தன்னுடைய படிப்பை முடித்து விட்டுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து
கொண்டிருந்தான் சம்யுக்தன்.
அவன் அந்த வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி விட்டதால் அவனுக்குத் திருமணம்
செய்து வைக்கும் எண்ணம் உதித்தது அவனது பெற்றோரான ஜெயராம் மற்றும்
கலாவதிக்கு.
அதை மகனிடமும் தெரிவித்து அவனது விருப்பத்தைக் கேட்டனர்.
அதற்குச் சம்யுக்தனும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ஆனால்,”உடனே எல்லாம் பொண்ணைப் பார்த்துக் கட்டி வைக்காதீங்க! என்னோட
சுபாவத்துக்கு ஏத்த மாதிரியான பொண்ணாகப் பாருங்க. அப்போ தான், எங்களால்
நிம்மதியாக வாழ முடியும்”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டு,
”அதே சமயம் நம்ம சொந்தக்காரப் பொண்ணாக இருந்தால் இன்னும் நல்லா
இருக்கும்”என்று அவர்களிடம் தனது கருத்தை தெரிவித்தான் சம்யுக்தன்.
அவற்றை நன்றாக மனதில் ஏற்றிக் கொண்டு மகனுக்குத் தங்களது சொந்தத்தில் பெண்
பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால் நாட்கள் ஆக, ஆக அவர்கள் பெண்ணைத் தேடித், தேடி சோர்ந்து போய் விட,
அதைக் கண்டு,”அண்ணனோட குணத்துக்கு ஏத்தப் பொண்ணைத் தேட்றது அவ்வளவு
சுலபம் இல்லை”என்று தன் பங்கிற்கு உரைத்தான் பிரதீபன்.
அவன் அப்போது தனது சிவில் இன்ஜினியரிங் படிப்பில் மூன்றாவது வருடத்
தொடக்கத்தில் இருந்தான்.
பிறந்தது முதல் இப்போது வரைத் தன்னுடைய தமையனின் அமைதியான
சுபாவத்தையும், அழுத்தத்தையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான் பிரதீபன்.
அதனாலேயே அவனுக்குச் சம்யுக்தனைப் பற்றி நன்றாகத் தெரியுமே!
ஆகவே, அவனுக்குத் திருமணத்திற்கு வரன் கிடைப்பது குதிரைக் கொம்பாகத் தான்
இருக்கும் என்று அப்போதே கணித்து விட்டிருந்தான் பிரதீபன்.
அதனால் தான், தன்னுடைய பெற்றோரிடம் தனது அண்ணனைப் புகழ்ந்து பேசுவது
போல் கிண்டல் செய்து பேசினான்.
அதில் இருவரின் முகங்களும் சுனங்கிப் போய் விட்டது.
அதைக் கண்டதும் தனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்டு,”நான் உங்க மனசுக்
கஷ்டப்படுத்துறா மாதிரி பேசிட்டேன். சாரிப்பா, சாரிம்மா”என்று உடனே தன்
பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் பிரதீபன்.
“ப்ச். விடு. அதான், அவன் பொறுமையாகப் பாருங்கன்னு சொல்லி இருக்கான் தானே?
அப்பறம் என்ன? நமக்கு இன்னும் டைம் இருக்கு”என்றுரைத்தார் ஜெயராம்.
“எனக்குத் தூரத்து சொந்தத்தில் அண்ணன் உறவில் ஒருத்தர் நம்மப் பக்கத்து ஊரில்
இருக்காங்க. அவருக்கு ஒரு பொண்ணு இருக்காள். அவ பேரு வசுமதி. அவங்க கிட்ட
கேட்டுப் பார்ப்போமா?”என அவரிடம் வினவினார் கலாவதி.
“அப்படியா? நீ இதை ஏன் முதல்லயே சொல்லலை? நாம கண்டிப்பாக அவங்க கிட்ட
பேசிப் பார்க்கலாம்”
“அவங்க நம்மளோட தூரத்து சொந்தம்ன்னு சொல்றீங்க. ஆனால் அவங்க யாருமே இது
வரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்ததே இல்லையே? ஏன்னா, அந்த வசுமதின்றப் பேரை
இப்போ நீங்க சொல்லித் தான் எங்களுக்கே தெரியுது. அப்பறம் எப்படி அவங்க
பொண்ணை அண்ணாவுக்குக் கல்யாணம் செய்து வைக்க சம்மதிப்பாங்கம்மா?”எனத் தன்
சந்தேகத்தை தாயிடம் கேட்டான் பிரதீபன்.
“ம்ஹ்ம். அவங்க நம்ம வீட்டுக்கு இன்னைக்கு வரைக்கும் வந்ததே இல்லை. அதுக்குக்
காரணம், அவங்களோட பொருளாதார நிலைமை தான்! அவங்க நம்மளை விடக்
கொஞ்சம் பொருளாதார நிலையில் குறைவாக இருக்காங்க. அதனால் தான், நான்
அவங்களை ஞாபகம் வச்சு நம்ம வீட்டு ஃபங்க்ஷன்ஸூக்கு எப்போ கூப்பிட்டாலும்
அவங்க வரவே மாட்டாங்க. ஆனால் நான் அவங்களைக் கூப்பிட்றதை மட்டும் விடவே
இல்லை”என்று பதிலளித்தார் கலாவதி.
“அதுவா விஷயம்? நாம அவங்களை நேரில் போய்ப் பார்த்துப் பேசுற விதத்தில்
பேசினால் அவங்கப் பொண்ணை நம்மப் பையனுக்குக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்க
வாய்ப்பு இருக்கு”என்று தனது அனுமானத்தைக் கூறினார் ஜெயராம்.
“நீங்க அவங்களை எப்படியோ பேசி சம்மதிக்க வச்சுடுவீங்க. அது ஓகே. ஆனால்
சம்யுக்தன் அண்ணாவுக்கு ஏத்தப் பொண்டாட்டியாக அவங்க இருப்பாங்களான்றது
எப்படி சாத்தியம்?”என்று தன்னுடைய தமையனின் எதிர்பார்ப்புகளைப் பற்றி
அவர்களுக்கு ஞாபகப்படுத்தினான் பிரதீபன்.
அதைக் கேட்டதும் பெருமூச்சொன்றை வெளிப்படுத்தி விட்டு,”கடவுள் மேலே பாரத்தைப்
போட்டுட்டுப் போவோம். அந்தப் பொண்ணோட சுபாவம், சம்யுக்தனோட சுபாவம் கூட
ஒத்துப் போகும்ன்னு நம்புவோம்!”என்று தீர்க்கமாக கூறி விட்டார் கலாவதி.
சில நாட்கள் கழித்து, சம்யுக்தனுக்குப் பெண் பார்க்கும் விஷயமாக வசுமதியின் வீட்டிற்குச்
சென்று வருவதைப் பற்றிய தகவலை அவனிடம் சொல்லாமல்,”நம்மச் சொந்தத்தில்
நாளைக்கு ஒரு கல்யாணம் இருக்குப்பா. பக்கத்து ஊரு தான். நாங்க ரெண்டு பேரும்
போயிட்டு ராத்திரிக்குள்ளே வந்துடுவோம். நீயும், தம்பியும் கிளம்புனதுக்கு அப்பறம்
நாங்க கிளம்பிப் போயிட்டு வந்துட்றோம்”என்றனர் அவனது பெற்றோர்.
அவனோ,“சரி. போயிட்டு வாங்க”என்று கூறி விட, அவன் மேலதிக விபரங்கள் எதையும்
கேட்கவில்லை என்பதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
அதனால் தங்களது சின்ன மகனிடம்,”நல்லவேளை அதைப் பத்தி உங்க அண்ணன்
மேற்படி விஷயம் எதுவும் கேட்காமல் விட்டுட்டான். அதுவே எங்களுக்குப் போதும்.
நாங்க நாளைக்குக் கால் டாக்ஸியில் தான் போகப் போறோம். அவங்க வீட்டுக்குப்
போயிட்டு உனக்கு மெசேஜ் பண்றோம். அதை எக்காரணத்தைக் கொண்டும் அவன்
கிட்ட தெரியப்படுத்திடாதே!”என்று சொல்லி அறிவுறுத்தினர் ஜெயராம் மற்றும் கலாவதி.
“சரி. நீங்க ஜாக்கிரதையாகப் போயிட்டு வந்துடுங்க. ஆனால் எனக்கு அப்பப்போ நீங்க
எங்கே இருக்கீங்கன்னு மட்டும் மெசேஜ் பண்ண மறந்துடாதீங்க”என்று அவர்களிடம்
தெரிவித்தான் பிரதீபன்.
தங்கள் நால்வருக்குமே அடுத்த நாள் வெளியே செல்லும் வேலை இருந்ததால் இரவு
உணவை உண்டு முடித்து சில நிமிடங்களில் உறங்கச் சென்று விட்டார்கள்.
மறுநாள் காலையில் சம்யுக்தனும், பிரதீபனும் எழுந்து குளித்து விட்டு வந்ததும்,
அவர்களுக்கு அடுத்தபடியாகத் தாங்களும் தயாராகினர் அவர்களது பெற்றோர்.
“உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் மதியச் சாப்பாடு செஞ்சி டிபன் பாக்ஸில் வச்சு
இருக்கேன். நாங்க அங்கேயே சாப்பிட்டு வந்துடுவோம். நைட்டுக்கு நானே எதாவது
சிம்பிளாக சமைச்சிட்றேன்”என்று தங்கள் மகன்களிடம் உரைத்து விட்டு அனைவருக்கும்
காலையுணவைப் பரிமாறினார் கலாவதி.
அதற்குச் சம்மதித்து உணவுண்டு விட்டுச் சம்யுக்தன் தனது வேலைக்கும், பிரதீபன் தான்
படிக்கும் கல்லூரிக்கும் சென்றதும்,
“என்னங்க! கால் டாக்ஸிக்கு ஃபோன் பண்ணுங்க”என்ற மனைவியிடம்,
“இதோ கால் பண்றேன்ம்மா”என்றுரைத்து விட்டுத், தாங்கள் இரண்டு நாட்கள்
முன்பாகவே முன்பதிவு செய்திருந்த வாடகை காரின் ஓட்டுநருக்கு அழைத்துப் பேசி விட்டு
வந்த ஜெயராம்,
“கொஞ்ச நேரத்தில் வந்துடுவார். நாம வர்றதை அவங்களுக்குச்
சொல்லிட்டியாம்மா?”என்க,
“இல்லைங்க. அப்பறம் அவங்க ஊருக்குப் போயிட்டோம்னு ஏதாவது காரணம்
சொல்லுவாங்க. அதனால் தான் சொல்லாமல் போவோம்னு முடிவு
பண்ணினேன்”என்றுரைத்தார் கலாவதி.
அதைக் கேட்டு அதிர்ந்த ஜெயராமோ,”இப்படி இருக்கிறவங்க எப்படிம்மா நம்மப்
பையனுக்கு…”என்றவரை இடைமறித்து,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ங்க. நீங்க இனிமேல் இப்படி பேசாதீங்க! அப்பறம்
நாம போற விஷயம் கைக் கூடாமல் போயிடப் போகுது!”என்று கூறி அவரைக்
கையமர்த்தும் போதே வண்டி வந்து விட்டதால் அதில் ஏறி அமர்ந்து விட்டு அதை தனது
இளைய மகனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தார் கலாவதி.
அதே நேரத்தில் தனக்கு இரண்டாவது பாடவேளைக்காக வகுப்பறைக்குச் செல்ல
இன்னும் நேரம் இருந்ததால் தன்னுடைய செல்பசியில் தந்தைக்கு அழைத்தான்
சம்யுக்தன்.
அதைக் கவனித்து,”மூத்தவன் கால் பண்றான்ம்மா”எனத் தன் துணைவியிடம் உரைக்க,
“எடுத்துப் பேசுங்க. பஸ் சத்தம் கேட்கலைன்னு சொன்னா கால் மணி நேரம் நிறுத்தி
இருக்காங்கன்னு சொல்லுங்க. அவன் புரிஞ்சிப்பான்”என்று அவருக்கு அறிவுறுத்தினார்
கலாவதி.
“சரிம்மா”என்ற ஜெயராமும்,
அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்ததும்,”அப்பா! நீங்க ரெண்டு பேரும் பஸ்
ஏறிட்டீங்களா?”என்று விசாரித்தான் சம்யுக்தன்.
“ஏறிட்டோம்டா”என்றார்.
“அப்போ சரி. அங்கே போய் இறங்க எவ்வளவு நேரமாகும்?”
“ஒரு மணி நேரம் தான் ஆகும்டா”எனப் பதிலளித்தார் ஜெயராம்.
“ம்ம். அங்கே போய் இறங்கிட்டு எனக்குக் கால் பண்ணி சொல்லுங்க”என்றதும்,
“சரிடா”எனக் கூறி அழைப்பை வைத்து விட்டு மகன் பேசியதை மனைவியிடம் பகிர்ந்து
கொள்ள,
“ஹப்பாடா. அவனுக்கு நம்ம மேல் சந்தேகம் வந்துடுச்சோன்னு நான் பயந்துட்டேன்.
இப்போ தான் நிம்மதியாக இருக்கு”என்றுரைத்தார் கலாவதி.
“சரிம்மா. அவங்களைப் பார்த்து என்னப் பேசனும்னு முடிவு பண்ணிட்டியா?”எனக்
கேட்டார் ஜெயராம்.
“நைட் யோசிச்சேன்ங்க. இனிமேல் அங்கே போய் தான் சூழ்நிலையைப் பார்த்துட்டுப்
பேச முடியும்”என்றவுடன்,
“ம்ஹ்ம். இந்த இடமாவது தகைஞ்சிடனும்”எனத் தங்களது மனதிற்குள் தெய்வத்தைப்
பிரார்த்தித்துக் கொண்டுப் பிராயணத்தைத் தொடர்ந்தனர் இருவரும்.
சரியாக ஒரு மணி நேரம் கடந்ததும் தங்களது இலக்கை அடைந்து,”இப்போ நான் ஒரு
அட்ரஸ் சொல்றேன். அங்கே போ தம்பி”என்று தங்களது வசுமதியின் விலாசத்தைச்
சொல்லவும் காரை இயக்கி அடுத்த சில நிமிடங்களில் அந்த வீட்டின் முன்பு நிறுத்தி
விட்டார் அந்த ஓட்டுநர்.
- தொடரும்