STN 22
New member
அதற்குப் பிறகு வந்த நாளில் தாங்கள் அனைவரும் வரவேற்பறையில் உட்கார்ந்து காப்பிப் பருகிக் கொண்டிருந்த சமயத்தில், தன் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம்,”ரொம்ப நாள் கழிச்சு என்னோட என் ஸ்கூல் பெஸ்ட் ஃப்ரண்ட் சத்யாவோட நம்பரும், அட்ரஸூம் எனக்குக் கிடைச்சிருக்கு! அதனால் அவளை நேரில் போய்ப் பார்த்துப் பேச ஆசைப்பட்றேன்”என்று விஷயத்தை உரைத்தாள் பிரார்த்தனா.
அவளது தோழியைப் பற்றிச் சிறு விசாரணையை நடத்தி விட்டு,”சரி. போயிட்டு வா. எப்போ போகலாம்னு இருக்கிற?”எனக் கேட்டார் கலாவதி.
“தீபன் அவனோட ஃப்ரண்ட் சிஸ்டருக்கு மேரேஜ்ன்னு சொன்னான்லத்தை? அன்னைக்கு நானும் லீவ் போட்டுட்டுப் போகலாம்னு இருக்கேன்”என்றுரைத்தாள் பிரார்த்தனா.
“இதை எங்கிட்ட எங்க மறு வீட்டு விருந்துக்கு முன்னாடியே கேட்டாள். நான் தான் விருந்து முடிஞ்சிப் போயிட்டு வரச் சொன்னேன்”என்று தனது பெற்றோரிடம் தெரிவித்தான் சம்யுக்தன்.
”ஓஹோ! உன்னோட ஃப்ரண்ட் சிஸ்டருக்கு என்னைக்கு மேரேஜ் பிரதீபா?”என்று இளைய மகனிடம் வினவினார் ஜெயராம்.
உடனே,”இந்த வாரம் வியாழக்கிழமை தான்ப்பா”என்றிருக்க,
“நீ எதில் போற?”எனக் கேட்கவும்,
“அங்கே போக இரண்டு மணி நேரம் ஆகும்ப்பா. எங்க கிளாஸ்மேட்ஸ் எல்லாரும் வர்றதால் கார் பிடிச்சுத் தான் போவோம்”என்று பதிலளித்தான் பிரதீபன்.
“பொண்ணுங்களும் வருவாங்க தானேடா?”என்று அவனிடம் கேட்டார் கலாவதி.
“ஆமாம்மா. அவங்களும் வர்றாங்க”என்றுரைத்தான் பிரதீபன்.
“அப்போ உங்க அண்ணியையும் கூடக் கூட்டிட்டுப் போய் நீங்கப் போற வழியில் அவங்க ஃப்ரண்ட் வீட்டில் இறக்கி விட்ருங்க”என்றிருந்தான் சம்யுக்தன்.
“உங்க ஃப்ரண்ட்டோட ஊர் எது அண்ணி?”எனப் பிரார்த்தனாவிடம் வினவ,
“நீங்கப் போற வழியில் தான் அந்த ஊர் இருக்கு”என்று ஊரின் பெயரைச் சொல்லவும்,
“ஓஹ் அந்த ஊரா? அப்போ ஓகே அண்ணி. நீங்களும் எங்க கூடப் பாதி தூரம் வருவீங்கன்றதை நான் என் ஃப்ரண்ட்ஸ்கிட்டே சொல்லிட்றேன்”எனக் கூறி விட்டான் பிரதீபன்.
“ம்ஹ்ம்”என்றவளோ,
தனது கணவன் இல்லாத சமயத்தில்,”நான் என் ஃப்ரண்ட்டைப் பார்க்கப் போகலை! வசுமதியோட அப்பா, அம்மாவைப் பார்த்துப் பேசத் தான் போறேன்”என்று கூறித் தனது புகுந்த வீட்டு ஆட்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டாள் பிரார்த்தனா.
அதைக் கேட்டதும்,”என்ன சொல்றப் பிரனா? இப்போ தான் உன் புருஷன் உன் கூட நல்லா பேசவே ஆரம்பிச்சு இருக்கான்! நீ அன்னைக்கு எங்கிட்ட அட்ரஸ் கேட்கும் போதே கொடுக்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனால் நீ ரொம்ப பிடிவாதமாக இருந்ததால் தான் கொடுத்தேன். அதுக்கப்புறம் சம்யுக்தன் உன் கூட நல்லா நடந்துக்க ஆரம்பிச்சதைப் பார்த்ததும் நீ இதையெல்லாம் மறந்துடுவ, விட்ருவன்னு நினைச்சேன்! நீ என்னடான்னா இவ்வளவு பிடிவாதமாக இருக்கிற! நீ வசுவோட அப்பா, அம்மாவைப் பார்க்கப் போக கூடாது!”என்று கட்டளையிடும் தொனியில் அவளிடம் மொழிந்தார் கலாவதி.
“ஆமாம்மா. எதுக்கு இந்த விஷப் பரீட்சை எல்லாம்? நீ அங்கே போக வேண்டாம். அப்பறம் உன்னை ஏதாவது சொல்லிடுவாங்க! அதே மாதிரி நீ இப்படி செய்றது எல்லாம் உன் புருஷனுக்குத் தெரிஞ்சா அவன் உங்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சிட்டா என்னப் பண்றது? அதான் சொல்றோம்”என்று தன் பங்கிற்கு மருமகளுக்கு அறிவுரை வழங்கினார் ஜெயராம்.
ஆனால்,”அவருக்கு விஷயம் தெரிய வந்தாலும் இதையெல்லாம் நான் அவரோட நல்லதுக்காகத் தான் செஞ்சேன்னுப் புரிஞ்சுக்குவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தை, மாமா! அதனால் என் மேல் நம்பிக்கை வச்சு எனக்கு அனுமதி கொடுங்க”எனத் தனது முடிவில் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தாள் பிரார்த்தனா.
அதனால்,”நீ வேற எதுக்காகவும், எங்கே போகனும்னாலும் நாங்க உன்னைக் கேள்வியே கேட்காமல் அனுப்பி வைப்போம்! ஆனால் வசுமதியைப் பெத்தவங்களைப் பார்க்கத் தனியாகப் போறேன்னு அடம் பிடிக்கிற! உன் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு! எங்கப் பையனோட குற்ற உணர்வைச் சரி பண்ணனும்னு தான் நீ இதையெல்லாம் செய்ற! அதனால் நாங்க உனக்குப் பர்மிஷன் கொடுக்கிறோம். இதில் எந்தப் பிரச்சினை வந்தாலும் நாங்க உன் கூட இருக்கோம்ன்றதை மறந்துடாதே!”என்று அவளுக்குத் தைரியம் அளித்து, அனுமதியும் தந்து விட்டார்கள் அவளது மாமனார், மாமியார்.
இதையெல்லாம் அறியாமல் தனது இரண்டாம் மனைவியிடம் காதல் மொழியைக் கற்கத் தொடங்கி விட்டிருந்தான் சம்யுக்தன்.
ஆனாலும் அவனது மனதின் ஆழத்தில் இருக்கும் வசுமதிக்கு அவன் அநியாயம் செய்து விட்டதாக எண்ணும் குற்ற உணர்ச்சி அவனை அவ்வப்போது தொந்தரவு செய்து கொண்டு தான் இருந்தது.
அதை அவனால் மறக்கவே முடியவில்லை எனலாம்!
அதனாலேயே பிரார்த்தனாவை நெருங்குவதில் தயக்கம் இருந்தது அவனுக்கு.
அதை அறிந்து கொண்ட பின்னர் தான், தனது முடிவு சரியே என்று உறுதியாக எண்ணிக் கொண்டு வசுமதியின் பெற்றோரைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள் பிரார்த்தனா.
அதேபோல் அவள் தன்னுடைய கணவனையும், வேலையையும் கவனிக்கத் தவறவில்லை!
தனது கல்லூரியில் ஆசிரியர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த அறையில் உட்கார்ந்து இருந்த போது, தங்களது மறு வீட்டு விருந்து அன்று எடுத்திருந்த புகைப்படங்களைத் தனக்கு அனுப்பி வைத்திருந்த பிரதீபனுக்கு அழைத்து,
“இதையெல்லாம் அவருக்கும் அனுப்பிட்டியா?”என்றாள் பிரார்த்தனா.
“இல்லண்ணி. நீங்களே அண்ணனுக்கு அனுப்பி வச்சிருங்க”என்றுரைத்து விட்டான்.
அந்தப் புகைப்படங்களை அதற்குச் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இன்றி எடுத்து இருப்பதை தெரிந்தால் தமையனிடம் இருந்து தனக்கு மண்டகப்படி கிடைப்பது உறுதி என்றெண்ணித் தன் அண்ணிக்கு மட்டுமே அனுப்பி விட்டிருக்கிறான் பிரதீபன்.
உடனே புகைப்படங்களைத் தனது கணவனுக்கு அனுப்பி வைத்தாள் பிரார்த்தனா.
தனது வகுப்பில் மிகவும் மும்முரமாகப் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாலும், அந்தச் சமயங்களில் செல்பேசியை வகுப்பறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றும் கல்லூரி விதிமுறை போட்டிருந்ததால் அவற்றை உடனே பார்க்கும் கொடுப்பினைச் சம்யுக்தனுக்குக் கிடைக்கவில்லை.
அதனால் தன் பாடவேளை முடிந்ததும் ஓய்வறைக்கு வந்து தனது செல்பேசியை உயிர்ப்பித்தவனின் விழிகளில் தென்பட்டது மனைவி தனக்கு அனுப்பியிருந்த புலனச் செய்தி!
‘இது எல்லாமே நல்லா இருக்கு! உங்களுக்குப் பிடிச்சதை செலக்ட் செஞ்சி எனக்கு அனுப்புங்க'என்ற தகவலைப் படித்து விட்டுப் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்து அவற்றைப் பார்வையிட்டான் சம்யுக்தன்.
அதைப் பார்த்தவுடனேயே அவையெல்லாம் தங்களது மறு வீட்டு விருந்தில் எடுக்கப்பட்டவை என்றும், அதை எடுத்ததும் தனது தம்பி தான் என்பதையும் புரிந்து கொண்டு அவற்றை ஆராய்ந்து அதில் சில வசீகரித்த மற்றும் அழகாக இருந்தவற்றைத் தனியாக எடுத்து மனைவிக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்தப் பாடவேளையைப் பார்க்கச் சென்று விட,
அவன் அனுப்பியதில் மிகவும் அலசி, ஆராய்ந்து ஒரு தரமானப் புகைப்படத்தை தேர்வு செய்து அதைச் சட்டமிட முடிவெடுத்தாள் பிரார்த்தனா.
அன்று மாலை வேலை முடிந்து வந்ததுமே,”அதென்ன அன்னைக்கு எடுத்த எல்லா ஃபோட்டோஸையும் உன் அண்ணிக்கு மட்டும் அனுப்பி வச்சிருக்கிற? எனக்கும் அனுப்பி இருக்க வேண்டியது தானே?”என்று தம்பியைக் கடிந்து கொண்டான் சம்யுக்தன்.
அதில் முகம் சுருங்கிப் போய் விட்டான் பிரதீபன்.
உடனே,”அவன் அப்படி நடந்துக்கிறதுக்குக் காரணமே நீங்க தான்!”என்று அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தாள் பிரார்த்தனா.
அதில் மூக்கின் மேல் கோபம் வந்து விட,”நான் எப்படி காரணமாக இருப்பேன்? நீ என்ன உளர்ற?”என்று அவளிடம் உரக்க கேட்டான் கணவன்.
“சம்யு! மெதுவாகப் பேசு”என அவனை அடக்கினார் ஜெயராம்.
“சரிப்பா”என்று தனது மனைவியைக் கேள்வியாகப் பார்க்கவும்,
“ஆமாம். இப்படி எதுக்கு எடுத்தாலும் அவனை அதட்டி, மிரட்டியே பேசிட்டு இருந்தால் அப்பறம் எப்படி உங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணுவான்? அதான், உங்ககிட்ட சாதாரணமாகப் பேசவே ரொம்ப தயங்குறான்”எனப் போட்டுடைத்து விட்டாள் பிரார்த்தனா.
அதைக் கேட்ட மற்றவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதேசமயம், கொண்டாட்டமாகவும் இருந்தது.
ஏனெனில் சம்யுக்தனின் அழுத்தம் நிறைந்த பேச்சைக் கேட்கையில் சில நேரங்களில் அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும்! ஆனாலும் அவனுக்காகச் சகித்துக் கொண்டிருந்தார்கள் எனலாம்.
அதனால் தான் இப்போது அவனது தவறைச் சுட்டிக் காட்டியப் பிரார்த்தனாவைக் கண்டுப் பிரம்மித்துப் போயினர் ஜெயராம், கலாவதி மற்றும் பிரதீபன்.
“என்ன சொல்ற?”என்றவனின் முகம் கருத்துப் போய் விட்டது.
“நீங்க அழுத்தக்காரர்ன்றதை நான் ஒத்துக்கிறேன். இது தான் உங்களோட குணம்ன்றதையும் நான் மதிக்கிறேன்! ஆனால் இதனால் உங்களைச் சேர்ந்தவங்கப் பாதிக்கப்பட்றாங்கன்னும் போது அவங்களுக்காக யோசிச்சு இதைக் கொஞ்சமாக மாத்திக்கலாமே?”என்று அவனிடம் கேட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.
அதில் இருந்த உண்மை சுட்டதால்,”சரி. மாத்திக்கிறேன். சாரி தீபன்”என்று தம்பியிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுத் தங்கள் அறைக்குள் போனவனைப் பின் தொடர்ந்து சென்று,
“சாரி!” என்று தானும் அவனிடம் மன்னிப்புக் கோர,
அவளை வலி நிறைந்த விழிகளுடன் ஏறிட்டு,“நான் உங்கிட்ட ஒன்னுக் கேட்கலாமா?”என்றான் சம்யுக்தன்.
“கேளுங்க”என அவனுக்கு அனுமதி அளித்தாள் மனைவி.
“என்னோட இந்த அழுத்தம் தான் உன்னை முதல் முதல்ல ஈர்த்துச்சுன்னும், இதனால் தான் உனக்கு என்னைப் பிடிக்கும்னு சொன்னியே? அப்பறம் எதுக்கு ஹாலில் அப்படியெல்லாம் பேசுன?”எனக் கேட்கவும்,
“நான் இப்பவும் சொல்றேன். நான் உங்களை முதல் முதல்லப் பார்த்தப்போ உங்களோட அழுத்தம் தான் எனக்குப் பிடிச்சது. இப்பவும் பிடிச்சிருக்கு! அது எப்பவும் மாறாது! ஆனால் அது எனக்கு மட்டும் தான் பிடிச்சிருக்கு! உங்களோட குடும்பத்துக்கு அது பிடிக்காததால் வேற வழியில்லாமல் உங்களுக்காக அதை இவ்வளவு வருஷங்களாகச் சகிச்சிட்டு இருந்து இருக்காங்கன்னு நான் உங்களைப் பேசும் போது அவங்க முகத்தில் தெரிந்த திருப்தியான உணர்வே சொல்லுச்சு!”என்றுரைத்து விட,
அதைக் கேட்டுத் தளர்ந்து போய் மெத்தையில் அமர்ந்து விட்டிருந்தான் சம்யுக்தன்.
“அவங்க ரூமுக்குப் போய் ரொம்ப நேரமாச்சே? சண்டைப் போட்டுட்டு இருப்பாங்களோ?”என்று பரிதவிப்புடன் வினவினார் கலாவதி.
“எல்லாம் என்னால் தான்”என்று தன்னை நொந்து கொண்டான் பிரதீபன்.
“இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசிட்டு இருக்கீங்க? அதையெல்லாம் நம்ம மருமகப் பார்த்துக்குவா! நீங்க இப்படி எதையும் யோசிக்காமல் இருங்க”என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தினார் ஜெயராம்.
“நான் இவ்வளவு கடுமையாகவா நடந்துக்கிறேன்?”என்றவனிடம்,
“அப்படியெல்லாம் இல்லைங்க. நம்மளோட குணம் எல்லாருக்கும் பிடிக்கும்னு இல்லை தானே? அவங்களு உங்களோட மத்த நல்ல குணங்கள் பிடிச்சு இருக்கலாம்! அதனால் தான் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்காமல் விட்டுட்டாங்க”என்றுரைத்து அவனைச் சமாதானப்படுத்தி இரவு உணவை உண்ண அழைத்து வந்து விட்டிருந்தாள் பிரார்த்தனா.
சாப்பாட்டு மேசைக்கு வந்ததும் தனது பெற்றோர் மற்றும் தம்பியிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் சம்யுக்தன்.
அவர்களோ,”பரவாயில்லை, விடு!” என்று கூறி விட்டனர்.
அதற்குப் பிறகு அனைவரும் இரவு உணவை உண்டு முடித்து உறங்கி விடவும், மறுநாள் தனது கணவனை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டுத் தன் மாமனார் மற்றும் மாமியாரிடம் சொல்லிக் கொண்டுத் தன் கொழுந்தன் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து கார்ப் பயணத்தை மேற்கொண்டாள் பிரார்த்தனா.
- தொடரும்