• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 26

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 26




இருவரும் சாப்பிட்டதன் பின்னர், மேசையை ஒழுங்குபடுத்திய சௌமி, பாத்திரங்கள் கழுவி கொண்டிருந்தாள். சாப்பிட்டு நீர் அருந்திய அகிலன், அவளுக்கு அருகில் வந்து, அவளின் தோளில் கையை போட்டவாறு “என்ன செய்யுறாய்…?” எனக் கேட்டான்.

மற்ற நேரங்களில் சாப்பிட்டவுடன் தனது அலுவல்களைப் பார்க்கப் போகின்றவன் இன்று ஏன் என்னுடனே நிற்கிறான் என யோசித்தவளுக்கும் உடல் நெகிழ “ பாத்திரம் கழுவுறேன்…” என்றாள்.

அவளின் நெகிழ்ச்சியை உணர்ந்தவனின் மனதில் உல்லாசம் ஏற்பட மெதுவாக அணைப்பை இறுக்கினான். அவளின் கழுத்து வளைவில் தனது நாடியை வைத்து, அவளின் கன்னத்தோடு தனது கன்னத்தை உரசினான். அவனின் அந்த புதுவிதமான அணுகுமுறையில் அவளின் உடல், இனம் புரியாத உணர்வுகளின் தாக்கங்களால் நடுங்கியது. அவளால் தனது வேலையை தொடர முடியவில்லை. “தள்ளிப் போங்க…” என முணுமுணுத்தாள். தன்னை நிலைப்படுத்துவதற்காக கழுவும் நீர் தொட்டியை பிடித்துக் கொண்டாள்.

அவளின் நிலையை கண்டு அதை ரசித்தவன், “நான் உன்னை விழாமல் பிடிச்சிருக்கிறன்…, நீ கழுவு..” என மயக்கும் குரலில் கூறியவன் அவளை இறுக அணைத்தான். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவள் “ப்ளீஸ் அகில் என்னை விடுங்கோ…” என்றாள் நடுங்கிய குரலில்.

“ம்…?” என்றவனின் குரலில் தாபம் நிறைந்திருந்தது.

அவனின் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்த அவள், அவன் தன்னை விடப்போவதில்லை என உணர்ந்து, வேகமாக எல்லாவற்றையும் கழுவி வைத்து கையை துடைத்தாள்.

அதற்காகவே காத்திருந்தவன் “சௌமிகுட்டி…” என்றவாறு, அவளை தன்னை நோக்கித் திருப்பி, அணைத்து இதழ்களில் முத்தமிட்டான். அவனின் வலிமை மிக்க கரங்களுக்குள், எந்தவித எதிர்ப்பும் இன்றி, தன்னை பொருத்திக் கொண்டவள், தன்னை மறந்து நின்றாள்.

“சௌமி செல்லம்…, சௌமியம்மா…” என அவளை அழைத்தவாறு அவளை அறிய முற்பட்டான். அவன் காட்டிய வேகத்திலும், அவனின் கரங்கள் காட்டிய தீவிரத்திலும், உடல் தளர்ந்து, தள்ளாடியவள் “ப்ளீஸ் அகி…” என்றவாறு அவன் மீதே சரிந்தாள்.

“ம்…?” என்றவாறு அவளை அப்படியே அள்ளிக் கொண்டு, தன் அறைக்கு விரைந்தவன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர, இருவரும் மற்றவரை அறியத் தொடங்கினர். அவளும் அவனது தேடல்களுக்கு ஏற்ப இசைந்து கொடுத்தாள். அவளை சிறு பெண்ணாக கருதிய அகிலனும் மிக மிக மென்மையாகவே அவளை கையாண்டான்.

கூடல் முடிந்து விலகிய அகிலன் இத்தனை வருட வாழ்க்கையில் ஏதோ பெரிதாக சாதித்தது போல் உணர்ந்தான். மறுபுறம் திரும்பிப் படுத்த சௌமிக்கு, மனதில் ஒருவித அமைதி. அவளைத் தன் புறமாகத்திருப்பி, அணைத்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “கஸ்ரப்படுத்திட்டனா…?” என வினவினான்.

அவள் ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள். “பிடிச்சிருந்தது தானே…?” எனக் கேட்ட போது, அவள் கூச்சத்துடன், அவனின் நெஞ்சில் தனது முகத்தை புதைத்தாள். அவளின் அழகிய வதனத்தை நிமிர்த்தி காதலுடன் பார்த்தவன், அவளின் தடித்திருந்த கன்னத்தை தனது கரத்தால் மெதுவாக தடவினான். அவன் கன்னத்தை தடவவும், அவன் மீதுள்ள மயக்கத்தில் இருந்து மீண்டவள், அவன் அடித்ததால் கோபமடைந்திருக்கும் தன்னை சமாதானப்படுத்தவே இந்த காதல் நாடகம் என்ற சிந்தனை தோன்றி, அவளின் மனம் வெகுவாக அடி வாங்கியது. தன்னை நினைக்கவே அவளுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. அவன் என்னை மிகவும் எளிதாக எடை போட்டிருப்பான் என நினைத்து கலங்கிய அவள், அவனிடமிருந்து விலகி, தனது ஆடைகளை அணிந்து கொண்டு அவளின் அறைக்கு சென்றாள்.

அவன் தன்னை அணுகியதும் தானும் எந்தவித தயக்கமும், கூச்சமும் இல்லாமல் அவனிடம் ஒன்றியதால், தான் இதற்காகத் தான் இவ்வளவு நாளும் எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறேன் என அவன் நினைத்திருப்பான் என நினைத்ததும் அவள் வெட்கித் தலை குனிந்தாள்.

அவனின் மனதில் தான் எப்போதும் உயர்வான் ஓர் இடத்திலேயே இருக்க விரும்புவாள் அவள். ஆனால் அவன் இப்போது தன்னை மிகவும் இழிவாக எண்ணியிருப்பான் என யோசித்து, கலங்கினாள்.

அவனது கரங்களில் தான் நெகிழ்ந்து, உருகி, மயங்கியதை எண்ணி பெரும் வருத்தமடைந்தாள். ஏன் இப்படி நடந்து கொண்டேன்..? எனக்கு என்ன ஆயிற்று…?, நான் மிகவும் தரம் தாழ்ந்து விட்டேனா…? என யோசித்த அவளுக்கு, மனம் குழம்பி எதுவும் யோசிக்க முடியாமல் இருந்தது.

சற்றுமுன் விரும்பி, ரசித்து அனுபவித்த ஓர் விஷயம் இப்போது அவளுக்கு அருவருத்து விட்டது.

நான் அவனின் விருப்பு ,வெறுப்பு அறிந்து, நடக்கிறேன்… ஆனால் அவன், என்னை, என் மனதை பற்றி சிறிதளவேனும் சிந்திக்கிறான் இல்லையே.. நான் அவன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நேசத்ததை அவன் மதிக்கிறான் இல்லையே.. என எண்ணிய அவளுக்கு சுயபச்சாதாபத்தால் கண்களில் நீர் பெருகியது.

மீண்டும் அவன் தன்னிடம் வந்தால் அவளின் மனமும் உடலும் அவன் பின்னால் தான் செல்லும் என்பதையும், அவனை எப்போதும் எக்காரணத்தாலும் தன்னால் மறுக்க முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவளுக்கு அவள் மீதே சினம் ஏற்பட்டது.

அவனை காணவோ, அவன் முன்னால் நடமாடித்திரிவதோ பிடிக்கவில்லை அவளுக்கு.

பெற்றோர்களிடம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது அவளுக்கு.

உடலும் உள்ளமும் வெகுவாக களைப்படைந்ததால், சற்று நேரத்தில் தூங்கிவிட்டாள்.

அகிலனும் தூங்கிவிட்டான்!

தூங்கி எழுந்தவள் நேரத்தை பார்க்க அது நண்பகல் பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. மதியத்துக்கு சமைக்க வேண்டும் என்ற நினைப்பு வந்ததும் எழுந்து, சமையலறைக்கு சென்றாள்.

இலகுவாக ஏதாவது சமைப்பம் என எண்ணி, இருக்கின்ற மரக்கறிகள் எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்து, கழுவி வெட்டி, குக்கரில் போட்டாள், அதனுள் சிறிதளவு துவரம் பருப்பையும் சேர்த்தாள். இருவருக்கும் அளவான அரிசியையும் அதற்குள் போட்டு அவியவிட்டாள். ஒரு அடுப்பில் இரண்டு முட்டைகளை அவிய விட்டாள். மற்ற அடுப்பில், ஓர் சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளித்தாள். அரிசியும் மரக்கறியும் அவிந்ததும், தாளித்த பாத்திரத்தினுள், அவற்றை கொட்டி அதற்கு சிறிதளவு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, கிளறி விரைவாக சமையலை முடித்தவள் தனது அறைக்கு சென்று யாழ்ப்பாணம் செல்வதற்கான ஏற்பாடுகளை பார்த்தாள்.

ஒரு நண்பிக்கு அழைத்து பேருந்து சேவையின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டாள். மற்றும் தன்னுடன் படித்த சில நண்பர்களுக்கு அழைத்து, அவர்கள் யாரும் அன்று யாழ்ப்பாணம் செல்கிறார்களா என விசாரித்து அறிந்ததில் ஒரு நண்பியின் சகோதரி அங்கு செல்கிறார் என்பதை அறிந்து, அவருடன் சேர்ந்து செல்லும் விதமாக அதே பேருந்து சேவையில் அவளும் தனது இருக்கையை பதிவு செய்து கொண்டாள். அவளால் தனியாக பயணம் செய்ய முடியும் ஆனால் அவளின் பெற்றோர் அதை விரும்ப மாட்டார்கள் என்பதில் இந்த ஏற்பாடு. ஓரு பிரயாணப்பையில் தனக்குத் தேவையான சில உடைகளையும் எடுத்து வைத்துவிட்டு கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

இரவு அகிலனால் நன்றாக தூங்க முடியவில்லை, இடையிடையே விழித்தவாறு இருந்தான். இப்போது சிறிது நேரம் நன்றாக தூங்கி எழுந்தவன் “சௌமி பசிக்குது…?” என்றவாறு அவளின் அறையின் உள்ளே வந்தவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஒரு வித வெட்கமும் அவமானமும் கலந்த உணர்வினால் தடுமாறினாள்.

அவள் கட்டிலிலிருந்து எழவும் “சாப்பாடு ஏதும் இருக்கா…?” என கேட்டபடி அவளின் கையை பற்றினான்.

அவள் அவனிடமிருந்து விலகி “ஓம்…” என்றவள் சமையலறைக்குள் சென்றாள். அவனும் அவளுடன் கூடச்சென்றான்.

இருவரும் சேர்ந்து அமைதியாகச் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த அகிலன், ஹாலில் உட்கார்ந்து, தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்து, அதை பார்த்துக் கொண்டிருந்தான். சௌமி சமையல் பாத்திரங்களை கழுவி, இடத்தை சுத்தப்படுத்தி விட்டு, தனது அறைக்குள் நுழைய முயன்றவளை “சௌமி..” என மென்மையாக அழைத்தான் அகிலன். அவள் அதில் நின்று திரும்பி அவனைப் பார்த்தாள்.

“இஞ்ச வா…, மூவி பார்ப்போம்…” என்றான்.

அவள் திரைப்படம் பார்க்கும் மனநிலையில் இல்லை. எனவே “ இல்லை…, நான் பார்க்கல…” என்றாள்.

“ஏன் சௌமிக்குட்டி..?” என்று கேட்டபடி எழுந்து அவளருகே சென்று, அவளின் கைபிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்ந்தவன், அவளைத் தன் மடியில் உட்கார வைத்தான்.

“என்னை விடுங்கோ…” என்றவாறு அவள் துள்ளிக்குதித்து இறங்க முற்பட, அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்து தடுத்தபடி “ஏன்…? என்ர மடியில இருக்கிறதுல என்ன பிரச்சனை உனக்கு…?” எனக் கேட்டான்.

“நான் இதுல இருக்கிறன்…” என்றவாறு அவனுக்குப் பக்கத்தில் இருக்கிற இடத்தை காட்டினாள் அவள்.

“இல்லை நீ இப்பிடி இருக்கிறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு…” என்று கரகரப்பான குரலில் அவன் கூறினான்.

அவள் ஏதோ சொல்ல வர அதற்கு விடாமல் அவன், அவளது இதழ்களை தன் இதழ்களால் மூடி, அவளின் கவனத்தை தன்னை நோக்கி திருப்பினான். அவளுக்கும் அடி வயிற்றில் ஏதோ செய்ய தன்னிலை இழந்து நின்றாள்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது, நீண்ட நேரத்தின் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மீண்ட சௌமி, அகிலனின் இந்த புதிய பரிணாமத்தை கண்டு வியக்காமல் இல்லை. அவளுக்கு அவனை பாக்கவே மிகுந்த கூச்சமாக இருந்தது. அவளைத் தன் தோளில் சாய்த்து அணைத்தவன், அவளின் நிலையை பார்த்து, குறும்பாக சிரித்தான்.

அவள், அவனிடமிருந்து விலக முயற்சிக்க, “என்ன…?” எனக் கேட்டான்.

“நான் போய் கிளம்ப வேணும்…” என்றாள்.

“எங்க…?” என கேட்டான்.

“ஊருக்கு..” என்றவளுக்கு குரல் எழும்பவில்லை.

“எங்க…?” என மீண்டும் கேட்டவனுக்கு எதுவும் புரிபடவில்லை.

“யாழ்ப்பாணம்”

“ஏன்...?”

“.....”

தன்னிடமிருந்து அவளை விலத்தியவாறு “ஏன் இந்த திடீர் முடிவு…?” என்றான்.

“......”

அவ்வளவு நேரமாக இருந்த உல்லாசமான மனநிலை விடுபட “ இப்ப அங்க போறதுக்கு என்ன அவசரம்…?” என்றவனின் குரலில் சினம் எட்டிப்பார்த்தது.

“சௌமி…?” என்றான் கோபத்துடன்.

“.......”

“உனக்கு நான் கேக்குறது விங்கேல்லையா…?” என கேட்டவனின் முகம் கல்லாய் இறுகி கிடந்தது.

அவனின் கோபத்தில் அவளுக்கு தேகம் நடுங்கியது, குரல் எழும்பவில்லை.

அவளின் அமைதி, அவனுக்கு சினத்தை ஏற்படுத்தியது. “சௌமிமி…” உறுமினான்.

அவனது குரல் அவளுக்கு கிலியை ஏற்படுத்த “வீட்ட போகணும்…” என்றாள் மெதுவாக.

“அதுதான் ஏன் எண்டு கேக்கிறன்…” என்றவனுக்கு கண்கள் சிவந்து காணப்பட்டது.

அவன் நிச்சயம் கோபப்படுவான் என்று தெரியும் ஆனால் அவள் இவ்வளவு கோபத்தை எதிர்பார்க்கவில்லை. நேற்று போல் கைநீட்டி விடுவானோ… என்ற பயத்தில் சோபாவில் இருந்து எழும்பினாள்.

“நீ போகக்கூடாது…” என்றான் உத்தரவாக.

“இல்லை.. நான் போவன்..” என்றாள் சற்று வீம்பாக.

அவளின் அந்த திமிரை பார்த்தவனுக்கு கடும் ஆவேசம் ஏற்பட, அவளைப்பிடித்து தள்ளினான். அவள் சோபாவின் மீது விழுந்தாள்.

அவனின் வன்முறை அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அவனின் அதீத கோபம் அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவளின் தந்தையோ அல்லது பெரிய தந்தையோ குரலை கூட உயர்த்தி பேசாதவர்கள். அப்படியான சூழ்நிலையில் வளர்ந்தவளுக்கு இவனின் இந்த அடாவடித்தனம் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அவளின் விழிகளில் இருந்து நீர் வடிந்தது.

அகிலனும் மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவன், எல்லா விடயத்தையும் நிதானமாக கையாள கூடியவன். அவனின் வாழ்நாளில் இந்தளவு அளவுக்கதிகமான கோபம் இதற்கு முன்னர் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. சௌமியின் செயல்கள் சில அவனுக்கு கண்மண் தெரியாத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவள் என்று வரும்போது அவனின் கோபத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் விழி நீரை கண்டவனுக்கு, சிறு பெண்ணை மீண்டும் கஷ்டப்படுத்தி, பயப்பட வைத்துவிட்டேனே… என்ற குற்ற உணர்வு எழுந்தது. அவளின் கண்ணீர் அவனுக்கு மிகுந்த வேதனையை தர, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, அவளருகில் அமர்ந்தவன் “சௌமி செல்லம் அழாதே ப்ளீஸ்..” என்றவாறு அவளின் கண்களை மெதுவாக துடைத்து விட்டான்.

அவள் மேலும் கேவினாள், “அழாதே… ப்ளீஸ்..” என்றவாறு அவளை தன்னுடன் சாய்த்து அணைத்தான்.

அவள், அவனிடமிருந்து திமிறி விடுபட்டு கொண்டு, தனது அறைக்குச் சென்றாள்.

அவனும் ‘ஊஃப்’ என்று மூச்சை நன்றாக இழுத்து விட்டு தன்னை சமன்படுத்த முயன்றான்.

நன்றாக முகத்தை நீர் ஊற்றி கழுவி அழுந்த துடைத்த சௌமி, சமையலறைக்கு சென்று தேநீர் தயாரித்து அகிலனுக்கும் வைத்து விட்டு தானும் அருந்தினாள்.

இரவுணவையும் தயாரிக்கத் தொடங்கினாள். அப்போது அங்கே வந்த அகிலன் தனது தேநீரை எடுத்து பருகியபடி அவளையே பார்த்தவன் “சௌமி…, நீ அங்க போகணும் எண்டு எனக்கு சொன்னால் நான் உன்னை கூட்டிக்கொண்டு போவன் தானே…, அதை விட்டுட்டு நீ உன்ர பாட்டுக்கு கிளம்பினால் என்ன அர்த்தம்…? வாற கிழமை போவம்.. என்ன?, நாளைக்கு எனக்கு ஒரு செமினார் இருக்கு…” என்று கேட்டான்.

“நீங்கள் வரத்தேவையில்லை… நான் போவன்..” என்றாள் அவள்.

“நான் சொல்றதையும் கேக்கணும் சௌமி..” என கண்டிப்புடன் கூறியவன், தான் சொல்வதை அவள் கேட்கிறாளில்லையே என்ற ஆதங்கத்துடன் ”பஸ்ஸுக்கு புக் பண்ணீட்டியா…?” என வினவினான்.

“ஓம்” என்றாள் அவள்.

“அதை கேன்சல் பண்ணு” என்றவனின் குரலில் அதிகாரம் இருந்தது.

“இல்லை…, நான் போகணும்…” என்றவளுக்கு அவனின் அதிகாரம் எரிச்சலை ஏற்படுத்தியது.

“சௌமி…, வீண் பிடிவாதம் பிடிக்கிறேல்ல…, பஸ்ஸ கேன்சல் பண்ணு, நீ தனியா போகேலாது…”

“நான் தனியா போகல, என்ர ஃப்ரண்டின்ர அக்காவும் வாறா…”

“சௌமி, ஏன் நான் சொல்லுறது உனக்கு விளங்கல…?, நீ வேற ஆரோடும் போறது எனக்கு விருப்பம் இல்லை, இவ்வளவு நாளும் இப்பிடியா ரவல் பண்ணினனீ..?” என பொறுமையாக அவளுக்கு எடுத்துக் கூறினான்.

அவன் கூற வருவது அவளுக்குப் புரிந்தாலும், அவள் தனது பெற்றோரிடம் ஆறுதல் தேட விரும்பினாள், தாயின் கையால் சாப்பிட வேண்டும் என மனது ஏங்கியது.


அவளின் மௌனமும், பிடிவாதமும் எரிச்சலை கிளப்ப, அங்கு மேலும் நின்று வாக்குவாதப்பட விரும்பாததால், அவன் சமையலறையிலிருந்து வெளியே சென்றான்.

சமையலை விரைவாக முடித்தவளும் தனது அறைக்குள் சென்றாள்.
 
Top Bottom