்து விட்டிருந்தனர் வசுமதியின் பெற்றோர்.
தங்களது மகள் திரும்பி வராத இடத்திற்குச் சென்று விட்டாள் என்பதை எண்ணி, எண்ணித் துக்கத்தில் அழுது கொண்டிருந்ததால் அவர்களுக்குத் தங்களது மகளுக்குத் திருமணம் ஆகி கணவன் இருக்கிறான் என்பதை மறந்து போயிருந்ததால் வசுமதியின் உடல் மின்தகனம் செய்யப்பட்டு அவளது சாம்பலை வாங்கிக் கொண்டனர் விஜயன் மற்றும் கண்மணி.
அனைத்து உறவினர்களும் கிளம்பிச் சென்ற பின்னர் அந்த காலியாகி இருந்த வீட்டில் சம்யுக்தனும், அவனது பெற்றோர் மற்றும் வசுமதியின் பெற்றோரும் மட்டுமே இருந்தார்கள்.
அப்போது,“எங்களை மன்னிச்சிருங்க சம்பந்தி! வசுவோட இந்த நிலைமைக்கு நாங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஏன்னா, நாங்க அவளைச் சரியாகப் பார்த்துக்கலையோன்னுத் தோணுது! எங்களால் அவளை எங்கப் பையன் கூட நல்லபடியாக வாழ வைக்க முடியலை!”என்று விஜயன் மற்றும் கண்மணியிடம் மன்னிப்புக் கோரினார் ஜெயராம்.
ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் அளவிற்குத் தங்களது சுயநினைவிலேயே இல்லை அவர்கள் இருவரும்.
ஏனென்றால் மகளின் இறப்பில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை.
அதனாலேயே,”எங்களுக்குச் சொல்ல எதுவுமில்லை. எங்கப் பொண்ணுக்குக் கருமாதி எல்லாம் செஞ்சி முடிச்சுக் கொடுத்தீங்கன்னா மட்டும் போதும்! மத்தபடி இதுக்கப்புறம் எங்களுக்கும், உங்களுக்கும் இடையே எந்தச் சம்பந்தமும் கிடையாது! இதை எப்பவும் ஞாபகம் வச்சுக்கோங்க!”என்றவர்களோ,
தங்களிடம் மன்னிப்புக் கேட்க முன் வந்திருந்த சம்யுக்தனை மறந்தும் கூட ஏறிட்டுப் பார்க்காமலேயே அங்கேயிருந்து கிளம்பித் தங்களது இல்லத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.
அதில்,”இவங்க என்ன அண்ணாவையே குற்றம் சொல்லிட்டுப் போறாங்க? அவங்க மாடியிலிருந்து தவறிக் கீழே விழுந்து இறந்து போனதுக்கு இவர் என்னப் பண்ணுவார்?”என்று கேட்டுத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினான் பிரதீபன்.
“டேய்! சும்மா இரு! அவங்க ஒத்தைப் பொண்ணை எமனுக்குக் காவு கொடுத்து இருக்காங்க! அந்தப் பொண்ணுக் கூடக் கொஞ்ச நாள் இந்த வீட்டில் வாழ்ந்த நமக்கே அவளோட சாவை நினைச்சு உசுரெல்லாம் துடிச்சுப் போயிருக்கு! அவங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சியா? அதை விட, அவங்க சொன்ன ஒரு விஷயத்தை என்னால் தாங்கிக்கவே முடியலை!”என்று தங்களது மகளுடன் சம்யுக்தன் தாம்பத்திய வாழ்வை மேற்கொள்ளவில்லை என்பதை உடைத்துச் சொல்லி ஏற்கனவே மனம் உடைந்து போயிருக்கும் மகனை இன்னும் சிதைக்க விரும்பாமல் அதை மறைமுகமாகச் சொல்லிக் கதறினார் கலாவதி.
ஆனால் அவர் மறைமுகமாக கூறிய விஷயத்தை அங்கேயிருந்த மற்றவர்களுக்கும் புரிந்து விட்டதால்,
“கலா!”என மனைவியை அதட்டினார் ஜெயராம்.
உடனே,”என்னை எதுக்கு அதட்டுறீங்க? என்னால் அமைதியாகவே இருக்க முடியலைங்க! அந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்கு மருமகளாக கூட்டிட்டு வராமல் இருந்து இருந்தால் கூட அவ இந்நேரம் அவங்க அப்பா, அம்மா கூடயாவது உயிரோட இருந்து இருப்பாள்! அவளை இங்கே கூட்டிட்டு வந்து நாமளே கொன்னுட்டோம்ன்னு எனக்கு மனசுக் கெடந்து தவிக்குதுங்க!”என்றவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் தன்னைக் குற்றம் சாட்டுவதைப் போன்று வெளிப்படையாகவே தெரியவும் அதைக் கேட்க முடியாமல் விருட்டென்று வீட்டிலிருந்து வெளியேறி விட்டான் சம்யுக்தன்.
அதைக் கண்டுத் திகைத்துப் போய்,”அவன் கூட நீயும் போடா!”என இளைய மகனை அனுப்பி விட்டு,
“நீ நம்மப் பிள்ளையைக் குறி வச்சுப் பேசுன மாதிரி இருக்கு கலா! அவனும் தானே அவனோட பொண்டாட்டியைக் காவு கொடுத்து இருக்கான்? அப்போ அவனுக்குத் தானே நம்மளை விட அதிக வலியும், வேதனையும் இருக்கும்? நீ அதைக் கூடப் புரிஞ்சிக்காமல் பேசிட்டியே!”என்று தன் மனைவியைக் கடிந்து கொண்டார் ஜெயராம்.
“நான் என்ன இல்லாததையாப் பேசிட்டேன்ங்க! சம்பந்தியம்மா ஹாஸ்பிடலில் பேசினதை நீங்களும் கேட்டீங்க தானே? நானும் அவங்க ரெண்டு பேரோட அந்தரங்க விஷயத்தில் தலையிடக் கூடாதுன்னு இருந்துட்டேன்! அவங்க இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்கும்னு குழந்தைப் பெத்துக்கிறதை தள்ளிப் போட்டு இருக்காங்கன்னு நான் கூடப் புத்திக் கெட்டுப் போய் ரெண்டு பேர் கிட்டேயும் அதைப் பத்தி எதுவுமே கேட்கலை! ஆனால் வசுவோட அம்மா சொன்னதுக்கு அப்பறம் தான் அதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியில் வாயே திறக்க முடியாமல் போயிடுச்சு! இப்போ அவளோட சாவு தற்கொலையான்னுக் கூடத் தெரியலை! அது கூடச் சேர்ந்துக் குழந்தைப் பெத்துக்கிற விஷயத்தில் அவளுக்கு ஏதோ உடம்பில் பிரச்சினை இருக்கு அப்படின்றப் பழியையும் சேர்த்து சுமந்துட்டுப் போயிருக்கிறாள்! இந்தப் பாவம் எல்லாம் நம்ம எல்லாரோட தலையிலும் தான் விடியப் போகுதுன்னு உங்களுக்கும் தெரியும் தானே? அப்பறம் நான் எப்படி என் மனப் புழுக்கத்தை வெளிக் காட்டாமல் இருக்க முடியும்? சொல்லுங்க!”என்று அவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கலாவதி.
அதில் தனக்கும் சில கருத்துகள் ஒத்துப் போனதால் அவரை மறுத்துப் பேசாமல் அமைதியாகி விட்டார்.
தன்னுடைய தமையனைப் பின்பற்றி நடந்து சென்று அவன் ஒரு பாலத்தின் கைப்பிடிச் சுவற்றில் தனது கரங்களை அழுத்திக் கொண்டு இறுக்கமான உடல்மொழியில் நின்றதைக் கவனித்ததும்,
“அண்ணா! நாம அண்ணிக்கு எந்த நல்லதும் பண்ணலைன்றக் குற்ற உணர்ச்சியில் இருந்ததால் அம்மா அப்படி பேசிட்டாங்க! நீ எதுவும் மனசில் வச்சுக்காதே!”என்று அவனது முதுகுக்குப் பின்னால் நின்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான் பிரதீபன்.
ஆனால் அதற்கு எவ்வித மறுமொழியும், மறுப்பு மொழியும் பேசாமல், தனது மனதில் இருந்த இறுக்கத்தின் அளவைப் பாலத்தின் கைப்பிடியில் காட்டினான் சம்யுக்தன்.
அவன் எதுவும் பேசாத போதும் கூட அவன் மீதிருந்த அக்கறையில்,”அண்ணா”என அவனது முதுகில் கரம் பதித்தான்.
உடனே திரும்பித் தனது தம்பியைக் கட்டிக் கொண்டுச் சிறு பையனைப் போல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான் சம்யுக்தன்.
அதில் திகைப்பு உண்டானாலும் கூடத் தமையனின் முதுகை நீவிக் கொடுத்து அவனது துக்கத்தைக் குறைக்க முயன்றான் பிரதீபன்.
“நான் தப்புப் பண்ணிட்டேன்டா! அவங்களோட மனசைக் கடைசி வரைக்கும் நான் புரிஞ்சிக்கவே டிரை பண்ணலை! அவங்களோட அப்பா, அம்மாவால் தான் அவங்களுக்குப் பிரச்சினை வருது! தலைவலி வருதுன்னு நினைச்சு அவங்க கிட்டே தள்ளி இருக்கச் சொன்னேன்! ஆனால் நான் அவங்களை விட்டு ரொம்ப தள்ளி இருந்து இருக்கேன்னு எனக்கு இப்போ தான் புரியுது! எல்லாம் என்னால் தான்!”என்று அவனிடம் கூறி வாய் விட்டு அழுகவும்,
“அண்ணா! நீ அதுக்கு என்னப் பண்ணுவ? அவங்களும், நீயும் ஒரே கேரக்டர்ன்னு நினைச்சுத் தானே நீ அப்படி இருந்து இருப்ப? ஆனால் அவங்க உன்னை மாதிரியான கேரக்டர் இல்லை போலிருக்கு! அதனால் தான் அவங்களால் உன் கூட வாழ முடியலைன்னு நினைக்கிறேன்! அதே மாதிரி அவங்க தவறி தான் விழுந்து இருக்காங்க! தற்கொலை எல்லாம் பண்ணிக்கலையே? அப்பறம் என்ன? இதில் நீ உன்னைக் குற்றவாளி ஆகப் பார்க்காதே! கொஞ்சம் அமைதியாகு அண்ணா!”என்று அவனுக்கு அறிவுறுத்த,
“இல்லடா! நான் தான் உண்மையான குற்றவாளி! நான் தான் அவங்களைக் கொன்னுட்டேன்!”என்று குலுங்கி அழுதவனைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பேசி சரி செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் பிரதீபன்.
தனது பெற்றோரின் முகத்தில் விழிக்கக் கூடத் தைரியம் இல்லாததால் தளர்ந்த நடையுடன் அறைக்குச் சென்று முடங்கி விட்டான் சம்யுக்தன்.
“வசுவுக்கு முப்பது கும்பிட்டு முடியிற வரைக்கும் நீ அவனைக் கொஞ்ச நேரம் கூடத் தனியாக விட்றாதேடா! அவன் கூடவே இரு. நைட்டும் அவன் ரூமிலேயே அவன் பக்கத்திலேயே தூங்கு”என்று பிரதீபனுக்கு வலியுறுத்தினார் ஜெயராம்.
“சரிப்பா. ஆனால் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அண்ணா என்கிட்ட என்னச் சொன்னார் தெரியுமா?”என்றவனோ,
சற்று முன்னர், தான் கேட்டத் தமையனின் வாக்குமூலத்தை தன் பெற்றோரிடம் ஒப்பவித்தான் பிரதீபன்.
- தொடரும்