என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 23
அடுத்த நாள் அவள் தூங்கி எழுந்த போது, அகிலன் சோபாவில் அமர்ந்து கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே போய் என்ன செய்வது…? யாருடன் கதைப்பது…? யார் இருப்பார்கள்…? எதுவும் தெரியாததால் அவன் வெளியே செல்ல சங்கடப்பட்டு, அறைக்குள்ளேயே இருந்தான். சிறிது நேரத்தின் பின் கண் விழித்த சௌமி அவனை பார்க்க, அவனும் அவளையே தான் பார்த்தான். இரவுடையில் அன்றலர்ந்த செந்தாமரை போல் மலர்ச்சியுடன் இருந்த முகத்துடன், முடிக்கற்றைகள் அங்கும் இங்கும் கிடக்க அழகோவியமாக காட்சியளித்தவள், அவனின் கண்களையும் மனதையும் குளிர வைத்தாள்.
அவனின் அந்தப் பார்வையில் முகம் சிவக்க, கலைந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்து விட்டு, கட்டிலிருந்து எழும்பியவள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு “வெளியில வாங்க… டீ குடிக்கலாம்” என அவளை அழைத்தாள்.
அவனும் ‘சரி’ என்பது போல் தலையை அசைத்தவாறு எழுந்து அவளைப் பின் தொடர்ந்து வெளியே சென்றான்.
அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்த ரவீந்திரன், வெளியே வந்த அகிலனைக் கண்டதும் “குட் மோர்னிங் அகிலன்” என்றார்.
அவனும் “குட் மோர்னிங் அங்கிள்” என்றான்.
“பேப்பர் வாசிக்கிறீரா..?” எனக் கேட்டார்.
அவன் “ஓம் அங்கிள்” எனவும் அவர், அவனிடம் பத்திரிகையை கொடுத்தார்.
“பெரியப்பா டீ குடிச்சிட்டீங்களா…?” என பெரிய தந்தையிடம் கேட்ட சௌமிகா, அகிலனிடம் தேநீர் கோப்பையை நீட்டினாள்.
“ஓம் சௌமி நான் குடிச்சிட்டேன்” என்றார் அவர்.
அவள் “சரி பெரியப்பா கதையுங்க…” என்றுவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.
கமலாவும் சகுந்தலாவும் காலை உணவு தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சிவநாதனின் தங்கை குடும்பத்துடன் சேர்ந்து சிவநாதனும் விக்ரமும் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எடுத்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்.
காலை உணவை முடித்துக் கொண்டு அனைவரும் கோவிலுக்கு கிளம்பிச் சென்றனர். அங்கே பத்மாவும் வந்திருந்தார். பிள்ளையாருக்கு எல்லோருமாகச் சேர்ந்தே பொங்கல் வைத்து அபிசேகங்களில் கலந்து கொண்டனர். பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக வந்த அகிலன் கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான். அவனை முன்னிறுத்தி அவர்கள் செய்ய சொன்னதை அவன் செய்தான். சௌமிகாவும் அழகிய ஊதா கலர் பட்டு சேலை அணிந்து, அவனுக்கருகில் அழகிய பொம்மை போல் நின்றாள். கோவிலுக்கு வந்தவர்கள், அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து வியந்து, அவர்களின் பெற்றவர்களிடம் அதைப் பற்றி சிலாகிக்க தவறவில்லை. சௌமியின் பெற்றோருக்கும் பத்மாவிற்குமே உள்ளம் பூரித்து போய்விட்டது.
அகிலன் அமைதியாகவும் அதிகம் பேசாமலும் இருப்பதை பார்த்த சௌமியின் பெற்றோரும் அதுதான் அவனின் இயல்பு என எண்ணினர், இருந்தாலும் கமலா தனது தமக்கையிடம் இதைப் பற்றி கேட்ட போது, ‘அவன் அமைதியான சுபாவம் உள்ளவன் என்றும் புதியவர்களுடன் தயக்கமில்லாமல் கதைத்ததுப் பழக சில நாட்கள் எடுக்கும்’ எனவும் அவரிடம் கூறினார். சௌமியிடம் கூட அவன் எதுவும் கதைக்காமல் இருப்பதை அவதானித்தவருக்கு மனதில் சிறு யோசனை ஏற்படாமல் இல்லை. சௌமி கூட அவனுடன் தேவைக்காக மட்டுமே கதைப்பதில் அவருக்கு கவலைதான். ஆனால் அவளின் முகத்தில் தெரிகிற புதுப்பொலிவில் அவர் மனநிறைவுடன் இருக்கிறார்.
பூஜைகள் எல்லாம் முடிவடைந்ததும் எல்லோரும் நேராக அகிலன் வீட்டுக்குச் சென்றனர்.
அன்றிரவே அகிலன் சௌமியையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் செல்வதாக ஏற்பாடு. இதில் மற்றவர்களுக்கு உடன் பாடில்லாவிட்டாலும், அவனை மறுத்துச் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான் என்பதில் அவர்கள் அமைதியாக இருந்தனர். அங்கே மதிய உணவை முடித்துக் கொண்டு சௌமியின் பெற்றோர்களும் உறவினர்களும், இரவு அவர்களை பயணம் அனுப்ப வருவதாக கூறிச் சென்றனர்.
அவர்கள் சென்றதன் பின்னர் அகிலன் தனது அறைக்குச் சென்று விட்டான்.
சௌமிகா, பத்மாவுடன் இருந்து கூடமாட உதவிகளைச் செய்தாள். பத்மாவும் மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் காணப்படும் விலகலை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார். இது எதையும் காட்டிக் கொள்ளாமல் வழமை போல் எந்நேரமும் இதழ்களில் புன் சிரிப்பையே தவழ விட்டுக் கொண்டிருக்கும் சௌமியை அவர் கவனிக்காமல் இல்லை. இந்தச் சிறு பெண்ணுக்கு எவ்வளவு புத்திசாலித்தனம் என அவர் வியக்காமலும் இல்லை. மகனிடம் ஏற்கனவே எல்லாம் பேசிவிட்டார். அவன், அவர் சொல் கேட்பதாக இல்லை. அவன் தானாக உணர்ந்து திருந்தினால் ஒழிய தான் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் விளங்கிக் கொண்டார். எனவே சௌமியிடம் “சௌமியம்மா.. உங்கட வீட்டில அகில் எல்லோரோடையும் கதைத்தானா…? அங்க எப்படி இருந்தான்…?” என விசாரித்தார்.
அவரைப் பார்த்து ஒரு விதமாக சிரித்த சௌமி “ம்…, வழமை மாதிரித் தான் ஆண்டி” என்றாள்.
“என்ன சௌமியம்மா…? என்ன நடந்தது…?” என பதட்டத்துடன் விசாரித்தார். அங்கே நடந்தவற்றை அவள் கூறினாள்.
அதைக் கேட்டவர் “இவன் ஏன் தான் இப்பிடி இருக்கிறானோ தெரியேல்லையே…” என்றார் கவலையுடன்.
“விடுங்கோ ஆண்டி.. இதைப்பற்றி எல்லாம் யோசிக்காதீங்க… அவரைப் பற்றித் தான் உங்களுக்கு தெரியுமே… அவருக்கு என்னில ஏதோ கோபம், அது தான் இப்படி எல்லாம் நடந்து கொள்ளுறார்… எவ்வளவு நாளைக்கு தான் என்று பார்ப்பம்” என அவரைத் தேற்றினாள் சௌமி.
“என்ன பொல்லாத கோபம்… அவனுக்கு நல்லது தானே செய்திருக்கிறம்…, இவனைப்பற்றி உன்ர அம்மாப்பா என்ன நினைப்பினம்…? பக்கத்துல எண்டாலும் பரவாயில்லை, அங்க நீ கஸ்ரப்படுவியோ எண்டு கவலைப்படுவினம் தானே…, இத்தனை வயசாகியும் ஒரு இடத்த போனால் எப்படி நடந்து கொள்ளோணும் எண்டு தெரியாதா இவனுக்கு…? இவனால சகுந்தலாவுக்கும் சங்கடம் தானே…?, இவனின்ர நடவடிக்கை ஒண்டுமே எனக்கு விளங்கேல்ல…” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த,
“நீங்கள் ஒண்டும் யோசிக்காதையுங்க ஆண்டி…, எல்லாம் சரி வரும்…, நான் சொன்னதுகளை உங்கட மகனிட்ட கேக்காதையுங்க…, அதுக்கும் என்னில தான் குறை சொல்லுவார்” என்றாள் அவள்.
“ம்… அவன் ஏதோ ஓர் எண்ணத்துல தான் இப்படி செய்யுறான்…, உனக்கு அவனை நல்லாத் தெரியும் தானேம்மா.., அவன் சரியான பிடிவாதக்காரன்… நீ தான் அவனை அனுசரிச்சுப் போகவேணுமம்மா…” என்றார் பத்மா.
“ஓம் ஆண்டி.. நீங்கள் இதை எனக்கு சொல்ல வேணுமா…? நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுவன் நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காமல் நிம்மதியாக இருங்கோ” என்றாள்.
“கொஞ்ச நாட்கள் நீங்கள் இரண்டு பேரும் தனியா இருந்தால் நல்லம் எண்டு தான் நான் அங்க வரேல்ல… நீ சமாளிப்பாய் தானேம்மா…?” எனக் கேட்டார் பத்மா.
இரண்டு பேரும் ஆளுக்கொரு திசையில தனியா தான இருக்க போறம் என நினைத்தவள் “நான் சமாளிப்பன் ஆண்டி, ஆனால் நீங்களும் வந்தால் நல்லம்” என்றாள்.
“நான் அங்க வாறது உன்ர கையில தான் இருக்கு…, நீ கெதியா ஒரு நல்ல செய்தி சொல்லு… அப்ப நான் அங்க ஓடி வந்திடுவன்” என்றார் அவர் கண்களில் கனவுடன்.
‘என்னோட சிரிச்சு கதைக்குறதுக்கே வழியில்லை… இதில எங்க நல்ல செய்தி சொல்லுறது’ என்ற எண்ணத்துடன் “என்ர கையில மட்டுமல்ல உங்கட மகனின்ர கையிலையும் தான் இருக்கு…” என்றாள் அவள்.
அவளை உணர்ந்தவராக “இவ்வளவு நாளும் எனக்கு, என்ர மகனைப் பற்றி அவ்வளவு பெருமையும் கர்வமும் சௌமியம்மா…, அவன் பிறந்தபோது அவ்வளவு வடிவு… அதில எனக்கும் அவருக்கும் அத்தனை சந்தோஷம். ஆறு மாதத்திலேயே அவன் சரியான சுறுசுறுப்பும் கெட்டித்தனமும் … நாங்க இரண்டு பேரும் அவனையே ரசிச்சுக் கொண்டிருப்பம், நேரம் போறதே தெரியாது. நடக்கத் தொடங்கியதும் கதிரையில ஏறுறதும் மேசையில ஏறுறதுமாக இருப்பான். அவன் நித்திரையாக இருக்கிறபோது ஒரு சோறும் கறியும் வைச்சிட்டு அவனோடையே எந்த நேரமும் இருப்பன்… படிப்பிலையும் அவன் முன்னுக்குத் தான். தகப்பன் போன பிறகு, அந்த வயசிலையும் என்ர நிலை அறிந்து அதுக்கேற்ப நடந்தவன்… குணத்திலும் அவன் தங்கமான பிள்ளை, எல்லோரோடையும் மரியாதையாகப் பழகுவான். உனக்கும் அவனைப் பற்றி நல்லாத் தெரியும் தானே… அவனுக்கு உன்னையும் பிடிக்கும் ஏதோ இப்ப கொஞ்சம் அவன்ர மனசுக்கு ஏதோ பிடிக்கல்ல… அதுதான் இப்படி இருக்கிறான்… எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. நீ ஒண்டுக்கும் யோசிக்காதேம்மா…” என்றார் அவர்.
அவளுக்கும் அது எல்லாம் தெரியும் தானே. எனவே “ஓம் ஆண்டி..” என்றவளுடன் மேலும் சற்று நேரம் அவர் கதைத்துக் கொண்டிருக்க, அகிலனையும் சௌமியையும் வழியனுப்ப சௌமியின் பெற்றோரும் சகோதரனும் கமலாவும் ரவீந்திரனும் வந்தனர்.
பத்மா அவர்களை வரவேற்று, கதைத்து, அனைவருக்கும் இரவு உணவை பரிமாறினார்.
யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்துக்கு செல்வதற்காக அகிலன் ஓர் வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தான். அது வந்ததும் அகிலன் தனது பிரயாணப் பையை அதற்குள் வைக்கவும் பத்மா, சௌமியின் பைகளையும் அதற்குள் வைக்கும் படி கூறவும், அவன் அவற்றையும் எடுத்துக் கொண்டு போய் வைத்தான்.
சௌமியின் பெற்றோருக்கு மகளை பிரியும் வேதனை. படிப்பதற்காக கொழும்பில் இருந்தபோதும் பிரிவுத் துயர் இருந்தது தான். ஆனால் இப்போது மணமாகி கணவருடன் அங்கேயே நிரந்தரமாக வாழ போகிறாள் என்பதை எண்ணுகையில் அது அவர்களுக்கு துயரத்தை கொடுத்தது.
மகளை கட்டியணைத்து முத்தமிட்டனர்.
தாயுடன் கதைத்துக் கொண்டிருந்த அகிலனுக்கு தாயை தனியே விட்டுச் செல்வதில் உடன்பாடில்லை தான். முதல் முறை விட்டுச் செல்லும் போது, திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு சில நாட்களுக்குத் தானே என நினைத்து தன்னை தேற்றி கொண்டவனுக்கு, தாயின் தற்போதைய இந்த முடி விரும்பத்தகுந்ததாக இல்லை. தாய் ஒரு சில மாதங்களுக்கு தான் இங்கு இருப்பன் பிறகு அங்கே வந்துவிடுவன் என கூறி அவனை சம்மதிக்க வைத்திருந்தார்.
அகிலன், தாயுடன் கதைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
அகிலனிடம் வந்த சிவநாதன், அவன் கையை தனது இரு கரங்களாலும் பற்றி “தம்பி சௌமியை பார்த்துக் கொள்ளுங்கோ…” என்றார் அவரின் மனத் தாங்கல்களை மறந்து.
அவரின் மனநிலை புரிந்தவனாக “ஓம் அங்கிள் நான் பார்த்துக் கொள்ளுவன்…” எனக் கூறினான்.
அகிலனின் கையைப் பிடித்து, தனது தந்தை ஏதோ கதைத்துக் கொண்டு இருப்பதை கண்டு, அவர்கள் என்ன கதைக்கிறார்களோ என எண்ணியவாறு, அவர்களருகே வந்தாள் சௌமி.
அவள் வரவும் அவளைப் பார்த்த அகிலன், தனது கைக்கடிகாரத்தையும் பார்த்தான். அதை கண்டவள் “அப்பா நாங்கள் போட்டுவாறம் …” என்றவாறு அவரை அணைத்தாள். அவரும் மகளை அணைத்து, உச்சியில் முத்தமிட்டு, “சரியம்மா… கவனமாகப் போட்டு வாங்கோ…” என இருவரிடமும் கூறினார். அனைவரிடமும் விடை பெற்றவள் வண்டியினுள் ஏறினாள். அவளைத் தொடர்ந்து, அகிலனும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வண்டியினுள் ஏறி, அவளுக்கருகில் அமர்ந்து, வெளியில் நிற்பவர்களுக்கு கைகாட்டிவிட்டு, சாரதியிடம் வண்டியை எடுக்கும் படி கூறினான்.
பேருந்து தரிப்பிடம் சென்று, அங்கே கொழும்புக்கு புறப்படுவதற்கு தயாராக நின்ற பேருந்தில் இருவரும் ஏறி அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள்.
சற்று நேரத்தில் பேருந்து, கொழும்பை நோக்கிப் புறப்பட்டது. யன்னலுக்கு அருகில் அமர்ந்திருந்த சௌமி யன்னலினூடாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அகிலனுக்கு வெகு அருகில் அமர்ந்திருப்பதில் அவள் உடலிலும் உள்ளத்திலும் பல இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் நூலளவு இடைவெளி விட்டுத் தான் அமர்ந்திருந்தான். முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாது, கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவனாலும் இயல்பாக இருக்க முடியவில்லை அவனும் தன்னை கட்டுப்படுத்த முயன்று கொண்டுதான் இருந்தான்.
பேருந்தில் பொருத்தப் பட்ட குளிரூட்டியினால் சௌமிக்கு குளிரவும் மடியில் வைத்திருந்த சால்வையால் தன்னை சுற்றிப் போர்த்தியவள் ஜன்னலில் கையை மடித்து வைத்து, அதில் தலையை சாய்த்து, கண்களை மூடியவள் தனது உணர்வுகளை கட்டுப்படுத்த தன்னுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவனும் கைபேசியை அணைத்து வைத்து விட்டு , இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடினான்.
நான்கு மணித்தியாலங்கள் கடந்ததும் ஓய்வுக்காக ஓரிடத்தில் பேருந்து நிற்பாட்டப்பட்டது. சிலர் கழிவறையை பயன் படுத்துவதற்காகவும், தேநீர் அருந்துவதற்காகவும் இறங்கினார்கள். கண் விழித்த அகிலனும் இறங்குவதற்காக சௌமியை பார்த்தான். அவள் உறக்கத்தில் இருந்தாள். “சௌமி…” மெதுவாக அழைத்தான். அவள் விழிக்கவில்லை. அவளின் கையைத் தட்டினான். திடுக்கிட்டு விழித்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். “பஸ் நிண்டுட்டுது… வா டீ குடிப்பம்…” என அவளை அழைத்தான்.
அவ்வளவு நேரமும் கைக்கு மேல் தூங்கியதால் கை விறைத்துப் போய் இருக்க, கையை உதறியவாறு “ம்…” என்றாள்.
அவன் எழும்பி கீழிறங்க அவளும் அவனைப் பின்தொடர்ந்து இறங்கினாள்.
அவள் இறங்கியதும் “முதல் ரெஸ்ட் ரூம் போட்டு வருவம் வா…” என அவளையும் அழைத்துச் சென்று கழிவறையை உபயோகித்த பின்னர், இருவருக்கும் தேநீரை வாங்கி அவளுக்கும் கொடுத்து தானும் அருந்தினான்.
அருந்தி முடிய “வா..” என்றவாறு அவளையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் ஏறினான்.
அதிகாலை நாலு மணி அளவில் பேருந்து கொழும்பை வந்தடைந்தது. இருவரும் ஓர் ஆட்டோவில் ஏறி அவர்களின் குடியிருப்புக்கு வந்தனர். தங்களின் வீட்டின் கதவைத் திறந்த அகிலன் “வா..” என்றவாறு உள்ளே சென்று, மின் விளக்குகளை ஒளிரவிட்டான். அவள் உள்ளே வந்ததும் கதவை பூட்டிவிட்டு, அவன் தனது அறைக்குள் சென்றான்.
அவனின் அறைக்கு செல்வதா…? என்ன செய்வது எனத் தெரியாததால் சற்று நேரம் அப்படியே நின்ற சௌமி, பின்னர் சோபாவில தொப்பென்று அமர்ந்தவளுக்கு, அவன் எதுவும் சொல்லாமல் அவ்வாறு விட்டு சென்றதில் அவனின் அந்த அலட்சியத்தால் அவள் மனம் வெகுவாக கலங்கியது.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வெளியே வந்த அகிலன், சோபாவில் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்துவிட்டு, அவளை அப்படியே விட்டுவிட்டு போய்விட்டேனே என எண்ணியவன், ஒரு அறையை காண்பித்து, “நீ அந்த அறையை யூஸ் பண்ணு…” என்றான் அவசரமாக.
அவன் அவ்வாறு கூறியதும் மனம் வலிக்க, தனது பிரயாண பைகளை எடுத்துக் கொண்டு அந்த அறைக்கு சென்றாள். அந்த அறை விருந்தினர் யாராவது வந்தால் தங்குவதற்கு ஏற்றவாறு குளியலறையுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட பெரிய அறை. மாற்று ஆடைகளையும் குளிப்பதற்கு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் அவள். தலைக்கு குளித்தவள், அதை துடைத்து, கூந்தலை விரித்து விட்டவள் முழங்கால் வரையிலான ஓர் பாவாடையும் ஆரஞ்சு கலர் பூக்கள் நிறைந்த நீல நிற மேல் சட்டையும் அணிந்து, வெளியே வந்தவள் பூஜை அறைக்குச் சென்றாள்.
ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த அகிலன், அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனின் தாய் பூஜை அறையில் சாமி படங்களுக்கு மலர் வைத்து, விளக்கு கொழுத்தி பூஜை செய்வார். அவனுக்கு அவ்வாறு செய்யத் தோன்றியதில்லை. அதற்கு நேரமும் இருந்ததில்லை. ஒவ்வொரு நாளும் அங்கு சென்று கும்பிடுவான், அவ்வளவு தான்.
சௌமி அறையை சுத்தம் செய்து, பால்கனிக்கு சென்று, அங்கிருந்த மல்லிகைச் செடியில் பூக்களை பறித்து, கழுவி படங்களுக்கு வைத்து, தீபம் ஏற்றி கண்மூடிப் பிரார்த்தித்தாள். அவளின் ஒரே பிரார்த்தனை அவர்கள் இருவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான்.
வெளியே வந்தவள், சமையலறைக்குச் செல்ல, தேநீரை அருந்தி முடித்த அகிலனும் கோப்பையையும் எடுத்துக் கொண்டு அவளுக்குப் பின்னால் வந்தவன், கோப்பையை கழுவியவாறு “டீ போட்டு ஃப்ளாஸ்க்கில் வைச்சிருக்கிறன் குடி…, விடிஞ்சதுக்குப் பிறகு நான் பேக்கரிக்கு போய் பண் ஏதாவது வாங்கிக் கொண்டு வாறன்…” என்றான்.
அவள், அவனை நிமிர்ந்தும் பாராமல் ஒரு தேநீர் கோப்பையை எடுத்து கழுவி அதனுள் தேநீரை ஊற்றிக் கொண்டு பால்கனிக்கு சென்றாள். அங்கே இருந்த கதிரையில் அமர்ந்திருந்து தேநீரைப் பருகியவளுக்கு, அவர்கள் இருவரின் வாழ்க்கை எவ்வாறு இருக்கப் போகிறது என்ற சிந்தனை தான். அவனின் பாராமுகத்தால், அவளின் மனம் முழுவதும் வேதனை நிரம்பியிருந்தது. தேநீரை அருந்திய பின்னரும் அங்கேயே அமர்ந்திருந்து, பரந்து பட்டிருக்கும் கடலையும் , ஆர்பரிக்கும் அலைகளையும் , சூரியோதயத்தையும் வெறித்த வண்ணம் இருந்தாள்.
சிறிது நேரத்தின் பின்னர் எழுந்து உள்ளே வந்த போது, சாப்பாட்டு மேசையில் பணிசுகள் இருப்பது தெரிந்தது. சமையலறைக்கு வந்து, கோப்பையை கழுவி வைத்த பின்னர் சமைப்பதற்கு ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என ஆராய்ந்தாள். குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தாள் அதற்குள் பாணும் பட்டரும், ஜாமும் ஓரிரு முட்டைகளும் இருந்தன. பொருட்கள் வைக்கும் அலுமாரியை திறந்து பார்த்தாள், அங்கே அநேகமான பெட்டிகள் வெறுமையாக இருந்தன. ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து, என்னென்ன தேவை என்பதை குறித்துக் கொண்டாள்.
பல்கலைக்கு செல்வதற்கு தயாராகி வந்த அகிலன் “பண் வாங்கியிருக்கிறன் சாப்பிடு…, நான் கம்பஸுக்கு போட்டு வாறன் … வரேக்க லஞ்ச் வாங்கிட்டு வாறன்.. கதவை பூட்டிட்டு இரு…” என்றவாறு அவன் கிளம்பிச் சென்றான்.
அவன் சென்றதும் கதவைப் பூட்டியவள் சோபாவில் உட்கார்ந்திருந்து, பெற்றோர், பொரியதாயார் மற்றும் பத்மா ஆகியோருடன் கதைத்தாள்.
சாப்பிட்டுவிட்டு, சற்று நேரம் தூங்கி எழுந்தாள். அவள் தூங்கி எழும் போது, மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது. எழும்பி முகம் கழுவி வெளியே வந்தவளுக்கு பசித்தது. தேநீரை தயாரித்து அருந்தினாள்.
சோபாவில் அமர்ந்து நண்பிகளுடன் கதைத்துக் கொண்டிருந்த போது, அகிலன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவன் கையில் உணவு பார்சல்கள் இருந்தன. அதை மேசையில் வைத்தவன் “பிரியாணி இருக்கு… சாப்பிடு..” என்றுவிட்டு தனது அறைக்குள் சென்றான்.
அவள் சமையலறைக்குச் சென்று, இருவரும் சாப்பிடுவதற்கு தட்டுகள், தண்ணீர் எடுத்து ஆயத்தம் செய்து விட்டு அவன் வருவதற்காக காத்திருந்தாள்.
அவன் வந்ததும் அவனுக்கும் பரிமாறி, தானும் மேசையில் இருந்து சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்து எல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டு, அவனிடம் “சமையலுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேணும்” என்றாள்.
“ம்… ஆறு மணியளவில போவம்…” என்றுவிட்டு தனது அறைக்குள் சென்றான் அவன்.
குடியிருப்பில் வசிக்கும் நண்பர்கள் சிலர் அவர்களை வாழ்த்துவதற்காக வந்தனர். சௌமி, அவர்களுடன் கதைத்து, அவள் கொண்டு வந்திருந்த பலகாரம், தேநீர் வழங்கி உபசரித்தாள்.